
பர்ஸ்ல இன்னமும் அம்மா போட்டோ இருக்கான்னு பாக்கத்தான் எடுத்தேன் ஜட்ஜய்யா
twitter.com/mrithulaM
உங்களுக்குப் பிடிக்காத உணவை யாராவது பிடிக்கும்னு சொன்னா ‘எனக்குப் பிடிக்காது’ன்னு மட்டும் சொல்லுங்க மக்களே... ‘‘இதெல்லாம் மனுஷன் திம்பானா’’ன்னெலாம் கேட்காதீங்க!
twitter.com/_David_twits
மற்றவர்களால் தரமுடியாத ஆறுதலைக்கூட சில நேரங்களில் தனிமை தந்துவிடும்!

twitter.com/shivaas_twitz
என்னதான் உள்ள வெறும் அழுக்குத்துணி இருந்தாலும், ட்ரெயின் பெர்த்துக்குக் கீழ பேக்கை வச்சிட்டுத் தூங்க கொஞ்சம் பயமாதான்யா இருக்கு...
twitter.com/GreeseDabba2
கதவைச் சத்தம் வராம மெதுவா மூடலாம்னு முயற்சி பண்ணும் போதுதான், தஞ்சாவூர்ப் பெரிய கோயில் கதவை மூடுற ரேஞ்சுக்கு சவுண்டு விடும்.
twitter.com/shivaas_twitz
‘‘நீ கொல்கத்தா ஃபேன்கூட இல்லையே... நீ ஏம்மா அழுவுற?”
‘‘நான் மும்பை ஃபேன் சார்... அந்தக் கப்பு எங்களோடது சார்!”
twitter.com/ramesh_twetz
எல்லாத்துக்கும் ‘சரி, சரி’ன்னுட்டுப் போறது, என்னைக்காவது ஒரு நாள் தப்புன்னு தோணும்!

twitter.com/Vasanth920
‘‘என்னடா சசிகலா முகம் சிவந்துபோய் இருக்கு?”
‘‘ரத்தக்கண்ணீர் வந்தா அப்படித்தான்னே இருக்கும்!”
twitter.com/Senthilvel79
எல்லோரும் மாட்டு வண்டிப் பயணத்திற்குத் திரும்புங்கள்...
# ‘நன்றி வணக்கம்... தம்பி, மீட்டிங் முடிஞ்சுது. கார எடு கிளம்புவோம்’, அதானே... அதேதான்.
twitter.com/IamUzhavan
காலங்காத்தால ஒருவர் தினமும் வாட்ஸ்அப்பில் ‘Healthy Morning’ என அனுப்பினால், அவர் உடல் எடையைக் குறைக்கும் பொடி டப்பா விற்கிறார் எனப் பொருள்.
twitter.com/HariprabuGuru
ஜெ. சமாதியில் சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் பிக்பாக்கெட் அடிப்பு.
# பர்ஸ்ல இன்னமும் அம்மா போட்டோ இருக்கான்னு பாக்கத்தான் எடுத்தேன் ஜட்ஜய்யா...
twitter.com/ItsJokker
அதிபர்: என் அரசியல் வாழ்க்கையை யாராலயும் அழிக்க முடியாது...
தம்பீஸ்: சூப்பர் அண்ணா!
அதிபர்: நான் பேசப் பேச தானாவே அழிஞ்சிரும்...
twitter.com/prabhu65290
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தி.மு.க அரசுதான் காரணம்: அர்ஜுன் சம்பத்
# அதுல பாருங்க... முன்னாடி எல்லாம் நேருவைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க, இப்ப அவருக்கு லீவ் விட்டுட்டாங்க போல...
twitter.com/urs_venbaa
ரெஸ்யூம் என்பது தற்பெருமையின் பிரிண்டட் வெர்ஷன்.

