சினிமா
Published:Updated:

வலைபாயுதே

ஆண்ட்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்ட்ரியா

நாம தனியா ஒக்காந்து பாத்துட்டு இருக்கும்போது இந்த வெப்சீரிஸ் மண்டையனுங்க நய்நய்ன்னு பேசிட்டே இருக்காங்க

twitter.com/akaasi

நாய்கள் நம் கண்ணோடு நேர்ப் பார்வை பார்ப்பது அத்தனை எளிதல்ல. நம்பிக்கையும், பாசமும் கொண்ட கண்களையே அவை ஊடுருவி உற்று நோக்கும்.

twitter.com/skpkaruna

அமெரிக்கா போகும் வழியிலேயே விமானத்திலேயே ஆப்கன் பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருக்கு. ஜெர்மனியில் இறக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்காம்! அமெரிக்க ராணுவ விமானத்தில் பிறந்ததால், டெக்னிக்கலி அந்தக் குழந்தை அமெரிக்கக் குடிமகன் ஆகிடுச்சாம்! ஆனால் தாய் மட்டும் இன்னமும் அகதிதானாம்.

Kushboo: என்றும் மகாராணி!
Kushboo: என்றும் மகாராணி!

twitter.com/Arappor

ஒரு மாநிலத்தின் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவரே தன்னுடைய பெயரில் வாங்கும் நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டிப் பதிவு செய்கிறார் என்றால், அவர் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறார். இந்த துரோகத்துக்குக் கடுமையான தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்.

twitter.com/mohanramko

“தமிழ்நாடு அரசு அறிவித்த பெட்ரோல் விலைக்குறைப்பு இன்னும் அமலுக்கு வரவில்லை” - எல்.முருகன்

நிருபர் : அமலுக்கு வந்து நாலு நாள் ஆச்சு சார்.

நான் சொன்னது டெல்லியில...

twitter.com/narsimp

நானும் பாத்துட்டேன்... நாம தனியா ஒக்காந்து பாத்துட்டு இருக்கும்போது இந்த வெப்சீரிஸ் மண்டையனுங்க நய்நய்ன்னு பேசிட்டே இருக்காங்க... எதேச்சையா ஹாலுக்கு வந்து என்ன பாக்குறன்னு வீட்ல கேட்கும்போது கிஸ்ஸுகளென்ன... வசனங்க ளென்னானு ஒரேடியா ஆரம்பிக்கிறானுக.

Andrea: நீல வெளி!
Andrea: நீல வெளி!

twitter.com/rmuthukumar

என்னை எளிமையானவர் என்கிறார்கள். நான் பயன்படுத்துவது பிஎம்டபிள்யூ கார். வசிப்பது போயஸ் கார்டன் வீட்டில். சாப்பிடச் செல்வது ஐந்து, ஏழு நட்சத்திர ஹோட்டல் களுக்கு. உடை மட்டும் எளிமை. அவ்வளவுதான். இதை எப்படி எளிமை என்று சொல்வது? - ரஜினி கொடுத்த பதில்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

twitter.com/Aasifniyaz

ஏரோபிளேன்ல ஃபுட்போர்டு அடிச்சுட்டு அவ்வளவு தூரம் போய் சிரமப்பட வேணாம். எங்க நாட்டுக்கு வாங்கன்னு கூப்பிடத் தோணுதா சவுதி அரேபியாவுக்கு? சக இஸ்லாமியனுக்கு உதவாம யாருக்கு உதவுவானுங்க?

twitter.com/arattaigirl

இரக்கமானவர்களா இருக்கறதுக்கும் இளிச்சவாயர்களா இருக்கறதுக்கும் ஒரு சின்னக் கோடுதான் வித்தியாசம்.

twitter.com/Lallu_twitz

மழை வர்றப்ப மொட்டை மாடியில் இருந்து காயப் போட்ட துணி எடுத்துட்டு வர்ற மாதிரியே தாலிபன்கள் சுத்துறானுக.

twitter.com/HariprabuGuru

ஆட்சியமைப்பது லட்சியம்.

