
வரலாறு முக்கியம் என்கிறார்கள். ஆனால் கடைசிப் பரீட்சை அதுதான்!
twitter.com/Anvar_officia
சைவம் சாப்பிடுறவங்க சிலர் முட்டை மட்டும் சேர்த்துப்பாங்க. இது எப்படி இருக்குன்னா, ‘ஆடு பகை, குட்டி உறவு' என்கிற கதைதான்!
twitter.com/manipmp
எல்லோரும் கவனிப்பது வரம், எல்லோராலும் கண்காணிக்கப்படுவது சாபம்!
twitter.com/Greesedabba2
இதுக்கு மேலேயும் ஆள் ஏத்துனீங்கன்னா சேகர் செத்துருவான் என்பதே காலையில் டவுன் பஸ்ஸில் அலுவலகத்திற்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு தமிழனின் வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என அனைத்து ஸ்டேட்டஸ்களும்...
twitter.com/drloguortho1
சுங்கச் ‘சாவடி’ என்று பெயர் வைத்தவன் ஒரு தீர்க்கதரிசி!

facebook.com/cmayilan
அடிக்கடி ஐ.ஐ.டி-க்காரர்கள் எதையாவது கண்டுபிடித்திருப்பதாகச் செய்தித் தலைப்புகள் குறுக்கிடுகின்றன. என்னவென்று திறந்து பார்த்தால் அவை பைசா பெறாத வஸ்துகளாக இருக்கின்றன. அவையெல்லாம் செய்தி ஆகின்றன என்றால், நியாயப்படி கொசு பேட்டைக் கண்டுபிடித்த மகானுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும்.
facebook.com/ramanujam.govindan
இயற்கை சிறப்பானதுதான். பல அற்புதங்கள் மனித உடலில் நிகழ்கின்றன. அவற்றுக்கு நம்மால் ஈடுசெய்யவே முடியாது. ஒரு வைரஸைக்கூட நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், ‘இயற்கை ஆகச் சிறப்பானது, குறைகளே இல்லாதது, பரிணாம இயக்கம் (Evolution) 100% கச்சிதமானது' என்றெல்லாம் நினைப்பது முட்டாள்தனம்.
ஒரு விஷயம் முழுமையானதாக இருந்தால் அது ஏன் மாற வேண்டும்? Perfect ஆக இல்லை என்பதாலேயே Evolve ஆகிறது. பரிணாம ரீதியில் மாறுதல் அடைகிறது என்பதிலிருந்தே தெரியவில்லையா, இயற்கை முழுமையானது அல்ல என! இயற்கையோடு இணைந்து வாழ்வது முக்கியம்தான். ஆனால், 100% இயற்கையோடு இணைந்திருக்க வேண்டும் என நினைப்பது அபத்தம்.
உடை அணிவதாலேயே நம் உடலில் பல மாறுதல்கள் வரும், உடலெங்கும் ரோமங்கள் குறையும். உணவைச் சமைத்துச் சாப்பிடுவதால் நகங்களும் பற்களும் மாறுதல் அடையும். ஆனால் புரத உணவைச் சமைத்துச் சாப்பிட்டதால்தான் மனித மூளை அபார வளர்ச்சி அடைந்தது என்கிறது விஞ்ஞானம். கூடுமானவரை இயற்கையோடு இணைந்திருக்கலாம். ஆனால் தேவையான சமயத்தில் நமக்கு எது சௌகரியமோ அதைத்தான் செய்ய வேண்டும். பல தலைமுறைகள் கழித்து அதற்கு ஏற்றவாறு இயற்கை மாறுதல் அடைந்திருக்கும். இயற்கையோடு இணைந்திருந்த முன்னோர்கள் எல்லோரும் 100% சந்தோஷமாக இருந்தார்கள் என நினைப்பது அபத்தமானது.