twitter.com/swaravaithee
எப்பவும் நெகட்டிவா பேசி அடுத்தவங்க மனச காயப்படுத்தக்கூடாது. உதாரணமா, ‘எனக்கு உன்னை மீட் பண்ணப் பிடிக்கல’ன்னு சொல்றதவிட, ‘கொரோ னாலாம் முடிஞ்சதும் சந்திக்கலாமே’ன்னு சொல்லுங்க.
twitter.com/SundarrajanG
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு எவ்வளவு வெப்பத்தை உருவாக்கியதோ, அதைவிட ஐந்து மடங்கு வெப்பத்தை உலகின் பெருங்கடல்கள் ஒவ்வொரு நொடியும் உள்வாங்குகின்றன.
twitter.com/vandavaalam_
மனிதர்கள் ஒரு மாறுதலுக்காக அன்பு செய்யலாம் என்று எண்ணும்போது பிறர் வாழ்க்கையில் அற்புதங்கள் நடை பெறுகின்றன.
twitter.com/iindran
இந்த டயட் என்ற பெயரில் குறைவாக சாப்பிட்டு பசியோடு திரியும் முறை மிகக் கன்றாவியானது. தேவையானதை, பிடித்ததைத் தின்று, ஜீரணத்திற்குண்டான பணிகள் செய்துகொள்வதே சாலச் சிறந்தது. அதுவே அறம்.
twitter.com/Rarnan_
நம்ம சுயமரியாதைக்குத் தர்ற அதே முக்கியத்துவத்தை அடுத்தவங்க சுயமரியாதைக்குத் தராத வரை நம்மிடம் இருப்பது வெறும் ஈகோ.
twitter.com/amuduarattai
உலகில் அதிகம் மானங்கெட்டது பேரன்பாகத்தான் இருக்கும்.
twitter.com/manipmp
ஞாயிற்றுக்கிழமை சொந்தக்காரங்க வீட்டுக்கு சும்மா போனாலும் சோத்துக்கு வந்ததுபோலவே பார்ப்பாங்க!
twitter.com/HariprabuGuru
லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் போனதால, அவங்க எங்க வீட்டுக்கு ரெய்டு வந்ததால, ரொம்ப நேரமா நிறைய கேள்விகள் கேட்டதால, அரெஸ்ட் பண்ணிடு வாங்களோன்ற பயம் வந்ததால... என் பொண்டாட்டி புள்ளைக்கு கொரோனா வந்துடுச்சுப்பா!
twitter.com/saravankavi
எனது 41 ஆண்டுக் கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல்போய்விட்டது: ராமதாஸ்
‘‘ஏன், மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலையா..?!”
‘‘எதே, அமைச்சர் பதவியா... ஆமா, அதுக்கென்ன இப்ப?”
twitter.com/balasubramni1
கேள்வி கேட்டதும் உடனே சொல்லப்படும் பொய்கள் உண்மையாகவும், தாமதித்துச் சொல்லப்படும் உண்மைகள் பொய்யாகவும் சில நேரங்களில் கருதப்படுகின்றன.
twitter.com/sultan_Twitz
நான் பார்த்ததிலேயே மிக மோசமான ஐ.பி.எல் தொடர் இதுதான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
ஆமா... இவரு விளையாண்ட காலத்துல மேட்சுக்கு மேட்ச் சிக்ஸும், ஃபோருமா அடிச்சி தள்ளிட்டாரு!
twitter.com/PG911_twitz
என் மனதிலிருந்த பாரத்தையெல்லாம் அம்மாவிடம் இறக்கி வைத்துவிட்டேன்: சசிகலா
# சமாதி எவ்ளோ பாரம் தாங்கும்னு செக் பண்ணிட்டுதானே இறக்கி வெச்சீங்க?
twitter.com/mohanramko
தம்பிகள் நவ்: நல்லவேளை, ஒரு ஓட்டுக் கதையில ஓட்டே வாங்காத நம்மை மறந்துட்டாங்க...
twitter.com/raajaleaks
ஒரே நேரத்துல ஏழு டீம் ஃபேன்ஸோட சண்ட செய்யணும்... சி.எஸ்.கே ஃபேன்ஸா இருப்பது அவ்வளவு சுலபமில்லை. நமக்கு மாமன் மச்சானும் இல்லை. எத்திசையிலும் எதிரிகள் மட்டுமே.
twitter.com/Suyanalavaathi
ஆயுத பூஜைக்கு பைக்குக்கு மாலை போட்டு பூஜை செய்யும்போது...
that bike: ஆயுத பூஜைக்கு மாலை போட்டியே... என்னைக்காவது ஒழுங்கா என்னைய சர்வீஸுக்கு விட்ருக்கியா?
twitter.com/ramesh_twetz
வேதனையிலும் வேதனை என்பது யாதெனில்... முப்பது நாள விட முப்பத்தி ஓராவது நாள் ஞாயித்துக்கிழமை என்பதுதான்! # புரட்டாசி
twitter.com/Suyanalavaathi
ஒண்ணு மட்டும் சொல்லுறேன், இந்த கூகுள் மேப்ஸ நம்பி ஷார்ட் கட்ல போகணும்னு போனா, ஒரு சுத்து சுத்தி எக்ஸ்ட்ரா பெட்ரோல் செலவு மட்டும் நிச்சயம்!

twitter.com/sultan_Twitz
அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து: செய்தி
# EPS&OPS: ஒரே கட்சிக்குள்ள இருந்துக்கிட்டு அசிங்கமா எதுக்குப்பா வாழ்த்து சொல்ற..?
twitter.com/_blankie
ராட்சசி, யாஞ்சி இதுமாதிரி எதுனா எழுதணும்னு ‘ரசவாச்சி’யாம்...
# சொல்லும்போது, ‘ரசம் வச்சியே கொழம்பு வச்சியே’ன்னு கேக்குது!
twitter.com/mrithulaM
இந்த உலகத்தில் கலப்படம் இல்லாதது, ஆண்களின் சிரிப்பு மட்டும்தான்... ஆனா ரெண்டு புள்ளை பெத்தப்புறம் சிரிப்பு வர வெக்குறதுதான் கஷ்டம்.
twitter.com/kadalaimuttaa
காஞ்சனா 3 - அரண்மனை 3, மேட்ச் டிரா... நீங்க ரெண்டுபேரும் சேந்து ஏன்
‘காஞ்சமனை 4 ‘னு ஒண்ண எடுத்து இந்த franchise’க்கு ஒரு எண்ட் கார்டு போடக்கூடாது..?!
facebook.com/RedManoRed
ஒருத்தி பயோ: பீனிக்ஸ் பறவை நான். வீழ்ந்தாலும் எழுந்து வருவேன்.
ஏம்மா... அப்டி ஒரு பறவையே இல்லையாமே?
twitter.com/prabhu65290
காதலின் வலிதான் வலிகளில் பெரிது...
# கிட்னி ஸ்டோன் வலி வந்திருக்கா?
twitter.com/HariprabuGuru
பா.ம.க தலைமையில்தான் இனிமேல் கூட்டணி. கடைசி நேரத்தில் முடிவு மாறும் நிலை இருக்காது: டாக்டர் ராமதாஸ்
# அன்னைக்குக் காலைல ஆறு மணி இருக்கும். கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு...