Published:Updated:

வலைபாயுதே!

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி சுரேஷ்

வாழும்போது சொர்க்கத்துல வாழாம, செத்ததுக்கு அப்புறம் சொர்க்கத்துல வாழ ஆசைப்படறானுக!

twitter.com/thiruvinod4u

வட இந்தியாவிலிருந்து வரும் ஏழை, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களை ‘பானிபூரி', ‘பீடா', ‘குறைந்த கூலி' என்று கேலி செய்கிறார்கள். அய்யா, நீங்கள் கேலி செய்ய வேண்டியது அவர்களை இப்படி அலையவிட்ட சிஸ்டத்தை!

twitter.com/drloguortho1

கரும்பு வியாபாரிகள் டு தட் நுங்கு டாக்டரம்மா: எங்களுக்கும் ஏதாவது பார்த்துப் பண்ணுங்க மேடம்..!

twitter.com/Greesedabba2

வார இறுதி உற்சாகமாக இல்லையா..? நண்பர்களை மாற்று! திங்கட்கிழமைகள் உற்சாகமாக இல்லையா..? அலுவலகத்தை மாற்று!

twitter.com/Anvar_officia

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது என்பது, நம்ம மைண்ட் வாய்ஸ மத்தவங்களுக்கு சத்தமாகக் கேட்க வைக்கிற யுக்தி!

twitter.com/kumarfaculty

இந்தியாவுடனான உறவு மேம்பட விரும்புகிறோம்: சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங்.

# வீடு கட்ட இன்னும் இடம் வேணும், அதானே?

twitter.com/Kozhiyaar

தூக்கத்தில, காதுகிட்ட ஒரு கொசு ‘ஙொய், ஙொய்'ன்னு கத்திட்டு இருந்துச்சு. கடுப்பாகி விட்டேன் பாரு ஒரு அடி, இப்ப காதுக்குள்ள ‘ஙொய்'னு கேட்டுட்டு இருக்கு!

twitter.com/Suyanalavaathi

வாட்ச்ல அஞ்சு நிமிஷம் கூட வச்சா ஒன்னும் மாறப் போறது இல்ல. ஆனா, ‘இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு'ன்னு ஒரு ஆறுதல், அவ்ளோதான்!

twitter.com/senthilswamy6

‘உம்' கொட்டுவதிலேயே குடும்பப் பிரச்னையை எளிதில் கடக்கிறார் அப்பா.

twitter.com/saravankavi

இந்த உலகத்தில் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு... அது பணம். எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு காரணம் உண்டு... அது பணம்!

twitter.com/Ramanat75128649

வீட்டில் மிச்சமாகும் உணவுப்பொருள்களை பிரிட்ஜில் வைத்து சூடு பண்ணி சாப்பிட்டு போரடிக்குதுன்னு ஓட்டலுக்குச் சாப்பிடப் போவோர்கள் கவனத்திற்கு... உங்கள் வீட்டு பிரிட்ஜைவிட பெரிய பிரிட்ஜ் நீங்கள் போகும் ஓட்டலில் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

twitter.com/JamesStanly

எப்படி பேர் வச்சாலும் தெமிழகம், தெமிழ்மொழின்னுதான் உன் வாயில வரப்போவுது... எப்படி இருந்தா என்ன..?

ikamalhaasan: அந்த மனசுதான் சார்!
ikamalhaasan: அந்த மனசுதான் சார்!

twitter.com/senthilswamy6

தொலைதூரப் பயணத்தை நொடியில் கடக்கிறது கனவு!

twitter.com/amuduarattai

ஆக்ஸ்போர்டு, ஸ்டான்போர்டு, யேல் உள்ளிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் திறக்க மத்திய அரசு முயற்சி.

# தம்பி... இன்னும் மதுரை எய்ம்ஸ் வரல!

twitter.com/itz_idhayavan

அயோத்தியில் ராமர் கோயில் 2024 ஜனவரியில் தயாராகும்: அமைச்சர் அமித் ஷா தகவல்

‘‘ஏண்ணே அவனை அடிக்கிறீங்க?!''

‘‘பாராளுமன்றத் தேர்தலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கான்னு கேட்கிறான்ப்பா!''

twitter.com/manipmp

இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதில் கர்ச்சீப்பின் பங்கு அளப்பறியது!

facebook.com/sowmya.ragavan

கண்ணுல தூக்கமா இருக்கு. மூளை தூங்க மாட்டேங்குது. புது வியாதி!

twitter.com/Sabarish_twittz

கையில காசில்லாத நேரம்தான் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியெல்லாம் மூளை யோசிக்கும்...

twitter.com/amuduarattai

போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

# தலைவரே... அந்த டாஸ்மாக் கடைகள்?!

twitter.com/LAKSHMANAN_KL

பா.ஜ.க-வை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் செல்வோம்: அண்ணாமலை

# அப்ப இன்னும் எக்கச்சக்கமான ஆடியோ ரிலீஸ் இருக்குன்னு சொல்லுங்க!

twitter.com/NeoDravidian

இணை தேடலை இவ்ளோ குழப்பி வச்சிருக்கிற ஒரு சமூகம் உலகத்துலயே இருக்குமான்னு தெரில!

keerthysureshofficial: பன்னீரில் நீராடும் பூந்தோட்டம்!
keerthysureshofficial: பன்னீரில் நீராடும் பூந்தோட்டம்!

twitter.com/HemaTwitzs

வாழும்போது சொர்க்கத்துல வாழாம, செத்ததுக்கு அப்புறம் சொர்க்கத்துல வாழ ஆசைப்படறானுக!

twitter.com/senttu_ofcl

நான் பாட்டுக்கு தனியா அமைதியா பிரெட் ஆம்லேட் ஆர்டர் பண்ணி சாப்டுட்டு உக்காந்திருக்கேன். கடைக்கு அவங்க அம்மாகூட வந்த பையன் அவனுக்கும் பிரெட் ஆம்லேட் வேணும்னு‌ கேக்கவும்‌, அந்தம்மா ‘இந்நேரத்துக்கு முட்டை எல்லாம் மனுஷன் திம்பானா'ன்னு கத்துது.

twitter.com/saranya121289

மணப்பெண்ணிடம் மாப்பிள்ளை வீட்டார் சொல்லும் ஆகச்சிறந்த பொய், ‘பையன் ரொம்ப கோபக்காரன். நீ கொஞ்சம் பொறுமையா நடந்துக்கோம்மா' என்பதே!