
இது சரியா வராது, வெஷம் குடிச்சிற வேண்டியதுதான்” என்று தொட்டாற்சிணுங்கி 2K கிட்ஸ்களை கேலி செய்யும் மீம்ஸ்களைப் பார்க்கிறோம்.
twitter.com/gurunaatha
‘‘ஐ லவ் மை இந்தியா!’’
‘‘ஆனா நீங்க 20 வருஷமா வெளிநாட்ல இல்ல இருக்கீங்க?’’
‘‘ஒன் சைட் லவ்வுங்க!’’
twitter.com/thecommonman__
அடுத்த தடவை எதுனா கிரிக்கெட் டீம் டூர் வந்தா India Captians XIன்னு ஒரு டீம் வச்சி பிராக்டீஸ் மேட்ச் ஆடலாம்...
twitter.com/pandi_prakash_
அன்பென்பது திரைப்படங்களின் தரவரிசைப் பட்டியல் போன்றதே. நேற்று என்னிடம்; இன்று உங்களிடம்; நாளை யாரிடமாவது...
twitter.com/secmindvoices
கூடடையும் பறவைகளிடம்கூட உரிமை கொண்டாடுவதில்லை மரம். இளைப்பாறிச் செல்லும் பறவைகளின் விடைபெறலில் சாய்ந்திடாது. எங்கும் கிளைகள் நீட்டிக் காத்திருக்கும்..!

facebook.com/gkarlmax
“இது சரியா வராது, வெஷம் குடிச்சிற வேண்டியதுதான்” என்று தொட்டாற்சிணுங்கி 2K கிட்ஸ்களை கேலி செய்யும் மீம்ஸ்களைப் பார்க்கிறோம். கள நிலவரம் இதைவிட மோசம். புத்தகப் பையில் சரக்கு பாட்டில் வைத்திருந்த ஒரு அரசுப்பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவியைக் கண்டிக்க முயன்றபோது “எனக்கு டி.சி கொடுத்து வெளியில் அனுப்பினால், உங்கள் பெயரை எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்வேன்” என்று வெளிப்படையாகவே மிரட்டியிருக்கிறாள். எதற்கு வம்பு என்று பள்ளி நிர்வாகம் கையைப் பிசைந்தபடி அனுப்பி வைத்திருக்கிறது.
அரசுப்பள்ளிகளே விளிம்புநிலை மக்களின் ஒரே போக்கிடமாக மாறியிருக்கும் சூழலில், அம்மக்கள் டாஸ்மாக் விஷ பேக்டரி வழியாக அரசின் ஏகபோக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், வெற்று உதார்கள் விடாமல் அரசு நிஜமாகவே இதில் ஏதாவது செய்ய முயலவேண்டும். பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களைவிட குடிநோயாளிகள் இங்கு ஏன் அதிகமாக இருக்கிறார்கள்? அவர்கள்மீதான சுரண்டல் அந்தக் குடும்பங்களை எப்படி பாதிக்கிறது? குடிப்பழக்கம் உள்ள விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? இதையெல்லாம் அரசு விரிவாக ஆராய்ந்து அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும்.
ஸ்டாலின், தாம் தமிழகத்தின் ஜனாதிபதி அல்ல, முதல்வரே நாம்தான் என்பதை உணரவேண்டும். அறிவுரைகளை வீட்டில் பேரக்குழந்தைகளுக்குச் சொல்லிவிட்டு அலுவலகத்தில் ஆக்ஷனில் கவனம் செலுத்தவேண்டும்.
twitter.com/amuduarattai
நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறீர்கள் என்பதுகூட, உங்கள் உறவினர் பலருக்குக் கவலை தரும் விஷயமாக இருக்கலாம்.
twitter.com/Thaadikkaran
‘‘அன்பா ஆதரவா பேசுறான், எப்போ பார்த்தாலும் சாப்டியான்னு கேட்குறான்...’’
‘‘யாரு... லவ்வரா?’’
‘‘லவ்வரா... ஜூமாட்டோ, ஸ்விகி அட்மின்ங்க.’’
twitter.com/mohanramko
மருத்துவம் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்றுவதுதான், ‘விதி’ மீறல்!
facebook.com/Bapeen Leo Joseph
‘‘விவஸ்தை கெட்டவனுங்க... தேசியக் கொடி கலர்ல ஜட்டியெல்லாம் அடுக்கி வச்சு தேசபக்திய காட்றானுங்க...’’
