சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
பிரீமியம் ஸ்டோரி
News
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, ட்விட்டர் ஹேஷ்டேக் மூலமா fundamental rights-க்காகக் கெஞ்சிட்டிருக்கு

twitter.com/Thaadikkaran

இப்போ பாருங்களேன், கல்வித்துறைல ஒரு அறிவிப்பு வருது. அப்புறம் திரும்ப மறு அறிவிப்பு வருது. இதெல்லாம் பார்க்குறப்போ எனக்கென்னமோ நாம இன்னும் அ.தி.மு.க ஆட்சில இருக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்கு...

twitter.com/thamizhisai

நாம ஆபீஸுக்குப் போற அவசரம், பஸ் டிரைவர்க்குப் புரிய வாய்ப்பில்ல. ஏன்னா அவர் வேலைக்கு வந்துட்டார், நாம இப்பதான் போறோம்.

Viswanathan anand: கிராண்ட்மாஸ்டர்ஸ்
Viswanathan anand: கிராண்ட்மாஸ்டர்ஸ்

twitter.com/idumbaikarthi

சென்னைக் காவல் நிலையத்தில் இன்னொரு விசாரணைக் கைதி உயிரிழந்திருக்கிறார். ‘ஜெய்பீம்’ பார்த்து, 3 நாள்கள் தூங்கவில்லையென மனமுருகிய ஐயா ஸ்டாலின் அவர்கள் என்ன செய்யப்போகிறார்? வழக்கம்போல, காவல்துறையினர் எழுதிக்கொடுக்கும் திரைக்கதையை வாசித்து, காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றப்போகிறாரா?

twitter.com/kaviintamizh

எங்கேயோ, யாருடையதோ வீட்டை இடிக்கிறார்கள் எனக் கடந்து செல்ல இயலாது. என் நிலத்திலே மதம் முக்கியமென்ற குரலை விதைக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நடப்பது பாசிசமென வாய்ப்பிருக்கும் இடங்களில் பதிவு செய்தலே இந்நாட்டின் மீதான நமது பற்றை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.

facebook.com/ஃபௌசியா

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, ட்விட்டர் ஹேஷ்டேக் மூலமா fundamental rights-க்காகக் கெஞ்சிட்டிருக்கு. “Those whose homes are in the shadow of bulldozers do not throw stones at others”ங்கறார் பா.ஜ.க மாநிலத் தலைவர். (He got that right! வீடும், உணவும், உடையும் இருந்தாத்தானே, அதுக்கு மேல உரிமை பத்தியெல்லாம் பேசத் தோணும்!) வீட்ட இடிச்சுத் தள்ளற வீடியோவ எல்லா ஊடகங்களும் காட்டறதுல எந்தச் சுணக்கமும் இல்ல. ஏன்னா, இனி இங்க ஒருத்தன் எதிரா பேசினா என்ன நடக்கும்னு எல்லாரையும் எச்சரிக்க இது ஒரு வாய்ப்பாச்சே! ‘நாலு புல்டோசர் வாங்கி உ.பி-ல வாடகைக்கு விட்டுறலாமா’ங்கற நகைச்சுவை(?) பதிவுல ஹாஹா போட்டிருக்கவங்க டிபில எல்லாம் ராமர் அருள்பாலித்தபடியோ, இல்ல கிருஷ்ணர் கீதை உபதேசித்த வண்ணமோ காட்சி அளிக்கறாங்க. #முரண்

AR Rahman: இசையும் தமிழும்!
AR Rahman: இசையும் தமிழும்!

twitter.com/itz_idhayavan

பா.ஜ.க-வின் எண்ணம் பிரதான எதிர்க்கட்சியாக வருவதல்ல, ஆளுங்கட்சியாக வருவது: அண்ணாமலை

கனவுக்குப் பகல் தெரியுமா இரவு தெரியுமா?!

twitter.com/Thaadikkaran

என்னங்க பெரிய காதல் வலி... தூங்கலாம்னு போகும்போது கட்டிலோட கம்பில தலை முட்டியிருக்கா..?

twitter.com/ItsJokker

நார்த் இந்தியால முஸ்லிம்களுக்கு எதிரா பெரிய பிரச்னை நடக்குதே, உண்மையா?!

