
உங்கள விட்டுப் போனவங்க மறுபடி உங்ககிட்ட வந்து பேசுனா... வேற எங்கயோ செருப்படி வாங்கியிருக்காங்கன்னு அர்த்தம்.
twitter.com/agal2020
ஒலிம்பிக்ல லூடோ இருக்கான்னு தெரில! இருந்தா மட்டும்… நாமதான் குவாலிஃபை ரவுண்ட்லயே வெளிய வந்துடறமே!
www.facebook.com/syed.raj.
‘மின்தடை மிருகம்’ சேமியா பாக்கெட் ஒண்ணு குடுங்கண்ணே!
twitter.com/VeerasekarElan1
உங்கள விட்டுப் போனவங்க மறுபடி உங்ககிட்ட வந்து பேசுனா... வேற எங்கயோ செருப்படி வாங்கியிருக்காங்கன்னு அர்த்தம்.

twitter.com/ChainTweter
முதல்ல வீட்ல சும்மா உட்காந்துட்டு அம்மாவுக்கு போன் போட்டுப் பேசுறத நிறுத்திட்டாலே 90% பிரச்னை ஒழிஞ்சிடும். இதைப் புருஷன் சொன்னா கேட்போமா? ‘நீ மட்டும் பேசுறே இல்ல’ன்னு சமத்துவம் பேசுவோம். முதல்ல நம்ம தலைல தொப்பிய கழட்டி வீசுனம்னா, நாம பண்றத பாத்து குரங்கும் தொப்பிய கழட்டி வீசிரும்.
twitter.com/skpkaruna
சோறு வேணாம்னா வேணாம்தான். ஒரு கப் கீரைப் பொரியல், ஒரு கப் காய்கறி போதும். கொஞ்சூண்டு தயிர். அவ்ளோதான். இனிமே ஸ்ட்ரிக்ட் டயட்.
லன்சுக்குப் பிறகு: அதென்னது? Apple pie ஆ! சரி... ஒண்ணே ஒண்ணு வை. இது? இதானா Lava cake? சரி... இதிலே ஒண்ணு. போதும்... போதும்.. நான்தான் டயட்னு சொன்னேனே!
twitter.com/mohanramko
இதுவரைக்கும் இருந்த பணம், நீ பேங்க்ல பணம் எடுத்ததுக்கும், செக் புக் வாங்கியதுக்கும் சரியாப் போயிடிச்சி. இனிமே அக்கவுன்ட் இருக்கணும்னா, நீயே பணத்தைக் கட்டணும். பணத்தை எப்போ கட்டப் போற?
twitter.com/naaraju
உதயா - சுமதி இணை டிக்டாக்கில் பிரபலமானவர்கள். கொஞ்ச நாள் முன்ன உதயா ஒரு விபத்தில் இறந்துபோக, உதயாவின் தாயாரே முன்வந்து மருமகள் சுமதிக்கு தன் அக்கா மகனை மறுமணம் செய்து வைத்துள்ளார். What a great gesture I say.
www.facebook.com/vinayaga.murugan.
எந்த வயதில் ரிட்டயர் ஆகலாமென்று ஒருத்தர் கேட்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தில் குடிகார வாத்தியாராக வரும் விஜய், தினமும் ஜேக் டானியல் ஒரு ஃபுல் அடிப்பார். ஜேடி விலை 4,590. ஐயாயிரம் என்றுகூட வைத்துக் கொள்வோம். மாதம் ஒன்றரை லட்சம். சைட்டிஷ், வீட்டு வாடகை எல்லாம் சேர்த்து மாதம் இரண்டு லட்சம் என்று வைத்துக்கொள்வோம். வருடத்துக்கு 24 லட்சம். 4% ரூல் என்றொரு கணக்கு உள்ளது. அதாவது, உங்கள் வைப்புத்தொகையில் வருடத்துக்கு நான்கு சதவிகிதம் செலவுக்கு எடுக்க வேண்டும். அதே நேரம் வைப்புத்தொகை வருடத்துக்குப் பத்து சதவிகிதம் வட்டி தரவேண்டும். பணவீக்கம் ஆறு சதவிகிதம் இருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால் ஆறு கோடி ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்தால் நீங்கள் தினமும் ஜேக் டானியல் சாப்பிடமுடியும்.

facebook.com/imkrithika
இந்த விஸ்மயா வரதட்சணை விஷயம் பத்தி நிறைய பேர் எழுதிட்டாங்க! ஆனா என்னை ரொம்ப உறுத்திய விஷயம் இதுதான்...
