சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

காலங்காலமா சபிக்கப்பட்ட அமிலத்தன்மை கொண்ட சொற்கள்னா, அது ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போம்மா’ வாகத்தான் இருக்கும்.

twitter.com/RavikumarMGR

நான் மேஷ ராசி, பரணி நட்சத்திரம்... நேற்று நடந்த குருப்பெயர்ச்சிதான் இன்று எங்கள் மஞ்சள் சட்டை டீம் வெற்றி பெறக் காரணம்: ஆரோன் பின்ச், ஆஸி. கேப்டன்.

twitter.com/Urudhimozhi

‘பொம்பளைப் புள்ளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும், வெளிய போகும்போது ஷால் போட்டுட்டுப் போ, எதுக்குக் கத்திப் பேசுற, சத்தமா சிரிக்கிற, வீட்டுல ஏன் எதிர்த்துப் பேசுற, இன்னொரு வீட்டுக்குப் போகப் போறவ குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யக் கத்துக்கோ’ அப்படின்னு முழுக்க முழுக்க பெண் பிள்ளைகளை ஒரு culture of shame and guiltலேயே ஊறப்போட்டு, நசுக்கி உடைச்சு வளர்க்குற வரைக்கும், இங்க குழந்தைங்க இப்படி வெளியே சொல்ல முடியாம மனசு வெந்துதான் சாகும்ங்க.

Anjali: ஹேப்பி சில்ரன்ஸ் டே!
Anjali: ஹேப்பி சில்ரன்ஸ் டே!

twitter.com/EnthuPattanee

நம்ம ஊர்ல குழந்தைக முன்னாடி அப்பா அம்மா hugகூட பண்ண மாட்டாங்க. ஆனா கண்டபடி மோசமா சண்ட போடுவாங்க. இந்த மாதிரி messed up priorities முதல்ல மாறணும்.

twitter.com/RagavanG

சென்னையில இருக்கும் பல எடங்களைவிட வேளச்சேரி ரொம்பப் பழமையானது. கொஞ்ச நஞ்சம் இல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழசு. கோட்டூரும் அப்படித்தான். கோட்டூர் ஊரா இருக்க, அதுக்கு உட்பட்ட ‘வெளிச்சேரி’யா இருந்தது வேளச்சேரி. வெளிச்சேரிதான் இன்னைக்கு வேளச்சேரின்னு மருவியிருக்கு. எதோ நேத்து போய் மக்கள் அங்க வீடு கட்டி குடியிருந்த மாதிரி பேசாதீங்க மக்களே. வெளிச்சேரி என்னும் வேளச்சேரியோட ஒப்பிடும்போது நீங்க இருக்கும் இடம் நேத்துப் பெஞ்ச மழைல முளைச்ச காளானாக இருக்கலாம்.

twitter.com/narsimp

காலங்காலமா சபிக்கப்பட்ட அமிலத்தன்மை கொண்ட சொற்கள்னா, அது ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போம்மா’ வாகத்தான் இருக்கும். பெற்றோர்ல ஆரம்பிச்சி ப்ரெண்ட்ஸ் வரை... அட்ஜஸ்ட் என்பதே, ஒருபக்க அழுத்தத்தை இன்னொரு பக்கம் அமுக்கிக்கொண்டு உள்ளி ருத்தல்தான். அது வெடிக்கத்தான் செய்யும்!

twitter.com/itz_idhayavan

அரசுப் பேருந்துகளில் செல்போனில் பாட்டு கேட்கத் தடை: கர்நாடக உயர் நீதிமன்றம்

# அப்படியே தமிழ்நாட்டு மினிபஸ்ல பாட்டு போடவும் தடை விதிங்க யுவர் ஆனர், ‘தூதுவளை’க்கு விடுதலை கிடைக்கட்டும்?!

twitter.com/Mareeswari201

கிட்ஸ்: மழைக்காலத்துல கப்பல் செஞ்சு விளையாட முடியலைன்னு கவலை...

லெஜண்ட்: கட்டிப்பிடிச்சு மழைய ரசிக்க லவ்வர் இல்லையேன்னு கவலை...

மீ: துவச்சுப் போட்ட துணி இரண்டு நாளா காய மாட்டேங்குதேன்னு கவலை!

Anupama: காபி கோப்பையில் முத்துப் பற்கள்!
Anupama: காபி கோப்பையில் முத்துப் பற்கள்!

twitter.com/Kozhiyaar

வீட்டில் மிச்சம் மீதி சாப்பிட்டா அம்மா, ஹோட்டலில் மிச்சம் மீதி சாப்பிட்டா அப்பா!

twitter.com/iam_DrAjju

புன்னகை மன்னன்ல ‘ஒன், டூ, திரி’ சொல்லிட்டு குதிக்குற மாதிரிதான் தினமும் காலைல ‘ஒன், டூ, திரி’ சொல்லிக் குளிக்க வேண்டி இருக்கு... என்னா குளிரு!

facebook.com/kundhaani

குருப்பெயர்ச்சியினால் ரிஷப ராசிக்குத் தீய சகவாசமும் மனக்குழப்பமும் உண்டாகும்...

