
எல்லாரும் லவ்வர்ஸ் டேக்குத் தயாராகிட்டு இருக்கும்போது இந்த மாசம் 28 நாள் வேலை பார்த்தா போதும், சீக்கிரம் சம்பளம் வந்திரும்னு நினைக்குறான் பாரு... அவன்தான்யா மனுஷன்!
twitter.com/itz_idhayavan
அ.தி.மு.க ஒரு பொம்மைக் கட்சி. பா.ஜ.க ஆதரிக்கும் எந்தக் கட்சியும் வெற்றிபெறாது: கார்த்தி சிதம்பரம்
# நெட்ப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் முடிஞ்சிருச்சோ?!
twitter.com/sasitwittz
எதையும் எதிர்பார்க்காத மனசு, எல்லாத்தையும் இழந்த பிறகுதான் எதையாவது தேடிட்டு நிக்கும்!
twitter.com/saravankavi
எஸ்.எம்.எஸ் அலர்ட் சார்ஜ் 40 ரூபா. வச்சிருந்த மினிமம் பேலன்ஸ் 5,000-ல இருந்து அதை எடுத்துக்கிட்டோம். பேலன்ஸ் ரூ.4,960. இப்போ நீங்க மினிமம் பேலன்ஸ் 5,000 ரூபா மெயின்டெயின் பண்ணலை. அதனால மாசம் 500 ரூபா ஃபைன், 10 மாசத்துல அந்த 5,000 காலியாகிடும்.
twitter.com/amuduarattai
சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்த ராஜஸ்தான் முதல்வர்.
# பழசை மறக்கக் கூடாது பாரு ராஜா... அதனால்தான்!
twitter.com/ItsElonmuskk
முன்னாடி ‘கனவு வீடு'ன்னு பிளான் போட்டிருந்தியா, இனிமே ‘வீடு வாங்குறதே கனவு'ன்னு மாத்திக்கோ...

twitter.com/Kozhiyaar
ICU-வுக்கு வெளியில் காத்திருக்கும் உறவினரின் பதைபதைப்புக்கு சற்றும் குறைவில்லாத உணர்வு, சார்ஜ் தீரப் போகும் கைப்பேசியை இயக்கும்போதும் ஏற்படுகிறது!
twitter.com/drkrvcvijay
நாம சந்தோஷமா போட்டிருக்குற துணி, செருப்பெல்லாம் கடையில பலர் பார்த்து, பிடிக்கலைன்னு நிராகரிச்சதுதான். இங்க உன்னுடைய ஒப்பீனியனோ என்னுடைய ஒப்பீனியனோ பெஸ்ட்னு இல்ல... பிடிச்சத வச்சிருப்பதுதான் சந்தோஷம். அதான் நமக்கு பெஸ்ட்!
twitter.com/kumarfaculty
இடைத்தேர்தல் என்பது வாக்காளர்களுக்கு ‘கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா?' என்று கேட்பது மாதிரிதான்!
twitter.com/rajeshkmoorthy
வருமானம் வேணும்னு GSTயை ஏத்துறாங்க. Input costs கூடிப்போச்சுன்னு விலையை ஏத்துறாங்க. என்ன விலை ஏறினாலும் வாங்கியே ஆகணும்ங்கிற நிலைமைக்கு மிடில் கிளாஸ் மக்கள் தள்ளப்படுறாங்க. விலைவாசி ஏறினா பணவீக்கம் ஏறிடும்.
பணவீக்கம் ஏறுதுன்னு வட்டியை ஏத்துறாங்க. வட்டி ஏறிட்டா, எல்லா வங்கிகளும் கடன் வட்டியை உடனே ஏத்துறாங்க. கடன் வட்டி ஏறிட்டா EMI ஏறிடுது. EMI ஏறுற அளவுக்கு மிடில் கிளாஸுக்கு சம்பளம் ஏற மாட்டேங்குது. சம்பளம் பத்தலைன்னு மேலும் கடன் வாங்க நேரிடுது. வர்ற சம்பளத்தை வங்கிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் கட்டிட்டு, சேமிக்க/முதலீடு செய்ய காசில்லாமத் தவிக்கிறாங்க.
வங்கிகளின் வருமானமும், கார்ப்பரேட் வருமானமும் ஏறிக்கிட்டே போகுது. ‘ஹையா ஜாலி, லாபம் சம்பாதிச்சிட்டோம்'னு கார்ப்பரேட் உலகம் கும்மாளம் போடுது. GST வருவாய் அதிகமாகிக்கிட்டே போகுதுன்னு அரசு குத்தாட்டம் போடுது.
வாழவும் முடியாம, சாகவும் முடியாம மிடில்லேயே இருப்பதாலும், கார்ப்பரேட் கிட்டேர்ந்து அரசுக்குப் பணம் போகும்போது middle-ல நம்மகிட்ட காசு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறதாலும்தான் நமக்கு ‘Middle Class'ன்னு பேர் வந்துச்சுன்னு பல பேருக்கு அப்போதான் புரியுது.
எல்லாரும் குத்தாட்டம் போட, நடுவுல இருக்குற சம்பளம் வாங்கும் மக்கள் மட்டும் அடுத்த வேளை கஞ்சிக்கு அலையும் துர்பாக்கியம் நம் நாட்டில்தான் நடக்கும். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.
twitter.com/manipmp
ஓ.டி.டி-யில் வெளியானது ஹன்சிகா திருமண வீடியோ!
# தம்பி, இன்னும் அந்த நயன்தாரா திருமண வீடியோ ஓ.டி.டி-யில் வரல!
twitter.com/JamesStanly
Repo rate 6.5% ஆகிருச்சி... இதனால லோன் வட்டி எல்லாம் கூடும்.. என்னங்க ஜீ இது..?
# அது இருக்கட்டும்... நேரு குடும்பத்துல ஏன் யாரும் நேரு பேர் வைக்கல? இதுக்கு பதில் சொல்லு!

