ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

bachchan
பிரீமியம் ஸ்டோரி
News
bachchan

இப்போ எத்தனை கேஜி தாஜ்மகால் தெரியுமா?

twitter.com/MrElani

Could this be your last ever game in yellow?

Thala : Definitely not

அடுத்த வருஷம் ஒரு சின்னவேல இருக்கு.

twitter.com/cablesanka

ஸ்கூல், காலேஜ் திறந்தாத்தான் தியேட்டருக்குக் கூட்டம் வரும்ங்கிற தொலைநோக்குப் பார்வையோட செயல்பட்ட அரசுக்கு நன்றி

கூட்டணிக்கு யார் வர்றீங்க?
கூட்டணிக்கு யார் வர்றீங்க?

twitter.com/thirumarant

கமல் பேசற எல்லாப் பகுத்தறிவையும் மண்டய ஆட்டி ஆட்டிக் கேட்டுட்டு நேரா பா.ஜ.க-ல போய்ச் சேர்ந்துடறாங்க... திஸ் பிக்பாஸ் கய்ஸ்...

twitter.com/sweetsudha1

ஒரு பெண் காலை 6 - 8 மணிக்குள் அந்த நாளுக்கான அத்தனை சவால்களையும் சந்தித்துவிடுகிறாள். ஏனையவை அடுத்த நாள் கணக்கிலேயே சேரும்.

வைகை பீச் தெரியுமா?
வைகை பீச் தெரியுமா?

twitter.com/arattaigirl

பூஜைலாம் அப்பறம் போடலாம். மொத ஐயான்னு எழுதுங்கய்யா. ஜயா ஜயான்னு எழுதிட்டு இருக்காங்க.

twitter.com/gpradeesh

1800 கோடில முடிஞ்சிருக்க வேண்டிய நல்ல திட்டம், படுபாவிங்க 8 வருசமா அநியாயமா நிறுத்தி வச்சு இப்ப 5000 கோடி ஆயிருச்சு.

யார் நிறுத்தி வச்சது?

எங்க தங்கத்தாரகை அம்மாதான்.

இப்போ எத்தனை கேஜி தாஜ்மகால் தெரியுமா?
இப்போ எத்தனை கேஜி தாஜ்மகால் தெரியுமா?

twitter.com/mymindvoice

சீக்கிரமா எந்திரிச்சு, சீக்கிரமா சாப்ட்டு, சீக்கிரமா தூங்கி, சீக்கிரமா படிச்சு, சீக்கிரமா பணம் சம்பாதிச்சு, சீக்கிரமா செட்டிலாகி, சீக்கிரமா ரிடையராகி...

பெரும்பாலான இலக்கு இப்படித்தான் இருக்கு.எல்லாமே சீக்கிரமா முடிஞ்சிரணும், முடிச்சிரணும்.

எதுக்காக இந்த சீக்கிர அவசரம்?

#டீசிந்தனை

twitter.com/Suyanalavaathi

#WorkFromHome பண்ணுனாலும்கூட ஞாயிற்றுக்கிழமை நைட்டு திங்கட்கிழமை பயம் வரத்தான் செய்தது!

அந்த அறிக்கை அவர் விடலையாம்!
அந்த அறிக்கை அவர் விடலையாம்!

twitter.com/amuduarattai

வாழ்ந்து கெட்ட நோயாகிக் கொண்டிருக்கிறது கோரோனா.

twitter.com/sundartsp

குழந்தை ஏன் அழுகுது? விளம்பர டெம்ப்ளேட்டை ரஜினி அரசியலுக்கும் பயன்படுத்தலாம்.

twitter.com/krishnaskyblue

Fans~ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் போடுவேன்

எலெக்‌ஷன் கமிஷன்~ எலெக்‌ஷன்ல நிக்காதவங்களுக்கு ஓட்டு போடுற மிஷின் இன்னும் கண்டுபுடிக்கல, கண்டுபுடிச்ச உடனே சொல்லுறோம்... அப்போ வந்து ஓட்டு போடுங்க.

twitter.com/ItsJokker

வடக்கனுக்கும், நமக்கும் ரொம்பப் பெரிய வித்தியாசம் இல்ல,

அவனுங்க மதத்த வச்சுப் பண்ணுற அட்டூழியத்தலாம், நாம ஜாதிப் பேர வச்சுப் பண்ணிட்டிருக்கோம்.

twitter.com/Vkarthik_puthur

உண்மையிலேயே கில்லாடிதான்யா நீங்க, கட்டாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குழு உறுப்பினர நியமிச்சு மருத்துவமனை கட்டின மாதிரியே கண்டனத்தை வர வச்சிட்டீங்க..