சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

டாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
News
டாப்ஸி

ஒரு சிலரின் வாழ்வில் நாம் சோறு; ஒரு சிலரின் வாழ்விலோ ஊறுகாய்; வேறு சிலரின் வாழ்விலோ நாம் வெறும் வாழை இலை!

twitter.com/ThirutuKumaran

அம்மா/மனைவிக்கு உதவக்கூடிய அத்தனை சூழல் இருந்தும் உதவாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவன் ஆணாதிக்கவாதிகளில் முக்கியமானவன்.

twitter.com/ividhyac

மதியம் ஒரு பூரி எக்ஸ்ட்ரா சாப்பிட்டதுக்காக 5 கிமீ நடந்துட்டு வந்தா, ‘அதான் 5 கிமீ போனோமே ஒரே ஒரு தேங்காய் பர்பி சாப்பிடேன்’ங்குது மனசு.

twitter.com/DrSharmila15

நடவடிக்கை எடுக்கலைன்னா ‘மெத்தனம்’னு சொல்றீங்க. எடுத்தா, ‘பழிவாங்கும் படலம்’னு சொல்றீங்க. அரசு என்னதான்யா பண்ணும்?

Mohanlal: அஹம் பிரம்மாஸ்மி!
Mohanlal: அஹம் பிரம்மாஸ்மி!

twitter.com/SidTweep

ஒரு கிராமத்துப் பொண்ணு டாஸ்மாக்ல பீர் வாங்கிட்டுப் போறத வீடியோ எடுத்து அசிங்கப்படுத்தி வைரல் ஆக்கறீங்க... ‘Ladies Night’னு பல ‘பப்’கள் இருப்பதை லைஃப்ஸ்டைல்னு பாக்கறீங்க... கலாய்க்கறதுலகூட இங்க ஏழைப்பொண்ணு, பணக்காரப் பொண்ணுன்னு பாகுபாடு இருக்கில்ல...

twitter.com/PDRamakrishnan

பெட்ரோல் விலை பூட்டானில்: ₹68

பெட்ரோல் விலை இந்தியா: ₹100

பூட்டான் பெட்ரோலை இந்தியாவிடம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

twitter.com/toviji

கைதுன்னா மட்டும் மொட்டை அடிச்சி கெட்டப் மாத்துறாங்க; இல்லன்னா சுடிதார் போட்டு ஓட முயற்சிசெய்றாங்க. என்ன டிசைன் இது?

twitter.com/macchu_offcl

திடீர்னு பிளான் பண்ணி... எதைப் பத்தியும் கவலைப்படாம ட்ரிப் போறதெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே உண்டான திமிர்.

twitter.com/kumarfaculty

டிஜிட்டல் கடிகாரத்தின் ஆரம்பக்கால வாழ்க்கை முட்களால் ஆனது...

twitter.com/saravankavi

தமிழ்நாட்டில் ஒருவர் ரூ.1 வரி செலுத்தினால், அதில் 4 பைசா மட்டுமே தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கிறது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

ஜீ: நாம கொடுக்கற அந்த 4 பைசாவுக்கு ஒரு ஜிஎஸ்டியைப் போடு..!

twitter.com/GreeseDabba2

எல்லாரும் ‘ஜகமே தந்திரம்’ படம் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நான் இப்பதான் ‘ஈஸ்வரன்’ படம் பாதி பார்த்து நிறுத்தி வைச்சுருக்கேன்.

/twitter.com/HAJAMYDEENNKS

சீனாவில் 28 மணி நேரத்தில் 10 மாடிக் கட்டடத்தைக் கட்டி முடித்து சாதனை

# இதுலாம் ஒரு சாதனையா? எங்கள் ஜி ஒரே செங்கல்லில் எய்ம்ஸ் மருத்துவமனையையே கட்டிட்டாரு!

twitter.com/RajaAnvar_Offic

மத்த படங்களோட டீஸர், டிரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது அப்டேட் ஏதாவது வந்தா உடனே பதறிப்போறது ‘வலிமை’ படக்குழுவினர்தான்!

twitter.com/mekalapugazh

சாமியார்கள் போலீஸுக்கு பயந்து தப்பி ஓடுவதும்... ஆசிரியர்கள் போலீஸ் காவலில் இருப்பதும்... ஆசிரியை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோருவதும்...

