Published:Updated:

சூரிய மின்சக்தி... உடனடித் தேவை சில முக்கிய மாற்றங்கள்! அரசு கவனிக்குமா..?

சூரிய மின்சக்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சூரிய மின்சக்தி

S O L A R P O W E R

சூரிய மின்சக்தி... உடனடித் தேவை சில முக்கிய மாற்றங்கள்! அரசு கவனிக்குமா..?

S O L A R P O W E R

Published:Updated:
சூரிய மின்சக்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சூரிய மின்சக்தி

உலகமே புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான காற்று, சூரிய மின்சக்தி உற்பத்தியில் தீவிரமாகக் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. புதைபடிம எரிபொருள்களான நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற வற்றின் பயன்பாடு மனிதர்களுடைய அன்றாட வாழ்வில் இன்றியமை யாததாக உள்ளது. இருப்பினும், இப்போது நாம் பயன்படுத்தும் இதே வேகத்தில் புதைபடிம எரிபொருள் களைப் பயன்படுத்திக் கொண்டிருந் தால், 2060-ம் ஆண்டுக்குள் புதைபடிம எரிபொருளின் இருப்பு முற்றிலும் தீர்ந்துபோகக்கூடும்.

எதிர்கால ஆற்றல் உற்பத்தித்துறை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சார்ந்த தாக இருந்தால் மட்டுமே அது நீடித்த நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற உண்மையை உலக அளவிலான ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் உணரத் தொடங்கியுள்ளன. சூரிய ஆற்றல், காற்றாலை மின் உற்பத்தி போன்றவற்றில் அரசுகளும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. குறிப் பாக, சூரிய மின்சக்தி உற்பத்தியை தொழில்ரீதியாக மட்டுமன்றி, யார் வேண்டுமானாலும் மிகக் குறைந்த அளவிலிருந்தே மேற்கொள்ள முடியும் என்பதால், அது ஆற்றல் நிறுவனங்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

இந்திய அரசாங்கம் 2030-ம் ஆண்டுக்குள் தன்னுடைய மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை 450 ஜிகாவாட் என்ற அளவுக்கு அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த இலக்கில் சுமார் 62% அதாவது, 280 ஜிகாவாட் வரை சூரிய ஆற்றல் உற்பத்தி பங்கு வகிக்கும்.

2014-ம் ஆண்டு மார்ச் மாதக் கணக்குப்படி இந்தியாவின் மொத்த சூரிய உற்பத்தியின் அளவு 11 ஜிகாவாட். ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 ஜிகாவாட் வரை தன் சூரிய மின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்கள் சூரிய ஆற்றல் உற்பத்தியை மேற்கொள்வதை மிகவும் எளிதாக்கியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இன்றளவும் சூரிய மின்சாரத்தை தொழில்ரீதியாக மட்டுமன்றி வீடுகளிலும் பயன் படுத்தும் வகையில் லாபகர மானதாகவோ, எளிதானதாகவோ இல்லாமல், மிகுந்த சிக்கலானதாகவே இருந்துவருகிறது.

சூரிய மின்சக்தி... உடனடித் தேவை சில முக்கிய மாற்றங்கள்! அரசு கவனிக்குமா..?

தொழில்ரீதியாகவும் வீட்டு உபயோகங்களின் அடிப்படையிலும் சூரிய மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விலை நிர்ணயிக்க வேண்டும். அந்த விலை நிர்ணயம், சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான், புதுப் பிக்கத்தக்க ஆற்றலின் பக்கமாக மக்களை ஈர்க்க முடியும்.

ஆனால், தமிழ்நாட்டில் இப்போது உள்ள சூரிய மின்சக்தி கொள்கை யானது மக்களை அந்தப் பக்கமே திரும்பி விடாதவாறு தடுக்கிறது. இதுகுறித்து சூரிய மின்சக்தி ஆய்வாளர் முனைவர் பழனியப்பனிடம் பேசினோம்.

