
உயரமான பெண் என்றால், காலில் என்ன செருப்பு அணிந்திருக்கிறாள் என்று பார்க்க வேண்டும் இவர்களுக்கு... பெண் இத்தனை உயரம்தான் இருக்க வேண்டும் என்று அளவு இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
twitter.com/kumarfaculty
தற்போது தே.மு.தி.க எந்தக் கூட்டணியிலும் இல்லை - பிரேமலதா
# அடுத்து ‘எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது’தானே?
twitter.com/mohanramko
குழந்தைக்கு வைத்த பெயரை மாற்றவே நோட்டரிகிட்ட கையெழுத்து வாங்கி, 2 கெஸட்டட் ஆபீசர் கையெழுத்து போட்டு, நியூஸ் பேப்பர்ல வெளியிட்டு, கெஸட்ல வரணும்... மாநிலத்தோட பெயரை அப்படியே மாத்திக்கலாம்னு சொல்றீங்களே, யாரு சார் நீங்கல்லாம்?



facebook.com/gokul.prasad.7370
“Just imagine. ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினால் எப்படியிருக்கும்? ஆஸ்கரே தீப்பிடிக்கும்” எனக் கோங்குரா சட்னியை இப்போதே பப்பு புவாவுடன் பிசையத் தொடங்கிவிட்டனர்.
இது பரவாயில்லை. ஏதோ போதாத காலம், சனிப்பெயர்ச்சி காரணமாக ஒருவேளை இவர்கள் ஆடிவிட்டால், அடுத்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இரட்டைக் கதாநாயகிகளுடன் தானும் ஆடவேண்டும் என பாலகிருஷ்ணா அடம்பிடிப்பாரே!
facebook.com/boganR
‘‘நேற்றிரவு முழுவதும் என் மண்டைக்குள்ளிருந்து ஒரு விரும்பத்தகாத சப்தம் வந்துகொண்டிருந்ததா?’’
‘‘குறட்டை விடறே நீ!’’
‘‘ஓகே. ஒரு இலக்கியவாதி இப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது!’’
twitter.com/Suyanalavaathi
செல்போன்ல இருக்குற பழைய போட்டோ, டவுன்லோடு பண்ணி ஒரு வருஷமா பாக்காத படம், யூஸ் பண்ணாத ஆப், இப்படி எல்லாத்தையும் கிளீன் பண்ணுறதுக்குப் பெயர்தான், டிஜிட்டல் போகி!
twitter.com/h_umarfarook
நீங்கள் தற்போது பார்ப்பது பழைய ராகுல் காந்தி அல்ல, அவரை எப்போதோ கொலை செய்துவிட்டேன் - ராகுல்காந்தி
# இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. அப்புறம், ‘பழைய ராகுல்காந்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக புதிய ராகுல் காந்தியைக் கைது செய்கிறோம்’னு சொல்லிடுவாங்க!
twitter.com/IamUzhavan
100 ரூபாய் டிக்கெட்டை எப்போது நாம் 500, 1000 எனக் கொடுத்து வாங்கித் தியேட்டருக்கு ஓடுகிறோமோ, அதுவும் நடுச்சாமத்தில் ஓடுகிறோமோ, அப்போதிருந்துதான் நடிகர்களுக்கு முதலமைச்சர் கனவு வர ஆரம்பிக்கிறது.
twitter.com/kalgikumaru
‘தெலுங்கு சினிமா நட்சத்திரம் பாலகிருஷ்ணா அடித்தால் தாங்கும் கார்’ என்று கார் கம்பெனி விளம்பரம் மிக விரைவில் வந்தாலும் வரும்.

twitter.com/Anvar_officia
சேமிச்சு வைக்கிற பணமும், சேமிச்சு வைக்கிற பொறுமையும், என்னிக்குமே வீண்போவதில்லை!
facebook.com/ramanujam.govindan
20-ம் நூற்றாண்டு பிறப்பதற்கு முன்பு வரை... பிறந்த 1,000 குழந்தைகளில் 150 குழந்தைகள் ஒரு வயதுக்கு முன்பே இறந்துவிடும். 15 வயது எட்டுவதற்குமுன் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இறந்துவிடும். இப்போது 21-ம் நூற்றாண்டில் 1,000 குழந்தைகளில் 5 குழந்தைகள்தான் ஒரு வயதுக்கு முன் இறக்கிறார்கள். 7 பேர்தான் 15 வயதுக்கு முன் இறக்கிறார்கள். இது லண்டனின் புள்ளிவிவரம். நம் ஊரிலும் கிட்டத்தட்ட இதே போல்தான்.
முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனால், அவர்கள் எல்லாருமே படு ஆரோக்கியமாக இருந்தனர் என்று நம்புவது முட்டாள்தனமே. முன்னோர்களில் ஆரோக்கியமானவர்கள் மட்டுமே Survive ஆனார்கள். அவர்களை மட்டும் நாம் பார்க்கும்போது நமக்கு biassed ஆகத் தெரிகிறது.
