
நம்மை எப்போதும் கடிந்துகொண்டே இருந்தாலும், எப்போதும் நம்மீது எரிந்து விழுந்தாலும், நம்மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட ஒருவர் மனைவி மட்டும்தான் என்பதை உணர்வுபூர்வமாக நெகிழ்ந்தே சொல்கிறேன்.
twitter.com/mohanramko
சமைப்பவரைவிட உபசரிப்பவருக்கே மதிப்பு அதிகம். அதனால்தான் ஓட்டலில் சர்வருக்கு டிப்ஸ் தருகிறோம்...
twitter.com/athisha
ஓ.டி.டி-ல மட்டுமே படம் பாக்குற புதிய ரசிகர்கள் குரூப் தமிழ் சினிமாவுல உருவாகியிருக்கு. தியேட்டர்ல சரியா ஓடாத படத்தைப் பார்த்துட்டு, ‘இது நல்லாருக்கே, ஏன் ஓடல'ங்க வேண்டியது. நல்லா ஓடின படத்தைப் பார்த்துட்டு ‘இவ்ளோ கேவலமா இருக்கு, இது எப்படி ஓடுச்சு'ன்னு திட்றது.
twitter.com/mohanramko
‘‘ஏண்ணே அவனை அடிக்கறீங்க..?''
‘‘பாபா பட ரீரிலீஸுக்கு டயலாக் மாத்தறாங்களே, ஹீரோ, ஹீரோயினையும் மாத்துவாங்களான்னு கேட்கறான்!''
twitter.com/amuduarattai
நாயை வளர்ப்பவர்களுக்கு, அவர்கள் வீட்டில் யாரையும் நாய் எனச் சொன்னால்கூட வராத கோபம், அவர்கள் வீட்டு நாயை நாய் என்று சொன்னால் மட்டும் வந்துவிடுகிறது.

twitter.com/Kannan_Twitz
என்னைத் தேடி என்னிடம் பேசி என்னை ஆற்றுவதற்கு ஒரு தேநீர் போதுமானதாக இருக்கிறது!
twitter.com/Kirachand4
புதுசு புதுசா கிரைண்டர் கண்டுபிடிக்கிறாங்க... ஆனா மாவ போட்டுட்டு அத ஈஸியா கழுவுறது எப்படின்னு மட்டும் சொல்ல மாட்டேங்கிறாங்களே!
twitter.com/Anvar_officia
நீங்க என்ன கலர் பால் பாக்கெட் வாங்குறீங்க என்பதைப் பொறுத்து இருக்கிறது, உங்களின் வாழ்க்கை வண்ணமயமானதாக இருக்கிறதா இல்லையா என்பது!
twitter.com/sasitwittz
ராங் ரூட்ல ஆப்போசிட்ல ஓரமா வந்தா தப்பு இல்லன்னு நிறைய பேர் அவங்களாகவே நினைச்சுக்கிறாங்க!
twitter.com/Anvar_officia
உப்புமா நல்லா இருக்குன்னு சொன்னா இரண்டு கரண்டி அள்ளி வைக்கிறாங்க, நல்லா இல்லைன்னு சொன்னா அதே கரண்டில இரண்டு அடி வைக்கிறாங்க. என்னத்த சொல்ல!
twitter.com/manipmp
இந்த வருஷமும் நாம கழட்டுனது காலண்டரை மட்டும்தான்!

