
இந்தா இருக்காரே சிம்பு, இவர முன்னேறக் கூடாதுன்னு யாரோ பயங்கரமா சதிவேலை பண்றாங்க. ஆனா அது இவர்தான்னு இவருக்கே தெரியாது.
https://twitter.com/shivaas_twitz
பர்சனல் லோன் விண்ணப்பப் படிவத்துல கையெழுத்து போட வேண்டிய இடத்துல பெருக்கல் குறி போட்டிருப்பது, ‘தப்பான முடிவு எடுக்குற’ என்பதன் குறியீடு.

https://twitter.com/balasubramni1
“கொற மாசத்துல பொறந்தவனே’’ என்று சொல்வதெல்லாம் பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
https://twitter.com/aadhavanssk
க்ரேன் யானை மாதிரி. அதை உபயோகிக்க முதல்ல முன் தயாரிப்பு வேலை இருக்கணும். Lifting plan வேணும். Lifting supervisor இருக்கணும். Operator முடியாதுன்னு சொன்னா கடவுளே சொன்னாலும் அதிக வெயிட் தூக்கக் கூடாது. அதிக Radiusல போகக்கூடாது. நம்மாளுங்களுக்கு விதிமீறல் அல்வா சாப்பிடுறமாதிரி.
https://twitter.com/prabhu65290
விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி # சேத்துல எங்க சார் கால் வைக்க விடுறீங்க, எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன், விமான நிலைய விரிவாக்கம்னு சொல்லி நிலத்தைப் புடுங்க ரெடியா இருக்கீங்களே!

https://twitter.com/shivaas_twitz
ஏழ்மையை ஒழிக்க என்ன பண்ணணும்? செவுரு கட்டணும்.
https://twitter.com/ItsJokker
இந்தா இருக்காரே சிம்பு, இவர முன்னேறக் கூடாதுன்னு யாரோ பயங்கரமா சதிவேலை பண்றாங்க. ஆனா அது இவர்தான்னு இவருக்கே தெரியாது.

https://twitter.com/mohanramko
பிளாட்பாரத்தில் இருந்து எட்டிப் பார்த்தா, ட்ரெயின் சீக்கிரம் வந்துவிடும் என்பது நம்பிக்கை.
https://twitter.com/RavikumarMGR
ரஜினி : சூட்டிங்குக்கு ஒழுங்கா போய் மாநாடு படத்தை முடிச்சு விடுங்க...
சிம்பு : நீங்க ஏப்ரல்ல கட்சி ஆரம்பிங்க...
https://twitter.com/iVenpu
வருங்காலத் தலைமுறையின் படிப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதிசெய்யும் சத்துணவுத் திட்டத்தைத் தனியாருக்குத் தந்துவிட்டு, அனைத்து சமூகச் சீரழிவுகளுக்கும் காரணமான மதுக்கடைகளை அரசே நடத்துவதெல்லாம் உச்சக்கட்டக் கொடூரம்.

https://twitter.com/aathithakaalan
மக்கள் ஒருவித ஆடம்பரத்திற்குப் பழக்கப்பட்டுவிட்டால் அது தமக்கு அத்தியாவசியமானது என நம்பத்தொடங்கி விடுகிறார்கள்.

https://twitter.com/skpkaruna
அர்விந்த் கெஜ்ரிவால் மேடைப்பேச்சைப் பார்த்தேன். அப்படியே பா.ஜ.க கூட்டம் போலவே இருக்கு! பாரத் மாதாகீ ஜே, வந்தே மாதரம் சொல்லிதான் ஆரம்பிக்கிறார். மொத்தக் கூட்டமும் அப்படியே ஆர்ப்பரிக்கிறது. சங்கிகளை சங்கி வழியிலேயே டீல் பண்ணியிருக்கார் மனுஷன்.
https://twitter.com/manipmp
அப்புறம் பார்த்துக்கலாம் என்பது வேலைக்கான Pause பட்டன்.
https://twitter.com/Mallika_158
கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள். #ஐ.டி பூங்காக்கள்.

https://twitter.com/dlakshravi
முன்னாள் இந்தியப் பிரதமர்கள் வெளிநாட்டுத் தலைவர்களோடு இருக்கற போட்டோக்களை பாக்கணுமே... மோடியோட தோரணை அநியாய பணிவா கூட இல்ல, தப்பு செஞ்சுட்டு டீச்சர் பக்கத்துல பயத்தோட இருக்கற மாணவனைப் போல இருக்கு!