Published:Updated:

வலைபாயுதே..!

Samantha: அழகிய மலர் வனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
Samantha: அழகிய மலர் வனம்!

பசிக்கு உடனே சாப்பாடு போட்டால் அது சின்ன ஹோட்டல். பசியைக் கொலப் பசியாக்கி சாப்பாடு போட்டால், அது மிகப்பெரிய ஹோட்டல்.

facebook.com/sowmya.ragavan

எந்தத் திரைப்படத்திலும், கதையிலும் பார்க்கும், படிக்கும் மோசமான கதாபாத்திரங்களையும்விடக் கீழ்மையான மனிதர்கள்தான் நம்மைச் சுற்றி இருப்பவர்கள். அவர்களுடன்தான் வாழ்ந்து வருகிறோம்... தெரிந்தும் தெரியாமலும்.

facebook.com/ramanujam.govindan

இந்தியாவில் கணவன் மனைவிக்கிடையேயான பிரச்னைகளுக்குக் கிடைக்கும் இரண்டு மகத்தான ஆலோசனைகள்...

அ. குழந்தை பிறக்கும் வரை: குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிடும்.

ஆ. குழந்தை பிறந்த பின்: குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துத்தான் போகணும்.

Samantha: அழகிய மலர் வனம்!
Samantha: அழகிய மலர் வனம்!

facebook.com/umamaheshwaran.panneerselvam

நம் ஆட்களால் மிகவும் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்ட சொல் என்று கணக்கெடுத்தால், ‘அறம்' என்ற சொல் நிச்சயம் இருக்கும்.

facebook.com/karthick.ramasamy.77

பள்ளியில் படிக்கும்போது பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளைத் தீர்ப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பேன். அதைப் பத்திரிகைகளுக்கு எழுதி, பரிசு கிடைக்குமா என்றெல்லாம் ஆர்வமாகக் காத்திருப்பேன்.

இன்று குழந்தைகளின் வீட்டுப்பாடமாக crossword இருந்தது. அதற்கு உதவச்சொன்னார்கள். நமக்குத் தமிழ் அளவிற்கு ஆங்கிலம் வராது என்பதால் chatGPT-யில் கேட்டுப் பார்க்கலாம் என்று முயன்றால் அத்தனைக்கும் பதில் கிடைத்தது. எப்படி இதை train பண்ணியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளது.

twitter.com/itz_radhi3

விடுமுறை தினத்தில் வெளிய கிளம்புறவங்க சாதாரண மனுஷங்க. விடுமுறையிலும் வெளிய கிளம்பச் சோம்பேறித்தனப்பட்டு வீட்டுக்குள்ளேயே தூங்குறவங்க என்னை மாதிரி ஜெலண்ட்!

twitter.com/Jokertheinsane

குடும்பத்துக்காகக் காசு செலவு பண்ணிட்டே இருந்தா ஒரு நாள்கூட ‘ஏதுடா காசு, வருமானம் நல்லா வருதா'ன்னு யாருமே கேட்க மாட்டாங்க. ஆனா ஒரு நாள் நாம கடன் பட்டுச் செலவு செய்ய முடியாத நேரம் பார்த்து, ‘சம்பாதிக்கிற காசெல்லாம் என்னதான்டா பண்ணுற'ன்னு யோசிக்காமக் கேட்பாங்க. மிடில் கிளாஸ் ஆண் வாழ்வு ஒரு சாபம்.

Jiiva: நவரச நாயகன்!
Jiiva: நவரச நாயகன்!

twitter.com/mohanramko

‘‘காத்திருப்பதும் ஒரு சுகம்தான்னு சொல்றீங்களே, எங்கே காத்திருந்தீங்க..?''

‘‘கமலாலயம் வாசலில்...''

twitter.com/mohanramko

நியூசிலாந்து: எங்க ஸ்கோரே 108, டபுள் செஞ்சுரி அடிக்க முடியாமக் கதறட்டும் சார்...

twitter.com/Greesedabba2

கூட வந்தவன், சாப்பிடறதுக்கு முன்னாடி கை கழுவப் போனா நம்மளும் போகவேண்டியதாயிருது. இதுக்குத்தான், இந்த hygienic ஆசாமிககூட ஹோட்டலுக்கே போகக்கூடாதுன்றது...

twitter.com/itz_idhayavan

ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா இவர்கள் மூவருக்கும் அ.தி.மு.க கதவுகள் மூடப்பட்டுவிட்டன: மு.அமைச்சர் ஜெயக்குமார்