twitter.com/thisiswatigot
நம் அகங்காரத்தின் வேட்டை நாய், எங்கும் இளைப்பாற மறுக்கிறது!
twitter.com/Lakshmivva1
சொல் ஒரு பாறை. எப்போதாவது அதற்குக் கரையும் சக்தி கிடைத்துவிடுகிறது, யாரோ ஒருவர் கண்களில்!
twitter.com/______prakashT
இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் எனச் சொல்லிவிட்டு நீங்கள் அடுத்து சொல்லும் அறிவுரைகளைக் கேட்கும்பொழுது என் பைத்தியக்காரத்தனம் எத்தனையோ மேலாகத் தெரிகிறது.
twitter.com/kumarfaculty
தி.மு.க-வின் நடமாடும் சொத்து உதயநிதி: பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
# சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமனம்.
facebook.com/ramanujam.govindan
முன்பெல்லாம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போறாரான்னு தெரியாம குழப்பமா இருக்கும். இப்பல்லாம் கமல்ஹாசன் அரசியல்லேர்ந்து வெளியேறிட்டாரான்னு தெரியாம குழப்பமா இருக்கு.
facebook.com/mano.haran.737
அதுல ஒருத்தன் கேக்குறான்... இந்த ஆன்மிகம் சார்ந்த படங்கள எல்லாம் ரீரிலீஸ் பன்றாங்களே, ‘ஆழ்வார்' படத்தையும் ரீரிலீஸ் பண்ணுவாங்களான்னு!
facebook.com/saravanakarthikeyanc
இதுவரை எந்த யானையிடமும் ஆசீர்வாதம் வாங்காதவர்கள் மட்டுமே லட்சுமி யானையின் மரணத்துக்கு உச் கொட்டுவது அறம்.
twitter.com/shivaas_twitz
கொஞ்சம் வசதியான நண்பர் ஒருத்தர் சொன்னது: காலையில எழுந்ததும் மொபைல் எடுத்து வாட்ஸப்லாம் பாக்க மாட்டேன். பேங்க் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி பேலன்ஸ் பாப்பேன் . அது தர்ற மோட்டிவேஷனை வேற எந்தத் தத்துவமும் தராது. உங்க எமோஷனைத் தூக்கி குப்பைல போடுங்க, ரசனையைக் குழிதோண்டிப் புதைங்க. பணமே பிரதானம்.
twitter.com/Thaadikkaran
வடகொரியாவில் குழந்தைகளுக்குத் துப்பாக்கி, வெடிகுண்டுப் பெயர்களை வைக்க பெற்றோருக்கு உத்தரவு!
# தட் மயில்சாமி மொமென்ட்... பீரங்கி, உள்ளேன் ஐயா... BK 47, உள்ளேன் ஐயா... ராக்கெட் லாஞ்சர், உள்ளேன் ஐயா...
twitter.com/saravankavi
ஆன்மிகம் தெரிந்த கவர்னர் கிடைத்துள்ளார்: மதுரை ஆதீனம்
# ஆனா கவர்னர் வேலை தெரிந்த கவர்னர் கிடைக்கலையே?
twitter.com/Suyanalavaathi
‘‘ஐயா, நியூ இயர் வருது’’ன்னு சொன்னா, நீங்க teenager. ‘‘ஐயோ, நியூ இயர் வேற அதுக்குள்ள வருது’’ன்னு சொன்னா, நீங்க old ager!

twitter.com/manipmp
கொஞ்சம் சொட்டையா இருப்பாரு என்பது தற்கால ஆண்களின் அடையாளமாக மாறிவிட்டது.
twitter.com/saranram
மெட்ராஸ் ஐ வந்தா சும்மா தூரமா நின்னு சொன்னாலே போதும். நம்பணும்னு பக்கத்துல வந்து ஏன்டா கண்ணைப் பிதுக்கியெல்லாம் காட்டுறீங்க?
twitter.com/RajiTalks
ஏழு வருஷமா எதிர் ஃப்ளாட்ல குடியிருந்து அவங்க வீட்டு சுப நிகழ்வுக்கு உங்கள கூப்பிடலனா மாநகர் வாழ்க்கையைக் குறை சொல்லாம நம்மை நாம கொஞ்சம் சுயபரிசோதனை செஞ்சு பாத்துக்கறது நல்லது!
twitter.com/RahimGazzali
டோனட் மாதிரி நடுவில் ஓட்டை இருப்பதால் உளுந்து வடைக்கு என் மகள் வைத்திருக்கும் பெயர் டோனட் வடை. இந்த ஜெனரேஷனுக்கு டோனட் பெயர் தெரிந்திருக்கும் அளவுக்கு உளுந்து வடை பெயர் தெரியவில்லை.
ftwitter.com/iVenpu
ஒரு படத்துல வில்லன் ஆனந்த்ராஜ் அழிச்சாட்டியம் பண்ணிட்டிருப்பாரு, க்ளைமாக்ஸ்ல அவரை ஒரு பிரசவ அறையில போட்டுப் பூட்டிடுவாரு ஹீரோ. ஆனந்த்ராஜ் திருந்திடுவாரு. இந்த ‘சுகப்பிரசவம்தானே நல்லது’ குரூப்புக்கு எல்லாம் இப்படி ஒரு ட்ரீட்மென்ட் குடுக்கலாம்!
facebook.com/NaveenKumarN85
நம்மை எப்போதும் கடிந்துகொண்டே இருந்தாலும், எப்போதும் நம்மீது எரிந்து விழுந்தாலும், நம்மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட ஒருவர் மனைவி மட்டும்தான் என்பதை உணர்வுபூர்வமாக நெகிழ்ந்தே சொல்கிறேன். நாம் சாப்பிடத் தொடங்கும்போது ‘இது குழம்பு... இது ரசம்’ என அவற்றை சரியாக அடையாளம் காட்டி நமக்கு ஏற்படவிருக்கும் பெரும் மனக்குழப்பத்திலிருந்து நம்மை முன்னெச்சரிக்கையாக விடுவிக்கிறார்.