சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

நம்ம ஜி அடுத்து எதை வித்துடுவாரோன்னு ஒருபக்கம் பயத்துல இருந்தா, எலன் மஸ்க் அடுத்து எதை வாங்கப் போறாரோன்னு ஒருபக்கம் பயத்துல இருக்க வேண்டியதா இருக்கு!

twitter.com/naaraju

ஆக, பாலசந்தர், முத்துராமன் தொடர்ந்து இப்ப கடைசியா கே.எஸ்.ரவிக்குமார் வரிசைல, ரஜினி, கமல் இருவரையும் இயக்குன முதல் இளம் தலைமுறை இயக்குநர்ங்கற பெயரைப் பெறுகிறார் பா.இரஞ்சித். சர்வ நிச்சயமாக இது ஒரு சாதனை.

twitter.com/anand_srini

சூரியகாந்தி எண்ணெய் விலை ஒரு லிட்டர் ரூ.210. எலுமிச்சை விலை 1 கிலோ ரூ.175.

‘‘நான் எண்ணெய், எலுமிச்சை எல்லாம் உணவில் சேர்ப்பதில்லை!’’

twitter.com/manipmp

காலையில் பஸ்ஸில் இடம்பிடிப்பது, ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதுபோல் சவாலானது!

twitter.com/itz_idhayavan

மோடி இரண்டு இந்தியாக்களை உருவாக்கி வருகிறார். ஒன்று பணக்காரர்கள், தொழிலதிபர்களுக்கானது, மற்றொன்று சாமானியர்களுக்கானது: ராகுல் காந்தி

# 8 வருஷம் கழிச்சு ஒரு வழியா கண்டுபிடிச் சிட்டிங்க போல?!

வலைபாயுதே

twitter.com/LAKSHMANAN_KL

வருங்காலத்தில் நிச்சயமாக ஜெயலலிதா ஆட்சியை வழங்குவோம்: சசிகலா

அப்ப... மறுபடியும் ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு வருமோ?!

twitter.com/Thaadikkaran

இவுனுங்ககிட்ட இதுதான் பிரச்னை. மழை வந்தா போதும்... இளையராஜா மியூசிக்ம்பானுங்க, போண்டா பஜ்ஜிம்பானுங்க, காபிம்பானுங்க. ஒருத்தனாவது பிளாட்பாரத்துல இருக்கறவன் எங்க போய் வாழ்வான்னு யோசிப்பானுங்களா..?

பஜ்ஜி சூடா இருக்குல்ல..!

twitter.com/shivaas_twitz

படிக்கும்போது சம்மர் லீவு எப்ப வரும்னு ஏக்கமா இருக்கும். பல காலம் கழிச்சி ‘சம்மர் லீவுக்கு ஃபேமிலி எப்ப ஊருக்குப் போகும்’னு அதே ஏக்கம் திரும்ப வரும். இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம்னு புதுப்பேட்டையை சேர்ந்த பைக் மெக்கானிக் ஒருவர் கூறுகிறார்.

facebook.com/ilango.krishnan.1

ஹோட்டலுக்கு இட்லி பார்சல் வாங்கப் போனேன். கடைக்காரர் தெற்கத்தி ஆளு போல... “இட்லி ஆயிடுச்சு” என்றார். சரி என்று நானும் ‘‘ஒரு பத்து இட்லி கட்டுங்க” என்று சொல்லிவிட்டு நின்றுகொண்டிருந்தேன். கால் மணி நேரம் ஆனது. கடைக்காரர் என்னைக் கண்டுகொள்ளாமல் வேறு வேலைகள் செய்துகொண்டிருந்தார். “என்னாச்சு அண்ணா இட்லி?” என்றேன். ‘‘அதான் ஆயிடுச்சுன்னு அப்பவே சொன்னேனே... வேற என்ன வேணும்”னு கேட்கிறார். அவுங்க ஊர் பாஷையில் ‘ஆயிடுச்சு’ன்னா தீர்ந்திடுச்சுன்னு அர்த்தம் போல. கொங்கு பாஷைல ‘ஆயிடுச்சு’ன்னா ரெடியா இருக்குன்னு அர்த்தம். இது புரியாமல் நானும் கேணைக்காத்தானாட்டம் கால் மணி நேரமா நின்னுட்டு இருந்திருக்கிறேன். கொங்கன்ஸ் எங்க போனாலும் பிழைக்கறது கஷ்டம்னு சும்மாவா சொன்னாங்க!