ஆளுநர் பதவி நிச்சயம்! - தமிழக பா.ஜ.க

twitter.com/RajaAnvar_Offic

பெட்ரோல் விலை, பிபி சுகர் ஏறினாக்கூட வராத பதற்றம், அம்மா வீட்டுக்குப் போன மனைவி ஒருநாள் முன்பே வரும்போது வந்துவிடுகிறது!

Sivakarthikeyan: அட்ரா சக்க! அட்ரா சக்க!
Sivakarthikeyan: அட்ரா சக்க! அட்ரா சக்க!

facebook.com/PriyadarshiniRL

பிக் பாஸ் ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும் போதும், கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டைச் சுற்றிக் காண்பிப்பார்.

ஒவ்வொரு சீசனிலும் சமயலறையைக் காண்பிக்கும்போதோ, கன்டஸ்டன்ட்டை அறிமுகம் செய்யும்போதோ... எதாச்சும் ஒரு முறையாச்சும் “எனக்கு சமைக்கவெல்லாம் தெரியாது. நல்லா சாப்பிடத் தெரியும்” என்பதை, அதாவது ‘66 வயசாச்சு... இதுவரை சமயலறையில் நுழைந்ததுகூடக் கிடையாது’ என்பதை திரும்பத் திரும்ப ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்து வருகிறார்.

இப்போது அவரைத் தொடர்ந்து மாஸ்டர் செஃபின் முதல் எபிசோடிலேயே “42 வயசாச்சு... நான் இதுவரை சமயலறையில நுழைஞ்சதில்ல... நல்லா சாப்பிடுவேன்” என விஜய் சேதுபதி அண்ணா சொல்கிறார்.

“பல வருடங்களாக சமைக்காம யாரோ சமைச்சத சாப்பிட்டுட்டுருக்கேன்” என்பதைப் பெருமையாக இரு மாபெரும் ஆண் நடிகர்கள் பொதுவெளியில் பகிர்ந்தால், அதுவும் ஒரு குக் ஷோவிலேயே பகிர்ந்துகொண்டால், என்ன மாதிரியான பிற்போக்குத்தனமான ஒரு மனநிலை உங்களுடைய ரசிகர்களிடம் உருவாகும் என்பதை நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

ஏற்கெனவே நீங்க பெரிய திரைல செஞ்சத எல்லாம் தவம்போலப் பின்பற்றும் மூடர்கள் வாழும் தமிழ் நாட்டில் வாழும் சகமனுசியாகக் கேட்கிறேன்... இது நியாயமா? நீங்க செய்றது சரிதானா?

facebook.com/sowmya.ragavan/

என்னைவிட வேலைதான் முக்கியமான்னு சண்டை போடற எந்தப் பெண்ணும் வேலையில்லாதவனைக் காதலிக்கத் தயாராயில்லை.

facebook.com/NaveenKumarN85

சற்று முன் சூப்பர்மார்க்கெட்டில் பில் போடும்போது,

‘சார்... ப்ளாஸ்டிக் பேக்’குப் பதிலா இந்த பேக் வாங்கிக்கங்க. இது ரொம்ப நாள் உழைக்கும்.’

‘எவ்ளோ விலை?’

‘ப்ளாஸ்டிக் பேக் 15 cent. துணி பேக் ஒரு டாலர்.’

‘அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல... எனக்கு ப்ளாஸ்டிக் பேக்தான் புடிக்கும்’

மைண்ட்வாய்ஸ்: போங்கடா... ஒரு டாலர் எவன் கொடுப்பான்.. ஏமாத்தப் பாக்குறீங்களா?

‘சார்... ஐ மீன். துணி பேக் பொதுவா ஒரு டாலர். ஆனா இன்னைக்கு ஆஃபர்ல அதும் 15 cent தான். விழிப்புணர்வுக்காக இந்த ஆஃபர்.’

‘ஓ... அப்டியா... அப்ப சரி அப்ப சரி... துணிப்பையே கொடுங்க... ப்ளாஸ்டிக்க மொதல்ல தூக்கி வீசுங்க.’

#ப்ளாஸ்டிக்கை ஒழிப்போம். பூமித்தாயைக் காப்போம். சமூகப் பொறுப்புடன் செயல்படுவோம்.

twitter.com/drkvm

தூத்துக்குடி சாவுக்கு வராத பதற்றம், கொடநாடு சாவுக்கு வருவது... ஏன்..?