
காய்ச்சல் வந்து முக்கொம்பு அணை உடையும்போது அணிலால் மின் தடை ஏற்படாதா... எப்படி சார், இங்க வாங்க..?!
twitter.com/JamesStanly
‘‘எங்களப் பாக்க உமக்குப் பாவமா இல்லயாஜி?’’
‘‘இருந்துச்சி...’’
‘‘எப்ப..?”
‘‘அடுத்த மாசம் பெட்ரோல் லிட்டர் ₹150 ஆவுமே. எப்படிக் கதறுவானுங்களோன்னு.’’
twitter.com/senbalan
ஷேர் மார்க்கெட்டில் அதிக பணம் சம்பாதிக்க எளிதான வழி, ஷேர் மார்க்கெட் பத்திச் சொல்லித் தர்றேன் என வசூல் செய்வது.
twitter.com/PizhaiThiruthiஇப்ப என்ன... மக்கள் இயற்கை எரிவாயுலேருந்து, இயற்கை மர எரிசக்திக்கு மாறணும். அதனாலதான் கேஸ் வெலைய ஏத்தியிருக்கீங்க. அதானே!?
twitter.com/arattaigirlஇறந்துபோனவர்களின் போன் கால்கள் நம்ம மொபைல்ல இருக்கறதுக்கும், மிஸ்டு கால்கள் இருக்கறதுக்கும் வித்தியாசம் உண்டு! பேசின கால்களில் சொல்ல நினைச்சதைச் சொல்லிட்டாங்க. மிஸ்டு கால்களில் சொல்லாமல் விட்ட ஏதோ ஒரு செய்தியின் மர்மம், ஏமாற்றம், இழப்பு அதைப் பாக்கறப்பவெல்லாம் வெளிப்படும்.

twitter.com/RagavanG
ஹுண்டாய்னு(Hyundai) நாம சொல்ற கார் கம்பெனி பேரோட சரியான உச்சரிப்பு ஹ்யொந்தெ. அதோட பொருள், புதுமை (Modern). உச்சரிக்கும் போது ஹ் எழுத்த பாதி மாத்திரை மட்டும் சொன்னாப் போதும்.
twitter.com/kusumbuonlyஓ.டி.டி-ல ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்னு முடிவு செஞ்சப்ப தியேட்டர் சங்கத்தினர் எவ்ளோ பிரச்னை செஞ்சாங்க. காலம் எல்லாத்தையும் ஏறி மிதித்து உடைத்துச் செல்லக்கூடியது.
twitter.com/Parithiistதூரத்துச் சொந்தக்கார அக்கா ஒருத்தங்க வீட்டுக்கு வந்து உக்காந்திருக்காங்க. ‘மாமா வரலையா’ன்னு கேட்டா, ‘அவருக்கு பாசிட்டிவ், அதான்யா நாங்க மட்டும் வந்தோம்’னு சொல்றாங்க...
twitter.com/parattai12எப்பாடுபட்டாவது பணத்தைச் சம்பாதித்துவிடுங்கள். உங்கள் குணம் நீண்ட நாள்களுக்கு உங்களுக்கு நல்லவன் பட்டத்தை வாங்கித்தந்து விடாது.
twitter.com/selvachidambara
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
(திருநெல்வேலிக்காரர் விளக்கம்)
ஏல மொந்தம் பளம் இருக்கும் போது மொந்தங் காயத் திம்பியா? நீ தின்னாலும் திம்பேல… திம்பியா சொல்லு… தின்ன மாட்டேல்ல…அப்பம் ஏம்ல நல்லத பேசாம ஆக்கங்கெட்ட கூவை கணக்கா எல்லாரையும் திட்டிட்டு அலையுத.
facebook.com/barathkumar.neelakantan
ஆயிரம் பிரச்னை இருந்தாலும், நாம இப்போ இருக்குற இடமே பல பேருக்கு இன்னும் கனவா இருக்குன்னும், நமக்கே ஒரு காலத்துல அது பெருங்கனவா இருந்ததுன்னும் உணரணும்.
facebook.com/sowmya.ragavan
திட்டியவர்களை திட்டு வாங்கியவர் சமாதானம் செய்யும் கொடுமைக்குப் பெயர்தான், விட்டுக்கொடுத்து வாழ்தல்!