‘‘சரி... சரி... டென்ஷன் ஆகாதீங்க!”
‘‘காலைல என்ன சாப்பாடு?’’
‘‘இட்லி...’’
‘‘நாளைக்கு சுதந்திர தினம்டி... மறக்காம மூணு கலர் சட்னி பண்ணிடு!’’
facebook.com/ramanujam.govindan?
டி-ஷர்ட்ல எழுதறதா இருந்தா நாலைஞ்சு வார்த்தைகள் மட்டும் எழுதுங்க. சிறுகதை எழுதணும்னா ஏதாவது பத்திரிகைல, இல்ல வெப்சைட்ல எழுதுங்க. இன்னிக்கு ஒருத்தர் டி-ஷர்ட்டில் ஜெயமோகன் சிறுகதை மாதிரி நிறைய எழுதியிருந்தது. PTO எல்லாம் போட்டு முதுகில் கண்டினியூ பண்ணியிருந்தது.
twitter.com/Annaiinpillai
தொடர் விடுமுறையால் அதிகம் பதற்றத்தில் இருப்பவருக்கு அப்பா என்று பெயர்..!

twitter.com/saravankavi
பேருந்து நிற்காத ஊர்களில் உள்ள வேகத்தடைகள் அனைத்தும் பேருந்து நிறுத்தமாக மாற்றப்படுகின்றன.
twitter.com/youknowwho
‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பதைக் காவல்துறையினர் கடைப்பிடிப்பது லிஃப்ட் கேட்கும்போது மட்டும்தான்.
twitter.com/Kozhiyaar
90ஸ் kids முக்கால்வாசி பேரின் வாழ்க்கையைச் சீரழித்த வாக்கியம்: “மச்சி, அவ உன்னையே பார்த்துட்டு இருக்காடா!”
twitter.com/LAKSHMANAN_KL
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தாங்களாகவே திருந்த வேண்டும் - அமைச்சர் ரகுபதி.
# அடுத்து... ஆன்லைன் ரம்மி விளையாடுறவங்க அவங்களாவே திருந்தணும்னு சொல்லுவாரோ?!
twitter.com/Thaadikkaran
இத்தனை வருஷம் ஆனாலும் வாழ்த்து சொல்லும்போது சுதந்திர தினமா, இல்லை குடியரசு தினமான்னு கன்பியூஸ் ஆகிடுது.
twitter.com/RahimGazzali
கனல் கண்ணன் கைது.
# கனலும் தன் வாயால் கெடும்
twitter.com/MrElani
தான் குடிக்கிற டம்ளர்ல தண்ணி குடிச்சான்னு 7 வயசு தலித் குழந்தைய வாத்தியாரே அடிச்சி கொன்னுருக்கான். நாம வெள்ளக்காரண்ட சுதந்திரம் வாங்கிட்டோம்னு கொடியேத்தி பீத்திட்ருக்கோம்.
twitter.com/pachaiperumal23
அதே கோயில். அதே சாமி. அதே கரகம். அதே மேளம். அதே கொடை விழா. ஆனாலும் சிறுவயதில் லயித்த லயிப்பை இப்போது வருந்தி அழைத்தாலும் வருவதில்லை.
twitter.com/oorkkavalaan
25 பைசாவுக்கும் 50 பைசாவுக்கும் வாங்கித் தின்ற மிட்டாய்களைவிட, அந்த விலைக்கு மிட்டாய் விற்ற காலங்களே அதிகம் இனிக்கின்றன இப்போது!
twitter.com/mohanramko
உண்மையா, பொய்யான்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. அப்புறம் வாட்ஸ்அப்ல வந்த பிறகுதான் உண்மைன்னு நம்பினேன்...
twitter.com/balasubramni1
புல்லட் ஓட்டும் பெண்களை ஆச்சரியமாகப் பார்க்கும் இந்தச் சமூகம், ஏனோ பாத்திரம் கழுவும் ஆண்களை ஏளனமாகப் பார்க்குது!
twitter.com/chithradevi_91
‘அன்பே வா’ சீரியல் ஹீரோவும் ‘கே.ஜி.எப்’ பட ஹீரோவும் ஒரே ஆள்தான்னு சொன்னா நம்புற மக்களும் இருக்காங்கய்யா, எங்க அண்ணி மாதிரி!

