
பிறவியிலேயே மேல் உதடு பிளவுபட்ட ஒருவர் இருக்கிறார். மூக்கும் ஒரு புறம் வளைந்தே இருக்கும்
twitter.com/SriviShiva
ஓர் உறவில் அன்பைக் கொட்டித் தந்தவள்(ன்) ஏமாறுவது என்பது ஒரு paradox.
facebook.com Elangovan Muthiah
பிறவியிலேயே மேல் உதடு பிளவுபட்ட ஒருவர் இருக்கிறார். மூக்கும் ஒரு புறம் வளைந்தே இருக்கும். அதனால் தெளிவாகப் பேசுவதிலும் பிரச்னை உண்டு. ங, ஞ போன்ற எழுத்துகளையே தொடர்ந்து உச்சரிப்பதுபோல இருக்கும்.
அவரைப் பற்றி அவரின் நண்பர் ஒரு தகவலைச் சொன்னார். அவருக்குத் திருமணமாகி மனைவி கருவுற்றதை அறிந்ததிலிருந்து, பிறந்த மகனைக் கைகளில் ஏந்தும் வரை கிட்டத்தட்ட பத்து மாதங்கள் தினசரி ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்தாராம். பிறக்கும் குழந்தையும் தன்னைப்போல குறைபாட்டுடன் பிறந்துவிடக் கூடாதென்ற எண்ணத்தில் “அந்தப் பத்து மாசமும் பைத்தியக்காரன் மாதிரி, தாடியும் மீசையுமா ஏதோ சிந்தனை யிலேயே இருந்தான்” என்றார்.
“எந்த சாமிக்கு வேண்டிக் கிட்டாராம்” என்று கேட்டேன்.
“அவனுக்கு பெருசா கடவுள் நம்பிக்கை யெல்லாம் கிடையாது. ஏதோ தோணியிருக்கு, தன்னை வருத்திக்கிட்டா தன் பிள்ளையாவது நல்லா வரும்னு.”
பிறகு எதையோ யோசித்துவிட்டுச் சொன்னார். “இவனவிடவா அவம் புள்ளைக்கு பெருசா வேற சாமி இருந்திரப் போகுது.”

facebook.com/revathy.ravikanth
‘‘டேய், ரோஸ் பூத்துருக்கான்னு பாத்துட்டு வா!’’
‘‘அது ஆரஞ்சு கலர்... ரோஸ்னு சொல்ற?”
‘‘ஓ... சரி, ஆரஞ்சு பூத்துருக்கான்னு பாத்துட்டு வா!’’
‘‘ஆரஞ்சு எப்பிடி பூக்கும்?!’’
twitter.com/selvachidambara
கடித்து, நொறுக்கி, உடைத்து ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஆயிரம் முறை மெல்லும் அந்தக் கூர்மையான பற்களிலிருந்து கெட்டிக்காரத்தனத்துடன் நாக்கைப் பாதுகாக்கத் தெரிந்த மனிதனுக்கு, அதே நாக்கை மற்றவர்கள் மனதைக் காயப்படுத்தாமல் பாதுகாக்கத் தெரிவதில்லை.
twitter.com/Maddoc_
ஹாஸ்பிடல் பெட் முன்னாடி பிரார்த்தனை பண்றவங்ககிட்ட நான் நாத்திகம் பேசறதில்ல.
twitter.com/Lorrykaran
சட்டசபைல ஸ்டாலின் பின்னாடி ஃப்ரேம்ல உதயநிதி வர்றா மாதிரி இருக்கை அமைச்சது எதேச்சையா நடந்ததா? சும்மா ஒரு க்ளாரிஃபி கேஷனுக்காகக் கேட்டேன்.
twitter.com/karna_sakthi
நம்ம மொபைல்ல ஒட்டியிருக்கிற Screen protector என்னதான் ஒடஞ்சு, ஸ்க்ராச் ஆகி, சிதறல்களோட இருந்தாலும், நம்ம மொபைல் Displayக்கு ஒண்ணும் ஆகலங்கிற ஆறுதலோட அதை அப்படியே பயன்படுத்துறோம்ல? அதுபோலத்தான் நம்ம துன்பங்களையும் மீறி நாம வாழணும்.
twitter.com/salma_poet
‘தடுப்பூசியை இலவசமா போடுறோம். அதனால கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை ஏத்துறோம்’னு அரசு சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்...
twitter.com/g4gunaa
பொடியன் ரெண்டு அவிச்ச முட்டையை கப்புல வெச்சி தின்னுட்டுருந்தான். பசியா இருக்குன்னு ஒன்னை எடுத்து முழுங்கிட்டேன்.