twitter.com/kumarfaculty
காங்கிரஸின் ஓட்டு வங்கி 25 சதவிகிதமாக உயரும்: கே.எஸ்.அழகிரி நம்பிக்கை
# புயல், குளிர்ல வெகு நேரம் தூங்கிட்டார் போல
twitter.com/IamUzhavan
கடைக்காரரே... புயலுக்குக்கூட பஜ்ஜி மாவுக்கு ஆஃபர் கிடையாதா? என்னய்யா யேவாரம் பார்க்குற!
twitter.com/Ilavenil999
ஆனா இந்தத் தேர்தல் முடிவுல்லாம் ஒரு விஷயத்த தெளிவா உணர்த்துது. காங்கிரஸ்காரன தவிர எல்லாரும் காங்கிரஸ் ஜெயிக்கணும்னு நினைக்கிறாங்க.
twitter.com/HAJAMYDEENNKS
குஜராத் தேர்தல் முடிவுகள் ஆச்சர்யமளிக்கவில்லை. இமாச்சலில் காங்கிரஸ் முன்னிலை என்ற செய்திதான் அதிர்ச்சி அளிக்கிறது. எப்படிக் கோட்டை விட்டது தேர்தல் ஆணையம்!
twitter.com/roadoram
சுடுகாட்டுக்குப் போயிட்டு வெளியே வரும்போது மிச்சமிருக்கும் வாழ்க்கையைப் பயனுள்ளதாக, நிம்மதியாக, சண்டையில்லாமல் கழிக்கணும்னு தோணும். ஆனால், அந்த மயான வைராக்கியம் கொஞ்ச நேரம்தான். கிட்டத் தட்ட அதே அனுபவத்தைக் குடும்ப நீதிமன்றங்களும் தரும்!
twitter.com/amuduarattai
அமைச்சர்களின் அடுத்த கட்ட ஊழல் பட்டியல் சில நாள்களில் வெளியிடப்படும்: அண்ணாமலை
# அப்படியே உங்க கட்சியிலிருந்து ஆடியோ எப்போ வெளியிடப்படும்னு சொல்லுங்க!
twitter.com/Greesedabba2
அரசியலில் குறுக்கு வழிகளைக் கடைப் பிடிக்கும் தலைவர்கள்தான் நாட்டின் உண்மையான எதிரிகள்: மோடி
# ஜி... மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டிருக்கீங்க!
twitter.com/Itz_Araviind
உண்மையா வேலை செய்றவனவிட, வேலை செய்கிற மாதிரி நடிக்கிறவனதான் எல்லாரும் பாராட்டுறாங்க!

twitter.com/Vasanth920
சண்டே ஆனால் குழந்தைகள் பலூன்களுடனும் பெரியவர்கள் சலூன் களுடனும் ஒட்டிக்கொண்டு விடுகிறார்கள்.
twitter.com/saravankavi
இருபது வருஷங்களுக்கு முன்னாடி பார்த்த படத்தைக்கூட திரும்பப் பார்த்துட முடியுது. ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆன கல்யாண வீடியோவை மட்டும் மறுபடியும் பார்க்கவே முடியல...
twitter.com/urs_venbaa
ஐ.டி ரெய்டும், ஐ.டி விங்கும் ஆளும் கட்சிகளுக்குப் பக்கபலங்கள் ஆகும்.
twitter.com/mohanramko
காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாகக் கதவைத் திறந்தாய், காற்றே உன் பெயரைக் கேட்டேன்... `மாண்டஸ்' என்றாய்!
twitter.com/itz_radhi3
வாழ்க்கை நம்மை எந்தப் பள்ளத்தில் வீழ்த்தினாலும் அதுல இருந்து எந்திரிப்பது பெருசில்ல... காலைல பெட்ல இருந்து எந்திரிப்பதுதான் பெருசு!
twitter.com/Kozhiyaar
ஹரி பட எடிட்டிங் மாதிரி படுவேகமாக ஓடிட்டு இருக்கிற வாழ்க்கை, கல்யாணத்துக்குப் பிறகு பாலு மகேந்திரா பட எடிட்டிங் மாதிரி படு ஸ்லோவாகிடுது!
twitter.com/LAKSHMANAN_KL
பா.ஜ.க-வுடனான உறவு முடிந்தது: திருச்சி சூர்யா சிவா
# அந்தப் புனிதமான 'அக்கா - தம்பி' உறவாவது தொடரும்ங்களா..?!
twitter.com/manipmp
ஃபேனில் இருக்கிற பேரிங் சத்தத்தை சரி செய்தபின்பு, அருகில் உள்ளவரின் குறட்டை சத்தம் நன்றாய்க் கேட்கிறது.
twitter.com/Kannan_Twitz
தேவதையென்பது வேறு யாருமில்லை, நம்மைத் தேடும் ஒரு பெண்... அவ்வளவுதான்!
twitter.com/kumarfaculty
வரலாறு முக்கியம் என்கிறார்கள். ஆனால் கடைசிப் பரீட்சை அதுதான்!