சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

Taapsee
பிரீமியம் ஸ்டோரி
News
Taapsee

Taapsee : சோறு முக்கியம் பாஸ்!

twitter.com/iammuthalib

காலைல ஆனா டெஸ்ட் மேட்ச் பாக்கறானுக. சாயந்திரம் வரைக்கும் புரோமோவ டிஸ்கஸ் பண்றானுக. ஈவினிங்கானதும் பிக் பாஸ் பாக்கறானுக. வீக்கெண்ட்ல குவிகோல குவியறானுக. ஆனாலும் நல்ல வருமானத்தோட வசதி வாய்ப்புமா ஏப்பியா இருக்கானுக. டோட்டல் இண்டியாலியே நாமளும் நமோஜியும்தான் விடாம உழைக்கறோம் போல.

Sehwag : ஜோடி நம்பர் ஒன்!
Sehwag : ஜோடி நம்பர் ஒன்!

twitter.com/swaravaithee

வாட்ஸ்அப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

- வாட்ஸ்அப் நிறுவனம்!

twitter.com/skpkaruna

பவுலர்கள் பவுலிங் போடுறாங்க. ஃபீல்டிங், ரன் அவுட் த்ரோ, சமயங்களில் பொறுப்பாக பேட்டிங் செய்து அணியைக் காப்பாற்றுகின்றனர். ஆனால், பேட்டிங் தவிர வேறெதுவும் செய்யத் துப்பில்லாத பேட்ஸ்மேன்களுக்கு பெரும் புகழ் சேர்கிறது, திரைப்படங்களில் எல்லோர் உழைப்பையும் ஹீரோ மட்டுமே அனுபவிப்பதைப்போல!

twitter.com/LAKSHMANAN_K

கங்கை நீர் எது, சாக்கடை நீர் எது என்று தமிழக மக்கள்தான் முடிவு செய்வார்கள். - டிடிவி தினகரன்.

‘பன்னீரை’ மறந்துட்டீங்களே பாஸ்..?!

Aari Arjunan : வின்னர் வின்னர்!
Aari Arjunan : வின்னர் வின்னர்!

twitter.com/amuduarattai

‘இங்கே வீட்டுமுறை சமையல்’ என்று எழுதப்பட்ட ஹோட்டல்களுக்கு, திருமணம் ஆகாத ஆண்கள் ஆர்வத்துடனும், திருமணமான ஆண்கள் அச்சத்துடனும் சாப்பிடச் செல்கிறார்கள்.

witter.com/Kozhiyaar

உணவகத்திலும் மாஸ்டருக்குப் பிடித்த சப்ளையருக்கே, முதலில் பரோட்டா கிடைக்கிறது!

twitter.com/manipmp

அவன் ஒரு சொந்த வீடு பற்றிய கனாவில் இருந்தபோது...

‘வாடகை பாக்கி என்னாச்சி’னு கேட்டு வந்தார் ஹவுஸ் ஓனர்.

Sathish : ஒரு கத சொல்லட்டா சார்?
Sathish : ஒரு கத சொல்லட்டா சார்?

twitter.com/anand17m

‘தாலி அடிமைச் சின்னம்’ என்றார்கள். இப்ப என்னடான்னா, ‘புலிக்குத்தி பாண்டியம்மாவின் தாலிச் செயின் எத்தனை பவுன்’ என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

twitter.com/Sindujah_twtz

துரோகம் ‘வாரி’ இறைக்கப்படுகிறது; அன்புதான் ‘பிச்சை’ இடப்படுகிறது.

twitter.com/manipmp

விடியாத இரவென்பது, அலாரம் வைக்காத காலைப்பொழுது!

twitter.com/kumarfaculty

விபத்து நடக்கும் இடத்தில் உண்மையான முதலுதவிப் பெட்டி, மொபைல் போன்தான்...!

twitter.com/pachaiperumal

கட்சி மாறும் அரசியல் தலைவர்களின் ஆகச்சிறந்த பொய், ‘அந்தக் கட்சியின் கொள்கை என்னை வெகுவாகக் கவர்ந்தது.’

twitter.com/manipmp

அம்மாவிடமும் எவர்சில்வர் பாத்திரத்திடமும்தான் கோபத்தை எளிதில் காட்டமுடியும்.

twitter.com/saravankavi

அதிமுக-வில் அண்ணன் - தம்பி பிரச்னைகளைப் பேசித் தீர்க்கலாம். - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அத விடுங்க. சின்னம்மா பிரச்னையைப் பேசித் தீர்க்க முடியுமா, அதைச் சொல்லுங்க!