twitter.com/Thaadikkaran
எல்லாரும் லவ்வர்ஸ் டேக்குத் தயாராகிட்டு இருக்கும்போது இந்த மாசம் 28 நாள் வேலை பார்த்தா போதும், சீக்கிரம் சம்பளம் வந்திரும்னு நினைக்குறான் பாரு... அவன்தான்யா மனுஷன்!
twitter.com/prabhu65290
பறந்து போன கொக்கின் மேல் கோபம் கொள்ள எதுவும் இல்லையென வற்றிப்போன குளங்கள் நன்கு அறியும்!
twitter.com/Sabarish_twittz
நான் ரோபோ இல்லையே... பில்கேட்ஸுக்கு 67 வயதில் மலர்ந்த காதல்: செய்தி
90's கிட்ஸ்: நமக்கு இன்னும் வயசு இருக்கு...
twitter.com/Raajavijeyan
‘‘பணத்தால நிம்மதியை வாங்க முடியாதுண்ணே…''
‘‘நிம்மதி இல்லாமப்போனதே, செலவுக்கு 1,000 ரூபா கூட இல்லாமப் போனதுனாலதான்டா...
twitter.com/Kirachand4
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலே வந்துவிட்டது... இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தைச் சொல்லுங்கள்: எடப்பாடி பழனிசாமி
# அதான் சொல்லிட்டோம்ல... ரகசியம்னு!
twitter.com/Greesedabba2
Interviewer: Tell me about yourself.
Me: அப்ப நீ என்னோட resume-ஐப் படிக்கல... அப்படித்தானே?
twitter.com/Kannan_Twitz
யாராவது ‘சாப்டியா'ன்னு கேட்டாத்தான் சாப்பிட்டோமா இல்லையா என்பதே நினைவுக்கு வருகிறது. ‘சாப்பிட்டாயா' எனக் கேட்பதற்கேனும் யாரேனும் இருந்தால் தேவலாம்ல...
twitter.com/Suyanalavaathi
எல்லா நேரமும் தடைகளை உடைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாற்றுப் பாதையிலும் செல்லலாம்!

twitter.com/balebalu
பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாழ்க்கை மாறுகிறதோ இல்லையோ, ‘பாஸ்வேர்டு' மாற ஆரம்பித்துவிடுகிறது!
twitter.com/senthilswamy6
புதிய இந்தியா எப்படி இருக்கும்?
Gpay-க்கு ஜி.எஸ்.டி போட்டு இருக்கும்!
twitter.com/narsimp
வீரம்னா என்னான்னு தெரியுமா?
திடீர்னு அடிக்கிற குக்கர் விசிலுக்கு பயப்படாம நிக்கிறது!
twitter.com/SeSenthilkumar
பறவைக்குச் சிறகு முளைக்கும்போது வனத்திற்குக் கால் முளைக்கிறது...
twitter. com/LAKSHMANAN_KL
ஈரோடு கிழக்கில் ‘குபேர மூலை'யில் அ.தி.மு.க பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது: செங்கோட்டையன்
# அப்ப இடைத்தேர்தல் முடியற வரை, தொகுதி மக்களுக்குச் செல்வம் கொழிக்கப்போகுதுன்னு சொல்லுங்க!
twitter.com/SHIJA25
இ.பி.எஸ் அறிவித்த வேட்பாளருக்குப் பிரசாரம் இல்லை, இரட்டை இலைக்கு வாக்களிக்கப் பிரசாரம் செய்வோம்: ஓ.பி.எஸ் அணி
# ஸ்ஸப்பா... இதுக்கு பருத்தி மூட்டை பண்ணை வீட்டுலயே இருந்திருக்கலாம்!
twitter.com/RahimGazzali
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் முதலில் அலர்ட்டாக வேண்டியது இலங்கை அரசோ, இந்திய அரசோ அல்ல... சீமான்தான்.
facebook.com/sowmya.ragavan
உணர்வுபூர்வமானவர்கள் தங்கள் அறிவிடம்தான் பெரும்பாலும் தோற்றுப்போகின்றனர்.
facebook.com/மீனாட்சி
இதுக்கு முன்னாடியெல்லாம் வாஷிங்மெஷின்ல துவைக்கிற துணியோட ஹெட் போனைப் போட்டுத் துவைச்சுடுவேன். இப்போ முன்னேறி பிரிட்ஜ்ல வச்சிருக்கேன். ரெண்டு நாளா தேடிட்டிருந்த ஹெட் போன், பிரிட்ஜ்ல இருக்கு!
facebook.com/saravanakarthikeyanc
பழைய விஷயங்களில் இன்றைய அரசியல் சரித்தன்மையைப் போட்டுப் பார்த்துக் குறை சொல்வது ஓர் அசட்டு ஆர்வக்கோளாறுத்தனம். அப்படிச் செய்தால் புத்தனும், இயேசுவும், காந்தியும்கூட தப்பிக்க முடியாது.
facebook.com/elambarithi.k
திடீரென்று நேரில் பார்த்துவிடக்கூடிய தொலைவில் யாரையேனும் சம்பாதித்து வைத்துக்கொள்ளுங்கள்.