
இப்பல்லாம் நேரில் பேச முடியாததை வாட்ஸப்பில் ஸ்டேட்டஸாக வைத்து மறைமுகமாகப் பழிதீர்த்துவிடுகிறார்கள்!
twitter.com/Greesedabba2
கல்யாணத்துக்குப் போயி மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு வெளிய வந்து, ‘இந்தக் காலத்துல பணத்தைத் தண்ணி மாதிரி செலவு பண்றாங்க, இவ்வளவு அயிட்டம் தேவையா’ எனப் பேசுபவனே நவீன சமூக சீர்திருத்தவாதி.
twitter.com/karna_sakthi
பஸ்ல 2 குட்டிப்பசங்க 10 ரூவா குடுத்து டிக்கெட் வாங்கினாங்க. 16 ரூவான்னு கண்டக்டர் சொல்லவும் அவங்க சட்டைப்பைல காசு தேடுனாங்க. கண்டக்டர் டக்குன்னு ‘பரவால்ல, வேணாம். விடுங்கடா’ன்னுட்டு நகர்ந்து போயிட்டார். ‘சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ன்னு பஸ்ல பாட்டு ஓடிட்டிருந்தது.
facebook.com/ramanujam.govindan
கணவன் செய்யும் தவறுகளில் மனைவியால் மன்னிக்கவே முடியாத குற்றங்களாக இரண்டாவது மூன்றாவது இடங்கள் பிடிப்பவை குடித்துவிட்டு அடிப்பது, சின்ன வீடு வைத்திருப்பது போன்றவை. முதலிடம் பிடிப்பது, பாசிப்பருப்பு பாட்டில் இருக்கும் இடத்தில் துவரம்பருப்பு பாட்டிலை வைப்பது!

twitter.com/narsimp
‘படிடா’ன்னு சொன்னதும் டக்குனு தமிழ் புக்க எடுத்து ‘வானாகி மண்ணாகி’ன்னு ஆரம்பிக்கிறது. ‘ஏண்டா, கணக்குலதான ஒன்னும் சரியில்ல. அத எடுக்காம நல்லா வர்றதயே எடுத்து வச்சுர்ற’ என்று திட்டுவிழும். அப்படித்தான் இந்த ராகுல் காந்தி ஆ ஊன்னா இங்குட்டு வந்துடறாப்ல. யோவ், கணக்குப்பாடம் பக்கம் போய்யா!
twitter.com/teakkadai1
நாலஞ்சு தலைமுறைகளாக ஆண்கள் சுகவாசியாக வாழ்ந்துவிட்டார்கள். பெண்களுக்குப் பொருளாதார விடுதலை இன்மை, பிறந்த வீட்டிற்கும் செல்ல முடியாத சூழலால் அத்தனையையும் சகித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அவர்களுக்குக் கிடைத்த கல்வி, வேலை, வீட்டிற்குத் திரும்பிச் சென்றாலும் கிடைக்கும் ரத்தினக் கம்பள வரவேற்பு, பெண்களுக்கான அடிமைத்தளையை உடைத்தெறிந்துவிட்டது. ஒரு சராசரி ஆண் இப்போது பெண் கேட்கும் சம உரிமை, வேலைப் பங்கீடு, குழந்தை வளர்ப்பில் ஒத்தாசை ஆகியவற்றைச் செய்யத் திணறுகிறான். அவனுக்கு இது புதிதாய் இருக்கிறது. ‘எங்க அப்பா, தாத்தாலாம் இதெல்லாம் பண்ணலையே, எனக்கு ஏன்?’ எனக் கடுப்பாகிறான். பெண் தற்போது எதிர்பார்க்கும் அத்தனை குவாலிட்டிகளையும் அவனால் நிறைவு செய்ய இயலவில்லை. ஒன்று குறைந்தாலும் அவனால் பெண்ணை எதிர்கொள்ள முடியவில்லை. திருமணம் ஆகா 30+ என் சுற்றத்தில் இப்போது அதிகமாக இருக்கிறார்கள். சின்ன வேலை, பெண் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு என அங்கலாய்க்கிறார்கள். இன்னொரு பக்கம் 8.5 LPA வாங்கும் உறவு, ‘எனக்கு டிகிரி படிக்காத பெண் பாருங்க’ என்கிறார். ‘என்னப்பா, மணல் கயிறு பார்த்தியா’ என்று கேட்டால், ‘வேலைக்குப் போகும் பெண்ணை என்னால் சமாளிக்க முடியாது. என் உடன் பணிபுரிவோர் எல்லாம் திணறுகிறார்கள்’ என்கிறான். ஆண் இவற்றை ஏற்றுக்கொண்டு normalize ஆக ஒரு தலைமுறை தேவைப்படும்போல!