5,000 ரூவா எக்ஸாம் ஃபீஸ் கட்டுறதுக்குக் காசு இல்லாம அவங்க அம்மாக்கு போன் பண்ணி அந்தப் பொண்ணு கேட்டதுக்கு, ‘என்கிட்ட இல்ல, உன் புருஷன் கிட்டயே கேளு’ன்னு அந்த அம்மா சொன்னாங்களாம். (தலையில அடிச்சுக்கலாம்போல இருக்கு!)
100 சவரன் நகை, 10 லட்ச ரூவா கார் வாங்கிக் குடுக்குற அளவுக்கு வசதி இருக்கிற வீட்டுப் பெண்கள் கிட்ட சொந்தமா 5,000 ரூவா காசு இல்லை. அந்த அம்மாவும் தன் கணவரைத்தான் எதிர்பார்த்து இருக்காங்க. அந்தப் பொண்ணும் கணவரைத்தான் எதிர்பார்த்து இருக்காங்க. ஒரு தலைமுறை படிச்சு என்ன பிரயோஜனம்னே தெரியலை.
உங்க வீட்டுல உள்ளவங்க, உலகத்தில உள்ளவங்க ஆயிரம் ஆசை வார்த்தை பேசுவாங்க, பழகுவாங்க. ஆனா அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, நண்பன், காதலன், காதலி இப்படி யாருமே இல்லைன்னாலும், நம்ம பையில் பணமும், ஒரு வேலையும் இருந்தா நம்ம வாழ்க்கை ஓடும். அது குடுக்குற தைரியத்தையும், பாதுகாப்பையும் எந்த உறவும் கொடுக்காது!
சுயநலவாதி, அடங்காப்பிடாரி, வாயாடி, வீட்டுக்கு அடங்காததுன்னு என்ன சொன்னாலும் உங்க வேலையை விட்டுடாதீங்க. உங்க வங்கிக் கணக்கைப் பயன்படுத்தும் உரிமையை முழுமையா யாருக்கும் தாரை வார்க்காதீங்க. புருஷனா இருந்தாலும் சரி, அப்பாவா இருந்தாலும் சரி!
facebook.com/mjanakiraman
நேத்து 9 to 1 பவர் கட் - பராமரிப்புன்னு சொன்னாங்க.
1.05 to 6 ஒரு லைன் வரல - (பராமரிப்பு சைடு எஃபெக்ட்)
திரும்ப இன்னிக்கு காலையில சரியா 9 மணில இருந்து பவர் கட்.
டேய் பெரியவனே, தினம் தினம் அப்படி என்னதான்டா பராமரிப்பு பாக்குறீங்க?
facebook.com/ Sharath Krishnan
‘வலிமை’ன்னு ஒரு டைட்டில் இருக்கேன்னு சந்தோஷப்படுங்க. இல்லனா ‘தல 60’னுதான் 600 நாள் உருட்டியிருக்கணும்.
facebook.com/karthikeyan.therebel
ரகுராம் ராஜனையும் ழான் ட்ரேசையும் கொண்டு வருகிறார்கள். செந்தில் பாலாஜியையும் துரைமுருகனையும் வைத்திருக்கிறார்கள். எதை நம்புவது என்ற கேள்வி முக்கியமாகிறது.
facebook.com/bhuvan.gopalan
மின்கம்பி கவ்வும் செடிகொடியே,
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
கம்பி மேல் ஓடும் சிறு அணிலே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
அப்டியே மானே தேனே போட்டு பாட்டாவே பாடிக்குங்க.

twitter.com/JamesStanly
‘`எம்மா... என் கல்யாணத்துக்கு வரதட்சணை வாங்காத.’’
‘’சொல்றா... எவள லவ் பண்ணுற?’’
twitter.com/vemalism
தமிழக அரசு சினிமா விருது வழங்குனா இந்த வருஷம் ஸ்பீல்பெர்க், கேமரூன நடுவர்களா போட ஐடியா வச்சுருப்பாங்க போல!
twitter.com/senthazalravi
வெற்றிகரமா டைவர்ஸ் அப்ளை பண்ணுனா, அதுக்குப் பெரிய அளவில் பெற்றவர்கள் விழா எடுக்க ஆரம்பிங்க. அதுக்கு உறவுகள், நட்புகள் அனைவரையும் அழைத்து பெரிய விருந்து வையுங்க. அப்பதான் டைவர்ஸ் என்பது ஒரு குற்றம் அல்ல என சமூகத்தில், பெண்கள் மனதில் ஏறும்.