twitter.com/RajaAnvar_OfficBharat Petroleum பெட்ரோல் பங்க்ல ‘சூப்பர்’ங்கற மாதிரி கை சிம்பள் இருக்கும். அது பெட்ரோலுக்கா... பெட்ரோல் விலைக்கா... இல்ல, ‘எவ்ளோ விலையேத்துனாலும் பெட்ரோல் போடுறீங்களே மக்களே’ என்பதற்கா?
twitter.com/sultan_Twitzஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்க முடியாது: ஓ.பி.எஸ்
உங்கள யாரு ஏத்துக்கச் சொன்னா?
twitter.com/Sivaji_KSவெளிநாட்டு வங்கிகளிலிருந்து இந்தியர்களின் கறுப்புப்பணம் மீட்கப்படும். - 2014
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் நிதி அதிகம் முதலீடு செய்யப்படுகிறது. - 2021
twitter.com/Kettapayan_
திரும்பக் கிடைக்காதுன்னு தெரிஞ்சும், நாம அடுத்தவங்க மேல காட்டுற அன்புதான் சிறந்தது.
twitter.com/Sabarish_twittz
அன்று அத்தியாவசியம், இன்று ஆடம்பரம் - கைக்கடிகாரம்...
twitter.com/FareethS
‘‘எக்ஸ்யூஸ்மி பிரதர், என் வண்டிக்கு ஒரு 30 ரூவாக்கி பெட்ரோல் போடுங்க, ஆயில்லாம் வேணாம் பிரதர்.’’
‘‘30 ரூபாய்க்கு ஆயில் மட்டும்தான் வரும், பெட்ரோல் வராது. பேசாமப் போயிரு...’’
twitter.com/kumarfaculty
‘கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன். காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்.’
# இரண்டையும் பாக்கெட் செய்திருந்தால் எந்தக் காலத்திலும் விற்கலாம்.
twitter.com/star_nakshatra
ஜென் நிலை என்பது யாதெனில்...
துண்டுலயும் சீப்புலயும் கொட்டுற முடிய பாத்தும் கலங்காமல் கடந்து போவதே!
twitter.com/shivaas_twitz
இந்தப் பேய்ப் படங்கள்ல என்ன ஒரு இம்சைன்னா, வீட்ல பேய் இருக்குன்னு தெரிஞ்சும் வீட்டை காலி பண்ணிட்டுப் போக மாட்டானுங்க (வாடகை வீடா இருந்தாலும்).
எல்லோரும் ஒரே ரூம்ல படுத்தும் தூங்க மாட்டானுங்க.
twitter.com/ss_twtz
தின்பண்டம் ஊட்டி விட முயலும் மழலைக்கு அன்னையின் சாயல். வாயை மூடிக்கொண்டு அடம்பிடிக்கும் பொம்மைக்கு மழலையின் சாயல்.

twitter.com/Thaadikkaran
நடிகர் சூர்யாவுக்கு எதிராக பா.ஜ.க தீர்மானம்.
# எதுக்கும் ரவுடி பேபி சூர்யா வீட்டுக்குப் பாதுகாப்பு போடுங்கப்பா, பழைய வரலாறு அப்படி...
facebook.com/gokul.prasad.
உள்ளூர் அரசியல்வாதிகள் அல்லது நெடுங்காலமாகப் பதவியில் இல்லாமல் கட்சியில் ஒண்டிக்கொண்டிருந்தவர்கள் திடீரென மேயராகவோ எம்.எல்.ஏவாகவோ ஆகிவிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவர்கள் செய்கிற முதல் காரியம், தம்மிடம் நீண்ட நாள்களாக டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் சீட்டைக் கிழித்து அனுப்பி வைப்பதுதான். டிரைவர்களுக்குத்தான் அரசியல் வாதிகளின் எல்லா ரகசியங்களும், சொந்தக் கட்சிக்குள்ளோ எதிர்க்கட்சி யினருக்கோ அவர்கள் செய்த அத்தனை உள்ளடி வேலைகளும் அத்துப்படியாகத் தெரியும். அத்தகைய ஆட்களை உடன் வைத்திருப்பது ஆபத்தானது.
