சினிமா
Published:Updated:

வலைபாயுதே

அன்னா பென்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்னா பென்

ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் கர்நாடகாவின் வலதுசாரி அரசியல் கண்டிக்கத்தக்கது.

twitter.com/roadoram

ஒருவருடைய குணங்களைச் சொல்லும்போது ‘அவர் ப்யூர் வெஜிடேரியன்ங்க’ என்று சிலாகிப்பவர்களைக் கண்டால் எரிச்சலாகிடும். உணவுப் பழக்கத்தை வைத்து எப்படியா குணத்தை எடை போடுறீங்க?

facebook.com/Buhari Raja

‘‘சிம்பு transformation வீடியோ பார்த்து வெறி ஆனதும் ஜிம்முக்குப் போலாம்னு முடிவு பண்ணினேன்.”

‘‘அப்புறம்?’’

‘‘முதல்ல சிம்பு மாதிரி சொத்து சேர்த்துட்டு, அப்றமா ஜிம்முக்குப் போலாம்னு அந்த முடிவ தள்ளி வச்சுட்டேன்!”

twitter.com/thecommonman

நாம சீமான காணோம்னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கோம்... எனக்கென்னமோ அவர் கள்ளத் தோணில இலங்கை போய் விடுதலைப் போராட்டத்துக்குப் புரட்சிப் படைய ரெடி பண்ணிக்கிட்டு இருக்கார்னு தோணுது.

Andrea: ஜாலியா ஒரு க்ளிக்!
Andrea: ஜாலியா ஒரு க்ளிக்!

facebook.com/Karl Max Ganapathy

ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் கர்நாடகாவின் வலதுசாரி அரசியல் கண்டிக்கத்தக்கது. சில நண்பர்களுக்கு இதில் குழப்பம் வருகிறது, இதில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று. ஹிஜாப் அணிவது பிற்போக்குத்தனம்தானே என்பது அவர்கள் வாதம்.

ஒரு மதத்தின் வழிமுறையை இன்னொரு மதத்தின் வழிமுறையைக் கொண்டு அளவிடுவது வன்முறை. கர்நாடகாவில் RSS செய்வது அதைத்தான். அவர்கள் முயல்வது பெரும்பான்மை மத வன்முறையை. அதனால் இங்கு நாம் நிற்கவேண்டியது ஹிஜாப் அணியும் மாணவிகளின் உரிமையின் பக்கம்தான். ஒரு மத நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இன்னொரு மத நம்பிக்கையின் பிற்போக்கு அம்சங்களைக் கேள்வி கேட்பது மதவெறி என்கிற வகையில்தான் சேரும்.

இஸ்லாமிய மதக் கண்ணோட்டத்தில் ஹிஜாப் அணிவது ஒழுக்கவியல் சார்ந்த கட்டுப்பாடு என்பதற்காக, ஹிந்துக்களும் அதை அணியவேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினால் அதை எவ்வாறு நாம் எதிர்ப்போமோ, அதே அடிப்படையில்தான் இதையும் நாம் கண்டிக்கவேண்டும்.

மிக முக்கியமாக எந்த மத நம்பிக்கையையும் ஜனநாயக பூர்வமான விமர்சனங்களின் மூலம், உரையாடல்களின் மூலம் மட்டுமே எதிர்கொள்ளவேண்டும். கட்டா யத்தின் பேரில் அவற்றைச் செயல்படுத்தமுடியாது. அதை யார் முன்னெடுக்கிறார்கள் என்பதும் முக்கியம். முற்போக்கு, பெண்ணுரிமை, மதவெறி என ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைத்துப் புரிந்து கொள்வதும், மதிப்பிடுவதும், எதிர் வினை புரிவதும் முக்கியமானவை. அதில் தடுமாறக்கூடாது.

எதையுமே ‘மற்றமை’யால் அளக்கமுடியாது என்பது அடிப்படையான புரிதல்!

witter.com/manipmp

சில captcha challenge-கள் ‘முடிஞ்சா என்ன கண்டு பிடிச்சுப் பாரு’ எனும் ரேஞ்சிலேயே இருக்கின்றன.

twitter.com/iKrishS

ரெகுலர் வெஜிடேரியன்களைவிட பாதில மாறுனவங்க பண்ற அலப்பரை இருக்கே...

https://twitter.com/Thaadikkaran

ஒவ்வொரு முறை பட்ஜெட் அறிவிப்பு வரும்போதும் இந்தியாவுக்கே இன்சூரன்ஸ் போட்டு வைக்கணும் போல..!