“பொதுவாக, நம்மால் ஒரு வீட்டுக்கு முழுமையாக சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முடியாது. சூரிய மின்சாரம் பகலில்தான் உற்பத்தி செய்யப்படும். அந்த நேரத்தில், நாம் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இரவு நேரங்களில் மின் வாரியத்திடமிருந்து பெறப்படும் மின்சாரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆகவே, இரண்டுக்குமாகச் சேர்த்து மக்களுக்கு லாபகரமாக இருக்கும் வகையில் விலை நிர்ணயித்தால்தான் அவர்களும் ஆர்வமாக சூரிய மின்சக்திக்கு மாறுவார்கள்.

அதற்கென, சூரிய மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடுவதற்கு கேரளாவில் நெட் மீட்டரிங் (Net metering) என்ற முறை பின்பற்றப் படுகிறது. அதாவது, ஒரு வீட்டில் ஒரு மாதத்துக்கு 40 யூனிட் சூரிய மின்சார உற்பத்தியை மேற்கொள் வதற்கான கட்டமைப்பை நிறுவி உள்ளார்கள். அவர்களுடைய ஒரு மாத மின்சாரப் பயன்பாடு 50 யூனிட் என்று வைத்துக் கொள்வோம். உதாரணத்துக்கு பகலில் 23 யூனிட் பயன்படுத்துகிறார்கள். இரவில் 27 யூனிட் மின்சாரத்தை மின்வாரியத் திடமிருந்து பெற்றுப் பயன் படுத்துகிறார்கள். ஒரு மாதத்தில், பகலில் பயன்படுத்தும் 23 யூனிட் மின்சாரம் போக, மீதமிருக்கும் 17 யூனிட் சூரிய மின்சக்தி மின்வாரியத்துக்கு அனுப்பப்படுகிறது. அதற்கு நிகராக, அவர்கள் மின் வாரியத்திடமிருந்து பெற்ற 27 யூனிட் மின்சாரத்துக்கான தொகையைச் செலுத்தும்போது, மின் வாரியம் அவர்களிடமிருந்து பெற்ற 17 யூனிட் சூரிய மின்சக்தியைக் கழித்து விட்டு, வெறும் 10 யூனிட்டுக்கு மட்டுமே விலை நிர்ணயிக்கும்.

பழனியப்பன்
பழனியப்பன்

இதில், ஒரு வீடு மின்வாரியத்திடமிருந்து பெறும் மின்சாரம் எவ்வளவு, சூரிய மின்சாரத்தில் அவர்கள் பயன்படுத்தியது எவ்வளவு, மின்வாரியத்துக்குக் கொடுத்தது எவ்வளவு என்ற விவரங்களைக் கணக்கு வைப்பது தான் நெட் மீட்டரிங்.

இதன்மூலம், ஒருவர் தன் வீட்டில் மின்வாரியத்திடமிருந்து பெற்ற மின்சாரத்தை எவ்வளவு பயன்படுத்தியுள்ளாரோ, அதிலிருந்து அவர் மின் வாரியத்துக்கு உற்பத்தி செய்து கொடுத்த சூரிய மின்சக்தியைக் கழித்துக் கொள்ளப்படும்.

இதே முறையில்தான் முன்னர் தமிழ்நாட்டிலும் சூரிய மின்சக்திப் பயன்பாட்டுக்கான கொள்கைகள் இருந்தன. ஆனால், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இது மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, ஒருவர் எவ்வளவு சூரிய மின்சக்தியை மின் வாரியத்துக்குக் கொடுத்திருந்தாலும் சரி, அதற்கு ஒரு யூனிட்டுக்கு 2.08 ரூபாய் என்ற விலைக்குத்தான் தமிழ்நாடு மின்வாரியம் பெற்றுக்கொள்ளும். மற்றபடி, அவர்கள் மின்வாரியத் திடமிருந்து பெற்றுப் பயன் படுத்தும் மின்சாரத்துக்கு, முழுமையாகக் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

இந்தக் கொள்கையைப் பின்பற்றி, ஒருவர் சூரிய மின்சார உற்பத்திக்கான கட்டமைப்பை நிறுவினால், அவர் மின்வாரியத் திடமிருந்து பெறும் மின்சாரத்துக்கு எனத் தனி விலையைக் கொடுக்க வேண்டும். அதேநேரம், அவர் உற்பத்தி செய்துகொடுக்கும் சூரிய மின்சாரத்துக்குக் குறைந்த விலையே கிடைக்கும்.

