சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே...

வலைபாயுதே...
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே...

எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு, ஆனா அவங்க இஷ்டத்துக்கு நடந்துகொள்பவர்கள் இரண்டு பேர்தான். ஒன்னு மனைவி, இன்னொன்னு சலூன் கடைக்காரர்.

twitter.com/amuduarattai

ஒரு ஹோட்டலில் நாம் சாப்பிடும் உணவு, நாம் சாப்பிடும் உணவுக்கான பில், அதற்கான ஜி.எஸ்.டி, சர்வருக்கான டிப்ஸ், செக்யூரிட்டிக்கான டிப்ஸ் என நான்கு அடுக்குக் கட்டணங்களை உடையது.

twitter.com/Anvar_officia

பெண்களுக்கு இன்னொரு பெண்ணின் தலைமுடி நீளமாக இருந்தால்தான் பொறாமை வரும். ஆனால் ஆண்களுக்கு இன்னொரு ஆணுக்கு தலையில் முடி இருந்தாலே பொறாமை வரும்!

twitter.com/im_Navyaa

எதைத் தொலைத்தோம் என்பதும் தெரியாமல், எதைத் தேடுகிறோம் என்பதும் தெரியாமல் வாழ்கிற வாழ்க்கை சாபம் நிறைந்தது!

twitter.com/arulrajmv1

``கண்பட்டதுபோல் இந்த ஆடியோ சம்பவம் நடந்துவிட்டது... நாங்கள் இருவரும் அக்கா-தம்பி போல பழகி வருகிறோம்'' - சூர்யா சிவா, டெய்சி சரண் பேட்டி!

# போ... போ... பாசமலர் பஞ்சாயத்து முடிஞ்சுபோச்சு!

twitter.com/saravankavi

தலைவர் பதவி அளித்தால், சிறப்பாகச் செயல்படத் தயாராக இருக்கிறேன் - கார்த்தி சிதம்பரம்

# அதெல்லாம் சரி, ஓ.டி.டி-ல ஒரு நாளைக்கு எத்தனை படம் பார்ப்பீங்க?

Kiaraaliaadvani: மின்சாரக்கன்னி!
Kiaraaliaadvani: மின்சாரக்கன்னி!

twitter.com/parveenyunus

டேய் நவம்பர், உன்னால ஒண்ணே ஒண்ணு மிச்சம்டா. ‘ஏசி'யை ஆன் பண்ணவே இல்லடா!

twitter.com/Thaadikkaran

‘‘எப்படித்தான் ஒரு உயிரைக் கொன்னு சாப்பிடுறாங்களோ?''

‘‘ஏன், மாலை போட்டிருக்கியா?''

‘‘ஆமா, என்ன இப்போ?"

twitter.com/kumarfaculty

ஈ.எம்.ஐ வந்த பிறகு, சம்பளத்திற்கு அடுத்த நாளே மாதக்கடைசி தொடங்கிவிடுகிறது!

twitter.com/saranya121289

எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு, ஆனா அவங்க இஷ்டத்துக்கு நடந்துகொள்பவர்கள் இரண்டு பேர்தான். ஒன்னு மனைவி, இன்னொன்னு சலூன் கடைக்காரர்.

twitter.com/thisiswatigot

பூக்கிறது காய்க்கிறது

கனிகிறது

மயானத்து மரமும்!

twitter.com/THARZIKA

சக மனிதரைச் சகிக்கக் கற்றுத்தராத எழுத்து ஒருபோதும் ஆறுதல் தராது.

Sivakarthikeyan: அல்ட்டிமேட் காம்போ!
Sivakarthikeyan: அல்ட்டிமேட் காம்போ!

twitter.com/Sasitwittz

சத்தமா பேசினா உண்மையைத்தான் பேசுறாங்க அப்படின்னு அர்த்தமல்ல..!

twitter.com/puthagappuzhu

தேனிசைத்தென்றல் தேவா வரைக்கும் வந்தாச்சு. ஏன் டி.ராஜேந்தரை மட்டும் அங்கீகரிக்க மறுக்கிறது நவீனம்? சினிமாக்கார லபக்குதாஸுகளும் கெட் டுகெதர்ல சேர்த்துக்கமாட்றாங்க, பழைய பாட்டுகளை நோண்டியெடுத்து கேக்கற வோக்ஸுகளும் ஆட்டைல சேர்த்துக்க மாட்றாங்க. என்னய்யா பண்ணுனான் என் கட்சிக்காரன்?!

twitter.com/manipmp

மனைவி அறிவுரை சொல்லும்போது சிரிக்காமல் இருப்பதுதான் வாழும்கலைப் பயிற்சி!

twitter.com/roseetalks

நாடி, நரம்பு, ரத்தம் எல்லாத்துலயும் கொஞ்சம்கூட common sense இல்லாத வங்கதான் ஞாயிறு மதியம் 3:30-க்கு போன் பண்ணுவாங்க!

twitter.com/LAKSHMANAN_KL

நாட்டின் சிறந்த தலைவர்கள் பலரின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை! - பிரதமர் மோடி

# அத்வானியை மனசுல வெச்சுச் சொல்றாரோ..?!

twitter.com/mohanramko

கொசுவுக்குக் கண் நல்லாத் தெரியும்போல. கரெக்டா காது கிட்ட வந்துதான் கத்துது...