twitter.com/angry_birdu

அண்ணாமலை பதற்றத்துல உளறிட்டாரு... அது 21-ம் தேதி இல்ல, 12-ம் தேதி... அறிக்கைல சொல்லியிருக்காரு பாருங்கன்னு சிலர் உருண்டுட்டுக் கெடக்கானுங்க. டியர் அண்ணாமலை ! 12-ம் தேதியும் பாராளுமன்றம் நடக்கல! மறுபடியும் பெயிலு.

twitter.com/aaram

சுய சாதிப்பற்று, சுய மதப்பற்று கொண்ட யாரும் பகுத்தறிவாளர்களா இருக்க முடியாது. சும்மா ‘Dravidian stock’-னு bio-ல போட்டுக்கலாம். அவ்வளவுதான்.

twitter.com/imanojprabakar

உயிருக்குப் போராடுபவரைக் காப்பாற்ற அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் பின்னால் அதிவேகத்தில் செல்லும் மூடத்தனம் எப்போது ஒழியும்?

twitter.com/MrElani

தை மாசமே வெயில் இந்தக் காட்டு காட்டுது. ஏப்ரல், மேயில சிம்பு பட டைட்டில்தான்.

twitter.com/teakkadai1

பக்கத்து வீட்டில் ஒரு ஹோமம் பண்ணினாங்க. அதற்கு வரட்டி சொல்லும் போது பசு மாட்டு சாணத்தில் செய்த வரட்டி ஒரு குறிப்பிட்ட வீட்டில் கிடைக்கும். அங்க வாங்கணும்னு பேசிக்கிட்டாங்க. இப்ப விபூதி நாட்டு மாட்டுச் சாணத்தில் இருந்துன்னு டெவலப் ஆகியிருக்கு நாடு.

twitter.com/shivaas_twitz

சத்யமூர்த்தி பவன்: ராகுல் ஏதோ ஃபயரா பேசிருக்காராமே?

வாத்தியாரே... பசிக்குது. சாப்ட்டு சாயங்காலமா என்னன்னு பாப்போமா?

twitter.com/saysatheesh

வெச்ச இட்லி மிச்சமாச்சே என வீட்டில் கவலைப்படுவது ஒருபுறம், மிச்ச இட்லி நாளை இட்லி உப்புமாவாக ஆகப்போகுதே என நான் கவலைப்படுவது இன்னொரு புறம். வாழ்க்கை இப்படியே போயிடுமோ?

facebook.com/Mano Red

தோழி: என்னடா அர்ஜுன் தாஸ் வாய்ஸ் எடுக்கிறியா?

அட போம்மா. ஒமைக்ரான்ல அடைச்சிக்கிட்ட தொண்ட இன்னும் ஓப்பன் ஆகல.

Facebook.com/buhariRaja

‘‘தம்பி, ஒரு சோடா கொடுப்பா...’’

‘‘என்னா சரக்குண்ணே?’’

வயித்தவலிக்கு வாங்கிட்டுப் போறேண்டா. சோதிக்கறானுங்களே!

twitter.com/vemalism

ஐ.டி ஊழியர்கள் ஏதோ நாட்டுக்கு சேவை செஞ்சோம்ங்கிற மாதிரி பேன்டமிக்லயும் வேலை செஞ்சேங்கிறாங்க. பேன்டமிக்லயும் உங்களுக்கு வேலை போகலைன்னு சொல்லிப் பழகுங்கய்யா!

Anna ben: மனம்விட்டு சிரிங்க!
Anna ben: மனம்விட்டு சிரிங்க!

twitter.com/ImAvudaiappan

யோசித்துப் பார்த்தால், இந்த நவீன காலத்தில் ஒருவரின் Peace of Mind-ஐக் கெடுக்க ஒரு போன் கால் போதுமானதாக இருக்கிறது.

twitter.com/mohanramko

இவங்ககிட்ட இதான் பிரச்னையே... வச்சா ஒரே நாள்ல 4 கல்யாணத்தை வச்சிடறாங்க, எங்கே டிபன் சாப்பிடறதுன்னே தெரியலை!

twitter.com/Suyanalavaathi

பஸ்ல போகும் போது, நீங்க மாஸ்க் போடலன்னாலும் பரவாயில்ல. ஆனா மாஸ்க் போட்டு வர்ற எங்கள குறுகுறுன்னு பிக் பாக்கெட் மாதிரி பாக்காதீங்க!

twitter.com/mohanramko

‘‘டிரஸ் போடுறதுக்குக்கூட குறை சொல்றாங்க மாமா!”

‘‘ஸ்கூல் குழந்தைகளையா மாப்ள?”

‘‘இஸ்கூல் குழந்தைகளை இல்லை மாமா, நம்ம ‘ஜி’யை!”

twitter.com/asdbharathi

‘மீதமுள்ள திரைப்படத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று தோன்ற வைக்காத திரைப்படமே மிகச்சிறந்த திரைப்படம்.