
தேடி உதைக்கப் போறேன்...
facebook.com/Vinayaga Murugan
அதுல ஒருத்தன் கேக்குறான். ஆகஸ்ட் மாசம் சின்னம்மா வந்தா நேரா சென்னை போயஸ்கார்டன் வீட்டுக்கு வருவாங்களா, இல்லை, மன்னார்குடி வீட்டுக்குப் போவாங்களான்னு...
(தர்மயுத்த பரிதாபங்கள்)
facebook.com/Saravanakarthikeyan Chinnadurai
தகுதியற்றது புகழடைவதைச் சுட்டிக் காட்டினால் அது பொறாமை என்று சொல்லி மிகச் சுலபமாகத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

twitter.com/Teakkadai
முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகம் மத்திய அரசை பல விசயங்களுக்குச் சார்ந்திருந்தது. தொழில்நுட்பம் வளர வளர நமக்கு மத்திய அரசின் தயவு தேவை என்பது குறையத் தொடங்கியது. தனியார் தொலைக்காட்சி, எப்.எம் வரத்தொடங்கியதும் அவர்கள் தொலைக்காட்சி, ரேடியோ நமக்குத் தேவைப்படவில்லை, கூரியர் சர்வீஸ் ஆரம்பித்த உடன் போஸ்ட் ஆபீஸ் களையிழந்தது. ஆம்னி பஸ்களும், தனியார் விமானப் போக்குவரத்தும் ரயில்வே சேவையின் மேலான எதிர்பார்ப்பைக் குறைத்தன. மென்பொருள் துறையின் வளர்ச்சி மத்திய அரசின் வேலை வாய்ப்புப் பக்கம் மக்கள் போவதைக் குறைத்தது. செல்போன்கள் லேண்ட் லைன் போன்களைத் தூக்கியெறிய வைத்தது. போலவே தற்போது வளர்ச்சி அடைந்திருக்கும் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசின் தேவையைப் படிப்படியாகக் குறைத்து வருகிறது. தங்கள் இருப்பைத் தக்க வைக்க, தங்கள் பிடியிலிருந்து மாநிலங்கள் விலகாமல் இருக்கவே மாநிலத்தின் கைகளில் இருப்பதை ஒவ்வொன்றாக மத்திய அரசு எடுத்து வருகிறது. நாடு தழுவிய ஜி.எஸ்.டி வரி வசூலிப்பு, மருத்துவப் படிப்புக்கு நீட், மின்சாரத்திற்கு உதய் திட்டம், இனி பொறியியல் படிப்பிற்கும் நீட், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைத்தல் என இந்தத் திட்டங்கள் எதுவுமே வட மாநிலங்களுக்கு பாதிப்பைத் தராது. வளர்ச்சியடைந்த தென் மாநிலங்களை பாதிக்கும். தென் மாநிலக் கட்சித் தலைவர்கள் இணைந்து, ஒரு அமைப்பை உருவாக்கி உரிமை களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால் 20 ஆண்டுகளில் இன்னொரு உத்தரப்பிரதேசமாகத் தென் மாநிலங்கள் மாறிவிடும் வாய்ப்புண்டு.
twitter.com/KLAKSHM14184257
இன்று 3700+ கேஸ்கள்...
நல்லவேளை... சமூகப்பரவல் வரலைன்னு முதல்வர் சொல்லி இருக்காரு... இல்லைன்னா நெலமை என்னவாயிருக்கும்..?

