
சென்னையும் மும்பையும் இல்லாத IPL finals தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் போட்டியிடாத தேர்தல் மாதிரி இருக்கு!
twitter.com/VignaSuresh
ரிலேஷன்ஷிப்போ, நட்போ - உரையாடல்கள் குறையும்போது, அது முடிவை நோக்கிப் போகறத புரிஞ்சுக்கலாம்.
twitter.com/Raajavijeyan
மூடநம்பிக்கையிலேயே மிகப்பெரிய மூடநம்பிக்கை... வடையில உள்ள எண்ணெயை பேப்பரை வச்சு அமுக்கி எடுத்துட்டா உடம்புக்கு எந்தக் கெடுதலும் இருக்காதுன்னு நம்புறதுதான்!
twitter.com/mohanramko
குட்கா பொருள்களை விற்பனை செய்ய மேலும் ஒரு ஆண்டு தடை நீடிப்பு.
# இன்னும் ஒரு வருஷம் மறைச்சி வியாபாரம் பண்ணணும், அதானே..!
twitter.com/itz_idhayavan
நான் அறிவியலை நம்புகிறேன், மூடநம்பிக்கையை அல்ல - பிரதமர் மோடி
# பாத்திரத்தை மாங்கு மாங்குனு தட்டச் சொன்னப்பவே புரிஞ்சிடுச்சு ஜி?!
twitter.com/SriviShiva
ஒரு பெண் வாழ்வதற்கான திறன்களை பதின்பருவத்திலேயே பெற்றுத் தகவமைந்துவிடுகிறாள். ஒரு ஆண் வாழ்நாள் முழுதும் வளர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்... முதலில் அம்மாவால், அடுத்து மனைவியால். Domestication is the endless process for men.

twitter.com/Aasifniyaz
இனி அது நேரு ‘உள் குத்து’ அரங்கம் என அன்போடு அழைக்கப்படும்...
twitter.com/JamesStanly
ஜீ... மம்தா பேசுறேன். சென்னை மீட்டிங் பாத்தேன்... கொல்கத்தா மீட்டிங் வாரீங்களா..?
twitter.com/sambarakathali
இந்தியாவுக்குள் இரண்டு அரசுகள்... மூத்த குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்த மத்திய அரசு. மூத்த குடிமக்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கிய தமிழக அரசு.
twitter.com/VignaSuresh
காத்தடிக்கற திசையெல்லாம் பறந்தா, அதுக்குப் பேர் குப்பை.
facebook.com/Krishna Dvaipayana
ஜானி டெப்-ஆம்பர் ஹெர்ட் வழக்காடு மன்றக் காட்சிகள் சின்னச்சின்ன க்ளிப்பிங்குகளாக, வீடியோ மீம்களாக, திரைப்படக் காட்சிகள் கலந்து என யூடியூப், இன்ஸ்டா முழுக்க நிறைந்தி ருக்கின்றன. இதில் இந்தியர்கள் நடத்தும் பக்கங்களும் அடக்கம். இத்தனை பேர் ஒரு மான நஷ்ட வழக்கை இவ்வளவு ஆர்வத்துடன் லைவாக பல நாள்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமளிக்கிறது. ‘டிக்டாக்கில் அதிகம் பார்வையாளர்களிடம் போய்ச் சேரும் நிகழ்வும் இதுதான்’ என்கிறார்கள். ஜானி டெப் ஜாக் ஸ்பாரோவாக இந்த வழக்கிற்காக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆம்பர் தன் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். சினிமாவைத் தாண்டி இனி இதுபோன்ற நிகழ்வுகளே மக்களை ஈர்க்கக் கூடும். ‘கூத்தாடிகள் ரெண்டு பட்டால் ஊருக்குக் கொண்டாட்டம்’ என்று சொன்னவன் அறிஞன்.
twitter.com/bharath_kiddo
நீலாம்பரி ரூம் போய் கதவைச் சாத்திட்டு 18 வருஷம் ஆய்டுச்சு. ஆனா படையப்பா பொண்ணு அனிதா பி.ஜி படிக்குறா. எப்படியும் 21 வயசாவது இருக்கும். ஏதோ கணக்கு இடிக்குதே...

