சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வாழ்க்கையில் மிகக் கொடுமை, ‘என்னைப் பாத்துக்க யாருமே இல்லையே’ என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு ‘ஒருவர்’ பார்த்துக்கொள்ள வேண்டும்?

https://twitter.com/SundarrajanG

கொலைகளுக்கு என்கவுன்டர்கள் தீர்வெனில் குற்றங்கள் என்றைக்கோ குறைந்திருக்கும். என்கவுன்டர்களை நடத்துவதன் மூலம், உங்களுடைய நீதிபரிபாலன முறை சரியில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் என்பதாகும். நடந்த கொலைகளுக்குப் பழி எனில், நீரை, நிலத்தை, காற்றை மாசுபடுத்தி ஆயிரக்கணக்கானவர்களின் மரணத்துக்கு காரணமாகவுள்ள பெரிய நிறுவனங்களுக்கும் அந்த முதலாளிகளுக்கும் இதே அளவுகோலை வைப்பீர்களா? அப்படி இல்லை எனில் அங்கே வர்க்கமும் சாதியும் உங்களுக்குத் தெரிகிறது. இந்த இளம் வயதில் சிலர் தீங்கான செயல்களைச் செய்வதற்கு சமூகக் காரணிகளும் காரணம், அப்படியெனில் நாம் எல்லோரும் குற்றவாளிகளே.

https://twitter.com/MrElani

‘படையப்பா’ நீலாம்பரிக்கப்புறம் பல வருசமா சூரியன கண்லகூட பாக்காம பகுமானமா ஸ்மார்ட் டி.வி., நெட்பிளிக்ஸுனு வாழ்றது இந்த ஐ.டி ஊழியர்கள்தான்.

https://twitter.com/TamilFinance

ஐ.டி ஊழியர்களுக்கு லாக்டௌன் ஒரு வகையில் சாபம் தான். ஆபீஸ்ல ராஜாவாட்டம் சுத்திட்டு, பார்ட்டி போயிட்டு, BBQ சாப்பிட்டு, டபுள் பைக்குல ஸ்டாண்டிங்ல போயிட்டு இருந்தாங்க. இப்ப வீட்டுக்குள்ளே ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருக்காங்க!

வலைபாயுதே

https://twitter.com/JamesStanly

கொரோனா: ஆப்பிரிக்கா ஒமைக்ரான், இஸ்ரேல் புளோரோனா தாண்டி இப்ப பிரான்ஸ்ல IHU B.1.640.2னு மாறிட்டேன். இவன் இன்னும் தடுப்பூசி நல்லதான்னு கூகுள்ல தேடிட்டு இருக்கான்...

https://twitter.com/NilavuMozhi

இணையதளங்களில் விமர்சனம் செய்தால் குண்டாஸ்; வதந்தி பரப்பினால் குண்டாஸ்; ஆபாசமாகப் பேசினால் குண்டாஸ் என எதற்கெடுத்தாலும் குண்டர் சட்டத்தை ஆயுதமாகத் தூக்கினால், எதற்கு IT Act, IPC? ஆளுங்கட்சியின் கையில், மக்கள்நலன் இருக்க வேண்டுமேயொழிய, குண்டாஸ், ஊபா போன்ற மக்கள் விரோத சட்டங்கள் இருக்கக்கூடாது.

https://www.facebook.com/Hariharasuthan.Thangavel

ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator)அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் RNG கண்டுகொள்ளும். அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்கமுகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். ‘இது நியாயமாகத்தான் செயல்படுகிறது, என்னுடைய கெட்ட நேரம்’ என்று உங்களை நம்ப வைக்கும் உத்திதான் இது. ஆனால், உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, ‘போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன், வா’ என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை.

இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்கள், முறையான மனநல சிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம். மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்துகொண்டே இருக்கும். மனைவியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு ஸ்மார்ட் போனைத் தூக்கிக் கடாசிவிடுங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் பேசுங்கள். தமிழக அரசு ஆன்லைன் சூது எனும் அரக்கனைத் தடை செய்தது. நீதிமன்றம் தடையை நீக்கி மீண்டும் உயிர் தந்தது. இதற்கு முன்பான மரணங்களுக்கு விளையாட்டுப் போதை காரணமாக இருக்கலாம். ஆனால் தடை செய்ததை மீண்டும் உயிர்ப்பித்த பின் நிகழ்ந்துள்ள இக்கொடூரத்திற்கு அல்காரிதமோ, ஆன்லைன் சூது மட்டுமோ காரணமல்ல!

https://www.facebook.com/ Karthik Balasubramanian ‘‘திவ்யா, வியனோட மாத்ஸ் மிஸ் அழகா இருக்காங்கல்ல?’’

‘‘ஹலோ, அவங்களுக்கு ஒரு பையன் இருக்கு.’’

‘‘ஸோ வாட், எனக்கும்தான் ஒரு பையன் இருக்கு.’’

https://twitter.com/kumarfaculty

உண்மையான விலையைச் சொல்லி விற்பவர்களை விட, அதிக விலை சொல்லி விலையைக் குறைப்பவர்களையே பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கிறது!

https://twitter.com/Raajavijeyan

போன வருஷம் ‘கொரோனாவுடன் வாழப் பழகுங்க’ன்னு சொன்னோமா... இந்த வருஷம், ஒமைக்ரானோட வாழப் பழகுங்க’ன்னு போட்டுக்க...