மீடியா: அத விடு, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஹனிமூனுக்கு எங்க போகப் போறாங்க தெரியுமா..?!

twitter.com/Vasanth920

அநீதி நடக்கும்போதெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் எடுப்பேன்: சீமான்

#அண்ணே, நயன்தாரா கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லப் போன நம்ம பசங்கள உள்ள விடலயாம்னே, உடனே அவதாரம் எடுணே நீ!

twitter.com/rmdkarthik

அனிருத்துக்கு விக்ரம் 26வது படமாம். 2012ல அறிமுகம் ஆகி பத்து வருஷத்துல 26 படம்தான், அதுக்கே கொண்டாடுறோம். ராஜா 1976ல அன்னக்கிளில ஆரம்பிச்சு அடுத்த 11வது வருஷம் 1987ல நாயகன் 400வது படம். அத்தனையும் தரம். ஒப்பிட்டுப் பார்த்தாலே பிரமிப்பா இருக்கு!

twitter.com/saranya121289

அறிவுரை என்ற பெயரில் அவர்களின் பெருமையைச் சொல்பவர்கள்தான் இங்கு ஏராளம்..twitter.com/sasitwittz

பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் ரோட்டோரமா வட்ட வட்டமா தோசை ஊத்துன மாதிரி ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டு இருந்தால், அங்கு சில முக்கிய சிறப்பு விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம்...

twitter.com/manipmp

மக்களவை உறுப்பினர் என்பது மதிப்பெண் அடிப்படையில் தேர்வு. மாநிலங்களவை உறுப்பினர் என்பது மேனேஜ்மென்ட் கோட்டா!

twitter.com/AnjaliTwitz

இங்கு எல்லோருக்கும் கஷ்டம் இருக்கிறது... எப்போதும் இருப்பதுதானே என்று எண்ணி, சிலர் கண்டுகொள்வதில்லை. எனவே இல்லாததுபோல் தோன்றுகிறது!

twitter.com/Greesedabba2

விக்ரம் படத்தை கைதியோட கனெக்ட் பண்ற எந்த சீனையும் புரிஞ்சுக்காம வெறும் விக்ரம் படமா மட்டுமே பார்த்த என்னைப் போல அப்பாவி ரசிகர்கள் யாருனாச்சும் இருக்கீங்களா..? அந்த ஜார்ஜ் மரியான் சீனைச் சேர்த்திருக்கலாம், இந்த சீனை எடுத்துருக்கலாம்னு பேசறவங்களைப் பார்த்தா மிரட்சியா இருக்கு.

Nazriya Fahadh:ஒளியிலே தெரிவது தேவதையா...!
Nazriya Fahadh:ஒளியிலே தெரிவது தேவதையா...!

twitter.com/niranjan2428

மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் கோயில் தேரின் வடம் பிடித்து இழுக்க எதிர்ப்பு: செய்தி

இதையெல்லாம் எப்படிக் கடப்பதெனத் தெரியவில்லை. என் வீட்டு தீபாவளி பலகாரத்தை நண்பர்கள் சார்லசும், முஸ்தகினும் வீட்டுக்கே வந்து சாப்பிடுவார்கள். என் தோழி பெனசீர் வீட்டு ரம்ஜான் விருந்துக்கு நானும் என் நண்பன் டேவிட்டும் போவோம். மாதா கோயில் தேரினைப் பலமுறை இழுத்திருக்கிறோம், நோம்புக் கஞ்சி குடித்திருக்கிறோம், அன்னதானங்களை ஒரு புடி புடித்திருக்கிறோம். இப்படியே இருக்க ஆசைப்படுகிறோம். மதமெனும் பிரிவினை நோய் எங்கள் வீட்டுக் கதவை எப்போதும் தட்டிவிடக்கூடாது.

facebook.com/Buhari Raja

விக்ரம் படத்தை முன்வைத்து, இயக்குநர் நெல்சன் மீது நடத்தப்படும் இணையத் தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் நிறையவே மனரீதியாக ஒருவித பதற்றத்தை உண்டுபண்ணுகின்றன. இது சொல்ல வருகிற செய்தி, ஒருபோதும் உங்கள் வாழ்க்கையில் தோற்றுப்போய்விடாதீர்கள் என்பதாகத்தான் இருக்கிறது. ‘தோல்விதான் வெற்றிக்கு முதல்படி. failure is a process’ எனப் பள்ளிகளில் நாம் கற்றுணர்ந்த அடிப்படை எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. ஓட்டப்பந்தயத்தில் ஒருத்தர் மட்டும்தான் ஜெயிக்க முடியும். அதில் ஓடுகிற மற்ற எல்லா வீரர்களும் திறமையற்றவர்கள் எனச் சுருக்கிவிடப் பார்க்கிறது.