என்னதான் செஞ்சி வச்சிருக்கீங்க தமிழ்நாட்டை..?

twitter.com/itz_idhayavan

கொரோனாவால் ஒரு உயிர்கூடப் பறிபோகாத நிலை வரும்போது, தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படும்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

# ஆமா... ஆமா... டாஸ்மாக்னால ஒரு உயிரும் போகாது!

twitter.com/shivaas_twitz

ரோட்ல நடந்து போகும்போது நாய் குரைக்கும்... கடிச்சிடுமோன்னு பயமா இருக்கும். கார்ல போனாலும் குரைக்கும்... ஆனா கடிச்சிடுமோன்னு பயம் வராது.

நாயைத் திருத்த முடியாது, நாமதான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்.

twitter.com/Sivaji_37

‘‘நீங்க ட்விட்டர் யூஸ் பண்றீங்களா?’’

‘‘நான் எங்கமா யூஸ் பண்றேன்... அதுதான் என்னைய யூஸ் பண்ணுது!”

twitter.com/ItsJokker

உங்களின் அத்தனை விளக்கத்திற்கும் ‘சரி’யெனக் கூறி சட்டென்று கடந்து செல்வது, அதை ஏற்றுக்கொண்டதாய் அர்த்தமல்ல. ‘வாதத்தை விட்டு விடுவீர்கள்’ என்பதன் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்!

twitter.com/itz_idhayavan

அதிமுக நெருப்பில் பூத்த மலர்: ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அறிக்கை!

அதனாலதான் போன தேர்தலில் கருகிருச்சா?

twitter.com/kumarfaculty

‘‘இந்தா... போன் உனக்குத்தான்.’’

‘‘போன்ல யாரு?’’

‘‘சின்னம்மா.’’

‘‘அப்ப என்னைக் கட்சியிலிருந்து நீக்கிடுவாங்களா?’’

‘‘பதறாதே. பேசறது நம்ம சித்தி.’’

twitter.com/prabhu65290

எதார்த்த மனிதர்கள் செல்லுமிடமெல்லாம் அன்பை விதைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

facebook.com/ Saravanakarthikeyan Chinnadurai

கொரோனா பேட்ச் என்று சென்ற ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களைக் கேலி செய்தோம். இப்போதுதான் லேசாய்ப் புரிய ஆரம்பிக்கிறது: கொரோனா ஜெனரேஷன்!

twitter.com/DrShyamKK

‘விலைக் குறைப்பிற்கு தேதி போட்டிருந்தோமா’ எனக் கோபத்தில் எரிந்துவிழுகிறார் தியாகராஜன். அப்படியென்றால் இப்போது அவர்கள் குறைக்கப் போவதில்லையா? அல்லது தேர்தலுக்கு 5 நாள்களுக்கு முன் ரூ. 5 குறைத்துவிட்டு ‘‘பாருங்கள், வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டோம்” என மீண்டும் ஏமாற்றக் காத்திருக்கிறார்களா?

twitter.com/teakkadai1

மும்பை இந்தியன்ஸ் டீம் எடுக்கிற மாதிரி, மு.க.ஸ்டாலின் டீம் எடுக்கிறார்.

twitter.com/Coimbatoraan

‘‘தமிழ்நாட்டுல திராவிடம் தேவையற்றது!’’

‘‘சார், தமிழ்நாட்ல ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா?’’

‘‘இல்லைங் சார்.’’

‘‘அட, இந்திய ஒன்றியத்தோட அடையாள அட்டை ஏதாச்சும்?”

‘‘அதும் இல்லைங் சார்...’’

‘‘அப்றம்...’’

‘‘நான் கொழும்புல இருக்கன், இங்க ராஜபக்சே ஆட்சில ஜம்முனு இருக்கன். நீங்க நல்லா இருக்கறது பொறுக்கல.’’

Taapsee: போவோமா ஊர்கோலம்?
Taapsee: போவோமா ஊர்கோலம்?

twitter.com/arattaigirl

‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை’ பாட்டெல்லாம் உருகிக் கேட்டுட்டு இருந்தோம். இந்த 2கே கிட்ஸ் ‘இதயம் கருகறவரை என்ன பண்ணிட்டு இருந்தானாம்’னு கேட்குதுங்க!

twitter.com/manipmp

ட்ராபிக் சிக்னலில் ரொம்ப நேரம் நிற்கிறேன். ஊரு இயல்பு நிலைக்குத் திரும்பிடுச்சு போல!

facebook.com/Vinayaga Murugan

சசிகலாவோட இன்னொரு ஆடியோ இன்று வெளிவந்துள்ளது. கண்டிப்பா நான் வந்துடுவேன்னு சொல்றார். நம்ம தலைவருக்குப் பிறகு இந்த டயலாக்கை அதிகம் சொன்னவர் சசிகலா என்று நினைக்கிறேன்

facebook.com/Vinod Kumar

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...

