சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

பீஸ்ட் பார்ட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
பீஸ்ட் பார்ட்டி!

கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் முதன்முதலாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, மகிழ்ச்சிக்குரியது

twitter.com/ArunPandiyanMJ

ராக்கிய ரொம்ப underestimate பண்ணுனது.

அதீரா, ரமிகா சென், ராஜேந்திர தேசாய் மற்றும் பீஸ்ட் டீம்.

twitter.com/SundarrajanG

அன்று சாத்தான்குளம், இப்போது விக்னேஷ் எனத் தொடரும் லாக்கப் மரணங்கள் தமிழ்நாட்டில் “சட்டத்தின் ஆட்சி” நடைபெறாமல் காவல்துறையின் ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கான சாட்சிகள். முற்போக்கு பேசுகின்ற தமிழ்ச் சமூகத்திற்கு அவமானம்.

twitter.com/Thaadikkaran

ட்ராபிக்ல கூகுள் மேப் யூஸ் பண்ணும் போது ~

Take left

Me ~ ம்ம்

Then turn left onto NH

இருடா இருடா இன்னும் திரும்பவே இல்ல...

twitter.com/Suyanalavaathi

எவ்ளோதான் திட்டினாலும், நம்ம மேல கொஞ்சம்கூடப் பாசம் குறையாம, நம்ம கூடவே இருக்குறது நம்ம பிரச்னைகள் மட்டும்தான்!

twitter.com/npgeetha

‘இந்த cup-அ sink-ல போட்டுடேன் please…’

‘நீங்கதான குடிச்சீங்க… நீங்களே போடுங்க…’

‘நீ குளிக்கிறதுக்கு நான்தான குளிப்பாட்டி விடுறேன்…’

‘ஏன்னா எனக்குக் குளிக்கத் தெரியாது… உங்களுக்கு cup-அ sink-ல போடத் தெரியும்ல…’

தென்னைய வச்சா எளநீரு மொமண்ட்

Tovino Thomas: டெரர் லுக்!
Tovino Thomas: டெரர் லுக்!

twitter.com/abhirhythm_

காபி ரொம்ப ஸ்ட்ராங்கா வேணும்னு டபுள் டிகாஷன் போட்டு திக்கா பாலைக் காய்ச்சி டம்ளர்ல எடுத்துட்டு டிகாஷன அதுல ஊத்தினா...

தூக்கக் கலக்கத்துல டீத்தூள் போட்டிருக்கேன்.

twitter.com/GunasekaranMu

கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் முதன்முதலாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, மகிழ்ச்சிக்குரியது. இதேபோன்ற அறுவை சிகிச்சை தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரியில் 1987-ம் ஆண்டே நடந்தது என்ற செய்தி சிலருக்கு வியப்பைத் தரலாம். சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் (MMC) 1987 முதல் இதுவரை 1,600 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. மட்டுமன்றி, மொத்தம் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இப்போது நடக்கிறது. கட்டணம் இல்லை. மாதந்தோறும் ரூ.10,000 மதிப்புள்ள மருந்துகளும் இலவசம். #திராவிட_மாடல்

twitter.com/imcomrade

சின்ன வயசுல WWE-லாம் உண்மையாகவே அடிச்சுக்குறாங்க, எல்லாமே நெஜம்னு நம்பி அப்புறம் அதெல்லாம் staged/scripted-னு தெரிஞ்ச மாதிரி IPL-ம் ஒரு காலத்துல தெரியவரும்னு தோணுது.

twitter.com/Thaadikkaran

இனி ஏ.டி.எம்-களைத் தேடி அலைய வேண்டியதில்லைன்னு மோடி சொல்லியிருக்காரு, அடிக்குற வெயிலுக்கு அங்கதான் கொஞ்ச நேரம் ஏசி காத்து வாங்கிட்டு வருவேன், இப்போ அதும் போச்சா...

twitter.com/mohanramko

இவ்வளவு பெரிய துணியைத் தைத்து குடிசைகளை மறைக்கறதுக்கு பதிலா, அவர் கண்ணைக் கட்டிக் கூப்பிட்டுப் போகலாமே... என்ன நான் சொல்றது..?

twitter.com/Cat__offi

வாழ்க்கையின் மிக நீளமான 5 விநாடிகள் யூடியூபில் skip now-க்காகக் காத்திருப்பதுதான்.

twitter.com/ATC_SPACES

ஜி - பகல்ல சூரியன் இருக்கு, நைட்ல கண்ணை மூடிக்கிட்டு தூங்கிடுறோம். இதுக்கு கரன்ட் எதுக்கு?

