சினிமா
Published:Updated:

வலைபாயுதே

Vijay Deverakonda
பிரீமியம் ஸ்டோரி
News
Vijay Deverakonda

ஒரு‌ முக்கியமான செமினார் ப்ரெசன்டேசனுக்கு முன்னால அவசரமா டக்கின் பண்ணும்போது பேன்ட் ஜிப்பு தெறிச்சதுண்டா..?

twitter.com/HariprabuGuru

காங்கிரஸ் அலுவலகத்தில் பிரஷாந்த் கிஷோர்...

‘‘எப்ப வந்தீங்க?’’

‘‘இப்பதான் வந்தேன். போர் அடிக்குது.’’

‘‘நெட்ப்ளிக்ஸ்ல படம் பாருங்க...’’

twitter.com/Thaadikkaran

‘‘ஒரு 10 ரன் எக்ஸ்ட்ரா அடிச்சிருந்தா...’’

‘‘அடிச்சிருந்தா..?! கடைசி ஓவர் ஜோர்டான்தான். அதையும் அடிச்சிருப்பானுங்க!”

twitter.com/altappu

இந்திய சினிமா இண்டஸ்ட்ரிலயே, ஏன் உலக அளவிலேயே மிகுந்த நன்றி உணர்வு கொண்டவர்கள் கேரளாக் காரங்கதான்.

Yuvan: திராவிட மாடல்!
Yuvan: திராவிட மாடல்!

twitter.com/PeterAlphonse7

‘இளையராஜாவுக்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு’ என்று சகோதரி தமிழிசை சொல்வது சரியே! அதைப்போல ‘இளையராஜாவின் கருத்து அபத்தமானது, உள்நோக்கத்துடன் வெளியி டப்பட்டுள்ளது’ என்று கருத்து தெரிவிக்க மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதையும் தமிழிசை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்!

twitter.com/Maddoc_

ஒரு‌ முக்கியமான செமினார் ப்ரெசன்டேசனுக்கு முன்னால அவசரமா டக்கின் பண்ணும்போது பேன்ட் ஜிப்பு தெறிச்சதுண்டா..? ஆயிரம் தற்கொலைக்கு ‌சமம்!

twitter.com/JaRa2X

KGF-2 சூப்பர்னு சொன்னா தமிழ் இண்டஸ்ட்ரிய விட்டுக்கொடுக்கறதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டானுக. சி.எஸ்.கே-வுக்கு விசில் போடலைன்னா தமிழனில்ல மொமன்ட்!

twitter.com/SundarrajanG

நாடு எங்கே செல்கிறது? உ.பி-யிலுள்ள பரேலியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மீது தேச ஒற்றுமையைச் சீர்குலைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இரவு முழுவதும் தங்கவைக்கப்பட்டுப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு என்ன? சிங்காய் முராவன் கிராமத்தைச் சேர்ந்த நயீம், முஸ்த்கிம் என்கிற 16, 17 வயதுள்ள இந்த இரண்டு இஸ்லாமியச் சிறுவர்கள், கவனக்குறைவால் ஒரு பாகிஸ்தானியப் பாடலைக் கேட்டுள்ளனர், அதுவும் வெறும் 40 விநாடிகளுக்கு மட்டுமே. அருகிலிருந்தவர்கள் ‘இது பாகிஸ்தான் பாடல்’ என்றவுடன், அதை நிறுத்திவிட்டு மன்னிப்பும் கேட்டுள்ளனர். இருந்தாலும் அருகில் இருந்த ஆஷிஷ் என்கிறவர் காவல் நிலையம் சென்று புகார் அளித்து அந்தச் சிறுவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பாடலைப் பாடக்கூடாது, கேட்கக்கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா? வெறும் 40 விநாடிகள் மட்டுமே கேட்டதற்காக இரவு முழுவதும் காவல்நிலையத்தில் தங்கவைக்கப்படுவதன் அவசியம் என்ன? தவிர பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானிலுள்ள வரவேற்பு பற்றிக் கொஞ்சமாவது இவர்களுக்குத் தெரியுமா? பாகிஸ்தானில் வெளியான பாலிவுட் படங்களில் ‘நான் வளர்ந்தபோது பார்த்தது வேறொரு இந்தியா’ என்று எழும் குரலைக் கேளுங்கள். நாம் உண்மையில் அவர்கள் பார்த்த இந்தியா இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலை தொடர்ந்தால், உணவு, உடை தாண்டி நாம் கேட்க, பார்க்க வேண்டிய விஷயங்களில்கூட அதிகார மையத் தலையீடு நடப்பதைத் தடுக்க முடியாத நிலைக்குத்தான் போவோம்.

