சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

ரிப்பீட்டேடு சவுண்ட் ஆடியோ வந்த பிறகு பொருள்களை விற்பவர்களுக்கு வாய் வலிப்பதில்லை.

facebook.com/sowmya.ragavan

தான் சொல்லும் பொய்களை மனைவி நம்புகிறாளென்று கணவனும், தான் நம்புவதாகக் கணவன் நம்புகிறானென மனைவியும் நம்புகின்றனர்.

twitter.com/Frompadippaham1

லீவ் அப்ளை பன்றேன். அடுத்த அலை ஆரம்பமாகுது. ஃப்ளைட்ட நிப்பாட்டிர்ரானுங்க... லீவ் அப்ளை பன்றேன். அடுத்த அலை ஆரம்பமாகுது. ஃப்ளைட்ட நிப்பாட்டிர்ரானுங்க...

ரிப்ப்ப்ப்பீட்ட்ட்டு

twitter.com/selvu

சாதியை எதிர்க்கிறேன். ஆனால், நான் ஒன்றும் தலித் இல்லை என்று கூறும் நபர்கள் ஒருபோதும் சாதிக்கு எதிரானவர்களாக இருப்பதில்லை.

twitter.com/tparaval

தக்காளி விலை உசந்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன்...

ஆனா தக்காளி ஜோக்ஸை மட்டும் நீங்க பாத்துக்குங்க...

twitter.com/ratweetzz

பிடிச்சவங்க பண்ணுனா க்யூட். பிடிக்காதவங்களோ, யாரோ பண்ணுனா கிரிஞ்சி அவ்ளோதான்... கிரிஞ்சி செயல் சார்ந்தது இல்ல, ஆள் சார்ந்தது.

Srushtidangeoffl: சிறு செடிகளும் நடலாம்!
Srushtidangeoffl: சிறு செடிகளும் நடலாம்!

twitter.com/Annaiinpillai

அந்தமானிலிருந்து கப்பலில் வேட்பாளர்களை இறக்கியிருப்பேன்! - டாக்டர் ராமதாஸ்

# அய்யா நீங்க டாக்டர்தான?! தெலுங்குப் பட வில்லன் மாதிரி பேசுறீங்க?!

facebook.com/Ilango Krishnan

ஏங்க, ஆவின் பால் பாக்கெட்டுல யாரோ கவிஞர் போட்டோ போட்டிருக்காங்க...

இவர் வர்கீஸ் குரியன். வெண்மைப் புரட்சியின் தந்தைன்னு சொல்வாங்க.

பார்க்க ஒரு மாதிரியா இருந்தாரா, நான்கூட கவிஞர்னு நினைச்சுட்டேன்.

ஒரு மாதிரின்னா...

சரி அதைவிடுங்க.

twitter.com/amuduarattai

ரிப்பீட்டேடு சவுண்ட் ஆடியோ வந்த பிறகு பொருள்களை விற்பவர்களுக்கு வாய் வலிப்பதில்லை. அதைக் கேட்கும் நமக்குத்தான், காது வலி பொறுக்க முடியவில்லை.

twitter.com/RahimGazzali

முன்னாடில்லாம் படம் நூறு நாள் ஓடினால் கொண்டாடினாங்க. அப்புறம் 100 காட்சிகள் ஓடினாலே கொண்டாடினாங்க. இப்ப என்னடான்னா 100 நாள் ஷூட்டிங் முடிஞ்சதையும் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்து 100 மணி நேரம் ஷூட்டிங் முடிஞ்சாலும் கொண்டாடுவாங்க போல...

twitter.com/RavikumarMGR

தன்னுடைய சாதி நலனுக்காக மட்டுமே செயல்பட நினைப்பவர்களுக்கு எல்லா சாதி மக்களும் வாழும் மாநிலத்தை ஆள வேண்டும் என்று எப்படி ஆசை வருகிறது? அதெப்படி நிறைவேறும்?

twitter.com/prabhu65290

“அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை இருக்கும் வரை, கட்சி பின்னடைவைச் சந்திக்கும்” - கார்த்தி சிதம்பரம்

தொகுதிக்கு ஒரு கோஷ்டி வெச்சு சண்டை போட்டுட்டிருக்கும் காங்கிரஸ் கட்சில இருந்துட்டு இவரு ரெட்டைத் தலைமை பத்திப் பேசறாருப்பா...