twitter.com/jeevanlancer

நாங்கல்லாம் எவ்ளோ தன்னடக்கமா இருக்கோம்னே பெரும பீத்துராய்ங்க... உங்க மத்தியில வாழுறதுக்குள்ள யப்பா டேய்ய்ய்ய்.

facebook.com/cmayilan

திருச்சி மாநகராட்சி கிட்டத்தட்ட அனைத்து பிரதான சாலைகளையும் மிக நேர்த்தியாக உழுதிருக்கிறது. ஒரு மழையடித்தால் போதும், நேரடியாக நடவுக்கே போகலாம். விவசாயம் காப்போம்!

twitter.com/sasitwittz

வெள்ளைக்காரன் விட்டுப் போனதுல ஞாயிற்றுக்கிழமை லீவு மட்டும்தான் இன்னும் மாறாமலேயே இருக்கு...

twitter.com/Thaadikkaran

வெள்ளைத் துணி போட்டு அந்த ஏரியாவை மறைச்சிருக்காங்க, அந்த வெள்ளைத் துணியும் அதானி கம்பெனில இருந்துதானே வாங்கியிருப்பாங்க.

twitter.com/amuduarattai

தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, சொல்லாமல் முன்பே வருவது கணவருக்குத் தரும் சர்ப்ரைஸ் அல்ல, ஷாக் என்பதை அறிந்த மனைவி கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.

twitter.com/saravankavi

காங்கிரஸ் 5000 டிஜிட்டல் ஊடகங்கள் உருவாக்கி 15,000 நபர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்

-பிரசாந்த் கிஷோர்.

கார்த்தி சிதம்பரம் ~ எதுக்கு, நெட்ப்ளிக்ஸ்ல படம் பார்க்கறதுக்கா?

twitter.com/SanjaiGandhi

கடந்த ஆண்டு அமித்ஷா சென்னை வந்தபோது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பட்டாளமே விமான நிலையம் சென்று வரவேற்றது. நேத்தும் வந்திருக்கார். ஒரு அமைச்சர்கூடப் போகல போல. ஒரு சாணக்கியன் என்றும் பாராமல்... வொர்ஸ்டுப்பா.

Nelson: பீஸ்ட் பார்ட்டி!
Nelson: பீஸ்ட் பார்ட்டி!

twitter.com/FareethS

உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு...

போன தடவ சுவர் கட்டுற அளவு நம்மகிட்ட பணம் இருந்துச்சு...

twitter.com/Thaadikkaran

சிக்னல் விழுகாத போதும் பின்னாடி இருந்து டொய்ங் டொய்ங் ஹாரன் அடிக்குறவங்களுக்கு கருடபுராணத்தின்படி தண்டனை கொடுக்கணும்யா... செத்த பயலுவே..!

twitter.com/shivaas_twitz

மட்டன் 950, சிக்கன் 300ஆம்.

ஜெய்ஸ்ரீராம் சொல்லிப் பழகிக்க வேண்டியதுதான்.

twitter.com/BlitzkriegKK

குரங்கிலிருந்து மனிதன் வந்தான்கிறது தியரி. ஆனா இங்க மனுசங்க எல்லாம் அனுமன் சேனா பஜ்ரங்தள்னு மீண்டும் குரங்கா மாறி குரங்குத்தனமான செயல்களைச் செஞ்சுட்டு வர்றாங்க. அதுக்கு மதமும் கடவுள்களும் அரசும் துணை. பின்ன நாடு எப்படி முன்னேறும்? இன்று அனுமன் தீவைப்பது இலங்கைல இல்ல. இந்தியாதான்.

twitter.com/kusumbuonly

அடப்பாவிங்களா, 168 ரன்னக்கூட அடிக்க முடியாம ஒரு துப்புக்கெட்ட டீம். அது தொடர்ந்து 8 மேட்ச் எல்லாம் தோக்குது. அந்த டீமுக்கு நாலு சப்போட்டர்ஸ் வேற... ச்சீ ச்சீ எப்படித்தான் ப்ளூ ஜெர்சியோட வெளியில் வெட்கமே இல்லாம தலைக்காட்டுறாங்களோ...

twitter.com/Greesedabba2

யாராவது நல்லாப் பேசினாக்கூட, எதாவது உள்நோக்கத்தோட பேசறாங்களோன்னு சந்தேகத்துல பட்டும் படாம பதில் பேசி அனுப்பிட்டு, அப்புறமா நல்லாப் பேசிருக்கலாமோன்னு ஆதங்கமாப் போயிருது.

twitter.com/saravankavi

இன்று உலக புத்தக தினம்ங்கறதே பக்கத்துல பேசிக்கிட்டு இருக்கறவங்க மூலமாதான் தெரியுது. ஹ்ம்... நாமெல்லாம் எப்பத்தான் அண்ணாமலை ஆகப் போறோமோ?