
உண்மையில் அமெரிக்க அதிபரின் நிலை விசித்திரமாக இருக்கிறது. Gun culture, abortion law என்று உள்நாட்டு விவகாரங்களில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை.
twitter.com/saravankavi
சிறைப்படுத்தப்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ-வாக நீ துடிக்க... உன்னைக் காப்பாற்ற முடியாமல் பரிதவித்து நிற்கும் உத்தவ் தாக்கரேவாக நான் தவிக்கிறேன்.
twitter.com/itz_idhayavan
அ.தி.மு.க-விற்கு ஒற்றைத் தலைமை இருப்பதுதான் நல்லது: திருநாவுக்கரசர், காங். எம்.பி
# சரி, நீங்க இப்ப காங்கிரஸ்ல எந்த கோஷ்டில இருக்கீங்க?!
twitter.com/RavikumarMGR
எந்த த்ரில்லர், சஸ்பென்ஸ் வெப் சீரிஸையும் அடுத்த சீசனுக்கு லீடு கொடுக்காமல் முடிக்க மாட்டார்கள்போல... இதனாலேயே க்ளைமாக்ஸ் திருப்தியாகவே இருப்பதில்லை.

twitter.com/DinosaurOffcial
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரை ‘குடியரசுத் தலைவர்’ என அழைப்பது முரண்!
twitter.com/mohanramko
கிரிக்கெட் கேப்டன்: நாங்க முதல்ல பேட்டிங் ஆடுறோம்...
டாஸ் போடுபவர்: அதை நீ சொல்லாத, உன் ஜோசியரைச் சொல்லச் சொல்லு...
twitter.com/Thaadikkaran
ஏம்பா, இன்னுமா யார் கனவிலும் அம்மா ஆன்மா வரல? இந்நேரம் வந்திருக்கணுமே!
twitter.com/IamUzhavan
புது மொபைலுக்கு டெம்பெர்ட் கிளாஸ் மற்றும் பேக் கவர் போடும்வரை, கைக்குழந்தையைப் போல அதனைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
twitter.com/balebalu
உண்மையில் அமெரிக்க அதிபரின் நிலை விசித்திரமாக இருக்கிறது. Gun culture, abortion law என்று உள்நாட்டு விவகாரங்களில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. ஆனா, வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட, ஆயுதங்கள் வழங்க அதிகாரம் இருக்கு!
twitter.com/Arunan22
‘பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் மார்ஸுக்கு ராக்கெட் விட்டாங்க’ என்கிறார் நடிகர் மாதவன். பூமியைச் சுத்தி சூரியன் வருது எனச் சொல்வது பஞ்சாங்கம். அதன்படி ராக்கெட் விட்டா மார்ஸ் போகாது, இவர் வீட்டு மாடிக்குதான் வரும்!
twitter.com/ItsJokker
உங்களின் மரணத்திற்குப் பின் உங்களை எத்தனை வேகமாய் மறப்பார்கள் என்பதை அறிந்தால், நீங்கள் இத்தனை வேகமாய் யாருக்காகவும் ஓடிக்கொண்டிருக்க மாட்டீர்கள்!
twitter.com/krishnaskyblue
ஆண்டவர்: பைலட் பேட்ஜ்ல 11 பேரு இருந்தோம் 7 பேரை இந்திய அரசு கொடூரமா கொலை பண்ணுனாங்க...
மிச்ச மூணு பேரு?
ஆண்டவர்: என் பேரனைக் காப்பாத்துற மிஷன்ல ரோலக்ஸ் கேங்கிற்கு எதிரா சண்டை போட வச்சு நானே சாவடிச்சுட்டேன்!
# விக்ரம்ம்ம்

twitter.com/Kozhiyaar
குழந்தையுடன் விளையாடினால், நாம் தோற்க வேண்டும் என்பது மட்டுமே விதி!
twitter.com/Thaadikkaran
நமக்கு இருக்குற உடல் சார்ந்த பிரச்னைகள் எல்லாம், தூங்கி எந்திருச்சா சரியாகிடும்னு பெரும்பாலானோர் இன்னும் நம்பிட்டு இருக்காங்க.
twitter.com/Greesedabba2
ஜனநாயக வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி: பிரதமர் மோடி
நேரு be like: அப்பாடா... ஒரு வழியா என்னை விட்டுட்டு இந்திரா காந்தி காலத்துக்குப் போயிட்டாப்ல!
twitter.com/Vasanth920
கட்சியை வளர்க்க ஓ.பி.எஸ் தமிழகமெங்கும் பயணம்.