twitter.com/erode_kathir
உரையாடல்களில் சிலர் அடிக்கடி “சரிங்ளா... சரிங்ளா...” என்று இடையிடையே தங்களையறியாமல் கேட்பதுண்டு. அது ‘தாம் சொல்வது சரிதானே’ என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அல்ல, தாம் சொல்வதை ‘சரி என்று ஏற்றுக்கொள்’ என நிர்பந்தம் செய்வது!
twitter.com/Kozhiyaar
பேசுவதற்குக் காது வரை நீளும் குழந்தையின் வாய், ஏனோ உணவுக்கு மட்டும் பசை போட்டு ஒட்டிக்கொள்ளும்!
twitter.com/amuduarattai
எவ்வளவு பெரிய வீட்டையும் தன் இருப்பால் நிறைந்து வழியச் செய்துவிடுகிறது ஒரு குழந்தை.
twitter.com/tnrags
‘பாரதியார் கொண்டாடப்பட வேண்டியவர் இல்லை’ என்பதை நிறுவ திராவிடர் கழகம் எடுக்கும் முயற்சிகளில் பத்தில் ஒரு பங்கை தமிழகத்தில் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் எதிர்கொள்ளும் சாதி வன்முறையை எதிர்த்துச் செய்யலாம்.
twitter.com/PG911_twitz
வெளிநாட்டு டி சர்ட்டை அணிந்துகொண்டு யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி - அமித் ஷா
# தேசியக்கொடியை வெளிநாட்டிலிருந்து வாங்கிய நீங்கள் பேசலாமா?
twitter.com/Vasanth920
சிலர் வாக்கிங் செல்வது ராகுல் காந்தியின் நடைப்பயணம் மாதிரிதான்... எந்தப் பயனும் இல்லை.
twitter.com/oorkkavalaan
அம்மாவின் சுவிஸ் வங்கி என்பது ‘கடுகு டப்பா..!’
twitter.com/Annaiinpillai
லோ பட்ஜெட்டில் தற்பெருமை பேசும் இடத்திற்கு செல்போன் ஸ்டேட்டஸ் என்று பெயர்..!

twitter.com/Anvar_officia
பக்கத்து வீட்டில் பாத்திரங்களை வைக்கிற சத்தம் இங்க வரைக்கும் கேட்குது. நேத்து வீட்டுக்காரரோட சண்டை போலிருக்கு.
twitter.com/mekalapugazh
‘‘அந்தக் கோயிலுக்குப் போங்க... திருமணத்தடை நீங்கும். இந்தச் சடங்கு செய்யுங்க... புள்ள பொறக்கும். இந்தக் கயிறு கட்டிக்குங்க... வீடு வாங்கலாம். இந்தப் பரிகாரம் செய்யுங்க... கடன் தொல்லை போகும்” என்று அறிவியலுக்கு எதிராகப் பேசும்போது என் மனம் புண்படுகிறது என எவரும் நீதிமன்றத்தை நாடுவதில்லை.
twitter.com/Kannan_Twitz
ஆள அடிக்கிறதா நினைச்சு ஆட்டோ சீட்ட அடிக்கிற சிங்கமுத்து மாதிரிதான் நாம பிரச்னைய என்னன்னு பார்த்து சால்வ் பண்ணாம, அதுக்காக உட்காந்து ஃபீல் பண்றதும்!
twitter.com/Suyanalavaathi
முன்னாடியெல்லாம் சலூன்ல முடி சரியா வெட்டாம, ஒரு பக்கம் ஏத்தமா, ஒரு பக்கம் இறக்கமா இருந்தா நம்ம திட்டுவோம். இப்பெல்லாம், ‘இதுதான் சார் லேட்டஸ்ட் ஸ்டைல். இதுகூடத் தெரியாம இருக்கீங்க’ன்னு நம்மள திட்டுறாங்க!
twitter.com/Kozhiyaar
ஒருசில பிரச்னைகளை மூளையைக் கழற்றி வைத்துவிட்டு அணுக வேண்டும், ஒருசில பிரச்னைகளை மனசைக் கழற்றி வைத்துவிட்டு அணுக வேண்டும்!
twitter.com/Greesedabba2
அடுத்த வாரம் ஞாயித்துக்கிழமை புரட்டாசி 1. கறி சாப்பிட முடியலேன்னு இந்த நகைச்சுவை எழுத்தாளருக ஒரு மாசத்துக்கு நம்மளைப் படுத்தப்போற பாட்டை நினைச்சா...
twitter.com/ajmalnks
குட்கா விளம்பரங்களில் நடிக்கும் எந்த முன்னணி நடிகரும் குட்காவைப் பயன்படுத்துவதில்லை.
twitter.com/Im_Revathy
வீட்டுக்கு ஒட்டடை அடிச்சு, இட்லிக்கு மாவரைச்சு, குழந்தைகளுக்குத் தலைகுளிக்க வெச்சுட்டு, லஞ்சுக்கு பிரியாணி பண்ணி, சாப்பிட்டுத் திரும்பிப் பார்த்தா என் சன் டேவைக் காணோம்...
twitter.com/Anvar_officia
இப்பல்லாம் நேரில் பேச முடியாததை வாட்ஸப்பில் ஸ்டேட்டஸாக வைத்து மறைமுகமாகப் பழிதீர்த்துவிடுகிறார்கள்!
twitter.com/amuduarattai
அரசுப் பணத்தைச் சிக்கனமாகச் செலவிடுங்கள் என அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை.
# ஆமாமா... யாராவது கோடீஸ்வரருக்கு வாராக்கடன் தர அரசுப் பணம் தேவைப்படும்.