கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

முன்னாடியாச்சும் மாஸ்க்கைக் கழுத்துக்கு மாட்டிட்டு சுத்துவாங்க.இப்போ பேன்ட் பாக்கெட்ல வெச்சு சுத்திட்டு இருக்காங்க.

twitter.com/GreeseDabba2

‘ஏன் பெண்ணென்று பிறந்தாய், ஏன் என் கண்ணில் நுழைந்தாய்..?’

#எனக்குத் தெரிஞ்சு இந்தப் பாட்டைக் கல்யாணத்திற்கு முன் கல்யா ணத்திற்குப் பின் அப்படின்னு ரெண்டு நேர் எதிர் எமோசன்ஸ்ல ஹீரோவால பாட முடியும்.

இன்னிக்கு நம்ம சமையல் - Sachin
இன்னிக்கு நம்ம சமையல் - Sachin

twitter.com/krishnaskyblue

களம் 8-ல இந்தியப் பொருளா தாரத்துக்கு நடந்த சண்டைல ரிசல்ட் ஆகிப்போச்சு. 60 வருஷம் காங்கிரஸ் வெச்சிருந்த +10% GDP-ய நம்ம பேட்டைக்காரன் ஜி வெறும் 6 வருஷத்துல -23%க்குக் கொண்டு போயி உலக சாதனை படைச் சுட்டாருப்பா.

twitter.com/ItsJokker

முன்னாடியாச்சும் மாஸ்க்கைக் கழுத்துக்கு மாட்டிட்டு சுத்துவாங்க.இப்போ பேன்ட் பாக்கெட்ல வெச்சு சுத்திட்டு இருக்காங்க. கொரோனா எங்கன்னு கேட்டா ‘அது ஈரோடு பக்கம், துபாய் பக்கம்’ மோடுல இருக்காங்க. அவ்ளோதான்போல.

க்ளிக்கலாம் - parvathy
க்ளிக்கலாம் - parvathy

twitter.com/DinaMsdian

இந்தியாவுலயே ஒரே ஒரு ஜிதான் பிரபலமா இருக்கணும் அதுவும் நானாதான் இருக்கணும். அதனால நீ இப்ப என்ன பண்ணுற, #பப்ஜி ய பேன் பண்ணிரு...

facebook.com/ஜெ.வி. பிரவீன்குமார் :

GDP வீழ்ச்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?

GDP ங்கிற வார்த்தையே நம்மள ஆண்ட ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தது. அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

சரி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?

தேசத்தில் பிரிவினையைத் தூண்டும் தமிழர்களின் மொழி இது. இதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது.

சரி, GDP-க்கு இந்தியில என்னன்னு சொல்லுங்க.

பாத்தீங்களா, GDPக்கு இந்தியில என்னன்னுகூடத் தெரியல. இதுக்குத்தான் இந்தி கத்துக்கங்கன்னு சொல்றோம். போங்க, போயி அதை மொதல்ல கத்துக்கிட்டு வாங்க. அதுக்கப்புறம் அதைப் பத்திப் பேசலாம். GDP-யா இப்போ முக்கியம்?

facebook.com/gokul.prasad

எவனாவது இன்ஜினீயரிங் காலேஜ் புரொபசருக்கு ஆசிரியர் தின வாழ்த்து சொல்றானான்னு பாரேன்...

 ச்சோ க்யூட் - Sneha
ச்சோ க்யூட் - Sneha

twitter.com/PeterAlphonse7

இந்தியா முழுமையிலும் 500 பேருக்குக் கொரோனா இருக்கும்போது நாட்டையே பூட்டிவைத்தோம்.இம்மாத இறுதியில் 65 லட்சம்பேருக்குத் தொற்று எனும்போது அனைத்தையும் திறந்து வைக்கிறோம். ஏன் அடைத்தோம்? ஏன் திறக்கிறோம்? கேள்வியும் இல்லை.பதிலும் இல்லை.அரசுக்குப் பொறுப்பில்லை; மக்களுக்குக் கவலை இல்லை!

twitter.com/parveenyunus

இந்தித் திணிப்பு, இந்தி படின்னு சொல்றதுதாங்க பிடிக்காது. மத்தபடி இந்திப் பாட்டு, ஹீரோயின்ஸ்லாம் ரொம்பப் பிடிக்கும்ங்க.

டூருக்குக் கிளம்பலாம் - Hansika
டூருக்குக் கிளம்பலாம் - Hansika


twitter.com/manipmp

மக்கள் பசியோடு இருக்கிறார்கள் எனில் அவர்களை ஆள்பவர்கள் நிறையவே தின்றுவிட்டார்கள் என்று அர்த்தம்.

- லாவோ ட்சு