Vijay Deverakonda: பாரீன் சோறு!
Vijay Deverakonda: பாரீன் சோறு!

twitter.com/abhirhythm_

ஒருத்தர் மேலிருக்கும் பிரமிப்பு அவர் வாயைத் திறக்காமலிருக்கும் வரையே.

twitter.com/JamesStanly

‘‘என்ன ப்ரோ... தமிழ்ப் படங்கள்ல லாஜிக்கே இல்ல..?’’

‘‘எப்புடி இருக்கும்... நீங்கதான் RRR புல்லட் சுத்துற சீனுக்கு சட்டையக் கழட்டிச் சுத்துனவர் ஆச்சே..!”

twitter.com/Thaadikkaran

‘‘என்ன தம்பி, சட்டையெல்லாம் செகப்பா இருக்கு, சேட்டு பான் பராக் போட்டு எச்சை துப்பிட்டாரா..?”

‘‘பீஸ்ட் சட்டைங்க...’’

twitter.com/Suyanalavaathi

செல்போன்ல சார்ஜர் ஒயர் மாட்டிட்டு ஒரு நிமிஷத்துல ஸ்விட்ச் போடலைனா, செல்போன் ஒரு சவுண்ட் குடுக்குற மாதிரி ஒரு ஆப்ஷன் கொண்டு வரலாம்... ஐடியா இல்லாத பசங்க!

twitter.com/mohanramko

மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிட்டு, ‘கணவர் என்ன நகை வாங்கிக் கொடுத்தார்’னு கேட்கும் எல்லாச் சொந்தக்காரர்களுமே வில்லன்கள்தான்!

twitter.com/Suyanalavaathi

பண்டிகை விடுமுறை முடிஞ்சு, திங்கள்கிழமை இந்த ஸ்கூல் பிள்ளைங்ககூட அசால்ட்டா போயிருதுங்க... நமக்குதான் ஆபீஸ் போறதுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு!

twitter.com/Thaadikkaran

வர்ற தீபாவளிக்கு பட்டாசெல்லாம் வாங்க வேண்டியது இல்ல, ஒரு எலெக்ட்ரிக் பைக் வாங்கி வீட்டுக்கு முன்னாடி சார்ஜ் போட்டு நிப்பாட்டிடணும், நல்ல புஸ்வாணமா எரியும்..!

twitter.com/mekalapugazh

சூதாட்டத்தில் தோற்ற தருமர் மீண்டும் சூதின் மூலமே வெற்றிகொள்வார் என்பதைத் தவறாக மொழிபெயர்த்ததுதான், ‘தர்மத்தின் வாழ்வைச் சூது கவ்வும்... மறுபடி தர்மமே வெல்லும்...’ என்பது.

twitter.com/sasitwittz

பெரிய பங்காளிங்க சொத்துச்சண்டையைக்கூடத் தீர்த்து வைத்துவிடலாம் போல! பஸ்ல ஜன்னலை சரி சமமாக இரண்டு பேருக்கும் காத்து வரும் மாதிரி வைக்கிறது ரொம்ப கஷ்டம்.

AR Rahman: கலைக்குடும்பம்!
AR Rahman: கலைக்குடும்பம்!

facebook.com/Revathy Ravikanth

Why should we hire you?!

‘கூப்டதே நீதாண்டா’ன்னு சொல்லுடா பெரியவனே...

twitter.com/krishnaskyblue

சோனியா காந்தி சொன்னாலே கட்சில எவனும் கேக்க மாட்டானுக... இதுல PK சொல்லுறதைக் கேட்டு 2024-ல ஆட்சிக்கு வரதுலாம் மும்பை பிளே ஆப் போற மாதிரிதான்!

twitter.com/Anitha200120

எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் ஒரு கப் டீ குடிச்சிட்டே உங்களுக்குப் பிடிச்ச பாட்டக் கேளுங்க, இதைவிட நிம்மதி தருவது வேறு எதுவும் இல்லை.

facebook.com/ஃபௌசியா

‘நம்ம ஜி ஒரு அம்பேத்கர்’ன்னு ராஜா சொன்னத கிண்டல் பண்ணிருந்த பதிவுக்கு ஹாஹா போட்டு திரும்பறதுக்குள்ளயும், ‘மோடி மிகவும் நல்லவர்’னு கலைஞர் சொல்லியிருந்தது கண்ணுல படுது. ஸ்டாலின் நரிக்குறவர் கையால சாப்ட்டத ‘ஒரு கவித்துவக் குவியல்’ங்கற பதிவுக்கு ஹார்ட்டு அமுக்கிட்டு நிமிர்றதுக்குள்ள, ‘தலித் வீட்டில் உணவருந்திய யோகி’ங்கற பதிவு வருது.