நிச்சயம் அவர்களது உணவு, உடலுழைப்பு போன்ற வாழ்க்கை முறைகளில் நிறைய நல்லவை இருக்கின்றன. ஆனால் அதீதமாக மிகைப்படுத்த வேண்டாம்.
twitter.com/THANIMAI_TWEET
பழகிய மனிதர்களைவிட பழகாத மனிதர்கள்மீது நம்பிக்கைகொள்ளும் இந்த மனம்தான் எவ்வளவு விசித்திரமானது...
twitter.com/RKaraathu
ரொம்ப நேரமா ஒரு பொருள தேடிக்கிட்டு இருக்கேன்... எதத் தேடுறேன்னு இப்ப மறந்துபோச்சு!
twitter.com/HAJAMYDEENNKS
அதெப்படி திமிங்கலம் விளம்பர இடைவேளையில் வேற படத்தைப் பார்க்கலாம்னு சேனலை மாத்தினால், எல்லா சேனலும் ஒரே நேரத்துல விளம்பரத்தைப் போடுறாங்க!
twitter.com/SankarRayan
துணிவு நல்லா ஓடுதா, இல்ல வாரிசு நல்லா ஓடுதான்னு கேட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவிதான் நல்லா ஓடுறார்னு சொல்லுறாங்க, கெரகம்!
twitter.com/SelviSemmalar
டாக்டர் ஷர்மிகாவை ட்ரோல் பண்ணியாச்சு, தமிழகம் - தமிழ்நாடு என்று உருட்டியாச்சு, கவர்னரை விரட்டியாச்சு, இலக்கியத் திருவிழா, புத்தகக் காட்சி பத்தியெல்லாம் பேசியாச்சு. கொஞ்சம் உங்களுக்கு நேரமிருந்தால் வேங்கை வயல் மக்கள் மலம் கலந்த தண்ணீர் குடித்தது பற்றியும் பேசுங்கள்.
twitter.com/itz_radhi3
Me to Son: நெத்திலி மீன்ல நிறையை புரோட்டீன், வைட்டமின்ஸ் எல்லாம் இருக்கு. உடம்புக்கு ரொம்ப நல்லது... சாப்பிடு... சொல்லிட்டேன்!
He: எல்லாம் இருக்குன்னா அப்பறம் அது ஏன் சின்னதா மெலிஞ்சு கிடக்கு?
twitter.com/Kirachand4
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களைச் சிறந்த போட்டோகிராபர் என்று நினைத்துக்கொள்கிறார்கள்...
twitter.com/chitradevi_91
கொஞ்சமா அழுக்கா இருக்கிற பொருளைச் சுத்தம் செய்ய, அதைவிட ரொம்ப அழுக்கா இருக்குற துணியைத் தேடி அலையறவன்தான் மனுஷன்!
twitter.com/iVenpu
வெள்ளைக்காரனுங்க எல்லாம் சிலாகிச்சி அவார்டு குடுக்குற இந்த ‘நாட்டு நாட்டு’ பாட்டை ஒரு தடவைகூட கேக்காத / பார்க்காத ஆளுங்க என்னை மாதிரி யாரும் இருக்கீங்களா?

twitter.com/manipmp
‘தெரியாமதான் கேட்கிறேன்’ என்பது, தெரிந்துகொண்டே கேட்பதற்கான கொட்டேஷன்.
facebook.com/ramani.murugesh.5
நல்லவேளை... அப்பா சொத்தையெல்லாம் வித்தது போகவும் நிறைய கடனை வைத்திருந்தார். சோம்பேறி என்னை ஓட வைத்தது அதுதான்.
facebook.com/samuthiram.ramar.75
‘‘ஒரு அப்பாவுக்கும் பையனுக்கும் நடுவுல எவ்வளவு பிரச்னை இருந்தாலும் அந்த அப்பாதான் பையனுக்கு முதல் ஹீரோ. நீங்க என் ஹீரோப்பா!’’
எஸ்.ஏ.சி: ஈசிட்?!
twitter.com/manipmp
இயல்பாய் இருப்பதற்குத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது!
twitter.com/amuduarattai
சீர்திருத்தம், மாற்றம், முன்னேற்றம் எனும் பாதையில் 2014 முதல் இந்தியா செல்கிறது - பிரதமர் மோடி
# மாற்றம், முன்னேற்றம் என நீங்கள் சொன்னதுகூட பா.ம.க-விற்குக் கிடைத்த வெற்றின்னு சொல்லப் போறாங்க!
twitter.com/saravankavi
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க ஆதரவு - எடப்பாடி பழனிசாமி
பா.ஜ.க: அப்புறம்... ஒரே நாடு ஒரே கட்சிக்காக அண்ணன் அ.தி.மு.க-வை எடுத்துக்கிட்டேன்!
twitter.com/udaya_mc
‘‘இருக்கும்போது கண்டுக்க மாட்டோம், ரெண்டு நிமிஷம் காணாமப்போயிட்டா மனசு பதறிடும்...’’
‘‘அன்பா மாப்ள?’’
