
வெட் கிரைண்டர் வாங்கும்போது சப்பாத்தி மாவு பிசைவதற்கு ஒரு கருவியும், தேங்காய் துருவ ஒரு கருவியும் இலவசமாகத் தருகிறார்கள்!
twitter.com/RavikumarMGR
எவ்வளவு முக்கியமானவருடன் பேசிக்கொண்டிருந்தாலும் நமக்கு ஒரு போன் கால் வந்துவிட்டால், போன் செய்தவர் முக்கியமானவராகி விடுகிறார்!
twitter.com/Suyanalavaathi
பந்தியில பிரியாணி வைக்கும்போது நமக்குப் பிடிச்ச பீஸ் வந்தா, அது ‘அதுவா அமையுறது.’ அதுவே நமக்குப் பிடிச்ச பீஸ் கேட்டு வாங்குனா, அது ‘நம்மளா அமைச்சுக்கிட்டது.’ அமையுறத விட, நம்மளா அமைச்சுக்கிறதுதான் புத்திசாலித்தனம்!

twitter.com/krishnaskyblue
பெட்ரோல், டீசல், காஸ்னு அத்தியாவசியப் பொருள்கள் விலை கூடினாலே காங்கிரஸ் ‘கலகலப்பு’ல வர்ற சந்தானம் அடியாள் மாதிரி ‘வாத்தியாரே, சாப்பிட்டு சாயந்திரம் தேடுவோம்’ங்கிற மோடுல இருப்பாங்க. இந்த ஹோட்டல் GST, தங்கம், பேனா, பென்சில் பத்திப் பேச இன்னும் 10, 12 வருஷம் ஆவும்!
twitter.com/saravankavi
பா.ஜ.க ஆதரவில் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் பதவியேற்பு!
# ஒருத்தனை ஏமாத்தணும்னா முதல்ல அவன் ஆசையைத் தூண்டணும்...
twitter.com/JamesStanly
அன்புள்ள அண்ணனுக்கு...
ஓ.பி.எஸ்: மேல படி... மேல படி...
உன் பொறுப்பை எல்லாம் புடுங்கியாச்சி... ஒழுங்கா ஊரப் பாத்து ஓடிரு..!
twitter.com/rmuthukumar
உட்கட்சி விவகாரத்தைப் பொதுக்குழுவில் விவாதிப்பதே அழகு என்கிறார் ஜெயக்குமார். இதை எம்.ஜி.ஆர் கடைப்பிடித்திருந்தால்
அ.தி.மு.க-வே உருவாகியிருக்காது.
twitter.com/nazrintwitz
Me: நான் ஊருக்குப் போய்ட்டா சாப்பாட்டுக்கு என்னங்க பண்ணுவீங்க?
கணவர்: சாப்பாடு கெடக்குது சாப்பாடு... மனுஷனுக்கு நிம்மதிதான முக்கியம்!
facebook.com/Vadivel Muruganஊரையெல்லாம் பூமர் அங்கிள் ஆக்குன 90s கிட்ஸ ஒரே நாள்ல பூமர் அங்கிள் ஆக்கிட்டானுவ இந்த 2K கிட்ஸ்...
twitter.com/Suyanalavaathi
ஒவ்வொரு முறை மேனேஜர் திட்டும்போதும், நமக்குள் இருக்கும் நாஞ்சில் சம்பத் எட்டிப் பார்க்கிறார்... துப்புனா துடைச்சிக்குவேன் மொமன்ட்!
twitter.com/Thaadikkaran
அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வம் - பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் 3வது ஆளாக நுழையும் சசிகலா.
# குறுக்க இந்த கௌஷிக் வந்தா மொமன்ட்...
twitter.com/Greesedabba2
‘நம்மை யாரும் கவனித்திருப்பார்களோ’ எனச் சுற்றும்முற்றும் கவனிக்கும்போது, யார் மீது துளியும் சந்தேகம் வரவில்லையோ, அவர்கள்தான் நம்மைத் துல்லியமாக கவனித்திருப்பார்கள்...
twitter.com/VaniArun18
என் மாமியார் கல்யாணம் ஆன புதுசுல சொன்னாங்க, ‘நம்ம வீடுக்கு வர்றவங்கலாம் சொந்த வீடு வாங்கிட்டுப் போய்டுவாங்க, ராசியான வீடு’ன்னு! அப்புறம்தான் தெரிஞ்சது, ஏன் அவ்வளவு அவசரமா சொந்த வீடு வாங்கறாங்கன்னு!

twitter.com/manipmp
வீடு கட்டுவது ஒரு தலைமுறையிலும், அதற்கு லோன் கட்டுவது அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது...
twitter.com/iamvidhyac
நாமளா தேடிப் பிடிச்சு வாங்கற டிரஸ்ஸை விட, நமக்கு கிஃப்ட்டா வர்ற டிரஸ் எல்லாம் நல்லாருக்கு!
twitter.com/ilayakaanchi
‘‘என்னங்க, இப்படி எல்லாத்துக்கும் ஜி.எஸ்.டி ஏத்திட்டீங்க?’’