“இவ்ளோ சீக்கிரம் சாப்புட்டியா... வழக்கமா லேட் பண்ணுவியே”ன்னு என்கொயரி வெச்சிட்டுருக்கா அவங்கம்மா.
# நாம கேஷுவலா இருப்போம்!
twitter.com/iamkarki
சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு. 10 ஆண்டு முடிவுல அந்த 15 லட்சத்தை மக்கள்தான் அரசுக்குத் தந்திருப்போம் போல.
twitter.com/DinosaurOffcial
முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 45% அதிகரித்துள்ளது!
twitter.com/RajaAnvar_Offic
யூடியூப்ல வர்ற விளம்பரங்களைப் போலத்தான், வாழ்க்கையில் சிலநேரங்களில் வரும் சில பிரச்னைகளைத் தவிர்க்கவே முடியாது!
twitter.com/HariprabuGuru
பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி தலைவராக முடியாது: அண்ணாமலை.
சார் யாருன்னு தெரியலை... இவர்தான் குழந்தைல சட்டை போடாம நெஞ்சுல பா.ஜ.க கொடி குத்திட்டு வளர்ந்தவரு.
twitter.com/balebalu
பெயர் சொல்ல விரும்பாத நபர்களிடமி ருந்து தேசியக் கட்சிகள் 3,377 கோடி ரூபாய் வசூல்.
வருமான வரித் துறை நவ்: சாதாரண மனுஷங்ககிட்டதான் துருவித் துருவி ஆதார், பான் நம்பர்னு விவரமா கேப்போம். மத்தபடி அரசியல் கட்சிகளுக்கு எதையும் கண்டுக்க மாட்டோம்.

twitter.com/amuduarattai
‘கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்’ என்பதன் அப்டேட் வெர்ஷன்தான் “சோஷியல் மீடியாவிற்கு வந்தவங்க, சோஷியல் மீடியாவால் அழிவாங்க” என்பது.
twitter.com/Saisudhar1
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவை விட சிறந்த ஆட்சியை அன்புமணி தருவார் - ராமதாஸ்
எங்க... சிங்கப்பூர்லேயா???
twitter.com/ramesh_twetz
குடிபோதைக்கும் மழைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு... ரெண்டுமே வீட்டுக்கு வந்த உடனே லைட்டா குறைஞ்ச மாதிரி இருக்கும்!
twitter.com/LAKSHMANAN_KL
தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க ‘தொய்வடைந்து’விட்டது என்று கூறுவது தவறான கருத்து: விஜய பிரபாகரன்.
‘தேய்வடைந்து’விட்டதுன்னு கரெக்டா சொல்லணுமா பாஸ்?!
twitter.com/amuduarattai
மோடி அரசைப் பார்த்துத் தீவிரவாதிகள் பயப்படுகிறார்கள்: ராஜ்நாத் சிங்
பெட்ரோல் விலை எப்போ ஏத்துவாரோ, சிலிண்டர் விலையை எப்போ ஏத்துவாரோன்னு, பொதுமக்களும் ரொம்ப பயந்துபோய்தான் இருக்காங்கப்பா.
twitter.com/ramesh_twetz
வீட்ல இருக்கிற வயசானவங்க நம்மகிட்ட எதிர்பார்க்கறது ஒண்ணே ஒண்ணுதான்... புன்னகை!
twitter.com/HariprabuGuru
இந்த மாதக் கடைசியில் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்.
ஜி நவ்: புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது... நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது... லால்லலாலாலா...
twitter.com/shivaas_twitz
யூடியூப்: உன் விளம்பரத்தை வீடியோவுக்கு நடுவுல போடணுமா? காசு குடு!
விளம்பரம் இல்லாம வீடியோ பார்க்க premium அக்கௌன்ட் வேணுமா? காசு குடு.
twitter.com/mohanramko
சாப்பிடுவதற்கு முன் உணவைக் காக்காவுக்கு வைக்கிற மாதிரி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல வைக்கிறாங்க...
twitter.com/manipmp
ஒரு நாளின் மொத்த நீளம், சார்ஜ் இல்லாத போன் வைத்திருக்கும்போது புரிந்துவிடுகிறது.