ஹையோ.... ஹையோ...

nelson: லெட் மீ சிங் ஏ பீஸ்ட்டு ஸ்டோரி!
nelson: லெட் மீ சிங் ஏ பீஸ்ட்டு ஸ்டோரி!

twitter.com/RajVijayDhoni

மாநாடு சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது `விஜய் டி.வி’ நிறுவனம்...

- இனிமேதான் உண்மையான Loop ஆரம்பிக்கப்போகுது.

twitter.com/Annaiinpillai

ஆட்டோ சவாரிக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி; 2022 ஜனவரி முதல் அமல் # போற போக்க பார்த்தா மூச்சுக்கும் ஜி.எஸ்.டி போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..!

facebook.com/ தமிழ்ப்பிரபா

“ஸ்வாதி ராம்குமார் வழக்கில், எல்லா ஆதாரங்களும் எப்படி ராம்குமார்க்கு எதிராக அத்தனை துல்லியமாக உங்ககிட்ட இருக்கு?’’ என அது சம்பந்தமான நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்டபோது அவர் அளித்த பதில் இது;

“அவனோட நேரம் அவ்ளோதான். ராம்குமார்தான் கொலை செய்தான்னு 2,400 பக்கத்துக்கு ஆதாரங்களோட கோர்ட்ல சப்மிட் பண்ணியிருக்கோம். சிபிஐ விசாரணையே இதுக்கு வேண்டாம். ரொம்ப சூப்பரா நீங்க தகவல்களை சப்மிட் பண்ணியிருக்கீங்கன்னு நீதிபதியே எங்களைப் பாராட்டினார்.”

பின்குறிப்பு: Nov. 23/2021 இந்த வழக்கில் அடுக்கடுக்கான சந்தேககங்கள் எழுந்துவரும் நிலையில் அடுத்தகட்ட விசாரணை வரும் ஏழாம் தேதிக்கு ஒத்திவைத்து மனித உரிமை ஆணையம் உத்தரவு.

ஒரு முதல்வரின் மரணத்திலுள்ள மர்மத்தின் மீதே மண்ணள்ளிப் போட்ட மாநிலம் இது என்கிற பெருமையைச் சுமக்கிறபோது ராம்குமார் வழக்கு தொடர்பான விசாரணை கமிஷனெல்லாம் அரசுச் சடங்காகவே மாறிவிட வாய்ப்பு அதிகம்.

facebook.com/N Naveenkumar

இளையராஜாவின் பாடல்களின் வெற்றிக்கு அதன் காட்சியமைப்பு எவ்வளவு உதவியது என்பதற்கு ஒரு சிம்பிளான பதில் உண்டு. அவரின் இசையில் ரசித்த பல பாடல்களின் காட்சியை இன்று வரை பலர் பார்த்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், அதன் இசை கொடுத்த உணர்வைக் காப்பாற்றிக்கொள்ள கடைசி வரை அதன் காட்சியைப் பார்த்துவிடக் கூடாது என்று நினைத்திருக்கும் பாடல்கள் நிறைய உள்ளன.

twitter.com/yugarajesh2

“தி.மு.க-வின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது; இனி எல்லாவற்றுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு-பொன்.ராதா# ஆனால்... மத்திய அரசுக்கு மட்டும் எல்லாத்துக்கும் நேருதான் பொறுப்பு..!

rakulPreet: கேக் தின்ன ஆசையா!
rakulPreet: கேக் தின்ன ஆசையா!

twitter.com/Kozhiyaar

BSNL-ஐ உயிர்ப்பிக்கத்தான் அனைத்துத் தனியார் கைப்பேசி சேவை நிறுவனங்களின் விலையையும் ஜீ கட்டாயப்படுத்தி உயர்த்தியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?!

twitter.com/selvu

பொய் சொன்னால் கடவுள் கண்ணைக் குத்திவிடுவார் என்று என் தாயார் கூறியிருக்கிறார். பொய் சொல்ல நேரும்போது கடவுளிடம் “இன்று என் கண்ணைக் குத்திவிடாதே, இனிமேல் பொய் சொல்லேன்” என வேண்டிக்கொள்வேன். எல்லா நாள்களிலும் கடவுள் என் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவரை எப்படி இல்லையென்பது?