‘‘ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை கேட்டாங்கல்ல... அனுபவிக்கட்டும் சார்!’’
facebook.com/
Sowmya Ragavan
உண்மைல 2K கிட்ஸ்கிட்ட இருக்கற ஒரு நல்ல விஷயம்... அவங்ககூட ஒரு அரை மணி நேரம் பேசிட்டு இருந்தா உலகமே ரொம்ப சுலபமா, எளிமையா, மகிழ்ச்சியா இருக்கறதா ஒரு பிம்பம் வரும். அவ்ளோ பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அவ்ளோ ஈசியா எல்லாத்தையும் ஹேண்டில் பண்றாங்க. ஆனா அதுக்குக் காரணமும் இருக்கு. அவங்க இன்னும் ஒரிஜினல் பிரச்னைகளை ஃபேஸ் பண்ண ஆரம்பிக்கலை. அதனால இப்ப இருக்கற அவங்க சிக்கல்களை, அல்லது சிக்கல்னு அவங்க நினைக்கறதை, கொஞ்சம் ஜாலியா ஹேண்டில் பண்றாங்க. அந்த பாசிட்டிவிட்டியை மட்டும் நாம கத்துக்கலாம். அல்லது அவங்ககூட நேரம் செலவிடறதன் மூலம், அந்த ஜாலி மனநிலையை கொஞ்ச நேரம் தக்க வைக்கலாம். நாமளும் 10 வருஷம் முன்ன அப்படித்தான் இருந்திருப்போம். அவங்களும் இன்னும் 10 வருஷத்தில் இப்ப இருக்கற நம்மைப் போல் மாறுவாங்கன்றதே யதார்த்தம்!
twitter.com/BeingSaThug
ஞாயித்துக்கிழமைனா உன் இஷ்டத்துக்கு 10 மணி வரைக்கும் தூங்குவியான்னு கரன்ட புடுங்கி விட்டு எழுப்பி விடுற தாயுள்ளம் இருக்கே... அதுதான் செந்தில் பாலாஜி!
twitter.com/RavikumarMGR
வெட் கிரைண்டர் வாங்கும்போது சப்பாத்தி மாவு பிசைவதற்கு ஒரு கருவியும், தேங்காய் துருவ ஒரு கருவியும் இலவசமாகத் தருகிறார்கள்! ஆனால் இதை யாரும் பயன்படுத்துவதே இல்லை! யானை வாங்குனா செருப்பு ஃப்ரீயா குடுத்த கதைதான்...

twitter.com/Kozhiyaar
சாகிற நேரத்தில்கூட நாட்டுக்காக ஒருவர் கடமையைச் செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில்தான் மருத்துவமனைப் படுக்கைக்கு 5% GST போட்டிருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?!
twitter.com/Anvar_officia
அண்ணனோட சட்டை பழசான பிறகு தம்பிக்குக் கொடுக்கிற மாதிரிதான், நகரத்தில் ஓடுன பேருந்துகள் தகரப் பேருந்துகளான பிறகு கிராமப்புறங்களுக்குக் கொடுத்துடுறாங்க!
twitter.com/kavithazahir
மாதவரம் மலக்குழியில் மரணமடைந்த இருவரின் உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னமும் உள்ளன எனத் தகவல் வரும்போது வேறு வேலையாக ராயப்பேட்டை மார்ச்சுவரி சென்றிருந்தேன். அங்கு பெருங்குடியில் மலக்குழி சுத்தம் செய்த தட்சணாமூர்த்தி 34, பெரியசாமி 42 இருவரின் உடலைப் பெற அவர்கள் குடும்பங்கள் காத்திருந்தன. 3 நாள்களில் சென்னை மாநகரத்தில் 4 மலக்குழி மரணங்கள். இதுவரை எந்த ஊடகமும் இதைப் பெரிய செய்தியாக எடுத்ததைப் போல் தெரியவில்லை. அநேகமாக மாலை விவாதங்களில் நடிகர் சூர்யா ஆஸ்கர் குழுவில் இணைக்கப்பட்டது பற்றிச் சிலாகித்து விவாதிப்பார்கள் என நினைக்கிறேன்.
twitter.com/amuduarattai
வயதானவர்களின் பேச்சைக் கேட்பதற்கு, நமக்குக் காதுகளைவிட மனம்தான் அதிகம் தேவைப்படுகிறது.
facebook.com/Anwarbasha Anwar
TTF-க்கே இந்தச் சமூகம் இவ்வளவு பொங்கிட்டு இருக்கே... ‘யார்ரா இவனுங்க... எதுக்குடா இந்தக் கூட்டம்... என்னது, 3 மில்லியன் சப்ஸ்க்ரைபரா’ன்னு... மக்களே கொஞ்சம் மூச்சு விடுங்க... யூடியூப் இந்தியாவுல அதோட புரமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சி நடத்துது. அதுக்கு சீஃப் கெஸ்ட்டா ஒரு யூடியூபர கூப்பிடுது. அவரும் போறாரு. அந்த நிகழ்ச்சி ஒரு 5 ஸ்டார் ஹோட்டல்ல நடக்குது.