facebook.com/Gokul Prasad
விமானம் கிளம்பும் சமயத்தில் அருகிலிருக்கும் ஆள் இடைவிடாது பிரார்த்தனை செய்யத் தொடங்கும்போதுதான் நம் தைரியம் குறைந்து, ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பீதி ஆரம்பமாகிறது. கொஞ்ச நேரம் சும்மா இரேம்மா!
twitter.com/akaasi
இந்த ஆதார் எலக்ட்ரானிக் வடிவம், அட்டை வடிவம், போட்டோ காப்பி வடிவம், வாட்ஸ்அப் வடிவம், இதில் எது எப்படிப் பயனாகும், யாரால் எப்படி சரிபார்க்கப்படும், சேமிக்கப்படும், திருடப்படும் என்று அதை உருவாக்கியவனுக்கும் தெரியாது, உலாவ விட்டவனுக்கும் தெரியாது. சாவுங்கடா மொமன்ட் ஃபார் அஸ்.
twitter.com/shivaas_twitz
சென்னையும் மும்பையும் இல்லாத IPL finals தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் போட்டியிடாத தேர்தல் மாதிரி இருக்கு!
twitter.com/tparaval
வீட்டுக்கு வந்த விருந்தாளி அதிகமா பேசிட்டிருந்தா, என்ன சொல்லி அவங்களைக் கெளப்பலாம்? ‘‘உக்காருங்க... ஒரு காபி சாப்ட்டுப் போங்க!”
twitter.com/manipmp
சீட்டு போடத் தொடங்கியவுடன் வாழ்க்கையில் செட்டிலாகி விட்டதாக நினைச்சுக்கிறோம்!
twitter.com/mekalapugazh
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளும் அதே கவனத்துடன் எவர்சில்வர் பாத்திரங்களையும் கையாளும் திறன் பெற்றுவிடுகின்றனர்... கைக் குழந்தை இருக்கும் வீட்டிலுள்ளோர்!
twitter.com/Vkarthik_puthur
உதயநிதி அளவுக்கு நான் நல்ல நடிகர் அல்ல - அண்ணாமலை
# ஆமாமா... உங்களுக்கு முழங்கால் தண்ணியில போட் விடுற அளவுக்குத்தானே நடிப்பு வரும்.

twitter.com/itz_idhayavan
இந்தியா மோடியால்தான் வலிமை பெற்றது - பசவராஜ் பொம்மை
# அப்ப போனி கபூரால் இல்லையா?!
twitter.com/sasitwittz
எதிர்பாராத விதமாகத் தவறுகள் செய்வதற்கு ‘சந்தர்ப்பங்கள்’ கிடைத்ததுபோல, அவற்றைத் திருத்திக்கொள்வதற்கும் நிறைய ‘சந்தர்ப்பங்கள்’ வந்திருக்கும்.
twitter.com/nelsonvijay08
தமிழ்நாட்டு நிகழ்ச்சில தமிழ் ஆடியன்ஸுக்கு ஏன்டா இந்திப் பாட்டு பாடணும்னு கேட்டா, ஐ.பி.எல் பைனல்ல ரஹ்மான் ஏன் தமிழ்ப் பாட்டு பாடலன்னு கேக்குறாங்க. இந்திப் பாட்டு மட்டும் பாடுறாருன்னு புகார் வேற. அதைத்தான் நாங்களும் கேக்குறோம், ராஜஸ்தான்-குஜராத் பைனல்ல போய் ரஹ்மான் ஏன் தமிழ்ல பாடணும்?
facebook.com/ஃபௌசியா
‘தண்ணீல பூ போடறது மங்கலம், தட்டோட போடறது அமங்கலம்’ன்னுல்லாம் அந்தப் பக்கம் ஐன்ஸ்டீன்ங்க அலசிட்டிருக்காங்க... ‘அடுப்புல வதங்கப்போறது என்னவோ வெங்காயம்தான். ஆனா வாணலியோடதானே அடுப்புல வைக்கிறோம்’ ரேஞ்சுக்கு உடன்பிறப்புகளும் defensive ஆட ஆரம்பிச்சிடாதீங்கய்யா!
twitter.com/saravankavi
மக்களைப் பிளவுபடுத்துகிற பணியில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது - கே.எஸ்.அழகிரி
‘‘அதைத் தடுக்க நீங்க என்ன பண்ணீங்க..?!’’
‘‘பல கோஷ்டிகளா பிரிந்துவிட்டோம்...’’
twitter.com/Greesedabba2
HDFC பேங்க்ல 100 பேர் அக்கவுன்ட்ல தவறுதலா தலா 13 கோடி ரூபாய் பணம் வரவு வச்சுட்டாங்களாம்.
# ஐயோ, அந்த பேங்க்ல நான் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணாமப்போயிட்டனே...
twitter.com/mohanramko
‘‘டேய், மறுபடியும் குக் வித் கோமாளி பார்க்கற...’’
