பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அப்ளிகேசன் டு அட்மிஷன்: ச்சும்மா கிழி!

அப்ளிகேசன் டு அட்மிஷன்: ச்சும்மா கிழி!
பிரீமியம் ஸ்டோரி
News
அப்ளிகேசன் டு அட்மிஷன்: ச்சும்மா கிழி!

ஒரு வழியா மேனுவல் அப்ளிக்கேஷன், ஆன்லைன் அப்ளிகேஷன்னு அனுப்பிட்டு, இன்டர்வியூவுக்காகக் காத்திருந்தோம்.

ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்க இருக்கிற அம்மாங்க எல்லாருமே ஸ்கூல் வாட்ஸப், க்ளாஸ் வாட்ஸப்-னு ரெண்டு குரூப்ல மெம்பரா இருப்பாங்க. பசங்க எழுதாம விட்ட க்ளாஸ் ஒர்க்குல ஆரம்பிச்சு, ‘தர்பார் படத்துக்கு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கு, வாங்கிக்கிறீங்களா’ வரைக்கும் இதுல சகலமானதும் பேசப்படும். அந்த வாட்ஸப் குரூப்ல சமீபத்துல, ‘மம்மீஸ், ஆன்லைன்ல எல்.கே.ஜி அப்ளிகேஷன் ஃபார்ம் என்னைக்கு அப்லோடு பண்றாங்கன்னு யாருக் காவது தெரியுமா’ங்கிற மெசேஜைப் பார்த்ததும் மூணு வருஷத்துக்கு முன்னாடி, என் பிள்ளை அட்மிஷனுக்கு நாக்குத்தள்ளி அலைஞ்ச நாளெல்லாம் ஆக்டிவ் மோடுல மனசுக்குள்ள வந்துடுச்சு.

மொத ஸ்கூல்ல, அப்ளிக்கேஷன் ஃபார்மை கையில கொடுக்கிறதுக்கு முன்னாடி, ‘உங்களுக்கு சொந்த வீடு இருக்கா’ன்னு கேட்டாங்க. ‘ஏன், ஃபீஸ் கட்ட முடியலைன்னா வீட்டை ஏலம் விடுறதுக்கா?’ன்னு கேட்டுட்டு வெளியே வந்துட்டோம். அடுத்த ஸ்கூல்ல, ‘டிசம்பர்லேயே சீட்டெல்லாம் ஃபில்லாயிடுச்சு. எங்களோட பிராஞ்சுக்குப் போங்களேன்’னு அட்ரஸ் கொடுக்க, அங்கேயும் போனோம். வெறும் கடக்காலும் இரும்புக்கம்பிகளும் மட்டும் நின்னுக்கிட்டிருக்க, எங்கேயோ இருந்து டிப்டாப்பா ஆபீசர் ஒருத்தர் ஓடி வந்தார். ‘வெல்கம் டு அவர் ஸ்கூல்’னு சொன்னவரோட பின்னாடி, ஸ்கூல எங்க இருக்குன்னு தேடியபடியே நடந்தோம். ‘ஆக்சுவலி ஸ்கூல் ரீ ஓப்பன் ஆகுறதுக்குள்ள கட்டி முடிச்சிடுவோம். பில்டிங் ஃபீஸ் ஒன்றரை லட்சம் கட்டிடுங்க. போன் பண்றோம்’ என்றார் கூலாக. ஓப்பனே ஆகாத ஸ்கூலுக்கு ரீ ஓப்பனான்னு, ஜூட்.

அடுத்து ஆன்லைன்ல அப்ளிக்கேஷன் ஃபில் பண்ற கதைக்கு வர்றேன். ஆன்லைன் அப்ளிகேஷன் என்னிக்கு, எத்தனை மணிக்கு ஓப்பனாகும்ங்கிற விஷயமெல்லாம் நியூஸ் பேப்பர்ல வந்துட்டதால, அதுக்கான பர்த்டே சர்ட்டிஃபிகேட், போட்டோஸ் இதர இத்யாதிகளோடு ரெடியானோம். முன்ன பின்ன ஆன்லைன்ல ஸ்கூல் அப்ளிகேஷன் ஃபில் பண்ணுன அனுபவம் இல்லாததால, அனுபவசாலிகளைத் தொடர்பு கொண்டோம். ‘காலையில 9 மணிக்கு ஓப்பன் பண்ணுவாங்க. நீ பத்து நிமிஷம் முன்னாடியே லாகின் பண்ணிட்டு அப்பப்போ ரெஃப்ரெஷ் பண்ணிட்டே இரு. இல்லன்னா சர்வர்ல டிராஃபிக் ஜாமாயிடும்’ என்றவர்களின் வழிகாட்டலை அப்படியே ஃபாலோ செய்தோம். அப்பா போன் நம்பர், அம்மா போன் நம்பர், அப்பா மெயில் ஐடி, அம்மா மெயில் ஐடி, அப்பா ஆதார், அம்மா ஆதார் எனக் கேட்டதையெல்லாம் கொடுத்து ஃபார்மை சப்மிட் செய்தோம். இன்னொரு ஸ்கூல் ஆன்லைன் அப்ளிக்கேஷனில் அம்மா, அப்பா படிச்ச ஸ்கூல் விவரம் வரைக்கும் கேட்டிருந்தாங்க. இன்னொரு ஸ்கூல்ல சர்வர் ஜாமாகி அப்ளிக்கேஷன் ஃபார்மை ஓப்பனே பண்ண முடியலை. அனுபவசாலிகளின் வழிகாட்டுதலின்படி நைட்டு 9 மணிக்கு மேல ஃபார்ம் ஃபில் பண்ணினோம்.