மார்க் ஜீ மார்க் ஜீ... ‘ஹாஹா’வையும் ‘ஹார்ட்’டையும் உல்டா புல்டா பண்ணி தர்ம அடி வாங்கறதுக்குள்ள, அந்த நாலு வருஷம் முன்ன கொடுத்த ‘பர்பிள் பூ’ ரியாக்‌ஷன மறுபடியும் recycle பண்ணுங்க ப்ளீஸ்.

twitter.com/shivaas_twitz

யார பாத்தாலும் நம்மளவிட நல்ல வாழ்க்கை வாழுற மாதிரியே தோணுது டாக்டர்!

twitter.com/pachaiperumal23

நமது போனைக் கையூட்டாகக் கொடுத்தே டி.வி ரிமோட்டை வாங்க வேண்டியதுள்ளது குழந்தைகளிடம்.

twitter.com/HariprabuGuru

பங்க் ஓனர்: பத்து லிட்டர் பெட்ரோல் போட்டா பைக் ஒன்னு ஃப்ரீன்னு ஆஃபர் போடலாம்னு இருக்கேண்ணே...

twitter.com/Suyanalavaathi

டு MI: என்ன தலைவரே, இப்படி தோத்துக்கிட்டே இருக்கீங்க..?

அது ஒன்னும் இல்லடா... 5 கப் வாங்கியாச்சு. ஜெயிச்சு ஜெயிச்சு போர் அடிக்குதுடா. அதான் இந்த வட்டம் தோத்தா எப்படி இருக்கும்னு பாக்குறேன். ஆனா ஒன்னுடா... தோத்தா டென்ஷன் இல்லாம இருக்குடா..!

twitter.com/mekalapugazh

Inter-racial marriages இயல்பாய்ப்போன மேற்குலக வழியில், Inter-caste marriges-ஐ இயல்பாய்க் கடக்கும் மனநிலை நோக்கி இந்தியா மாறப்போவது எப்போது?

twitter.com/gurunaatha

‘உன் பைக்க ரெண்டு நாள் குடுடா, திருப்பித் தரும்போது பெட்ரோல் போட்டுத் தரேன்’ எனும் நண்பர்கள் ஆகச் சிறந்த வரம்!

twitter.com/manipmp

உரையாடல், அறிவைப் பகிர்ந்துகொள்வது. வாக்குவாதம், அறியாமையைப் பகிர்ந்துகொள்வது.

twitter.com/Anvar_officia

கடிகாரம் நின்றுபோனால் பேட்டரியை மாத்துவாங்களே தவிர கடிகாரத்தை யாரும் மாற்றுவதில்லை, அப்படித்தான் நாம் பணிபுரியும் இடத்தில் ஊழியர்களையும்!

twitter.com/asdbharathi

கெட்டுப்போன பலாப்பழத்தில் பத்துச் சுளை இருந்தா என்ன நூறு சுளை இருந்தா என்ன...

சோகத்தில் முளைத்த தத்துவம்.

twitter.com/gpradeesh

2 வருச வேலைக்கே கம்பெனிக்காரன், medical test, written test, technical interview வச்சுதான் எடுக்குறான். ஆனா நாம 40-50 வருசம் சேந்து வாழப்போற life partner-ஐ இன்னும் ஜாதகத்தையும் கட்டத்தையும் பார்த்து செலக்ட் பண்ணிக்கிட்ருக்கானுக பிளடி பக்கர்ஸ்.

Priyanka Chopra: ஸ்டைலா ஒரு செல்பி!
Priyanka Chopra: ஸ்டைலா ஒரு செல்பி!

twitter.com/Anvar_officia

ஒவ்வொரு டீக்கடையிலும் ‘இங்கு அரசியல் பேசாதீர்கள்’னு எழுதி வச்சிருப்பாங்க. ஆனா, இப்ப டீக்கடைக்காரர்களும், டீயும் அரசியலாக இருக்கின்றன!

twitter.com/amuduarattai

எந்த மொழிக்கும் எதிராக காங்கிரஸ் செயல்பட்டது இல்லை: கே.எஸ்.அழகிரி.

உங்களுக்குத்தான் உட்கட்சி கோஷ்டிகளுக்கு எதிராகச் செயல்படவே நேரம் சரியாக இருக்குமே!

twitter.com/Vasanth920

நாம் சிறுவயதில் சொன்ன அத்தனை பொய்களும் ஆசைகள்தான்.

twitter.com/oorkkavalaan

Husband: வலிமை இருக்கிறவன் எதை வேணும்னாலும் மாத்துவான்...

Wife: அதுக்காக சீரியல் பார்க்கும்போது சேனலையெல்லாம் மாத்தக்கூடாது. செவுல்லயே வைப்பேன்...

twitter.com/amuduarattai

தண்ணீரை டம்ளரில் வைப்பதற்கு பதில், வாட்டர் பாட்டிலை வைப்பதில் தொடங்குகிறது ஒரு ஹோட்டலின் வியாபார யுக்தி.