# கல்யாணமே ஆகாத 90ஸ் கிட்ஸ் ஹனிமூனுக்கு ஊட்டி போறதா சொன்னானாம்.
twitter.com/Nobody_0105_
‘‘காசு, பணம் ஏதும் இல்லாம 96 விஜய் சேதுபதி மாதிரி வாழா என் வாழ்வை வாழ்வேன்னு ஒரு வாழ்க்கை வாழணும் ப்ரோ...’’
‘‘அதுல ஹீரோ வச்சிருக்க காரே பதினஞ்சு லட்சம்டா!”
twitter.com/nilaavan
சொந்தக்கார வாண்டு ஒன்ன ஸ்கூல்ல சேர்க்கப் போயிருக்காங்க. ஃபார்மாலிட்டிஸ் முடியுறப்போ ‘ஏதாவது ரைம்ஸ் சொல்லு’ன்னு கேட்டிருக்காங்க. அந்த வாண்டு தயங்காம ‘ஹலமத்தி ஹபீபோ’ன்னு ஆரம்பிச்சிருக்கு.
twitter.com/RavikumarMGR
2,000 ரூபாய் நோட்டு கையில் கிடைத்தாலே பதற்றமாகி உடனே சில்லறை மாற்றிவிடுகிறார் அப்பா. யாரோ ஒரு வாட்சப் யூனிவர்சிட்டி பேராசிரியர், ‘எந்த நேரத்திலும் 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிச்சுருவாங்க’ன்னு மிரட்டி விட்டுருக்காரு போல!
twitter.com/JaRa2X
மு.க.ஸ்டாலின் எக்காலத்திலும் முதல்வராக முடியாதுன்ற எடத்திலிருந்து, ஸ்டாலின் எத்தனை ஜென்மம் ஆனாலும் அ.தி.மு.க-வை அழிக்க முடியாதுன்ற எடத்துக்கு வந்துருக்காங்க!

twitter.com/PrabhuAyyanar6
‘‘அப்பாடா... கூட்டம் நல்லபடியா முடிஞ்சுது!”
‘‘யாருண்ணே நீ, எடப்பாடி ஆளா?”
‘‘மண்டபத்து ஓனர் தம்பி...”
twitter.com/prabhu65290
“உங்களுக்குத்தான் போன் பண்ணலாம்னு நெனச்சுட்டு இருந்தேன், அதுக்குள்ள நீங்களே பண்ணிட்டீங்க” என்பது பெரும்பாலும் பொய்யாகத்தான் இருக்கும்!
twitter.com/Iam_meeran
அடுத்த பொதுக்குழு!
ஒளிபரப்பு Netflix-க்கே!
twitter.com/Aakashkannan96
விபத்துக்குள்ளான பூனையை அழுதுகொண்டே அப்புறப்படுத்துகின்ற தூய்மைப் பணியாளரின் கண்ணீர் எவ்வளவு தூய்மையானது..!
twitter.com/RahimGazzali
“ஊருக்கு வழிகாட்டுவது ஜி.பி.எஸ். அ.தி.மு.க-வுக்கு வழி காட்டப்போவது ஓ.பி.எஸ்” என்று ஒரு ஆள் சொல்லிட்டுப் போறாரு. எங்கேருந்துதான் இதுமாதிரி ரைமிங்லாம் வருமோ?!
twitter.com/Anvar_officia
‘யார் போன்ல’ன்னு நாம பேசி முடிச்சதும் நம்மளைக் கேட்கிறதை நிறுத்துறப்பதான் இந்தியா வல்லரசாகும்!
twitter.com/ItsJokker
சீமான்: ஒரு பக்கம் மானத்தமிழன் பெரியப்பா EPS, மறுபக்கம் மறத்தமிழன் OPS, அந்தப் பக்கம் தாயுள்ளம் கொண்ட சித்தி... இப்பொழுது நான் யாருக்காகத்தான் வாதாடுவது? வருத்தம் தெரிவிப்பது?
twitter.com/krishnaskyblue
அதென்னப்பா உன் சி.எம் போஸ்ட், கட்சித் தலைவர் போஸ் டிங்க்கு ஆபத்து வரும்போது மட்டும் தர்மத்தை சூது கவ்வுது?