இந்தமுறை பொதுமக்களுக்கு லாபகரமாக இல்லை. இதனால், தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி துறை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

அ.தி.மு.க அரசு மாற்றிய சூரிய மின் உற்பத்திக் கொள்கை களை இந்தப் புதிய அரசு மீண்டும் மாற்றியமைத்து, ‘நெட் மீட்டரிங்’ முறையையே கொண்டுவந்தால் பொதுமக்கள் சூரிய மின் ஆற்றல் மீது கவனம் செலுத்தத் தொடங்குவார்கள். இதனால் மின்சாரத் தேவைக்கு அரசையே முழுக்க எதிர்பார்த்து நிற்கும் நிலைமை மாறும்.

தொழிற்சாலைகள் மட்டு மன்றி, வீடுகளிலும் சிறு சிறு அளவில் சூரிய மின் ஆற்றல் உற்பத்திக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டியது அவசியம். தொழில் நிறுவனங்களுக்கே இந்தக் கட்டமைப்பை நிறுவ அனுமதி கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது.

தமிழ்நாடு ஆற்றல் வளர்ச்சித் துறையின் வழியாக, சூரிய ஆற்றல் தொடர்பான தொழில் களுக்கு, 30 நாள்களுக்குள் அனுமதியளிக்க வேண்டும். ஆனால், இப்போதைய கணக்குப்படி, சுமார் 250 சூரிய மின்சக்தி யூனிட்டுகள், அனுமதிக்காக பல மாதங்களாகக் காத்திருக்க வேண்டியிருக் கின்றன” என்று கூறினார் அவர்.

சூரிய மின் உற்பத்தியைத் தமிழக மக்கள் பயன்படுத்துவதில் உள்ள பிரச்னை குறித்தும் அவர் பேசினார்.

“பொதுமக்கள் வழக்கமாக பகல் நேரங்களில், வேலைக்குச் சென்றுவிடுவதால், தங்கள் வீடுகளில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல்தான், வீட்டிலுள்ள அனைத்து இயந்திரங்களும் பயன்படுத்தப் படும். ஆனால், சூரிய மின்சக்தி பகல் நேரத்தில்தான் கிடைக்கும். அதை அவர்கள் அதிகமாகப் பயன்படுத்த முடியாது.

அதுவே, பகலில் கிடைக்கும் சூரிய மின்சாரத்தை மின்வாரியத்துக்குக் கொடுத்துவிடலாம். அவர்கள் அப்படிக் கொடுக்கும் மின்சக்திக்கு நிகரான மின்சாரத்தை இரவு நேரத்தில் மின் வாரியத்திடமிருந்து பெற்றுப் பயன் படுத்திக்கொள்ளலாம். அதுபோக மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மின்வாரிய மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் என்று இந்திய அளவில் பல மாநிலங்கள் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றன. இதுவே தமிழகத்தில் உள்ள மக்களுக்கும்் சாதகமானதாக இருக்கும். அவர்களுடைய கவனத்தை மாற்று மின்சக்தியின் பக்கமாக ஈர்க்கும்” என்று கூறினார்.

உலக நாடுகள் அனைத்துமே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தீவிரமாகக் கவனம் செலுத்திவருகிறது. இந்தியாவும் தன்னுடைய பங்குக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிக அளவிலான முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது.

நம் அண்டை மாநிலமான கேரளாவிலும்கூட, தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலுமே சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு வசதியாகக் கொள்கை களை வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சியில் அந்த நிலை மாறி, சூரிய மின்சக்தி உற்பத்தித் துறை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தப் புதிய ஆட்சி, நிலைமையைச் சரிசெய்து அனைவரும் சூரிய மின்சார உற்பத்தியில் ஈடுபடும் வகையில் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism