சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

டிசம்பர் மாசத்துல நமக்குக் கிடைக்கற ஒரே சந்தோசம் அண்ணாச்சி கடையில கிடைக்கற காலண்டர்தான்...!

twitter.com/RahimGazzali

மேட்டுப்பாளையத்திலிருந்து ட்ரெய்னில் ஊட்டி போக முந்தைய கட்டணம் 475. தற்போதைய கட்டணம் 3000. தனியாரிடம் ஒப்படைத்ததன் பலன், பொதுமக்கள் தலையில் விடிந்துள்ளது. இனி ஊட்டிக்கு தனியாக்கூட போகமுடியாதுபோல...!

Gal Gadot - ரிலாக்ஸ் ப்ளீஸ்!
Gal Gadot - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

twitter.com/pencil_tweets

கேரளாவில் `ராஜீவ்காந்தி சென்டர் பார் பயோடெக்’ மாநில அரசிடம் இருந்து தரம் உயர்த்துவதாகக் கையகப் படுத்தப்பட்டு பாதியாகப் பிரிக்கப்பட்டு இன்னொரு பாதிக்கு கோல்வால்கர் பெயர் சூட்டப்படவிருக்கிறது.

இதைப் படிக்கும்போது அண்ணா பல்கலைகழகம் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

twitter.com/saravankavi

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் குரல்.

அப்படி நான் என்ன பண்ணிட்டேன், என் கடமையைத்தானே செஞ்சேன்...

vedhika - அழகிய பதுமை..!
vedhika - அழகிய பதுமை..!

twitter.com/ramesh_twetz

டிசம்பர் மாசத்துல நமக்குக் கிடைக்கற ஒரே சந்தோசம் அண்ணாச்சி கடையில கிடைக்கற காலண்டர்தான்...!

twitter.com/Vkarthik_puthur

தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் - பிரதமர் மோடி!

நீங்க எந்த உதவியும் செய்யாம இருந்தாலே அதுவே எங்களுக்குப் பேருதவிதான் ஜீ...

twitter.com/Raja_AnvarTwits

எல்லா வகையிலும் சிக்கனமா இருப்பதாலேயே ‘சிக்கன்’னு பேர் வச்சிருப்பாங்களோ.#பிராய்லர்_கடை_சிந்தனைகள்

IlayaRaja - இசைஞானியும் இசைவாணியும்
IlayaRaja - இசைஞானியும் இசைவாணியும்

twitter.com/prabhu65290

ரஜினிக்கு ஒரு கோடி இளைஞர்களின் வாக்கு உறுதியாகிவிட்டது - எஸ்.வி.சேகர்

ரஜினி கிட்ட கதறிக் கதறிக் கேட்டாலும் பால் பாக்கெட் கிடைக்காது அண்ணே!

twitter.com/manipmp

கூட்டணி குறித்து முடிவெடுக்க தே.மு.தி.க பொதுக்குழு விரைவில் கூடுகிறது

#மைக் ஒன்,மைக் டூ, மைக் த்ரீ வாங்கடா இங்க.

twitter.com/vinothini

தவறாகிவிடுமோ என்ற எண்ணம்தான் பல வாய்ப்புகளைத் தவற விட வைக்கிறது!

twitter.com/saravankavi

தமிழக பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்.

பாவம் அவருக்கு என்ன கெட்ட நேரமோ...?

David Warner - வணக்கம்டி மாப்ளே, சிட்னில இருந்து
David Warner - வணக்கம்டி மாப்ளே, சிட்னில இருந்து

twitter.com/GreeseDabba2/

கைரேகைன்றது மனுசனுக்கு மனுசன் மாறும்ன்றதே ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு வந்தப்பறம்தான் என்னால எல்லாம் நம்பவே முடியுது.

facebook.com/saravanakarthikeyan ChinnaDurai

எல்லோருமே சனம் வெளியேறியதற்கு அழுகிறார்கள். அப்போ யார்தான் அதுக்கு ஓட்டு போடாம விட்டது? 2021 தேர்தல் வேற பக்கத்துல இருக்கு. இவனுகள நம்பலாமா?

twitter.com/drkvm

`பச்சைத் துணி’யைத் தோளில் போட்டவுடனே விவசாயியாக மாறும் அற்புதம்...

நம்மூர்லதான்...