தோல்வி என்பது கிண்டலுக்கு உள்ளாகும் பட்சத்தில், எல்லாவற்றிற்குமான அளவுகோல் வெற்றிதான் என்றாகும் பட்சத்தில், எப்போதும் ஒருவித அழுத்தத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழலை யார் உருவாக்குகிறார்கள்? `பரீட்சைல ஃபெயிலாகிட்டா தற்கொலை பண்ணிக்கலாமா? காதல் தோல்வி என்றால் தற்கொலை செய்துகொள்ளலாமா?’ என எப்போதும் அறிவுரைகளைத் தூக்கிச் சுமக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

இது நெல்சனுக்காக மட்டுமல்ல, தவறவிட்ட வாய்ப்புகளுக்காக இன்னும் வருந்திக் காத்திருக்கிற எல்லா நண்பர்களுக்காகவும்! அவர்கள் மீண்டு வருவதற்குத் துணை நிற்போம், தோல்விகளை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம். ஒரு வெற்றி எல்லாத் தோல்விகளையும் மறைத்துவிடும், ஆனால் ஒரு தோல்வி நிறைய பக்குவப்படுத்தும். success is a journey, not a destination

twitter.com/selvu

“சார்! யோகா செஞ்சா கோபம் குறையும்னு சொன்னீங்க. ஒரு வருஷமா செய்யுறேன். குறைஞ்ச மாதிரி தெரியலையே!”

“அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றியா? எங்கிட்டவே எதிர்த்துப் பேசுறியா நீயி? என்னைப் பார்த்தா அப்படித் தெரியுதா உனக்கு?”

twitter.com/chezhian10

விக்ரம் கமல் படமா இல்லாததால நல்லா ஓடுது. சமீபத்துல வந்த ரஜினி நடித்த படங்கள் ரஜினி படங்களா இல்லாததால நல்லா ஓடல... அவ்ளோதான் வித்தியாசம்.

twitter.com/thattampoochi

‘கர்த்தரை புறக்கணிப்போம்...’

அடே, அது கத்தார்டா!

twitter.com/Thaadikkaran

இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ளார்னு மதுரை ஆதீனம் சொல்லியிருக்காரு. பாவம், அவுங்க ஏரியா கேபிள் டிவி-ல இப்போதான் அந்தப் படம் போட்டிருப்பாங்கபோல...

facebook.com/Ravikumar M G R

சில பேர் ஹோட்டலில் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்காமல் மினரல் வாட்டர் பாட்டில் வாங்கிக் குடிக்கிறார்கள். ஆனால் அந்த ஹோட்டல் சாப்பாட்டை மட்டும் சாப்பிடுகிறார்கள்!

‘ஆச்சரியங்கள் 1008’ எனும் நூலிலிருந்து...

twitter.com/LAKSHMANAN_KL

அ.தி.மு.க இணைவதை தி.மு.க-வினர் விரும்பமாட்டார்கள் - சசிகலா.

நீங்க அ.தி.மு.க-வில் இணைவதைச் சில அ.தி.மு.க-வினரே விரும்ப மாட்டேங்கிறாங்களே சின்னம்மா..!

twitter.com/Greesedabba2

கண்ணெதிரே அநியாயம் நடந்தாலும், எல்லாம் மேல இருக்கறவன் (CCTV) பார்த்துக்குவான்னு கண்டும்காணாமப் போக மக்கள் பழகிட்டாங்க.

twitter.com/Kozhiyaar

ஜீ to ஜக்கி: இப்ப தெரியுதா நான் ஏன் பேட்டியே கொடுக்கிறது இல்லைன்னு?!

twitter.com/Nattu_G

ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து வெளியே வைத்த பின் தோசைக்கல்லில் ஊற்றும் மாவின் நிலையை உணரவேண்டுமானால் பெங்களூர் - சென்னை ரயில் பிராயணம் செய்யுங்கள். காலை 5 மணிக்கே எரியுது.

Vignesh Shivan: டும் டும் டும்!
Vignesh Shivan: டும் டும் டும்!

facebook.com/Rk Rudhran

எத்தனையோ விதமான குரூரங்களோடு அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்வை விமர்சித்து, கேலி செய்து, கேவலமாகப் பேசியவர்கள் பற்றி வெட்டியாய்க் கவலைப்பட்டு தன் வாழ்வில் உடைந்துவிடாமல், தொடர்ந்து உழைத்து முன்னேறி, அன்று வன்மம் கொட்டியவர்களே இன்று வாசலில் நின்று ஏங்கும் அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்ட நயன்தாராவின் திருமணப் படங்களைப் பார்க்கும்போது அனிச்சையாய் உதடுகள் மகிழ்வோடு முறுவலிக்கின்றன. நலம், வளம், நிறைவு, நிம்மதி அந்தப் பெண்ணின் வாழ்நாள் முழுதும் நிலவ வேண்டும். ‘கல்யாணத்தை வீடியோ எடுத்துக் காசு பாக்குறா’ என்று வெதும்பும் பலருக்கும் தம் சுற்றத்தில் கூட, “மேரேஜ் லைவ் வீடியோ ஸ்ட்ரீம் செய்றோம்” என்று பீற்றுவோர் இருப்பார்கள். இன்றின் மாற்றங்களில் ஒன்று இது. நாகரிகம் நாடகம் அல்ல, கொஞ்ச நேர ஒப்பனையோடு போய்விட! அது ஒரு வாழ்முறை.