சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

காய்கறிக்கடைகள் பகுதிவாரியாக அனுமதிக்கப்படுவதைப் போல, இறைச்சி வணிகத்தையும் அரசு அனுமதிக்கவேண்டும்.

twitter.com/SHIJA25

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது - மோடி

ஏழு வருஷம் தாண்டிட்டோம்... இன்னும் மூணு வருஷம்தானேங்கிற சந்தோஷம் ஜி!

twitter.com/tparavai

எலக்‌ஷன் ரிசல்ட் மட்டும் ஏப்ரல் 10க்குள்ள வந்திருந்தா, கொரோனாப் பரவல் மற்றும் பாதிப்புகளை இன்னும் வெகுவாக் குறைச்சிருக்கலாம். சில நூறு பேர்களையாவது காப்பாத்தியிருக்கலாம்...

Nayana Willemyns - கட்டிப்பிடி வைத்தியம்!
Nayana Willemyns - கட்டிப்பிடி வைத்தியம்!

twitter.com/Subashini_BA

விழித்திரு... தனித்திரு... கோவை எம்எல்ஏ போல் வீட்டிலேயே இரு!

twitter.com/arattaigirl

யாரோடும் நெருக்கமாயில்லாத வாழ்வில் வழியெங்கும் கொட்டிக் கிடக்கிறது... கடன் கேட்கவோ / கொடுக்கவோ யாருமில்லாத சுதந்திரம்!

twitter.com/VanniArasu_VCK

தமிழ்நாட்டில் 97சதவிகிதத்துக்கும் மேலாக அசைவ உணவுகளையே விரும்பி உண்ணுகிறார்கள். அப்படி இருக்கும்போது இறைச்சி, மீன் கடைகள் மட்டும் எதற்காக மூடிக்கிடக்க வேண்டும்? காய்கறிக்கடைகள் பகுதிவாரியாக அனுமதிக்கப்படுவதைப் போல, இறைச்சி வணிகத்தையும் அரசு அனுமதிக்கவேண்டும்.

twitter.com/ItsJokker

இந்தியாவிற்கு 12 டன் உணவுப் பொருள்களை நிவாரணமாக வழங்கியது கென்யா!

# இந்தியாவுக்கு உதவி செய்ற அளவுக்கு கென்யா வளர்ந்துருச்சுன்னு சந்தோஷப்படவா... இல்ல, அந்த அளவுக்கு நாம கீழ போயிட்டோம்னு வருத்தப்படவான்னு தெரியல!

twitter.com/vemalism

மொத்த கேஸ் குறைஞ்சாலும் இறப்பு அப்படியே இருக்கு. காரணம், மக்கள் வாட்ஸப்ப படிச்சுட்டு பூண்டு, வெந்தயம்னு தின்னுட்டு கடைசி நேரத்துல மருத்துவமனைக்குப் போறதுன்னு நினைக்கிறேன்.

twitter.com/arattaigirl

சக மனிதர்களைப் பாத்து பயந்து, விலகி, ஒதுக்கி நடக்கற அளவு ஒரு நிலை வரும்னு நினைக்கவே இல்லை. போகப் போக கொரோனா நம்ம குணத்தைக்கூட மாத்திடுமோன்னு பயமா இருக்கு. அதுக்குள்ள இந்த நிலை சரி ஆகிடணும்!

twitter.com/ImAvudaiappan

தடுப்பூசி அச்சம் வந்தா மருத்துவரை அழைத்துப் பேசுங்க. இல்ல, அட்லீஸ்ட் அமைதியாவாவது இருங்க. தடுப்பூசி போடுறவனை பயத்தைக் காட்டி, தடுப்பூசி போடுவதைத் தடுக்காதீங்க!

உங்க உயிரில் நீங்க ரீஸ்க் எடுக்கவே அரசு அனுமதிப்பதில்லை. அடுத்தவன் உயிரில் ஏன் ரிஸ்க் எடுக்க நினைக்குறீங்க?

twitter.com/DrTRM/

செம்பருத்தி, மௌனராகம் இந்த மாதிரி சீரியலில் கோவிட் தடுப்பூசி போட்டுக்குற சீன் வச்சா பாதிப் பேர் போய்ப் போட்டுக்குவாங்க.

nadal: செம்மண் சூப்பர்ஸ்டார்!
nadal: செம்மண் சூப்பர்ஸ்டார்!

facebook.com/ ஜெ.வி. பிரவீன்குமார்

‘சாவிகள், பூட்டுகளைத்தான் திறக்கின்றன; கதவுகளையல்ல!’