twitter.com/idonashok
முக்கியமான கட்டத்தில் சில சமயம் விக்கெட்டுகள் சரிந்துவிடும். நாத்தும் வெங்கடேஷ் பிரசாத்தும் களத்தில் நிற்பார்கள். நாம் டிவியை ஆஃப் செய்துவிடுவோம். முடிவு ஏற்கெனவே தெரிந்ததால் அடுத்தநாள் பேப்பர்கூட பார்க்க மாட்டோம். மோடியும் எடப்பாடியும் அப்படித்தான் களத்தில் நிற்கிறார்கள்.
twitter.com/GreeseDabba2
கடையில பில்லு கட்ட க்யூல நிக்கும்போது பின்னால நிக்கறவன் ரொம்பப் பக்கமா நிக்கறானேன்னு முன்னால கொஞ்சம் தள்ளி நின்னா அவனும் நகர்ந்து முன்னால வர்றான்...
உங்களை வைச்சுகிட்டு சோசியல் டிஸ்டன்ஸ் என்ன, சோசியல் மீடியால கூட டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் பண்ண முடியாதுடா அப்ரசன்டுகளா.

twitter.com/swaravaithee
காவல்துறை அரசிடம் இருப்பதால்தான் இவ்வளவு பிரச்னையும். தனியார்மயமாக்கிட்டா எல்லாம் சரியா நடக்கும்னு யாராவது சொல்றாங்களா பாருங்க.
twitter.com/Gayashaba
திரு.ரஜினிகாந்த் அவர்கள் #GeorgeFloyd குடும்பத்தாருடன் #Zoom மூலம் ஆறுதல் தெரிவித்ததாக குங்பூ தியாகராஜன் தெரிவித்துக் கொண்டார்.
twitter.com/mohanramko
இந்த லாக்டௌன்ல ஒருநாள் வேலைக்குப் போய் வந்து பாரு, அதுகூட வேண்டாம், வேலைக்குப் போறவன்கூட ஒரு நாள் இருந்து பாரு, அப்ப புரியும் எவ்வளவு கஷ்டம்னு...

twitter.com/oorkkavalaan
எவ்வளவு காசு இருந்தாலும் ஏ.டி.எம் அள்ளியெல்லாம் கொடுக்காது; எண்ணித்தான் கொடுக்கும்.
facebook.com/Baskar M
சங்கரராமனும் ஸ்வாதியும் சங்கரும் தனக்குத்தானே ஆள் வைத்துக் கொலையுண்டுபோனார்கள்.
ராம்குமார் தாகத்துக்கு கரன்ட்டைக் குடித்து மாண்டுபோனான்.
ஜெயராஜும், பெனிக்ஸும் காவல்துறைக் கண்காணிப்பில் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக இறந்தனர்.
பட்டியல் தொடரும்.
facebook.com/Primya Crosswin
முட்டினால் கொம்பு முளைத்து விடும் என்று பயப்படும் ஹாசினிக்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று யோசிக்கிறேன்... சப்பாத்திக்குத் திரட்டிய மாவில் நட்சத்திரம் நிலா மற்றும் ஆர்டின்கள் என்று சுட்டுக் கொண்டிருக்கலாம். கணவனின் வெள்ளைச் சட்டையைத் தனியே சோப்பு போட்டு பயபக்தியுடன் அலசும்போது, சோப்பு நுரையில் கிளம்பும் பபுள்ஸ்களைப் பெருமூச்சு விட்டு உடைத்துக்கொண்டு இருக்கலாம். வாழைப்பழத்தைத் தேன் விட்டு அரைத்து freezer-இல் வைத்து ஐஸ்கிரீம் என்பதாய் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டு தின்று கொண்டிருக்கலாம். மகளின் கலைடாஸ்கோப் எடுத்துப் பார்த்து விட்டு எங்க காலத்துல இதுல எவ்ளோ டிசைன் வரும் தெரியுமா என்று கதையளந்து கொண்டிருக்கலாம். இ தை நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது, தொலைக்காட்சியில் ஒரு கிருமி நாசினி விளம்பரத்தில் நிஜ ஹாசினி ஜெனிலியா அவர்கள் தரையில் சப்பணம் போட்டு அமர்ந்து, தூய்மையாய் இருப்பது பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்... அந்தப் புள்ள ஒரே ஒரு கல்யாணம்தானடா பண்ணுச்சு! அதுக்குப் போயி...