போன உடனே அந்த யூடியூபரோட மேனேஜர் ஹோட்டல் மேனஜர்கிட்ட போய், ‘‘சார், எங்களுக்கு பாடிகார்ட்ஸ் பத்தாது, இன்னும் அதிகம் பண்ணுங்க’ன்னு சொல்றாரு. அதுக்கு அந்த ஹோட்டல் மேனேஜர், ‘போன வாரம் ஷாருக்கான் வரும்போதே பத்துப் பேரதான் பவுன்சரா போட்டோம். உங்களுக்கும் அவ்ளோதான் பண்ணமுடியும்’னு சொல்லிட்டாரு. ஆனா, அந்த பங்ஷன் நடக்கும்போது கிட்டத்தட்ட 400 பவுன்சர்ஸ அந்த ஹோட்டல் நிர்வாகம் போட்டிருக்கு. காரணம், கிட்டத்தட்ட அந்த யூடியூபர பார்க்க வந்த 20,000+ பேர்தான்.
அந்த யூடியூபர் பேர் bhuvan bam... மொத்த சப்ஸ்க்ரைபர் 25.5 மில்லியன். அதிக வியூ போன வீடியோ 68 மில்லியன். குறைந்தது 10 மில்லியன். 80s&90s kids ஆன நாம இன்னும் சினிமால வரவங்கதான் பெரிய பாப்புலர் ஆன ஆளுங்கன்னு நினைச்சிக்கிறோம். ஆனா அவங்களவிட இப்ப யூடியூபர்ஸ்தான் பயங்கர பாப்புலரா இருக்காங்க.
குறிப்பு: கடந்த இரண்டு வருடமா TTF நானும் பாலோ பண்றேன். அவனோட எல்லா வீடியோவையும் பார்த்திருக்கேன். ஆனாலும் ஏன் பொங்குனம்னா, தவறான சில முன்னுதாரணங்களை அவன் விதைப்பதுதான்... 250 கி.மீ வேகத்தில் பயணம்... ரோட்ல ஸ்டன்ட்ஸ்... மீட் அப்டிங்ற பேர்ல பொதுமக்களுக்கு இடைஞ்சல் தர்றது... அந்த மீட் அப்ல அவனோட பாலோயர்ஸ் ரோட்ட மறைச்சுப் பண்ணுன ஸ்டன்ட்ஸ்... அப்றம் அவன மாதிரியே ஓட்டுறேன்னு ரோட்ல சரக்கு சரக்குனு கட் அடிச்சு அவனுங்க விழறது மட்டும் இல்லாம பலர விழ வைக்குறானுங்க...
எனக்கு TTF போட்ட வீடியோல புடிச்சதே கடைசியா போன நேபாள் ரைடுதான். அவ்ளோ டப்பான ரோட்ல (உண்மைய சொல்லணும்னா அங்க ரோடே இல்ல) பைக்க ஹேண்டில் பண்ணுன விதம். அந்த இயற்கைய அழகா நமக்குக் காட்டுன விதம். அத அவன் என்ஜாய் பண்ற விதம். எல்லாம் நாமே அங்க இருக்கும்படியான உணர்வுகள கொடுக்கும்.
ரொம்ப சின்னப் பையன்தான்... காலம் அவன சரிப்படுத்தும்!
twitter.com/Kirachand4
அ.தி.மு.க சட்ட விதிகளின்படி இதுவரை நான்தான் கட்சி ஒருங்கிணைப்பாளர் - ஓ.பி.எஸ்.
# ‘ஒருங்கிணைப்பாளர் நான்தான்... ஆனால் அ.தி.மு.க கட்சி என்னுடையது இல்ல!’

twitter.com/manipmp
தியேட்டர்ல பார்ப்பவர்கள்தான் ஒரு முறை பார்க்கலாம்னு சொல்றாங்க. செல்போனில் பார்ப்பவர்கள் நல்லா இருந்தாதான் டௌன்லோடே செய்றாங்க!
twitter.com/Suyanalavaathi
‘‘மச்சான்.. நா wild life photographer ஆகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.’’
‘‘தெரு நாய பாத்தாலே பயந்து ஓடுற நமக்கு இதெல்லாம் தேவையா?!’’
twitter.com/raajaacs
கைக்கெட்டும் தூரத்தில் நட்சத்திரங்கள் இருந்தாலும் பறித்துத் தம்கூடையில் போடாதவர்கள், இருள்கலந்த வசனங்களையே பேசிக்கொண்டிருப்பார்கள்.
twitter.com/9thchoice
எல்லா குழப்பங்களும் சம்பந்தப்பட்ட நபரிடம் பேசினால் தீர்ந்துவிடுமாம்.
# எத்தனை அயோக்கியத் தனமான ஆறுதல்!