twitter.com/aroobii

உதறவும் முடியாத, உரிமையாய்க் கொண்டாடவும் முடியாத பைத்திய பிரியங்களை சுமந்தலையும் வரை, உங்களின் மன அழுத்தங்கள் தீரப்போவதில்லை என்றறிக.

twitter.com/teakkadai1

தியாகங்கள் நினைவுகூரப்படுவதில்லை, சாதனைகள்தான்!

twitter.com/Thaadikkaran

அவனவன் ஏதேதோ லிங்க் வச்சு வாழ்க்கைல முன்னேறிட்டுப் போறாங்க. நம்மகிட்ட எல்லாம் புதுப்பட லிங்க் கேட்குற குரூப்தான் இருக்கு...

twitter.com/CTenkasi

பானிபூரி விக்கிறது அவ்வளவு கேவலமா? - வானதி.

இல்லைங்க, எல்.ஐ.சி-யை விக்கிறதுதான் கேவலம்...

twitter.com/mohanramko

மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும்: அண்ணாமலை

# ஓ, மை காட்!

twitter.com/prabhu65290

மனசாட்சி to me: வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்குப் போகணும்னு நெனைக்கத் தெரிஞ்ச உனக்கு, செல்லை நோண்டும்போது டைம் வேஸ்ட் ஆகுதுன்னு ஏண்டா நெனைக்கத் தோணலை?

twitter.com/SundarrajanG

ஆளும் தி.மு.க அரசு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற்போக்குத் தனத்திற்கு பதில் ‘குறைந்த பிற்போக்குத்தனம்’ அல்ல, முற்போக்கே பதில்.

வலைபாயுதே

twitter.com/Iyankarthikeyan

ஆம்பூர் பிரியாணித் திருவிழாவில் பீஃப் பிரியாணிக்குத் தடை... ஆம்பூர் நிச்சயமாக உ.பி-யில் இல்லை!

facebook.com/manushya.puthiran

யூடியூப் செய்தியாளர்: திருச்சி சிவா மகன் பா.ஜ.க-வில் சேர்ந்தது பற்றி?

நான்: அவருக்குப் பேர் எதுவும் இல்லீங்களா?

யூடியூபர்: அது வந்து... என்னமோ வருமே! இருங்க, கூகுள்ல செக் பண்றேன்...

நான்: ஏம்மா, ஒருத்தரப்பத்தி கேட்கிறீங்க. ஆனா அவர் பெயர்கூட யாருக்கும் தெரியல... எல்லா யூடியூப் டைட்டில்லயும் ‘திருச்சி சிவா மகன்’ என்றே வருது. இது என்ன ‘தெய்வ மகன்’, ‘தேவர் மகன்’ மாதிரி பட டைட்டிலா?

twitter.com/PrakashMahadev

எந்தப் படம் வந்தாலும் ‘ஃபர்ஸ்ட் ஹாப் நல்லா இருக்கு. செகண்ட் ஆப் தான் சொதப்பலா இருக்கு’ன்னு ரிவ்யூ வருது. பேசாம செகண்ட் ஆப்பே வைக்காம பர்ஸ்ட் ஹாப்போடயே படத்தை முடிச்சுட்டா!

twitter.com/skpkaruna

நேற்றைய யூத், இன்றைய பூமர், இன்றைய யூத், நாளைய பூமர்... அதான் சார் லைஃப்!

twitter.com/Iyankarthikeyan

வெறுப்பே முக்கியம், இன அழிப்பே நோக்கம் என வாழும் வெறிபிடித்த கூட்டங்களுக்கு நெருப்பு வகுப்பெடுத்துள்ளது!