# இத்தன நாள் இருந்ததுதான் நல்ல சகவாசமும் தெளிவான மனசும்னா... அப்ப இனி?

facebook.com/Manoj Balasubramaniyan

தலித் சினிமா என்றால் என்ன? ‘அட்டகத்தி’ திரைப்படம் வந்தபோது ‘தமிழ் சினிமாவில் தலித்துகளின் வாழ்வியலைச் சித்திரித்த முதல் படம் என்பதால் இதுதான் தலித் படம்’ என்றார்கள். அடுத்ததாக ‘மெட்ராஸ்’ படம் வந்தபோது ‘இதுதான் முதல் தலித் அரசியல் படம்’ என்றார்கள். ‘பரியேறும் பெருமாள்’ வந்தபோது, ‘முன்னவர் வன்முறையைத் தீர்வாக வைக்கிறார். ஆனால் பரியன் அப்படிச் செய்யவில்லை. இது அம்பேத்கர் வழி. ஆகையால் இதுவே முதல் தலித் படம்’ என்றார்கள். அதே விமர்சன வாய் ‘கர்ணன்’ திரைப்படம் வந்தபோது ‘இது தலித் படம் தானா, அம்பேத்கர் அரசியலுக்கே உலை வைக்கிறதே’ என்றது. இன்று ‘ஜெய்பீம்தான் தமிழின் முதல் தலித் திரைப்படம்’ என்கிறார்கள். ‘காந்திய அம்பேத்கரிய வழியில் நின்று தீர்வைச் சொல்லியிருக்கிறது’ என்கிறார்கள். காந்திய அம்பேத்கரிய வழியா? அம்பேத்கருக்குத் தெரியாமப் பாத்துக்கங்கடா...

twitter.com/Suyanalavaathi

பிளாஸ்டிக் சேர் உட்கார யூஸ் ஆகுதோ இல்லையோ, மழைக் காலத்துல ஃபேனுக்குக் கீழ துணி காயப் போட யூஸ் ஆகுது!

twitter.com/Thaadikkaran

டூர் போறதைப் பத்தி டிஸ்கஷன் போய்ட்டு இருக்கு, கடைசில ரெண்டே வார்த்தைல முடிஞ்சுபோகும். அவன் வந்தா நான் வரல. அவன் வரலேன்னா நானும் வரல..!

twitter.com/pandi_prakash_

கேட்பாரற்று வீதியில் சுற்றித்திரியும் மாடுகளுக்கும் உரிமையாளர் உண்டு; பெயரளவில்.

twitter.com/krishnaskyblue

சவுத் ஆப்பிரிக்காவுக்கு தர்த்ரியம் செமி பைனல்ல; நியூசிலாந்துக்கு தர்த்ரியம் பைனல்ல!

twitter.com/itz_idhayavan

மழைக்கால சேதங்களைப் பார்வையிடச் செல்லும் ஸ்டாலின் ஜேம்ஸ் பாண்ட் போன்று உடையணிந்து செல்கிறார் ~ செல்லூர் ராஜு. அது ரெயின் கோட் தெர்மோகோல் காரரே?!

twitter.com/Kozhiyaar

ஒரு தந்தையின் வீடு கட்டும் கனவு அடுத்த தலைமுறைக்குமானது!

twitter.com/Aakashkannan96

கிறுக்கலுக்குப் பிறகே எழுதத் தொடங்குகிறது குழந்தையும் புதுப்பேனாவும்!

twitter.com/THARZIKA

விடுபடும்படியாக அன்பில் எதுவொன்றும் இருப்பதில்லை என்பதே அதில் மிகப்பெருஞ்சாபம்.

twitter.com/Kannan_Twitz

ஒரு கிழிஞ்ச நோட்ட நேக்கா மாத்துறத்துக்கே நமக்கு பயந்துவருதே, எப்படித்தான் கள்ள நோட்டலாம் அசால்டா மாத்துறானுங்களோ!

twitter.com/Suyanalavaathi

ஹோட்டல்ல பார்சல் கட்டுறவங்க கிட்டயே அவுங்க கட்டுன சாம்பார் பாக்கெட்ட பிரிக்கச் சொல்லணும்... அப்பதான் நாம படற கஷ்டம் தெரியும்!

Galgadot: வொண்டர் லொள்!
Galgadot: வொண்டர் லொள்!

twitter.com/mohanramko

ஆய்வுக்கு வருவதை அறிந்து அவசர அவசரமாக மழை நீரை வெளியேற்றுகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி

# ஒரு போட்டோகூட எடுக்க விடாம, அதுக்குள்ள நடவடிக்கை எடுக்கறாங்க... ஊராடா இது?

twitter.com/saravankavi

மக்களின் பரிவர்த்தனை மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும்: எஸ்.பி.ஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

SBI வங்கி: வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தினதுக்கு ஒரு சார்ஜைப் போடு...