அதே மாதிரி, தப்பித்தவறி என்றேனும் ஒருநாள் தமிழக அளவிலோ இந்திய அளவிலோ புகழ்பெற்றுவிடுகிறோம் எனில், நாம் செய்ய வேண்டிய முதல் வேலை முகநூல் கணக்கை நிரந்தரமாக நீக்குவதுதான். இல்லாவிட்டால், பத்து வருடங்களுக்கு முன் நாம் எழுதியதை, பகிர்ந்ததை எல்லாம் தோண்டியெடுத்து மொத்திவிடுவார்கள். கையறு நிலை என்பார்களே... அப்போது நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.
facebook.com/gkarlmax
‘‘என்னங்க... உதயநிதியை ஒருத்தன் சேப்பாக்கம் சேகுவாரான்னு போஸ்டர் அடிச்சிருக்கான்.’’
‘‘உனக்கென்ன எரியுது? எம்ஜியாரை புரட்சித் தலைவர்னு சொன்னப்ப சும்மாருந்த. ஜெயலலிதாவை புரட்சித்தலைவின்னு சொன்னப்ப சும்மாருந்த, இப்ப மட்டும் என்ன?’’
‘‘அது கருணாநிதியை கலைஞர்னு சொன்னதுக்கு சரியாயிடுச்சுங்க. இது புதுசு...’’
‘‘ஓ, நீ அப்படி வர்றியா? எடப்பாடிய சேகுவாரானும், ஓபிஎஸ்ஸ பிடல்னும் சொன்னப்ப நீ எங்க போயிருந்த...’’
‘‘மன்னிச்சிடுங்க, நீங்க சொல்றது சரிதான். இப்ப கணக்கு நேராய்டுச்சு...’’

twitter.com/RajaAnvar_Offic
சூர்யவம்சம் படம் வெளிவந்து 25 வருஷங்கள் ஆகின்றது.
# ‘இட்லி உப்புமா கண்டுபிடிச்சி 25 வருஷங்கள் ஆயிடுச்சி’ன்னு சொல்லு.
twitter.com/parveenyunus
இருப்பது வாடகை வீடோ, சொந்த வீடோ... முதல் தேதி ஆனா ரெண்டு பேருக்குமே திண்டாட்டம்தான். அவனுக்கு வாடகை கொடுக்கணும். இவனுக்கு இ.எம்.ஐ கட்டணும்.
twitter.com/sultan_Twitz
அணில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது - எடப்பாடி பழனிசாமி
காய்ச்சல் வந்து முக்கொம்பு அணை உடையும்போது அணிலால் மின் தடை ஏற்படாதா... எப்படி சார், இங்க வாங்க..?!
twitter.com/Kozhiyaar
வயது ஏற ஏற, ஒவ்வொரு படியாகத் தான் முன்னேற முடிகிறது!
twitter.com/naaraju
அணில் மீம் ட்ரோல்லாம் ஒரு மேட்டரே இல்ல, அது அப்படித்தான் ஆகும். ஆனா, கடந்த 10 ஆண்டுகளோட மின் கொள்முதல் ஊழலை, நிர்வாக மின்மையைப் புரிஞ்சுக்காம ‘எப்பிடியோ அவன் கொடுத்தான்ல, நீ ஏன் கொடுக்கல’ன்ற புரிதலற்ற கேள்விதான் பயமுறுத்துது. இந்தக் கேள்விதான் குஜராத் மாடலுக்கான அடிப்படை விதை.
twitter.com/mohanramko
பந்தியில், நம்ம இலைக்கு நாமே பாயசம் கேட்கும் கெத்து இருந்தாலே போதும்...
twitter.com/manipmp
நினைவை சுத்தம் செய்ய Clear chat இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.
twitter.com/fathisherin21
சோம்புக்கும் சீரகத்துக்கும் வித்தியாசம் தெரியல... உங்களுக்கெல்லாம் இன்ஜினீயரிங்ல என்னத்த சொல்லிக் குடுத்தானுங்களோ?
twitter.com/Aakashkannan96
மரணம் என்பது பறவைகளுக்குத்தான், இறகுகளுக்கு அல்ல..!
twitter.com/itz_pandian
கோபம் வந்தா சண்டை போட்டுருங்க. மன்னிக்கிறேன்ங்கற பேர்லயோ, மறக்கிறேன்ங்கற பேர்லயோ உங்க மனசுக்குள்ள வன்மத்தை வளர்த்துக்காதீங்க...
twitter.com/kumarfaculty
மாஸ்க் இல்லாதவர்கள் குறைவு. எங்கே மாஸ்க் என்று கேட்டால் பாக்கெட்டிலிருந்து எடுக்கிறார்கள்!