
என்னங்கய்யா தமிழகத்தில் பா,ஜ,க கட்சி நடத்துதா இல்ல சினிமா சூட்டிங் நடத்துதா?
twitter.com/RjAadhi2point0
பிக்பாஸ் டாஸ்க்ல வர்ற மாதிரி நாமளும் நம்ம சின்ன வயசு சோகக்கதையெல்லாம் சொல்லி இன்ஸ்பயர் பண்லாம்னு யோசிச்சா நம்ம சின்ன வயசு சோகங்கள் பூராம் எக்ஸிபிசன்ல பஞ்சுமுட்டாயி/ டெல்லி அப்பளத்துக்காக அழுதது...Playstation வெளாடப்போகக் காசு கேட்டு அழுததுன்னுதான் இருக்கு.. இத வெச்சு எப்டி பண்றது?

twitter.com/pachaiperumal23
மூணு தோசேக்கு மேல சாப்பிட்டாலே நெஞ்சைக் கரிக்குது. என்னதான் பண்ணப்போறிக மூவாயிரம்கோடி நாலாயிரம்கோடின்னு சம்பாதிச்சு?
twitter.com/HAJAMYDEENNKS
குஷ்பு, நமீதா, ராதாரவி, கங்கை அமரன், கௌதமி,பவர்ஸ்டார், கஸ்தூரிராஜா,விஜயகுமார், காயத்ரி ரகுராம், எஸ்வி சேகர், பொன்னம்பலம், Rk சுரேஷ், பேரரசு
என்னங்கய்யா தமிழகத்தில் பா,ஜ,க கட்சி நடத்துதா இல்ல சினிமா சூட்டிங் நடத்துதா?

twitter.com/sundartsp
டிரீம் 11-ல் உங்களுக்கு டீம் எடுக்கத் தெரியலைன்னு பையன் கோவிச்சிக்கிறான், அப்பாக்களிடமும் திட்டு வாங்கி மகன்களிடமும் திட்டு வாங்குறது 80’ஸ் கிட்ஸ் மட்டும்தான் போல.
twitter.com/SettuOfficial
ஆக்சுவலி ஒரு பொண்ணு நம்மளப் பார்த்து இரண்டு தடவை சிரிச்சா அது நம்மள லவ் பண்ணுதுன்னு நினைப்போம்ல அந்தமாரி ஆர்சிபி இரண்டு மேட்ச் ஜெயிச்ச உடனே கப்பு வாங்கிரலாம்ன்னு நினைச்சிட்டானுங்க

facebook.com/David P Williams
அழுவுறப்ப கண்ணக்கூட துடைக்கமுடியல. என்னத்துக்குமா நகத்த இம்புட்டு நீட்டி வளத்து வச்சிருக்க. சிவானி
twitter.com/manosenthil
நீங்க பார்க்க நினைக்கிற சேனலுக்கு மட்டும் பணம் கட்டுனா போதும்னு சொல்லி செட்டாப் பாக்ஸ் வாங்க வச்சு 100 ரூவா இருந்த கேபிள் கனெக்சன இப்ப 260-ஆ மாத்தி வச்சிருக்கானுக. இந்த லாபி பத்தி யாருமே பேசலையே ஏன்? #திட்டம்போட்டுத் திருடுறகூட்டம்.

facebook.com/Seshathiri Dhanasekaran/
தேர்ந்தெடுக்கப்படாமலே தலைவர் ஆகிட்டு ஒருத்தர் வேடிக்கை பார்த்துட்டு இருக்கார். என்ன செய்யலாம்?
அவ்ளோ நேரடியாவா விமர்சனம் பண்ணுறார்.
விமர்சனமா... பிக் பாஸ் புரமோ மாமா
facebook.com/karl max ganapathy
இந்த இருபது வருஷத்துல திமுகவோட இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லாம் ஒரு சைஸா டியூன் ஆகியிருக்காய்ங்க. நீங்க வேணா அடுத்த தலைவரா வாங்களேன்னு ஸ்டாலினே யாரையாவது கூப்பிட்டாக்கூட, வேணாம் தலைவரே, அநாவசிய பதற்றம் இல்லாம ஏவாரம் நல்லா போகுது, பையனுக்கும் உதயநிதியைப் பிடிச்சிருக்கு, பேரன்கூட இன்பநிதி போட்டோவைப் பார்த்து சிரிக்கிறான், அப்படியே ஸ்மூத்தா போகட்டும் விடுங்கன்னு சொல்லிடுவாய்ங்க
twitter.com/shivaas_twitz
விஜய் டிவியில 96 படத்தோட தெலுங்கு ரீமேக் படத்தின் தமிழ் டப்பிங் ஓடுது. இப்படித்தான் ஆபீஸ்ல கன்சல்டன்ட்ஸ் வந்து, நம்ம dataவை எடுத்து PPTல போட்டு, அதை நமக்கே போட்டுக் காட்டி காசு வாங்கிட்டுப் போவாங்க