
பெட்சீட் எடுத்தா குளிருது; ஃபேன் ஆஃப் பண்ணுனா கொசு கடிக்குது; தலையோட சேர்த்து போத்தி மொபைல் பார்த்தா காலுக்கு பெட்சீட் பத்தமாட்டிது.
twitter.com/ItsJokker
‘கொடுமை’ என்பது யாதெனில்,
‘நாலு இடத்துக்குப் போனா வீட்டைப் பாதுகாக்கும்’ன்னு நாயை வளர்த்து,
அதோட பாதுகாப்புக்காக ‘நாம நாலு இடத்துக்கு’ போகாம இருப்பதே..!

twitter.com/RavikumarMGR
எல்லா சாதி மயிரையும் குப்பையில் போட்டார் சலூன் கடைக்காரர்!

twitter.com/skpkaruna
கோயிலின் கருவறைக்கு அருகே செல்லும்போது மொபைல் போனில் மூலவரைப் படம் பிடிப்பது சட்டப்படி தவறு. ஆகமப்படியும் தவறு.
சரி! மீறி எடுத்தால் என்ன தண்டனை? பொறுங்கள். பா.ஜ.க தலைவர் முருகனும், பா.ஜ.க மத்திய அமைச்சரும் பழநி முருகனை போட்டோ எடுத்தார்களாம்! அதற்கு என்ன தண்டனையோ அதுதான் உங்களுக்கும்.
twitter.com/sweetsudha1
அப்பாவின் பெயர் கொண்டவர்களை, மனதுக்கு அனிச்சையாய்ப் பிடித்துப் போகிறது!

twitter.com/iKrishS
BJP in 2025: ஒரே நாடு எதுக்கு தேர்தல்.
twitter.com/SundarrajanG
நீர்வளத் துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல்சக்தி’, வானிலை குறித்த தரவுகளைத் தரும் இணையதளம் ‘மௌஸம்’ என்று அனைத்தும் இந்தியில் பெயர் வைத்துவிட்டு வரியை மட்டும் தமிழகமும் கர்நாடகாவும் மஹாராஷ்டிரமும் தரவேண்டுமாம்.

twitter.com/poopoonga
இந்த ‘வேலியே பயிரை மேயலாமா’ தலைப்பைக் கொஞ்சம் நிப்பாட்டுங்க! வேலிக்குத் தெரியுமா, அதோட வேலை பயிரைக் காப்பாத்துறதுன்னு! இல்ல, பயிருக்குத்தான் தெரியுமா? ‘பாலியல் வன்கொடுமை’ன்னு நேரா சொல்லிப் பழகுங்க.
twitter.com/shivaas_twitz
இந்த யூடியூப் சமையல் வீடியோஸ்ல என்ன ஒரு சிறப்பம்சம்னா, தேவையான பொருள்கள் சொல்லும்போது, நம்ம வீட்ல எந்தப் பொருள் இல்லையோ அதை கரெக்டா கண்டுபிடிச்சு அது இல்லாட்டியும் பரவால்லன்னு சொல்லுவாங்க.
twitter.com/chithradevi_91
நாலு கோடியே எழுபத்து மூணு லட்சம் ஓட்டுகளாம். என் வயத்தெரிச்சல கிளப்புறதே இந்த பிக்பாஸ் பய வேலையாப்போச்சு.
- டாக்டர் அன்புமணி ராமதாஸ்

twitter.com/pandi_prakash_
பெட்சீட் எடுத்தா குளிருது; ஃபேன் ஆஃப் பண்ணுனா கொசு கடிக்குது; தலையோட சேர்த்து போத்தி மொபைல் பார்த்தா காலுக்கு பெட்சீட் பத்தமாட்டிது.. இத்தனை பிரச்னைக்கு நடுவுல கருத்து ட்வீட் எப்படிப் போடுறது?
twitter.com/ramesh_twetz
இறங்க வேண்டிய இடம் வரும்போது மட்டும் தூக்கம் வருவதெல்லாம் என்ன டிசைனோ...!
twitter.com/pachaiperumal23
எதெதெல்லாம் இன்னும் தனியாருக்கு விக்கலையோ அதுக்குன்னு ஸ்பெசலா ஒரு அமைச்சரைப் போட்டு சீக்கிரமே வித்துட்டுப்போங்க. இப்படி ஒண்ணொண்ணா எப்ப வித்து முடிக்கிறது?
twitter.com/mohanramko
மீடியா நவ் - பிரேக்கிங் நியூஸ் தீர்ந்து போயிடிச்சி. சீக்கிரம் அடுத்த புயலை அனுப்பி வைங்கப்பா...