# அது அநாவசியம், எமர்ஜென்சி கதவைத் திறந்துக்கிறோம். இப்ப அதானே ஃபேஷன்?!

twitter.com/amuduarattai

பசிக்கு உடனே சாப்பாடு போட்டால் அது சின்ன ஹோட்டல். பசியைக் கொலப் பசியாக்கி சாப்பாடு போட்டால், அது மிகப்பெரிய ஹோட்டல்.

twitter.com/Neera_Twitz

தனியே பறக்கும் பறவைக்கு எத்தனை பெரும் வானமோ, அத்தனை பெரும் தனிமை..!

twitter.com/sasitwittz

நல்லா தெரிஞ்சா மட்டும் வழி காட்டுங்க, அட்ரஸா இருந்தாலும், வாழ்க்கையா இருந்தாலும்..!

twitter.com/itzzkarthikv

முன்புபோல எதுவும் இல்லை, எல்லாம் மாறிவிட்டது என்றபோதுதான் புரிந்தது, நான் மாற வேண்டும் என்று..!

twitter.com/Aakashkannan96

காலுடைந்த ஆட்டுக்குட்டி, மேய்ப்பனின் கால்களால் நடந்து போகிறது..!

twitter.com/star_nakshatra

விருந்தாளிகள் வந்து சென்றதில் மீந்திருப்பது நினைவுகளும் பழைய சோறும்தான்!

twitter.com/RahimGazzali

தமிழின் சிறப்பை மற்ற மாநிலங்கள் அறியாதது வருத்தமளிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

# உங்களுக்கே போன வாரம்தான் புரிஞ்சிச்சு!

twitter.com/Greesedabba2

தூங்கிட்டு இருக்கவங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு நாம நினைக்கும்போதுதான், நாம நடந்து போற சத்தம்கூட நமக்கே டைனோசர் நடந்து போற சத்தம் மாதிரி கேட்குது.

twitter.com/Vasanth920

இடம்பெயர்ந்த கடவுள்களுக்கு சாலை விரிவாக்கத்தை விட வேறு என்ன காரணம் இருந்துவிடப்போகிறது?!

twitter.com/amuduarattai

‘மனைவியும் கணவரும் இணைந்தே இருப்பார்கள்' என்பதைத்தான், ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' எனச் சொல்லியிருப்பாங்க போல!

twitter.com/manipmp

கனவு பெரியதாக இருக்கும்போது, ‘லோன்' அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்...

twitter.com/LAKSHMANAN_KL

தெருவில் இறங்கிப் போராடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை: கார்த்தி சிதம்பரம்

# ஏன்... அந்த நேரத்தில் நெட்ப்ளிக்ஸில் ரெண்டு, மூணு படம் பார்க்கலாம்னு சொல்றீங்களா..?!

twitter.com/JamesStanly

‘‘Ex IPS நீங்க... எமர்ஜென்சி கதவைத் திறக்க ஸ்க்ரூ டிரைவர் வேணும்னு சொல்றீங்க...''

‘‘என் பெரியம்மா ஒண்ணு இருக்கு. சூரியன்ல இருந்து ஓம் சவுண்டு வரும்னுலாம் சொல்லியிருக்கு. அதுக்கும் எனக்கும்தான் போட்டியே..!''

Thaman: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!
Thaman: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!

twitter.com/Ramesh_twetz

‘‘என்னடா சனிக்கிழமை, இவ்வளவு வேகமா போயிட்ட?''

‘‘வீக் எண்ட் டேஸ்னா அப்படிதா வேகமா ஓடுவோம். பின்னாடியே எங்க பெரியப்பா (ஞாயித்துக்கிழமை) வருவாரு... அவர் வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது. எனக்கும் அவருக்கும்தான் போட்டியே!''

twitter.com/Anvar_officia

இவனை ஏதாவது செய்யணும்னு நினைக்கிற சொந்தக்காரனுக்கும், இவனுக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிற ஆண்டவனுக்கும் நடக்குற ரிலே ரேஸ்தான் நம்ம வாழ்க்கை!

twitter.com/DrVaathi

எந்த டைரக்டரைக் கேட்டாலும், நலன் எழுதுன ஸ்கிரிப்டு, நலன் அனுப்புன ஆளுங்கங்கறாங்களே தவிர, நலன் படம் எடுக்க மாட்டேங்கிறாரே...

twitter.com/DrNagajothi11

அசீம் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அசீம் போன்ற வாழ்க்கைத்துணையும் நட்பு வட்டமும் சுற்றமும் அமைய வாழ்த்துகள். அதே போல விக்ரமன் ஆதரவாளர்கள் அனைவருக்கும் விக்ரமன் போன்ற வாழ்க்கைத்துணையும் நட்பு வட்டமும் சுற்றமும் அமைய வாழ்த்துகள்.