‘‘ட்வின்ஸ் பிறக்கணும்னா ரெண்டு தடவைதாண்ணே பார்க்கணும்...’’
facebook.com/Jeeva Ganesh
எனது ஏரியாவில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்கு ஃப்ரைடு ரைஸ் செய்வதற்கு ஒரு மாஸ்டர் இருக்கிறார், வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அந்தக் கடையின் உரிமையாளர் அந்த மாஸ்டரை எந்தநேரமும் திட்டிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு மரியாதை கொடுக்காமல் கண்டபடி பேசுகிறார். மாஸ்டர் அதையெல்லாம் கேட்டுக்கொண்டும் சிரித்தபடி வேலையைப் பார்க்கிறார். மற்றபடி, நான் பார்த்தவரை அந்த மாஸ்டர் தனது வேலையில் சரியாகத்தான் நடந்துகொள்கிறார். இது மட்டுமின்றி, எனது நண்பர்களுடன் பானிபூரி சாப்பிடப் போவேன், அங்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்தான் கடையை நடத்தி வருகிறார். அவரிடமும் கடைக்கு வருபவர்கள் மிரட்டி ‘டேய்ய், 6 பீஸ்தான் வச்சுருக்க, இன்னும் இரண்டு வை’ என்பார்கள். அவரும் ‘நஹி... நஹி...’ என்று கூறிப் பார்ப்பார். அவர்கள் மிரட்டி கூடுதலாக இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வார்கள்.
‘ஏன் இப்படிப் பன்றாங்க, அவுங்க வேலை பார்க்கதான் இங்க வந்துருக்காங்க’ என்று சொன்னால் ‘வடக்கன்’, ‘வந்தேறி’ என்று கிண்டலாகக் கூறி அதைக் கடந்துவிடுகிறார்கள். இது எதனால்? நாம் இங்கு பெரும்பான்மையினர் என்ற ஆதிக்கமா?

twitter.com/ItsJokker
ஜீ: என்னையவாடா கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்க? இருங்கடா, ஊருக்குப் போன உடனே சிலிண்டர் விலைல 50 ரூபாய் கூட்டி விடுறேன்.
facebook.com/Shan Karuppusamy
குஷ்பு கடுமையாக உழைத்து (அது அத்தனை எளிதல்ல) உடல் இளைத்ததற்கு மருத்துவக் காரணங்கள்கூட இருக்கலாம். ஊருக்குப் பிடிக்கிறது என்பதற்காக ஆரோக்கியமில்லாத ஒரு உடலை அவர் ஏன் சுமக்க வேண்டும்? தன்னுடைய தோற்றம் எப்படி இருக்கவேண்டும் என்பதை முன்பும் சரி, இப்போதும் சரி, குஷ்புதான் முடிவு செய்ய வேண்டும். அது குறித்து வரும் பதிவுகள் பலவும் உருவக்கேலி வகை என்பது பலருக்குப் புரியவேயில்லை என்பதுதான் வேதனை. இதையே ஒரு நாயக நடிகர் செய்தால், ‘இந்த வயதிலும் எப்படி மாறி வந்திருக்கிறார் எங்கள் தலைவர்’ என்று புளகாங்கிதம் அடைவதும் இதே ஆட்கள்தான்.
twitter.com/saravankavi
கெளரவத்தலைவர் என்பதன் அர்த்தம் டம்மி பீசு என்பதே..!
twitter.com/Thaadikkaran
ஹலோ அமித் ஜி, குஜராத் ஜெயிச்சதுக்கு நாளைக்கி பெட்ரோல் விலை கம்மி ஆகுமா?
twitter.com/Greesedabba2
குடியரசுத் துணைத் தலைவர் ஆன பின்னும் நான் எனது உடையை மாற்றவில்லை. எந்த நாட்டிற்குச் சென்றாலும் வேட்டி சட்டையே அணிந்து வருகிறேன் - வெங்கைய நாயுடு
# ஜி: ஏப்பா, பேசிட்டு இருக்கும்போது அய்யாவை ஊமைக்குத்து ஏதும் குத்துனியா..?
twitter.com/madurai_jinna
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தோள்பட்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
# நான் அன்னிக்கே அந்தாளு கிட்ட சொன்னேன், “ஜீப்ப தூக்கி தலக்கி மேல சுத்தாதய்யா, ஓடுற டிரெய்ன நிப்பாட்டாதய்யா, ஹெலிகாப்டர புடிச்சி கிர்க் கிர்க்னு சுத்தி 5 கி.மீக்கு அங்கிட்டு வீசாதய்யா”ன்னு... கேட்டாத்தான?!