சினிமா
Published:Updated:

வலைபாயுதே

காஜல் அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
காஜல் அகர்வால்

ஒவ்வொரு முறையும் சென்னைல அடமழ பெய்யும்போதும் வருவாங்களே, தமிழ்நாட்டுக்கு ரெண்டு தலைநகரம் வேணும்னு!

twitter.com/niranjan2428

கட்டாயம் குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது மறைமுகமாக 90 கலோரிகளை எரிக்க உதவும், எதுவும் செய்யாமலேயே! அரசுகள் வரியை உயர்த்தும்போது தயங்குகின்றனவா என்ன? அப்படித் தயக்கமில்லாமல் தண்ணீரைக் குடியுங்கள்!

twitter.com/ratweetzz

அத்தனைக்குப் பிறகும் சிலர்மீதான பிரியங்கள் குறைவதேயில்லை.

twitter.com/ImAvudaiappan

யோசித்துப் பார்த்தால், மனிதனுக்குக் கவலைப்படுவதற்கு ஏதாவது ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது. அல்லது ஏதாவது ஒன்று இருக்காதா என நாமே தேடி யோசித்துக்கொண்டே இருக்கிறோம்!

twitter.com/arattaigirl

என் யூடியூப் டவுன்லோடுகள் முறையே...

வீடியோ 1: தினம் 20 நிமிட வொர்க்கவுட். உங்க வயிறு இருந்த இடம் தெரியாது

வீ 2: இந்தக் குழம்பு ட்ரை பண்ணுங்க. ஒரு தட்டுச் சோறு தின்னாலும் பத்தாது

வீ 3: சட்டுனு தயாராகும் சட்டினி. ரெண்டு இட்லி அதிகமாவே சாப்பிடுவீங்க.

வலைபாயுதே

twitter.com/ramesh_twetz

சாப்பிட்டு கை கழுவுறவன் மனுஷன்... சாப்பிட்ட தட்டையும் சேர்த்துக் கழுவுறவன் பெரிய மனுஷன்!

twitter.com/Raajavijeyan

எல்லா ஊர்லயும் இருக்குற புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பெயர்களை மாத்தி இப்படி வைக்கலாம்... பழைய பஸ் ஸ்டாண்ட், ரொம்ப பழைய பஸ் ஸ்டாண்ட்.

twitter.com/Greesedabba2

ஹோட்டல்ல மாஸ்க்கைக் கழட்டி டிஷ்யூ பேப்பர் மேல வச்சான். சாப்ட்டு முடிஞ்சதும், டிஷ்யூ பேப்பரை எடுத்து வாயைத் துடைச்சான், மாஸ்க்கை எடுத்து மாட்டிட்டு கிளம்பிட்டான். அன்னபூரணி தாயே... இந்த மாக்கானுகளை நீதான் காப்பாத்தணும்!

facebook.com/revathy.ravikanth?

மகன்: எப்ப உங்க வீட்டுக்குப் போவீங்க?!

ஆத்துக்கார டூட்: டேய், ஹாஹா... அப்பிடிலாம் சொல்லக் கூடாது...

மகன்: இல்ல... போனா நல்லாருக்கும்.

கெஸ்ட்: !!!

facebook.com/சந்தோஷ் மாதேவன்

‘‘அவங்க வந்தாங்களா?’’

‘‘யாரு சார்?’’

‘‘ஒவ்வொரு முறையும் சென்னைல அடமழ பெய்யும்போதும் வருவாங்களே, தமிழ்நாட்டுக்கு ரெண்டு தலைநகரம் வேணும்னு! ‘இங்கதான் நிறைய MNC இருக்குன்’னு சொல்ற சில்லென்ற கோவைக்காரங்க, ‘இங்க இருந்து தமிழ்நாட்டோட எல்லா மூலைக்கும் 8 மணி நேரத்துக்குள்ள போய்டலாம்’னு சொல்ற நடுசென்டர் திருச்சிக்காரங்க, ‘ஏற்கெனவே ஒரு ஹைகோர்ட் இருக்கு, ஒரு தலைமைச் செயலகம் மட்டும்தான் கட்டணும்’னு சொல்ற almost நடுசென்டர் மதுரக்காரய்ங்க. அவங்கதான்!”