இதற்கு, ‘author’ என, எனது பெயரைப் போட்டால், 10 ஊதா லைக்குகள் வாங்குவதற்கே நாக்குத் தள்ளும். வாயில் நுழையாதபடி ஏதோவோர் ஆங்கிலப் பெயரை குத்துமதிப்பாக உருவாக்கி, அவர்தான் இதன் author எனச் சொன்னால், மேற்கண்ட வாசகம் ‘திடீர்’ காவியத்தன்மையைப் பெற்று, கணக்கில்லாத ஹார்டீன்கள் அதற்குப் பறக்கும். அட அவ்வளவு ஏன், இந்த author-க்கு ஏன் இன்னும் ஞானபீட விருது கொடுக்கவில்லை எனவும்கூடக் கேட்பார்கள்!

facebook.com/gokul.prasad

ஓடிக்கொண்டிருக்கும் டோராவின் பயணங்களுக்கு இடையே உச்சா வருவதன் பொருட்டு டிவியை அணைத்துவிட்டுப் போகிறாள் சின்னஞ்சிறுமி. தொலைக்காட்சியை அணைத்துவிட்டால், டோரா அங்கேயே நின்றுகொண்டிருப்பாள் என்பதவள் நம்பிக்கை. அறியாமை தெய்வீக நிலையடைவது குழந்தைகளிடம் மட்டுமே!

facebook.com/vaa.manikandan

‘யார் வேண்டும்’ என்பதைவிட ‘யார் வேண்டாம்’ என்பதுதான் பெரும்பாலும் இந்தியாவின் வாக்கு அரசியலாக இருக்கிறது. ஐ.கே.குஜ்ரால், தேவகெளடா போன்றவர்கள் பிரதமர் ஆகக் கூடும் என்பதை எத்தனை பேர் கணித்து வைத்திருந்தார்கள்? மன்மோகன்சிங், நரசிம்மராவ்கூட எதிர்பாராமல் பிரதமர் ஆனவர்கள்தாம். அதனால் எதிர்த்து நிற்க ஆளே இல்லை என்று ராகுல் காந்தியை மட்டுமே மோடியுடன் ஒப்பீடு செய்ய வேண்டியதில்லை. ராகுலுக்காக மட்டுமே ஜனநாயகம் காத்திருக்காது.

twitter.com/HariprabuGuru

ஹலோ, டாஸ்மாக்ல ஓட்டை போட்டுத் திருடுன சாருங்களா? ஒரு சின்ன ஹெல்ப்பு. கலர்ஸ் டீவி ஆபீஸ்லேருந்து கேஜிஎப் பிரின்ட்ட தூக்கணும். கொஞ்சம் வரீங்களா சார்..?

twitter.com/ramesh_twetz

ஆபீஸ்ல வேலைக்கு வா... வா...ன்னு கூப்பிடுறாங்க. எனக்கு டீக்கடையில சிவனேன்னு டீ குடிச்சிட்டு இருக்கற மீசைக்காரர, அங்க இருக்க சின்னப் பையன் கிட்னிய புடுங்கக் கூப்பிடற சீன்தான் ஞாபகத்துக்கு வருது.



twitter.com/amuduarattai

குக்கு வித் கோமாளி ‘புகழ்’ ஹேர் ஸ்டைலுடன் யாரும் பிறப்பதில்லை. தொடர் ஊரடங்கு, அவர்களை உருவாக்குகிறது.

twitter.com/manipmp

‘சும்மாதான இருக்கீங்க’ என்பது மனைவிக்கான கிரியா ஊக்கி.

twitter.com/skpkaruna

பொன்னமராவதியில் கண்மாயில் சுற்றித் திரிந்த நீர்நாயைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பாம்! வனத்துறை அதுக்கு லாட்ஜ்லே ரூம் போட்டுத் தருமா? அந்த நீர்நாய் அங்கேயே இருப்பதில் என்ன பிரச்னை? ஒருவேளை அது பாலூட்டும் தாயாக இருந்தால், இப்போ அந்தக் குட்டிகளை யார் காப்பாற்றுவார்கள்?



twitter.com/arattaigirl

என்றேனும் சரிவதற்கென்றே கட்டமைக்கப்படுபவைதான் பிம்பங்கள். அஃதொரு சுமை. நாமே நம் பிம்பங்களை இடித்துவிட்டு நகர்வதே தேங்காமல் இருக்க ஒரே வழி.

Yuvan Shankar Raja: ராஜாதி ராஜா!
Yuvan Shankar Raja: ராஜாதி ராஜா!

twitter.com/ramesh_twetz

YGM போல் என் முன்னே வந்து நீ நிற்கும்போதெல்லாம்... சிவாஜியைப் போல் எனக்கு மூச்சுத் திணறுகிறது அன்பே!



twitter.com/RahimGazzali

சசிகலா பேச்சை அதிமுகவினர் யாரும் நம்ப மாட்டார்கள்! - கே.பி.முனுசாமி.

சசிகலா பேச்சை அதிமுகவினர் நம்பியதால்தான் அன்று எடப்பாடியால் முதல்வராகவே முடிந்தது.



twitter.com/Thaadikkaran

எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இருக்கணும்னா சோறாத்தான் இருக்கணும்!



twitter.com/raajaacs

பயத்தை முகர்ந்து ​பார்க்காதீர்கள். தைரியத்தின் நறுமணம் தெரியாமல் போய்விடும்.