Manjimamohan & Gauthamramkarthik: வாழ்வாங்கு வாழ்க!
Manjimamohan & Gauthamramkarthik: வாழ்வாங்கு வாழ்க!

twitter.com/krishs

ரயில்ல சைடு லோயர் பெர்த்னா, பிளாட்பாரத்துல படுத்திருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்!

twitter.com/shivaas_twitz

ஆபீஸ்ல ஹெச்.ஆர் திடீர்னு கல்யாண நாள், மனைவியின் பிறந்த நாள் என்னன்னு கேக்குறாங்க... கூகுள்லயும் தேட முடியாது, வீட்டுக்கு போன் பண்ணியும் கேட்கமுடியாது... கையறு நிலை!

facebook.com/ramanujam.govindan

இரவு ஒன்பது மணிக்குமேல் கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கினால் ஏன் 'டிஸ்போசிபிள் டம்ளர் வேணுமா?' எனக் கேட்கிறார்கள்? இரவு ஒன்பது மணிக்குமேல் தண்ணீர் பாட்டிலோடு தண்ணீரைக் குடிக்க முடியாதா?

twitter.com/HAJAMYDEENNKS

வெங்காயம் தூக்கலா ஒரு ஆம்லெட் சொன்னால், வெங்காயத்தையே தூக்கிட்டுதான் ஆம்லெட் போடுறாங்க... ஹோட்டல் பரிதாபங்கள்!

twitter.com/Suyanalavaathi

'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து'... ஆனா பாருங்க, இந்த மருந்து மட்டும் எங்கயும் கிடைக்காது!

twitter.com/Greesedabba2

லேசான இருமல்கூட செய்தியாகிறது - கமல்ஹாசன்.

# நீங்க இருமலையே எப்படி சுத்தி சுத்தி வித்தியாசமா இருமுனீங்களோ... யாருக்குத் தெரியும்!

facebook.com/hariharan.jeg

இந்தக்காலம் தியேட்டர்கள் ரினவேஷன் காலம் போல இருக்கு... ஊர்கள்ல தியேட்டர்காரங்க உள்ள இருக்கிற சீட்டுக் கெல்லாம் நம்பர் ஒட்டிட்டு so n so சினிமாஸ்னு பேர் மாத்திக்கிறாங்க. டவுன் தியேட்டர் மாதிரி விலை வைக்கிறதுகூட பரவாயில்லைங்கய்யா, அந்தக் காத்து வராம சவுண்ட் மட்டுமே வர்றாப்ல இருக்கிற ரெண்டு ஃபேனை ஆஃப்பாச்சும் பண்ணி வெக்கலாம்ல!

facebook.com/kn.senthil.1

அப்பாவித்தனத்தை ஒரு மனிதன் இழந்தபிறகு அவன் எத்தகையவன் ஆன போதும் அற்பனே. மரணம் வரை தன்னுள் கிடக்கும் சிறுவனையும்/சிறுமியையும் சாகடிக்காமல் இருப்பவர்களே உலகிற்கு வெளிச்சம் ஆகிறார்கள். சூழ இருப்பவர்களுக்கு நீர் ஆகிறார்கள். கொஞ்ச தூர உயரம் என்றாலும், பறக்க அவர்களுக்கே சிறகுகள் முளைக்கின்றன. காற்றில் ஈரத்தை நிறைத்தபடி மண்ணில் இறங்கும் அவர்களது புன்னகைகளால் இவ்வுலகத்தார் கண்மூடி உறங்க முடிகிறது.

facebook.com/M.Elangovan

டூ வீலர் இண்டிகேட்டர அந்த `ட்டொய்ங், டொய்ங்க்' சத்தத்தோட ஃபிட் பண்ணித் தொலைங்க மக்களே... ரைட், லெஃப்ட் இண்டிகேட்டர சைலன்ட் மோடுல போட்டுட்டு கடைசி வரைக்கும் நேராவே போய்க்கிட்டு இருந்தா, பின்னாடி வர்றவன் அம்புட்டு பேருக்கும் கன்ஃபியூஸ் ஆவுதா இல்லையா?

facebook.com/magudeswaran.govindharajan

நீங்கள் எவ்வூரைச் சேர்ந்தவர் என்றாலும் சரி, உங்கள் ஊர்ப் பேருந்து நிலையத்தில் அல்லது நிறுத்தத்தில் எப்போதாவது ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தியிருப்பீர்கள்!