twitter.com/idumbaikarthi
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் போட்டுக் கொள்ளும் பதவிவெறிச் சண்டை எவ்வளவு அருவருப்பானதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாதது உதயநிதிதான் அடுத்த முதல்வர் எனும் மகேஷ் பொய்யாமொழியின் அடிமைசாசனம்!
facebook.com/Karl Max
Ganapathy
அரசியலைப் பொறுத்த வரைக்கும் ஆப்போசிட்ல யார் இருக்காங்கங்றதுதான் முக்கியம். இப்பகூட பாரேன், எடப்பாடி ஆளுமையா ஃபார்ம் ஆய்ட்டாப்ல. ஏன் சொல்லு, ஆப்போசிட்ல ஓ.பி.எஸ். எனக்கே முதல்வர் ஆசை வருதுன்னா பாரேன்!
facebook.com/Mayilan
G Chinnappan
கே.ஜி.எஃப் ராக்கியின் குரலை பிற மொழிகளில் கேட்டுப் பார்த்ததில், தமிழுக்குப் பக்கத்தில்கூட வேறெதுவும் வரவில்லை; ஒரிஜினல் கன்னடத்தையும் சேர்த்து. இதை வெறுமனே சொந்த மொழிக்கான சாய்வு எனச் சுருக்கமாட்டேன். RRR-ன் சகிக்கமுடியாத பல விஷயங்களில் தமிழ் டப்பிங் குரல்தான் முக்கியமானது.
ராக்கிக்குக் குரல்கொடுத்த சேகர், இதற்கு முன்பு பலருக்கு டப்பிங் செய்திருக்கிறார். தொண்ணூறுகளின் நிரந்தரக் கல்லூரி மாணவர்களான வினீத், அப்பாஸ், குணால் எல்லோருக்கும் இவர்தான். சமீபத்திய ‘நண்பா’ ஓபராய் குரலும் இவருடையதுதான். அதிகம் கவனிக்கப்பட்டது அமரேந்திர பாகுபலிக்குக் குரலளித்த சமயத்தில். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருப்பவருக்கு சரியான தீனியாக ‘கே.ஜி.எஃப்’தான் அமைந்திருக்கிறது. ஒரிஜினலை மாதிரிக்குக்கூட இவர் எடுத்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். வசனவீச்சுகளின் ஏற்ற இறக்கம், அழுத்தம் அத்தனையும் solid. Intonations-ல் கொஞ்சம் வேறொரு கன்னடக்காரரின் சாயல் இருக்கிறது... சேகர் நிச்சயம் ரஜினி ரசிகராக இருக்கவேண்டும்.

twitter.com/Iyankarthikeyan
இருந்த சில்லறை எல்லாம் தர்மயுத்தம் பார்ட் 1-ல் சிதறவிட்டு ஏமாந்தாச்சு. இனி எது கவ்வுனாலும் சரி... சில்லறை இல்லப்பா!
twitter.com/balebalu
கட்சிப் பிரச்னை, சினிமா ரிலீஸ் பிரச்னைக்கு மட்டும்தாங்க உடனடியா விசாரிப்போம். மத்தபடி மக்கள் பிரச்னைக்கெல்லாம் கோடை விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை எல்லாம் முடியட்டும்னு கேசை தள்ளிப் போட்டுடுவோம்!
twitter.com/drloguortho1
‘‘டாக்டர், முடி உதிருது!”
‘‘நாற்பது வயசு வரைக்கும் அது பத்திக் கவலைப்படாதீங்க...”
‘‘நாப்பதுக்கு அப்புறம்?”
‘‘கவலைப்படவேண்டிய அவசியம் இருக்காது.”
twitter.com/Anvar_officia
தனித்தனி உறுப்புகளுக்கும் தனித்தனியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்தபிறகுதான் ஹார்ட் ப்ராப்ளம், கேஸ்ட்ரிக், பேக்பெயின்னு லீவு சொல்ல ஆரம்பிச்சுட்டோம்... அதுவரை ‘உடம்பு சரியில்லை’ மட்டும்தான்!
twitter.com/manipmp
நீண்ட நாள் கழித்து நண்பன் போன் செய்திருந்தான். கடன் கேட்பான்னு நினைத்தேன். யூடியூப் சேனல் சப்ஸ்க்ரைப் செய்யணுமாம்!