twitter.com/ratweetzz

‘என்ன, ஒரு புள்ளயோட இருக்க’ன்னு கேள்வியா கேட்டுக் கொல்றாங்க. இவங்களுக்கு எப்புடி புரியவைக்க, ‘அதுக்கு 90% காரணமே அந்தப் புள்ளதான்’னு!

twitter.com/JSKGopi

பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்!

twitter.com/Thaadikkaran

அழுது முடித்தவுடன் வரும் தெம்புக்கு ஆறுதல் வார்த்தைகள் ஈடாவதில்லை..!

twitter.com/Greesedabba2

‘‘டேய்... அப்ப நீயும் என்னை அடிச்சு பாயின்ட் டேபிள்ல முதல் ரெண்டு இடத்தைத் தக்க வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்னு சொல்லு...”

‘‘நீங்க ரொம்ப ராசியான ஆளு ஏட்டையா..!”

twitter.com/itskJayaprakash

எப்பேர்ப்பட்ட தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி... இன்னைக்கு பி.ஜே.பி-யை நக்கல் நையாண்டி பண்ற மாதிரி டயலாக் வச்சாதான் படத்தை ஓட வைக்க முடியும்ங்கிற நிலைமைக்கு வந்திருக்கு!

twitter.com/Anvar_officia

அப்பல்லாம் ‘ஷட் டவுன்’னா கம்ப்யூட்டர் ஞாபகத்துக்கு வரும். இப்பல்லாம் ‘மின்சாரம்’தான் ஞாபகத்துக்கு வருது!

facebook.com/cmayilan

கடந்த 2021 ஐபிஎல் கோவிட் பெருந்தொற்றுக்கு நடுவில் நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில், ஓர் அயல்தேச வீரர் சொன்னது “இந்தத் தேசத்தின் முரண் எனக்கு வியப்பளிக்கிறது. ஒரு பக்கம் தெருவெங்கும் மருத்துவ வசதி இல்லாமல் ஆம்புலன்ஸ்கள் வரிசையில் நிற்கின்றன. மறுபக்கம் கோடிகளில் செலவழித்து இப்போட்டி நடத்தப்படுகிறது.” இன்று மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக ஒரு வெளிநாட்டுக்காரரின் DRS மறுக்கப்படுகிறது. பத்துத் தனிநபர்களால் கோடிகோடியாகக் கொட்டி ஏலத்தில் ஆட்களை எடுக்கமுடியும். அதே நாட்டின் இன்னொரு முகம் இப்படி இருக்கிறது. ஐபிஎல் ஒருவிதத்தில், சர்வதேச அரங்கில் நம் பொருளாதாரச் சாய்வைப் பட்டவர்த்தனமாக்கிக்கொண்டே இருக்கிறது.

twitter.com/arattaigirl

எதுனா புதுப்படம் தியேட்டர்ல ரீலீஸ் ஆனா,

Others: கதை இப்படி இருக்கு, கேஸ்டிங் சொதப்பல், செம, மாஸ், அடிப்பொலி (mixed reviews).

மீ: எந்த OTT வாங்கிருக்குனு தெரியலையே. நம்மகிட்ட இருக்கற நாலுல எதுனா ஒன்னா இருந்துடணும் பெருமாளே!

twitter.com/Suyanalavaathi

வயசுல, மெனு கார்டுல விலைய பாக்காம சாப்பிடுற வாழ்க்கையும், வயசான பிறகு டயட் சார்ட் பாக்காம சாப்பிடுற வாழ்க்கையும் அமைவதெல்லாம் வரம்!

twitter.com/Anvar_officia

நம்ம ஜி அடுத்து எதை வித்துடுவாரோன்னு ஒருபக்கம் பயத்துல இருந்தா, எலன் மஸ்க் அடுத்து எதை வாங்கப் போறாரோன்னு ஒருபக்கம் பயத்துல இருக்க வேண்டியதா இருக்கு!