இடையில இடையில ஃப்ளோரனா, மூன்றாவது அலை, நாலாவது அலைன்னு போட்டுக்கணும்!

https://twitter.com/Kirachand4

வயசானாலும் பஸ், ட்ரெயின்ல ஜன்னல் ஓர சீட்டைப் பிடிக்க நமக்கு இருக்கும் அவசரமும் ஆசையும் மட்டும் குறையலைங்க...

https://twitter.com/shivaas_twitz

லாக்டௌன் நியூஸ் எல்லாம் பார்க்கும்போது பழைய பேப்பர் படிக்கிற மாதிரியே இருக்குல்ல?

https://twitter.com/kadalodi23

‘உதயநிதியை அமைச்சர் ஆக்குறது பத்தில்லாம் பேசக் கூடாது, அது உட்கட்சி விவகாரம்’னு சொல்ற யாருக்கும், எடப்பாடி கால்ல விழுந்து அதிகாரம் வாங்குனது பத்தி நக்கல் அடிக்கத் தகுதி இல்லை. அது அவங்க உட்கட்சி விவகாரம்.

https://twitter.com/Kozhiyaar

சின்னப் பையனா இருக்கும்போது அம்மா கிட்ட எந்த ஒரு பிரச்னையை எடுத்துட்டுப் போனாலும், ‘நீ என்ன பண்ணுன?’ என்பதே முதல் கேள்வியாக வரும். ஏன்னா, நம்ம மேல இருந்த நம்பிக்கை அவ்வளவுதான்!

https://twitter.com/gurunaatha

‘நாயா உழைக்கிறேன்’னு சொல்றாங்க. ஆனா பாருங்க... நாய் உழைக்கிறதே இல்ல!

https://twitter.com/Despoters_12345

மோடி to மேகாலயா கவர்னர்: டீசெண்ட்டா ‘Goback’ சொன்னவங்களை இப்ப ‘ஜோக்கர்’னு சொல்ல வெச்சிட்ட... உனக்கு கவர்னர் போஸ்ட் குடுத்ததுக்கு உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ செஞ்சிட்ட...

https://twitter.com/LAKSHMANAN_KL

முதலமைச்சரின் வாகனத்தை எங்களுக்கும் மடக்கத் தெரியும்! - கராத்தே தியாகராஜன்.

மடக்கி... வாட்டர் சர்வீஸ் பண்ணிக் கொடுக்கப் போறீங்களா தலைவரே..?!

https://twitter.com/Anvar_officia

உறவினர்களை சந்தோஷப்படுத்த அதிகம் மெனக்கெடத் தேவையில்லை, வாட்ஸ்அப்ல சோகமான ஸ்டேட்டஸ் வைத்தால் போதும்!

https://twitter.com/manipmp

‘‘இதுக்கு இங்கிலீஷ்ல என்ன’’ன்னு கேட்டா 90 kids; ‘‘இதுக்கு தமிழ்ல என்ன’’ன்னு கேட்டா 2k kids.

https://twitter.com/Greesedabba2

அழைக்கவும் முடியாத, அழிக்கவும் முடியாத அலைபேசி எண் ஒன்று எல்லோரது தொலைபேசியிலும் இருக்கத்தான் செய்கிறது.

வலைபாயுதே

https://twitter.com/SakalaVallavan

இப்பெல்லாம் கேமராமேன் கூட இல்லாம வீட்டை விட்டு வெளிய காலே எடுத்து வெக்கறதில்லை முதல்வர் ஸ்டாலின். மோடி தான் இன்ஸ்பிரஷேனோ?!

https://twitter.com/mangudiganesh

பஞ்சாப் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்: தேஜஸ்வி சூர்யா எம்.பி. பாஜக.

# தமிழ்நாட்டு எம்.பி.க்களை 10 நாள்களாக பார்க்க அனுமதி தராத அமித்ஷாவுக்கு மோடி கண்டனம் தெரிவிக்காதது ஏன்...?

https://twitter.com/jeevasagapthan1

பர்பி என்பது தமிழாக மாறிவிட்ட சென்னை வாழ்க்கையில், ‘‘அண்ணே, கடலை மிட்டாய் இருக்கா?” என்று யாரேனும் கேட்டால், அவர் மண் மணம் மாறாத அக்மார்க் மதுரைக்காரர் என்று அறிக!

https://twitter.com/selvaraghavan

வாழ்க்கையில் மிகக் கொடுமை, ‘என்னைப் பாத்துக்க யாருமே இல்லையே’ என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு ‘ஒருவர்’ பார்த்துக்கொள்ள வேண்டும்? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களைப் பார்த்துக்கொள்வது போல்!

https://twitter.com/itz_idhayavan

சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும் செயற்கை சூரியனை உருவாக்கி சீனா சாதனை.

# கொரோனா ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆனதும் தன்னம்பிக்கை கூடிருச்சுல்ல உனக்கு?!