வலைபாயுதே

facebook.com/vaa.manikandan/

ஹிப்ஹாப் ஆதியின் ஹேர் ஸ்டைல், சித் ஸ்ரீராமின் பாட்டு மாதிரியான விஷயங்களைப் பார்த்து எப்பொழுது புலம்ப ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுது நாம் மூத்த தலைமுறை என்ற இடத்துக்கு நகர்ந்துவிட்டோம் என்று அர்த்தம். நம்பவில்லையென்றாலும் அதுதான் நிஜம். கலை சார்ந்த விஷயங்களில் நமக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று வேண்டுமானால் பகுத்துப் பார்க்கலாம். ஆனால் எதையும் நிறுத்த முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் தொண்ணூறுகளில் புகழடையத் தொடங்கியபோது ‘என்ன காட்டுக் கூச்சலா இருக்குது’ என்று முந்தைய தலைமுறையினர் புலம்பத் தொடங்கியிருந்தார்கள். இத்தகைய கலகக்காரர்கள்தான் அடுத்த தலைமுறையின் ஐகானாக மாறுவார்கள். நமக்கு எரிச்சலாக இருந்தால் காது ஓரத்தில் முடி நரைக்கிறதா என்றோ, உச்சந்தலையில் கிரிக்கெட் கிரவுண்ட் உருவாகிக்கொண்டிருக்கிறதா என்றோ கண்ணாடியில் பார்க்கத் தொடங்க வேண்டும்.

facebook.com/shankaruppusamy

சித் ஸ்ரீராம் பாடியதை ரசிக்க முடியாதவர்கள் வயதானவர்கள், டிரெண்டிங்கில் இல்லாதவர்கள் என்று கிளம்பிவிட்டார்கள். அவர் பாடியதே மார்கழி மாத கர்நாடக சங்கீதக் கச்சேரியில்தான்.

facebook.com/Karthik Balasubramanian

நெட்ஃப்ளிக்ஸில் நானும் வியனும் சேர்ந்து ‘Night on Earth’ டாக்குமெண்ட்ரி பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கங்கே நிறுத்தி நிறுத்தி கேள்வி கேட்பான். தெரிந்தால் சொல்வேன். இல்லையெனில் இரண்டு பேரும் சேர்ந்து கூகுளிடம் கேட்போம்.

பாலைவனத்திலிருக்கும் வெண் சிலந்திகள் இரண்டைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அவன் அடுத்து என்ன கேட்பான் என யூகித்து, ‘டேய் வியன்... பாரு, ரெண்டும் பயங்கரமா சண்டை போட்டுக்குதுங்க’ என்றேன். ‘யப்பா... அது சண்டையில்ல, மேட்டிங்’ என்றான்.

twitter.com/sultan_Twitz

‘‘யார்ரா நீ, நியூ இயர் விஷ் அனுப்பிட்டு இருக்க..?’’

‘‘பதறாத... நானும் உன் கான்டக்ட் லிஸ்ட்லதான் இருக்கேன். ஏதாவது பெஸ்டிவல் வர்றப்ப மட்டும் வந்து விஷ் பண்ணிட்டுப் போவேன்.’’

twitter.com/itz_idhayavan

இரண்டே முக்கிய மாநிலத் தேர்தல்தான். 55வது நாளா அசையலயே பெட்ரோல், டீசல் விலை...

வலைபாயுதே

twitter.com/HariprabuGuru

ரேஸ்லகூட முந்திப் போக விட்டுருவாங்க போலிருக்கு... ஆனா பெட்ரோல் பங்க்ல ஒரு இன்ச் முன்ன போனாக் கூட, முன்னாடி நிக்குறவரு அண்டை நாட்டு ராணுவ எல்லையைத் தாண்டுன ரேஞ்சுக்கு முறைக்குறாரு.

twitter.com/i_akaran

எப்படிப் பழக வேண்டும் என்பதைவிட, எந்த அளவுக்குப் பழக வேண்டும் என்பதுதான் உறவுகளில் முக்கியமானது!

twitter.com/writermugil

சென்னையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. தக்காளி விலையேற்றத்துக்கு மீம் போட்டு சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்கச் செய்தவர்கள், மற்றதைக் கண்டுகொள்ளாதது ஏன்? ஏ சமூகமே! தக்காளிக்கு வந்தால் மட்டும் ரத்தம், மற்ற காய்கறிகளுக்கு என்றால் தக்காளிச்சட்னியா?

twitter.com/teakkadai1

பல பிரச்னைகளில் இருந்து என்னைக் காத்தது எது என யோசித்தால், ‘தைரியமின்மை’ என்பதுதான் பதிலாக இருக்கிறது.

twitter.com/thenmozhi_ms

ரவாவுல உப்பு சேர்த்தா உப்புமா, சர்க்கரை சேர்த்தா கேசரி. அதனாலதான் உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையான்னு பாடுனாங்களோ.

twitter.com/sathisshzdoc

‘‘எப்படித்தான் இந்தப் புதுப்புது சாமியாரலாம் நம்புறாங்களோ…’’

‘‘கொரோனாவுக்கு மாடில நின்னு விளக்கு புடிச்சவன் தான நீ?”