twitter.com/senbalan
பழம்பெருமையே இனத்தூய்மையின் அடித்தளம்.
twitter.com/barathithambi
ரிலையன்ஸின் லாபம் 2021-ல் ரூ.55,461 கோடி. ஆனால் செலுத்திய கார்ப்பரேட் வருமான வரி ரூ.1,722 கோடி மட்டுமே. இதன் வரி விகிதம் 3.1% மட்டுமே. ஒரு பேராசிரியராக நான் 30% வருமான வரி செலுத்துகிறேன். இதுதான் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை - பேரா. நாகேஷ்வர், உஸ்மானியா பல்கலைக்கழகம்.
twitter.com/Thaadikkaran
அப்ரைசல்ல தோசை முறுகலா சுடுவேன்னு எழுதி வச்சிருக்கே பிளடி ராஸ்கல். ரிஜெக்டட்!
twitter.com/RajaAnvar_Offic
இப்ப வளர்ற பசங்களிடம் நல்ல பண்புகள் இருக்கோ, இல்லையோ, நல்ல மாடல் ஸ்மார்ட் போன்கள் இருக்கு!
twitter.com/RajaAnvar_Offi
‘`கொஞ்சம் கொஞ்சமாய் கூடிக்கிட்டே வருது...’’
‘’கொரோனா பாதித்தவங்களோட எண்ணிக்கையா?’’
‘`இல்ல... சசிகலா ஆடியோவால அ.தி.மு.கலேருந்து ஈ.பி.எஸ் நீக்கிய நிர்வாகிகளோட எண்ணிக்கை.’’
witter.com/saravankavi
நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + ஜி.எஸ்.டி கட்டணம் வசூலிக்கப்படும் - எஸ்.பி.ஐ.
எந்தத் தொழிலதிபர் கடன் வாங்கி ஏமாத்தினான்னு தெரியலையே..?

twitter.com/LAKSHMANAN_KL/
‘`சொல்லுங்க கோபி... 3-வது அலை வர சான்ஸ் இருக்கா..?!’’
‘`அலைக்கெல்லாம் சான்ஸே இல்லை ரமேஷ்... ஆனா, மாஸ்க் இல்லாம இவனுக காட்டுத்தனமா சுத்தறதைப் பாக்கும்போது ‘சுனாமி’க்கு வேணா சான்ஸ் இருக்கு..!’’
twitter.com/saravankavi
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
சரி, உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம்னு வச்சுக்குங்க, நீங்களாச்சும் விலையைக் குறைக்கலாமே!
twitter.com/Muthusa
முட்டைக்கோஸ் பொரியல் என்பது கறுப்பு பேன்ட் மாதிரி... எல்லா சாப்பாட்டுக்கும் மேட்ச் ஆகிரும்!
twitter.com/ramesh_twetz
நடுத்தரக் குடும்பத் தலைவன் ரெண்டு வகைதான்...
1. வீட்டுக் கடன் கட்ட உழைக்கறவன்!
2. வீட்டு வாடகை கட்ட உழைக்கறவன்!
twitter.com/SriviShiva
ஒவ்வொரு நுண்ணுணர்வைத் தொலைக்கும்போதும், இந்த வாழ்க்கை பிழைப்பதற்கு இன்னும் எளிதாகிறது.
twitter.com/teakkadai1
எதிர்காலத்தில் இவ்வளவு கஷ்டம் இருக்காது. எல்லா வீட்டிலும் மின்சாரம் இருக்கும், கேஸ் அடுப்பு வந்துவிடும், வீட்டிலேயே சினிமா பார்க்கலாம், கடுதாசி போட வேண்டியதில்லை, ஆளுக கிட்டயே நேரா பேசலாமெனச் சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவன் நான். 90களின் இறுதியில் பிறந்து, எந்த உடல் உழைப்பும் பெரிதாகத் தேவைப்படாமல், மனரீதியான பிரச்னைகளை மட்டுமே சந்திக்கும் இந்தத் தலைமுறைக்கு, ‘உங்கள் பிரச்னைக்குக் காரணமே அறிவியல் தான்’ என அந்த அறிவியலின் பயனாய் வந்த சமூக ஊடகங்களிலேயே பிரசாரம் செய்கிறார்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இவர்களும் அதை நம்புகிறார்கள்.