Taapsee : சோறு முக்கியம் பாஸ்!
Taapsee : சோறு முக்கியம் பாஸ்!

twitter.com/RahimGazzali

நான் தடுப்பூசி எடுத்துக்கொண்டால், முன்களப் பணியாளர் ஒருவருக்கு ஒரு ஊசி குறையும் என்பதால்தான் எடுத்துக்கொள்ளவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்.

‘கூட்டத்துல பச்சைச் சட்டை எஸ்கேப் ஆகுறான்’ மொமன்ட்.

twitter.com/RahimGazzali

வரும் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனிச் சின்னத்தில்தான் போட்டி- சரத்குமார்.

அடிக்கடி இப்படி ஏதாவது ஸ்டேட்மென்ட் விட்டுக்கிட்டே இருங்க நாட்டாம. இல்லாட்டி, நீங்க ஒரு கட்சி நடத்தறதே எங்களுக்கு மறந்துடும்!

twitter.com/HariprabuGuru8

பொங்கலுக்கு மாடு பிடிப்பதைவிட மிகப்பெரிய சாதனை, பொங்கல் முடிந்ததும் ஊரைவிட்டுப் போக பேருந்தில் ஜன்னல் சீட் பிடிப்பதுதான்.

twitter.com/mohanramko

கெட்டி சட்னி எக்ஸ்ட்ரா வேணுமாம்... அதுக்கெல்லாம் எனக்கு போன் பண்றாங்கப்பா...

இவண்: அமித்ஷா பி.ஏ

twitter.com/Kannan_Twitz

வாழ்க்கையில யாரும் யாருக்கும் பாடமெடுக்கத் தேவையில்லை. ஏன்னா, வாழ்க்கையே பெரிய பாடம்தான்!

twitter.com/manipmp

அடுத்து என்ன... Signal appல குரூப் கிரியேட் பண்ணி குட்மார்னிங் சொல்லணும்... அதானே?!

twitter.com/RavikumarMGR

ஏகப்பட்ட படங்களில் இந்த டயலாக்கைப் பேசியிருக்கிறார் ரஜினி. இப்போது பார்க்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை...

‘பயம்மா... எனக்கா... ஹா.. ஹா.. ஹா.. ஹா..’

twitter.com/krishnaskyblue

அரசாங்கம் எதுக்கு ஸ்கூல் நடத்தணும்? எல்லாத்தையும் ப்ரைவேட் கிட்ட குடுத்திடலாமே - ஜக்கி.

~ஆஹா... காட்டுக்குள்ள நாலு ஸ்கூல்ல கட்டிட்டாப்ல போல!

twitter.com/drloguortho1

‘புதுப் படத்தைத் திருட்டுத்தனமா நெட்ல விட்டவன்தானே நீ?!’

‘சார்... ‘கொரோனா தடுப்பாளர்’ன்னு சொல்லுங்க!’

www.facebook.com/raajaa.chandrasekar

ஆறுதலை அள்ளிச்

சாப்பிடாதீர்கள்.

அதில் பசியாற முடியாது.

facebook.com/ramanujam.govindan

வாட்ஸ் அப் புது வெர்ஷன்...

இப்ப என்ன, வாட்ஸ்அப்பில் ‘ஹாய் ஸ்வீட்டி’ன்னு மெசேஜ் பண்ணிட்டு ஃபேஸ்புக் வந்தா ஸ்வீட் ஸ்டால் விளம்பரங்களா வரும், அவ்வளவுதானே?

facebook.com/neander.selvan

தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்க்கும் ஆட்கள், ஏன் தனக்குத் தானே வாசெக்டமி செய்துகொள்ள முன்வருவதில்லை?