எவனாவது/எவளாவது

‘பீஸ்ட்’ ஒரு ‘ஃபீஸ்ட்’ (feast) அப்படின்னு விமர்சனத்தை முடிப்பாய்ங்க..!

facebook.com/Bogan Sankar

ஒரு இலக்கிய விமர்சனம்.

*மோசமான கட்சியில் இருக்கும் நல்ல எழுத்தாளர் அவர்”

twitter,com/narsimp

படம் போட்டு கொஞ்ச நேரம் கழிச்சு தியேட்டர் இருட்டுல ராவி ஒக்காந்ததும் பக்கத்து சீட்டு ஆள்ட்ட எழுத்துப்போட்டு ரொம்ப நேரம் ஆச்சா ஃபைட்டு முடிஞ்ச்சா ரேஞ்சுல ஒருநாள் வெளிவேலைன்னு போய்ட்டு வந்தா, ஆளுநர் உரைல பாட்டு பைட்டு லட்டு மிஸ் பண்ணிட்டேன் போலயே!

facebook.com/sudharsanh

‘கீழ் உதட்ட உள்ள மடிச்சுக் கடிச்சிக்கிட்டு, கண்ண இடுக்கி, மூஞ்ச நெறிச்சுக்கிட்டு, அப்டியே ஹஹ்ஹானு சிரிச்சா நீங்க சூப்பர்ஸ்டார் மாதிரியே வெறித்தனமான வில்லனா தெரிவீங்க’ன்னு யாரோ தனுஷ் அண்ணாவ நம்ப வெச்சிருக்காங்க போல!

twitter.com/Kozhiyaar

உலகத்தில் உள்ள எல்லாரும் Mask போட்டு சப்பை மூக்கு ஆகணும்னுதான் சீனாக்காரன் இந்த வைரஸையே வெளியே விட்டிருப்பான் போல!!

twitter.com/mrithulaM

சாதாரணக் கட்டணப் பேருந்துல பெண்களுக்கு ஃப்ரீ மாதிரி மத்த பேருந்துகள்ல பெண்களுக்குப் பாதிக் கட்டணம்னு அறிவிச்சா நல்லாருக்கும்!

Rakulpreet: சில்லுனு ஒரு கிளாஸ்!
Rakulpreet: சில்லுனு ஒரு கிளாஸ்!

twitter.com/Paa_Sakthivel

இனி என் முதுகில் குத்த இடமில்லை - சசிகலா

மரப்பூசி போட்டிருப்பாங்களோ...

twitter.com/Kozhiyaar

ஒரு சிலரின் வாழ்வில் நாம் சோறு; ஒரு சிலரின் வாழ்விலோ ஊறுகாய்; வேறு சிலரின் வாழ்விலோ நாம் வெறும் வாழை இலை!

twitter.com/beingmemoni

ஒரு பொண்ணு உங்கள எப்படி ட்ரீட் பண்றாளோ அதே மாதிரி அவள ட்ரீட் பண்ணுனீங்கன்னா போதும். வேற எந்த எதிர்பார்ப்பும் இல்ல!

twitter.com/SHIJA25

சசிகலா ஊழல் சாம்ராஜ்யத்தின் ராணி - எடப்பாடி பழனிசாமி

# அப்ப ஜெயலலிதா ராணியின் தோழியா?

twitter.com/kumarfaculty

குழந்தைகளின் முதல் வாகனம் அப்பா...!

twitter.com/ altaappu

டாஸ்மாக்கில் மதுபாட்டிலை வாங்கியதும் சென்றுவிடுவார்கள், டீக்கடையில் அப்படியில்லை -திருநாவுக்கரசர் எம்.பி.

ஆமா, டம்ளர திருப்பிக் கேட்பாங்க.

twitter.com/selvachidambaraஸ்மார்ட் போன் வாங்குவதற்கு வசதியில்லாத வீட்டுக் குழந்தைகளால் வெட்டவெளி விளையாட்டுகள் உயிர்ப்பித்திருக்கின்றன...

twitter.com/SolitaryReaper_ சாப்பாட்டுல மசாலா தூக்கலா போட்டு சாப்ட்டு, படங்கள் மசாலாப் படங்களா பார்த்து, எதுலயும் மசாலா ஜாஸ்தி தேவைப்படுது நம்ம மக்களுக்கு.