twitter.com/teakkadai1

கொஞ்ச நாள் முன்பு வரைகூட ‘பெட்ரோல் பங்க்களில் செல்போன் உபயோகிக்கக் கூடாது, தீப்பற்றும் அபாயம் உள்ளது' என்றார்கள். இப்போது பார்த்தால் எல்லா பெட்ரோல் பங்கிலும் பெட்ரோல் போடும் இடத்திலேயே UPI ஸ்கேன் போர்டு/ஸ்டிக்கர் வைத்திருக்கிறார்கள். என்னவோ போடா மாதவா!

facebook.com/arukkutti.periyasamy

துணிவு? ஒரு மியூச்சுவல் பண்டின் முதலீடுகளை செபி விசாரித்துவருவதாகச் செய்தி. இந்த நிதியின் முன்னாள் ஓனர், திவால் ஆகிப்போன தம்பி.

திவால் ஆகி, அரசு வங்கி ஒன்றின் தயவில் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தனியார் வங்கியின் கடன் பத்திரங்களில், தம்பி தலைவராக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது. கடன் பத்திர முதலீட்டில், வங்கி திவால் ஆனால் ஒரு பைசா கிடைக்காது. விரைவில் திவால் என்று தெரிந்தே முதலீடு செய்தார் தம்பி. ஊரான் காசுதானே!

கைம்மாறாக அந்த வங்கி, தம்பியின் இன்னொரு நிறுவனத்திற்கு 12,000 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. அது வாராக் கடனாகி பைசா வசூல் ஆகவில்லை.

இரண்டு திவால்கள் ஒன்றுசேர்ந்து கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்ததில் வங்கிக்கு 2,000 கோடி, தம்பிக்கு 12,000 கோடி லாபம். சாமானிய முதலீட்டாளர்களுக்கு நஷ்டம். இப்பொழுது விசாரித்து என்ன நடவடிக்கை வரப்போகிறது என்று தெரியவில்லை. இந்தத் திருட்டுத்தனங்கள் நடக்கும்போது அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது. அப்போது தடுக்கும் ‘துணிவு' யாருக்கும் இல்லை.

Priyanka Mohan: ஒரு மோகம் கண்ணின் ஓரம்!
Priyanka Mohan: ஒரு மோகம் கண்ணின் ஓரம்!

twitter.com/saravankavi

மனைவி அருகில் இருக்கும்போது போனில் தன் உறவினர்களிடம் பட்டும் படாமல் பேசிவிட்டு, மனைவியின் உறவினர்களுக்கு தேவையில்லை என்றாலும் நீண்ட நேரம் பேசும் கணவனே சிறந்த கணவன்!

twitter.com/Sabarish_twittz

துணிவா வாரிசா, விக்ரமனா அசீமான்னு பேசிக்குறவங்களுக்கு மத்தியில வாழ்வா சாவான்னு நம்ம வாழ்க்கை போயிட்டு இருக்கு...

facebook.com/vinayaga.murugan.7

2கே கிட்ஸ்களின் தன்னம்பிக்கையின் உச்சம் ஆச்சர்யமாக இருக்கிறது. நேற்று ஒரு நேர்முகத்தேர்வு. ஒருவரிடம் Terraform-ன்னா என்னவென்று கேட்டபோது A form which is handling Terra data என்று பதில் சொன்னதைக் கேட்டுத் திகைத்துவிட்டேன்.

தனக்கு ஒரு விஷயம் தெரியாவிட்டால் 90'ஸ் கிட்ஸ் Sorry, I have no idea-ன்னு நேர்மையாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் இப்போது கல்லூரி முடித்து வருபவர்கள் எதைக் கேட்டாலும் அதைப் பற்றி ஏதாவது ஒரு விளக்கம் கொடுத்துவிடுகிறார்கள். சொல்லப்போனால் அதுதான் உண்மையான பதிலா என்றுகூட ஒரு நிமிடம் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறார்கள். எதையும் தெரியாது என்று யாரும் சொல்வதில்லை.

இதுகூடப் பரவாயில்லை. ஒரு இளைஞரிடம் இந்த வேலைக்குச் சேர்ந்தபின்பு அடுத்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு உன்னுடைய Vison & Goal என்னவென்று கேட்டால், வேலையை ராஜினாமா செஞ்சுட்டு ஒரு Youtube சேனல் ஆரம்பிக்கணும் என்று பதில் சொன்னார். இவனுங்களை வேலைக்கு எடுக்காட்டி நம்மை பூமர் அங்கிள் என்று சொல்லிடுவானுங்களோ என்று குற்றவுணர்ச்சி வருமளவுக்குப் போய்விடுகிறது. வேற வழி? வேலைக்கு எடுத்தோம்.