‘‘இல்ல மாமா, வண்டிச் சாவி!’’
twitter.com/manipmp
அநியாயத்துக்கு எதிராக டப்பிங் கொடுக்கும் இடம், இணையம்.
twitter.com/kumarfaculty
‘உடம்பு எப்படி இருக்கு’ என்ற கேள்வி உடல்நலம் இல்லாதவரிடமும், சண்டைக்காரர்களிடமும் கேட்கும்போது வெவ்வேறு அர்த்தமாகிறது!
twitter.com/laksh_kgm
மரியாதை என்பது பிறர் தருவதல்ல. அது, நம் நடத்தையில் இருக்கிறது!
twitter.com/saravankavi
பொய்கள் எல்லோராலுமே சொல்லப்படுகின்றன. அதில் மாட்டிக்கொள்ளாதவர்கள் மட்டுமே உண்மையானவர்களாகவே இருக்க முடிகிறது!
twitter.com/Sabarish_twittz
இப்ப வருகிற திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளெல்லாம் ‘என்னை இன்னும் பைத்தியம்னே நினைச்சிட்டு இருக்கல’ங்கிற மாதிரிதான் தோணுது...
twitter.com/Kozhiyaar
Easy EMI-ன்னு சொல்வாங்க. ஆனா அது வாங்குறது மட்டும்தான் Easy, கட்டுவது கஷ்டம்னு யாரும் சொல்ல மாட்டாங்க!
facebook.com/umanathselvan
‘‘ஹேப்பி பொங்கல் ராம்!’’
‘‘எங்க வீட்ல இட்லிதான். ஹேப்பி இட்லி ஜானு!’’
# ஜானு மைண்ட் வாய்ஸ்: கடைசிவரை நீ சிங்கிள்தான் ராம்!
facebook.com/M.Elangovan
ஒரு பேட்டியில் சீமானிடம் நிருபர்கள், சென்னை மேயர் பிரியா பேசும்போது வார்த்தைகளைத் தவறாக உச்சரிப்பது குறித்தான கேள்வி கேட்டதற்கு “இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? அவங்க சின்னப்பொண்ணு, இப்பதான் வந்திருக்காங்க. பெரிய தலைவர்களே பேசும்போது சொதப்பறாங்க. மேயர் வேலை பாக்கறாங்கல்ல, அதப் பாருங்க. இதையெல்லாம் பெருசுபடுத்தக் கூடாது. இப்ப பாருங்க, பா.ஜ.க தலைவர் நட்டா மதுரைல எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வேலை 90 சதவிகிதம் முடிஞ்சதுன்னு பொய் சொல்றாரு. இருந்த ஒரே செங்கல்லையும் தம்பி உதயநிதி தூக்கிட்டு வந்துட்டாப்ல” என்கிறார்.
இன்னொரு பேட்டியில், “திராவிட இயக்கங்களுக்கும் எங்களுக்கும் உள்ளது பங்காளிச் சண்டை, அதுல பா.ஜ.க-காரன உள்ள விட முடியாது. அவனுக்கென்ன இங்க வேலை” என்கிறார்.
அப்புறம் இன்னும் சில பேட்டிகள்... அவற்றிலுமேகூட ரொம்பவே நிதானமான, பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் கொண்ட நேர்மையான பதில்களையே கொடுக்கிறார். முன்பு போல முஷ்டி மடக்கி வீராவேசமாகப் பேசுவதில்லை.
என்னங்கடா இது, இப்படிக் கனிஞ்சு போற அளவுக்கா அண்ணனுக்கு வயசாயிருச்சு?
facebook.com/PariAyyasami
‘லோனும் வாங்கித் தருகிறோம், வீடும் கட்டித் தருகிறோம்’ என்ற ஸ்லோகனோடு ஒரு விளம்பரத் தட்டி வைத்திருக்கிறார்கள். ‘டியூவும் கட்டிடுவீங்களா?’ன்னு இறங்கி எழுதி வச்சிட்டு வரலாமான்னு கை பரபரக்குது...
facebook.com/primyarayee
உயரமான பெண் என்றால், காலில் என்ன செருப்பு அணிந்திருக்கிறாள் என்று பார்க்க வேண்டும் இவர்களுக்கு... பெண் இத்தனை உயரம்தான் இருக்க வேண்டும் என்று அளவு இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீறி இருந்தால், குதி உயர்த்த யாரோ இருக்கிறார்கள் என்பதுவே அவர்களின் பார்வை. தன்னைவிட வளர்ந்த பெண்ணை முகவாய் உயர்த்திப் பார்க்க ஆணுக்குக் கொஞ்சம் கூச்சம்தான். தினமும் வளர்கிற சில பெண்களைத் தெரியுமெனக்கு. அவர்கள் தம் கண்களை நேர்க்கோட்டில் சந்திக்கிற ஆண்கள் மிகச்சிலரே என்று அங்கலாய்க்கின்றனர். குட்டைப் பெண்ணைக் கொண்டாடுங்கள். வளரும் பெண்ணின் குதிகாலை ஆராயாமல், அவளை அவள் போக்கில் விடுங்கள்!