twitter.com/tparaval

காபில சீனி கம்மியா போடச் சொன்னா, ‘சுகர் இருக்கா’ன்னு கேக்காதீங்கடா... உண்மையான காபி லவ்வர் அப்டித்தான் குடிப்பான். எங்க போனாலும் பாயசம் மாதிரி போட்டுக் குடுத்துடுறாய்ங்க.

twitter.com/Suyanalavaathi

மக்களுடைய மறதிதான் தி.மு.க-வின் மூலதனம் - டிடிவி தினகரன்

# சார், அந்தப் பக்கம் போகாதீங்க. ரெண்டு பேர் டோக்கன் வச்சுக்கிட்டு நிக்குறாங்க...

வலைபாயுதே

twitter.com/prabhu65290

‘‘புது வருஷம் அமோகமா இருக்குன்னு சொல்லிட்டார்...’’

‘‘யாரு, போன வருஷம் அமோகமா இருக்கும்னு சொன்ன ஜோசியர்தானே?!’’

twitter.com/manipmp

கோபம் வர்ற மாதிரி பேசிட்டு, ‘மனசில பட்டதைக் கேட்டேன்’னு சொல்வது எவ்வளவு பெரிய எஸ்கேப்பிசம்!

twitter.com/FareethS

‘‘பெட்ரோல், டீசல் விலை ஏறுனதனால ஜனங்க நடந்து போக ஆரம்பிச்சிட்டாங்க மேடம்...’’

‘‘அப்படியா? அப்ப செருப்புக்கு GST 5%லிருந்து 12%ஆக உயர்வு.”

facebook.com/revathy.ravikanth?__cft__

“என்ன தலைப்பு என்று யாராலும் யூகிக்க முடியாத தலைப்பு!”

அப்பிடி என்ன தலைப்பு?!

அதான் சொன்னேனே... ‘‘என்ன தலைப்பு என்று யாராலும் யூகிக்க முடியாத தலைப்பு!”

twitter.com/mohanramko

புது வருஷத்துல ஜிம்முக்குப் போவணும்னு ரிசல்யூஷன் எடுக்கற மாதிரிதான், தேர்தலில் தனித்து நின்று ஜெயிக்கப் போறோம்னு சொல்றதும்...

twitter.com/Sandy_Offfl

சார், நீங்க டெய்லி 120 ரூபாய்க்கு மீல்ஸ் சாப்பிடுறீங்க. அதுக்குப் பதிலா 20 ரூபாய்க்கு டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு, 100 ரூபாயை SIP முறையில் மியூச்சுவல் ஃபண்டில் போட்டால் 30 வருஷம் கழிச்சு உங்களுக்கு 30 லட்சம் கிடைக்கும்.

# முதலீட்டு ஆலோசனைப் பரிதாபங்கள்.

twitter.com/sultan_Twitz

ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் ஒத்திவைப்பு: செய்தி

ஜியை ஊர் சுத்த விடாமத் தடுக்குறதே இந்த கொரோனாவுக்குப் பொழப்பாப்போச்சு?!

facebook.com/kundhaani/

சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைப்பு...

# எனக்கென்னவோ இது கொரோனாவ கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை மாதிரி தெரில... இந்த இலக்கியவாதிகள கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை மாதிரி தெரியுது!

twitter.com/Suyanalavaathi

பனிக்காலம் ஆரம்பிச்சிருச்சு, நைட் பைக்ல போனா பனி அடிக்குது. இந்த மாஸ்க்க கொஞ்சம் எக்ஸ்ட்டெண்ட் பண்ணி அப்பிடியே காதையும் மறைக்கிற மாறி செஞ்சா, டூ இன் ஒன் யூஸ் ஆகும்! ஐடியா இல்லாத பசங்க...

twitter.com/Anvar_officia

சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது மனைவி, ‘குழம்பு எப்படி இருக்கு’ன்னு கேட்டு, குழம்பு நல்லாருக்குன்னு சொன்னா சிலநேரம் பக்கத்து வீட்டுக் குழம்பா இருக்கும். ‘நல்லா இல்லை’ன்னு சொன்னா மனைவி வச்சதா இருக்கும். சம்பாதிச்சுக்கொடுத்தும் ஒருவேளை சாப்பாட்டைக்கூடப் பதற்றமில்லாம சாப்பிட முடியல.

twitter.com/amuduarattai

கொரோனாத் தொற்றுக் காலத்தில், முதலில் மூட வேண்டிய டாஸ்மாக்கைக் கடைசியாக மூடுவதும், கடைசியாக மூட வேண்டிய கல்விச் சாலைகளை முதலில் மூடுவதும் ஒரு வகை சாபமே.