அப்ளிகேசன் டு அட்மிஷன்: ச்சும்மா கிழி!
அப்ளிகேசன் டு அட்மிஷன்: ச்சும்மா கிழி!

ஒரு வழியா மேனுவல் அப்ளிக்கேஷன், ஆன்லைன் அப்ளிகேஷன்னு அனுப்பிட்டு, இன்டர்வியூவுக்காகக் காத்திருந்தோம். மூணு ஸ்கூல்ல இன்டர்வியூவுக்கு செலக்ட் ஆனான் பிள்ளை. ஒரு ஸ்கூல்ல மதியம் இரண்டரை மணிக்கு இன்டர்வியூ. தூங்கிட்டிருந்த பிள்ளைக்கு டிரஸ்ஸை மாட்டித் தூக்கிட்டுப் போனோம். அஞ்சு அபீஷியல்ஸ், மூன்றரை வயசுப் பிள்ளைக்கு இன்டர்வியூ பண்ண உட்கார்ந்திருந்தாங்க. கலர்ஸ், ஷேப்ஸ், அனிமல்ஸ்னு பிள்ளை நல்லா பிரிப்பேர் பண்ணியிருந்ததால (!) இன்டர்வியூவுல பாஸாயிட்டான். அவனைப் பாராட்டி இன்டர்வியூ செஞ்சவங்கள்ல ஒருத்தர் சாக்லேட்டை நீட்ட, கை எட்டாத என் புத்திரன், நாங்க கண்ணாலேயே கதறுனதைக் கண்டுக்காம டேபிள் மேலே ஏறிப் போய் சாக்லேட்டை வாங்கிட்டு வந்தான்.

இதாவது பரவாயில்ல. அடுத்த ஸ்கூல்ல இன்டர்வியூ அவுட்டோர்ல நடந்துச்சு. மொத ரவுண்ட்ல பிள்ளைகளை வரிசையா நிக்க வெச்சு எல்லார் கையிலயும் ஒரு சாக்லேட் கொடுத்துட்டாங்க. கவரைப் பிரிச்சு சாக்லேட்டை சாப்பிட்டுட்டு கவரை குப்பைத்தொட்டியில கொண்டுபோய்ப் போட்டா, மேனர்ஸ்ல பாஸ். ரெண்டாவது ரவுண்ட்ல ஜிக் ஜாக்கா வரைஞ்சு வெச்சிருக்கிற கோட்டுல கால்படாம நடந்துபோகணும். அப்படி நடந்துட்டா பாடி பேலன்ஸ்ல பாஸ். ஃபைனல் ரவுண்ட்ல கோலிகுண்டுகளை ஒவ்வொண்ணா எடுத்துட்டுப் போய் ஒரு பாக்ஸுக்குள்ள போடணும். கீழே விழாம போட்டுட்டா ஐ அண்ட் ஹேண்டு கோ ஆர்னேஷன்ல பாஸ். சில பொடிசுங்க மிஸ் கையில இருந்த சாக்லேட் தட்டை ஓரக்கண்ணால பார்த்துட்டே இருக்க, இன்னும் சிலது ஜிக் ஜாக் கோட்டு மேல குதிக்க ஆரம்பிச்சதுங்க. நான் பெத்தது கொடுத்த கோலிக்குண்டுங்க அத்தனையையும் சமர்த்தா பேன்ட் பாக்கெட்டுக்குள்ள போட்டுக்கிச்சு.

அப்ளிகேசன் டு அட்மிஷன்: ச்சும்மா கிழி!

மூணாவது ஸ்கூல். வாழ்க்கையோட ஓரத்துக்கே போயிட்டோம். ‘இங்க அஞ்சரை வயசு வரைக்கும் எழுத வைக்க மாட்டோம். மத்த ஸ்கூல்ல எல்.கே.ஜி-யிலேயே எழுத வைக்கிறாங்கன்னு வருத்தப்படக் கூடாது. ஓகே வா’ எனக் கேட்க, சந்தோஷமா தலையாட்டினோம். அந்த ஸ்கூல்லதான் சீட்டும் கிடைச்சது. பை த பை ஸ்கூல் ஃபீஸ்க்கு சில ‘கே’ மட்டும்தான் செலவாச்சுங்க.

அதாகப்பட்டது, ஒரு நல்ல ஸ்கூலைக் கண்டுபிடிக்க ஏழெட்டு ஸ்கூல்ல பல்பு வாங்கினாலும் தப்பே இல்லீங்க. இந்தத் தகவல்களெல்லாம் இந்த வருஷம் பிள்ளைங்களை ஸ்கூல்ல சேர்க்கப்போற பெற்றோர்களுக்கு என்னாலான உதவி.

பின் குறிப்பு: முதல் பிள்ளையை ஸ்கூல்ல சேர்க்கிறப்போதான், தலைகீழா பாதயாத்திரை போற மாதிரியான இந்த அவஸ்தையெல்லாம் ஃபிரெண்ட்ஸ். ரெண்டாவது பிள்ளைக்கு இருக்கவே இருக்கு சிப்ளிங் கோட்டா!