Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

கபசுரக் குடிநீர் காய்ச்சிக் குடிச்சா கொரோனா காலியாகுதோ இல்லையோ சிலிண்டர் சீக்கிரம் காலியாகிடுது.

www.facebook.com/Salman Syed

ஞாயிறுகளில் வீடுகளுக்குள்ளும் மற்ற நாள்களில் வெளியிலும் வாழப் பழகிக் கொண்டது கொரோனா!

www.facebook.com/Iam Suriyaraj

எனக்கென்னமோ, அந்தக் கொண்டக் கடலையக் கொடுத்து முடிக்குற வரைக்கும் ஊரடங்கு தொடரும்னு தோணுதுடா...

வலைபாயுதே

www.twitter.com/PeterAlphonse7

அமித்ஷா அவர்களது அருமை மகன் ஜெய்ஷாவின் இந்திய கிரிக்கெட் வாரியம், கோடிகளை அள்ளும் ஐபிஎல் போட்டிகளுக்கு சீன கம்பெனிகள் நிதி உதவி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுக்குமாம்! மற்ற இந்தியர்கள் சீனப்பொருள்களைப் புறக்கணித்து விட்டு டிக்டாக் செயலியை அழித்து விடவேண்டுமாம்! அது அப்போ! இது இப்போ!

www.twitter.com/teakkadai1

கபசுரக் குடிநீர் காய்ச்சிக் குடிச்சா கொரோனா காலியாகுதோ இல்லையோ சிலிண்டர் சீக்கிரம் காலியாகிடுது.

www.twitter.com/arattaigirl

யார் எது வாங்கினதா சொன்னாலும்.. நல்லா இருக்கு / நல்லா இல்லைன்னு சொல்றதுக்கு முன்ன ‘விலை என்ன?’ன்னு கேட்கற மிடில் க்ளாஸ் மென்டாலிட்டி நல்லதா கெட்டதானே தெரியல. நாம இயல்பாத்தான் கேட்கறோம்னாலும் பொருளை ஆசையா காட்டினவங்க ‘என்னடா இவ!’ன்னு ஃபீல் ஆவாங்களோ?!

வலைபாயுதே

www.twitter.com/manipmp

அயோத்தியில் ஆக.5 பூமி பூஜை: அத்வானிக்கு அழைப்பில்லை.

#மாமியார் கொடுமையெல்லாம் முடிந்தபிறகு ஒரு கட்டத்தில மாமியார்க்குக் கொடுமை நடக்கும் மொமன்ட்

www.twitter.com/ItsJokker

“தேசிய மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்கும் கொடுக்கப்படும். தேசிய மொழியைக் கற்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது” - மோடி. ~ இதுல சோகம் என்னன்னா ‘தேசிய மொழி’ன்னு எந்த ஒரு மொழியும் இந்தியாவில கிடையாது..!

www.twitter.com/shivaas_twitz

அடேய் கொரோனா, உன்னால ஒரே ஒரு நல்லதுடா .ஆபீஸ்ல லீவு பேலன்ஸ் அப்படியே இருக்குடா!

வலைபாயுதே

www.twitter.com/HariprabuGuru

கொரோனாவுக்கு முன் ~

நாலு நாளா ஜுரமாம். போய் நாலு பழமும் ஹார்லிக்ஸும் வாங்கிக் கொடுத்து ஆறுதல் சொல்லிட்டு வருவோம்.

கொரோனாவுக்குப் பின் ~

எதே... நாலு நாளா ஜுரமா! நாம கண்டுக்காத மாதிரியே போவோம்.

www,twitter.com/LumosMaxima1510

“நீங்க படிச்ச ஸ்கூலில் நான் ஹெட் மாஸ்டர் எல்லாம் இல்லை.

ஸ்கூலே என்னுது - இதை ஒரு வசனமாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கு ஒதுக்கி வைத்திருந்தேன். நேற்று அந்த வசனத்தை ஆ.ராசா சுவீகரித்துக் கொண்டார்.

வலைபாயுதே

www.twitter.com/saravankavi

“இனி முழுமையாக மக்கள் பணிதான்” செல்லூர் ராஜு. அப்படின்னா, இனியாச்சும் நல்ல நல்ல ஜோக்கா சொல்லுங்கண்ணே...

www.twitter.com/Thaadikkaran

தமிழகத்தில் இ-பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை. - தமிழக அரசு

#ஆமா, அப்ளை பண்ணினதும் ரிஜெக்ட் ஆயிரும்..!

வலைபாயுதே

www.facebook.com/gokul.prasad

அச்சுப்பிரதிகளைத் திருடிக் கொண்டிருந்த காலத்தில் அந்தத் திருட்டுக்கு ஒருவித மதிப்பு இருந்தது. இந்த மின்னணு யுகம் வந்துதான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டது.

வலைபாயுதே

www.facebook.com/vaa.manikandan

தரம் என்று ஆரம்பித்தால் மிடில் க்ளாஸ் மாதவன்கள் ‘எட்டாவதே பாஸ் பண்ண முடியாதவன் இன்ஜினீயரிங் எப்படிப் படிப்பான்?’ என்று கேட்பார்கள். எட்டாவது படிக்கும் போது அப்பன் குடித்துவிட்டு அடித்திருப்பான், சோற்றுக்கே வழியில்லாமல் மாடு மேய்க்க அனுப்பியிருப்பார்கள், பள்ளி முடித்து மாலையில் பட்டாசு ஒட்டச் சென்றிருக்கக் கூடும் - ஒவ்வொரு குழந்தைக்கும் நூறு பிரச்னைகள் இருக்கின்றன. எட்டாம் வகுப்பையும் பத்தாம் வகுப்பையும் மட்டும் கணக்கில் எடுத்து இறுக்கி வடிகட்டியிருந்தால் கிராமங்களில் பிறந்து படித்து மேலே வந்து மருத்துவர்களாகவும் பொறி யாளர்களாவும் கணக்கர்களாகவும் இருக்கிற பல பேர் இன்று ஏதோ ஒரு கூலி வேலைக்கு வரிசையில் நின்றிருந்திருப்பார்கள். ஒப்புக் கொள்கிறீர்களா?