
இதுக்கு முன்னாடி இதுமாதிரி நிறைய தடவை விலையைக் கூட்டிருக்கேன். ஆனா இந்த வருஷத்துல இதான் ஃபர்ஸ்ட் டைம்
twitter.com/itz_idhayavan
தேசியத் தலைவர் நட்டாவின் வருகை, தமிழகத்தில் பா.ஜ.க-வை வலுப்படுத்தும்: அண்ணாமலை
# நான் இத்தனை தடவை வந்தும் பெறாத வலுவை இப்ப பெறுமா? சும்மா இருய்யா: மோடி
twitter.com/Anvar_officia
காதல் வாழ்க்கை மாசக் காலண்டர் மாதிரி 30 நாளுமே கலர்ஃபுல்லா இருக்கும். ஆனா, திருமண வாழ்க்கை தினசரி காலண்டர் மாதிரி ஒவ்வொரு நாளும் கறுப்பாகத்தான் இருக்கும்!
twitter.com/Kannan_Twitz
ஸ்கூல்ல ஃபெயிலாயிட்டு அப்போதான் வீட்ல அடி மிதி திட்டுலாம் வாங்கிட்டு உட்காந்திருப்போம். அந்நேரம் பாத்து எதிர் வீட்டு பையன் ஸ்வீட்டோட வருவான், ’ஆன்ட்டி பாஸாயிட்டேன்’னு! அதேபோலத்தான் இப்போ இந்த 2k கிட்ஸானுங்க கல்யாணப் பத்திரிகைய தூக்கிட்டு வரானுங்க!

twitter.com/Ratchasi_twitzs
எனக்குப் பிடித்தமானவர்கள், அவர்களுக்குப் பிடித்தமானவர்களோடு இருக்கிறார்கள்!
twitter.com/sasitwittz
குஷ்பு இட்லிக்கு மட்டும் ஃபேமஸ் இல்ல; இனி ஷாம்புக்கும் ஃபேமஸ்தான்...!
twitter.com/gurunaatha
என்னைப் பற்றி நான் பெருமையாகச் சொல்லிக் கொள்வதில்லை என்பதே ஒரு பெருமைதான்!
twitter.com/balebalu
டாக்டர்களின் மோசமான கையெழுத்தை இனி படித்துக் காட்டிவிடும் - கூகுளின் சோதனை முயற்சி
சாதாரண தலைவலிக்கு நிவாரணம் தேடினாலே சி.டி ஸ்கேன் வரை கூகிள்ல காட்டும். இப்போ என்னவெல்லாம் காட்டப்போகுதோ?!
twitter.com/oorkkavalaan
எல்லாப் பிரச்னையும் முடிஞ்சதுக்கு அப்புறம் ஹீரோ ஹீரோயினுக்குக் கல்யாணம் நடந்தா அது சினிமா. ஹீரோ ஹீரோயினுக்குக் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லா பிரச்னையும் நடந்தா அது சீரியல்...
twitter.com/Sabarish_twittz
இருதரப்பு நியாயத்தையும் கேட்டுட்டு மூணாவதா ஒரு ஆள் அவர் தரப்பு நியாயத்தைச் சொல்றதுதான் ‘பஞ்சாயத்து.'
twitter.com/Greesedabba2
‘‘அதானியின் வளர்ச்சிக்கு பிரதமர் காரணமில்லை...''
‘‘யார் சொன்னா..?''
‘‘யாரும் சொல்ல மாட்டாங்க, அதான் அதானியே சொன்னார்...''
twitter.com/drloguortho1
தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் எளிய வழி: இந்த டி.வி சீரியல்களுக்கு இசை அமைப்பவனின் நிலையைச் சற்றே எண்ணிப் பார்ப்பது!
twitter.com/RahimGazzali
துணை முதல்வருக்கு நிகராகச் செயல்படுகிறார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் அன்பில் மகேஸ்
# அடுத்து அவரைத் துணை முதல்வராக்கணும்... அதானே?!
twitter.com/Itz_Araviind
சரியாக முடிவு எடுப்பதைவிட, எடுத்த முடிவை சரியாக மாற்றுவதே புத்திசாலித்தனம்!

twitter.com/RavikumarMGR
‘ஜெய ஜெய ஜெய ஹே’ படத்துல கவனிக்க வேண்டிய விஷயம்... புருஷன் - பொண்டாட்டிக்குள்ள பிரச்னை வந்தா அதை டைவர்ஸ் வரைக்கும் கொண்டு போறது சொந்தக்காரங்கதான்... பீ கேர்ஃபுல்!
facebook.com/ramanujam.govindan
‘‘ஏதாவது ஒரு விஷயத்தையாவது உருப்படியா செஞ்சிருக்கீங்களா? இப்படிப் பொறுப்பே இல்லாம இருக்கீங்களே?’’
‘‘மேடம்! உங்க வீட்டுக்காரர் நாலு வரிசை தள்ளிப் போய் உட்கார்ந்துட்டார்! கண்ல சொட்டு மருந்து விட்டுட்டு கண்ணை மூடிட்டிருக்கறதால உங்களுக்குத் தெரியல!’’
‘‘ஓ... சாரி சார்!’’
‘‘இட்ஸ் ஓகே! ஒரு நிமிடம் நானும் என் ஒய்ஃப்தான் பேசறாங்களோன்னு நெனைச்சிட்டேன்!’’
# கண் மருத்துவமனைப் பரிதாபங்கள்
twitter.com/itsElonmuskk
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு: செய்தி
# ஜீ: இதுக்கு முன்னாடி இதுமாதிரி நிறைய தடவை விலையைக் கூட்டிருக்கேன். ஆனா இந்த வருஷத்துல இதான் ஃபர்ஸ்ட் டைம்.
twitter.com/manipmp
இந்த வருஷம் கல்யாணம் ஆகணும்னு நினைப்பது வேண்டுதல். இந்த வருஷமாச்சும் கல்யாணம் ஆகணும்னு நினைப்பது வலி!
witter.com/saravankavi
முகக்கவசம் அணியுங்கள், கைகளை அவ்வப்போது கழுவுங்கள்: பிரதமர் மோடி
# மணியை எப்போ ஆட்டணும், விளக்கை எப்போ ஏத்தணும்னு சொல்லவே இல்லையே?
twitter.com/kirachand4
ராகுல் நேருவின் கொள்ளுப் பேரன், நான் காந்தியின் கொள்ளுப் பேரன்: கமல்
# என்னப்பா இது... சீமானுக்கு வந்த சோதனை?!
twitter.com/kumarfaculty
ஒரு கண்ணுக்கு வெண்ணெயும், மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்தவருக்கு பார்வைக் குறைபாடு இருந்திருக்கலாம்!