facebook.com/raajaa.chandrasekar
‘‘பேசுவது குறைந்துவிட்டது. பேசுபவர்கள் குறைந்து போனார்கள்’’ என்றார். ‘‘ஆமாம்’’ என்றேன். யாரென்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போனார்.
twitter.com/callmesent
பேருந்து நிலையத்தில் என்னைக் கடந்து சென்றவர் திடீரென்று நின்று, “தம்பி இங்க வா....”
“சொல்லுங்க!” பக்கம் சென்றேன்,
“நான் ஜோசியக்காரன், உன் முகத்த பார்த்தா...”
“பாக்கெட்டில் ஒரு ரூபாய்கூட இல்லைன்னு தெரிஞ்சுருச்சா?”
திரும்பிப் பார்க்காமல் பயணித்துவிட்டார்.
facebook.com/saravanakarthikeyanc
ஓர் எழுத்தாளனின் குரல்வளையை நெரிக்க விழும் ஒவ்வொரு கத்திக்குத்தும், வெடிக்கும் ஒவ்வொரு தோட்டாவும் மானுட சமூகத்தை ஒரு நூற்றாண்டு பின்னுக்கு இழுக்கிறது.
facebook.com/senthil.nathan.
எல்லா மனிதர்களுக்கும் அவரவர் துயரமே பெரியது. ஆறுதலுக்காக பிறரிடம் உங்கள் துயரத்தை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுக்குத் தங்களின் சொந்தத் துயரம்தான் நினைவுக்கு வரும்!
twitter.com/Thaadikkaran
‘‘நம்ம எதிர்ப்பையும் மீறி இலங்கைல சீனக் கப்பலை அனுமதிச்சிட்டான்.’’
‘‘அவனோட ஆப் ஏதும் இருக்கா?’’
‘‘இல்லை.’’
‘‘டிபில கொடி வச்சவங்களுக்கு நன்றின்னு ஒரு அறிக்கை விட்ருவோம்...’’
twitter.com/Kannan_Twitz
‘நான் என்ன வேணாலும் பண்ணுவேன், ஆனா நீ என்ன அரவணைச்சுட்டுப் போகணும்’னு எதிர்பார்க்கிறது என்ன மாதிரியான மனநிலையோ!
twitter.com/THARZIKA
மறுக்க முடியாத தனிமைதான் ஒரு நிலையில் பக்குவமாகிறது.
twitter.com/iArunkumaar
காணாமப்போனவங்கள தேடிப் போனா பயன் உண்டு, கண்டும் காணாமப் போறவங்கள தேடுறதால எந்தப் பயனும் இல்ல.

twitter.com/ItsJokker
ஃபேக் நியூஸ் பரப்புனா?
# கண்டுக்காமப் போயிருவேன்.
கட்சித் தலைவரைப் பத்தித் தப்பா பேசுனா?
# அப்படிப் பேசக்கூடாதுன்னு சொல்வேன்.
ஊழல் கட்சின்னு பொய் சொன்னா?
# பதில் சொல்லாமப் போயிருவேன்.
கலவரம் பண்ணுனா?
# சட்டம் தன் கடமையைச் செய்யும்னு நம்புவேன்.
சபாஷ். இதான் நாகரிக அரசியலுக்கு அடிப்படை.
twitter.com/talksstweet
எல்லாம் சரியாக இருந்தால் அது வசதியான குடும்பம்; எல்லாரும் சரியா இருந்தா அதுவே மகிழ்ச்சியான குடும்பம்.
twitter.com/Vasanth920
கடைக்குப் போயி புதுச் சட்டை வாங்கி வீடு வந்த பின், ‘கடைக்குப் போகாம இருந்திருந்தா இரண்டாயிரம் ரூபாய் மிச்சம் ஆகிருக்கும்’னு நினைப்பதெல்லாம் மனநோய் வகையைச் சேர்ந்தது.
twitter.com/Kozhiyaar
நல்லவன்னு நம்மளை நம்பிட்டு இருக்கவங்க கிட்ட நடிக்கிறதுதான் ரொம்பக் கொடுமையான நிலைமை!
twitter.com/PChidambaram_IN
பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்தார். டாக்டர் சரவணனைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார்.
# முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா?