கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

ப்ரீமியர் லீக் கால்பந்து ஆட்டங்களின் போதே கவனித்தேன். பார்வையாளர்களின் உற்சாகக் கூக்குரலின்றி எத்துணை சுவாரஸ்யமான ஆட்டத்துடனும் ஒன்றவே இயலவில்லை.

twitter.com/Mega1Mind

ந்த ஐபிஎல் முழுக்க toss தான் மேட்டர். செகண்ட் இன்னிங்ஸ் வீசற பவுலர்கள டிரீம் 11-ல மொத்தமா விட்டுரலாம். எவன் போட்டாலும் டியூக்கு அடி பொளக்கத்தான் போறானுக.

twitter.com/Nirmal_twetz

ளம் எட்டுல எப்போதும் வழக்கம்போல எங்களுக்கு முதல் மேட்ச் தோல்வி சகஜம்னு மும்பை பேன்ஸ் உருட்டிட்டு இருக்காங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அடி தாங்க முடியாமல்.

வலைபாயுதே

twitter.com/Athiradikkaran

ரீரெக்கார்டிங்ல ஆடியன்ஸ் சவுண்டு கொஞ்சம் தூக்கலா இருக்கு. லைட்டா கம்மி பண்ணுங்க. ஓவர்.

twitter.com/Mega1Mind

ந்து வீசற கேப்புல ஆடியன்ஸ் ரியாக்சன காட்ட வழியில்லைன்னு டக்கவுட்டயே காட்டிட்டிருக்கானுக... அடேய் பவுலரையும் கேப்டனையுமாவது காட்டுங்கடா.

twitter.com/Madurai_Krish

MI:- நாங்க அடிக்கிற ஒவ்வொரு பவுண்டரிக்கும் உங்க ஆளுங்களுக்கு பிபி ஏறும் பாரு

CSK:- நீங்க என்ன பவுண்டரில பிபி ஏத்துறது.மேட்ச் கடைசி பால் வரை நின்னு ஆடி நாங்களே எங்க ஆளுங்களுக்கு பிபி,சக்கரை,உப்பு,புளி-னு எல்லாத்தையும் ஏத்துவோம்.

வலைபாயுதே

/twitter.com/g4gunaa

துல ஒருத்தன் கேக்குறான், அடுத்ததுல இருந்து மும்பை வெளாடுற மேட்ச்ல அம்பயர் பேரையும் டிரீம்11 டீம்ல எடுக்கலாமா சார்னு.

twitter.com/ItsJokker

ரோஹித் ~ இந்தா அடுத்த ஓவர் நீ போடு,

~ தம்பி, அம்பயர்ப்பா நானு.

ரோஹித் ~ அய்யோ, ஸாரி சார், ஸாரி.

www.facebook.com/gokul.prasad.

ப்ரீமியர் லீக் கால்பந்து ஆட்டங்களின் போதே கவனித்தேன். பார்வையாளர்களின் உற்சாகக் கூக்குரலின்றி எத்துணை சுவாரஸ்யமான ஆட்டத்துடனும் ஒன்றவே இயலவில்லை. விளையாட்டு அரங்கத்தின் காலி இருக்கைகளையும் அடிக்கடி காட்டிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குறையை மனதிலிருந்து விலக்கவே முடியாது என்று தோன்றியது. படத்திலிருந்து பின்னணி இசையை துண்டித்ததைப் போல, பந்தியில் பாயாசம் வைக்காததைப் போல, விளையாட்டின் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்திருந்தது. இரசிகர்களின் ஆரவார இரைச்சல் இல்லாததால் முதற்சில ஆட்டங்களுக்குப் பிறகு அவற்றைப் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்த்திருந்தேன். இன்றைக்கு ஐபிஎல் தொடங்குவதாலும் தோனி விளையாடுவதாலும் முதல் ஆட்டத்தை மட்டுமாவது பார்க்கலாம் என்கிற ஆவல் எழுந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே கூதல் ஒலி போன்ற மெல்லிய இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், பார்வையாளர் கேலரியில் யாரையும் காணவில்லை. பிறகு, அந்த ஒலியின் டெசிபல் அளவினை மெல்ல மெல்லக் கூட்டி, சாதாரணமான நாளில் ஆட்டம் நடந்திருக்கும் பட்சத்தில், அந்த மைதானத்தில் வழக்கமாக இருந்திருக்கக்கூடிய ஒலியடர்த்தியை தற்சமயம் கொண்டுவந்துவிட்டார்கள். இதைப் பார்த்தபோது கிரேஸி மோகன், கே.பாலசந்தர் போன்றோரின் நாடகங்களில் இடம்பெறும் ‘நகைச்சுவைக் காட்சிகள்’தான் நினைவுக்கு வந்தன. முன்னமே பதிவுசெய்யப்பட்ட சிரிப்பொலிகளின் (canned laughter) ஒலிக்கோப்புகளை அந்தக் காட்சிகளுடன் இணைத்து நம்மை ஏமாற்றுகிற அசட்டுத்தனத்தை அவற்றில் செய்திருப்பார்கள். அதைப் பின்பற்றி, புறச்சூழலின் செயற்கை ஒலிக்கோவைகளை இந்த ஐபிஎல் ஆட்டத்தின் பின்னணியில் சேர்த்திருக்கிறார்கள்போல. ரோகித் ஷர்மா ஆட்டமிழந்தபோது விசில் சத்தமெல்லாம் கேட்டது. ஏன்டா, என்னதான் பித்தலாட்டமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா?

வலைபாயுதே

twitter.com/raajaleaks

மேட்ச் ஜெயிச்சிங்களே, முரளி விஜய்க்கு ஒரு நன்றி சொன்னிங்களாடா ! அவன் நின்றுந்தா ஜெயிச்சிருக்க முடியுமா! கல்நெஞ்சக்காரனுகளா!

twitter.com/iVedhaLam

சிஎஸ்கே ஹேட்டர்களுக்கு ஒரு ஐடியா. சிஎஸ்கே ஜெயிக்கும்னு நினைச்சு டீம் எடுங்க. ஜெயிச்சா காசு வரும். தோத்தா சந்தோசமா இருக்கும்.

வலைபாயுதே

twitter.com/puthagappuzhu

மானிட்டர்,லேப்டாப்,கிரிக்கெட் ஓடுற டேபு, ஆபீஸ்கால் ஓடுற ஹெட்செட் சகிதம் உன்னைப்போல் ஒருவன் கமல்ஹாசன் மாதிரி உட்கார்ந்துட்டிருக்கேன்.

twitter.com/ItsJokker

மேட்ச்ல தோத்துட்டோமேன்னு விடிய விடிய ஒரே அழுகை, அப்புறம் அம்பானி வந்து அடுத்த தடவை ஆப்போசிட் டீம் பிளேயர்ஸையும் சேத்து வாங்கிடலாம்னு சொன்ன பிறகுதான் தூங்குனாங்க...