Published:Updated:

சிவகாசியைப் புறக்கணிக்கும் தெற்கு ரயில்வே - மாதத்துக்கு சுமார் ரூ.2 கோடி இழப்பு!

சிவகாசி
News
சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில் நிலையத்தில் சென்னை - கொல்லம் விரைவு ரயில் வண்டி நின்று செல்லாததால், மாதத்துக்கு சுமார் ரூ.2 கோடி அளவு வருவாய் இழப்பு ஏற்படுவதாக ரயில் பணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிவகாசியைப் புறக்கணிக்கும் தெற்கு ரயில்வே - மாதத்துக்கு சுமார் ரூ.2 கோடி இழப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில் நிலையத்தில் சென்னை - கொல்லம் விரைவு ரயில் வண்டி நின்று செல்லாததால், மாதத்துக்கு சுமார் ரூ.2 கோடி அளவு வருவாய் இழப்பு ஏற்படுவதாக ரயில் பணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
சிவகாசி
News
சிவகாசி

கொல்லம் - சென்னை (வண்டி எண்:16102) இடையே செங்கோட்டை, சிவகாசி, மதுரை, திருச்சி வழியே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் முதல்நாள் நண்பகல் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து கிளம்பி மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. மறுமார்க்கமாக சென்னையிலிருத்து கிளம்பும் (வண்டி எண்:16101) ரயில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை கொல்லத்தை சென்றடைகிறது.

இதில் சென்னையிலிருந்து கொல்லத்துக்குக் கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயில் தென் மாவட்டத்தில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வது வர்த்தக ரீதியாகவும், பயணிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகாசி
சிவகாசி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து, ரயில் பயணி உத்தண்டராமனிடம் பேசினோம். ``தென் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழித்தடத்தில் சென்னைக்கு இரண்டு ரயில்களே இயக்கப்படுகின்றன. ஒன்று, பொதிகை, மற்றொன்று, சென்னை-கொல்லம் விரைவுவண்டி.

கொரோனாவுக்கு முன்னர் சென்னை - கொல்லம் விரைவு வண்டி சிவகாசியில் நின்று சென்றது. ஆனால், ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பிறகு ரயில் வண்டி இயக்கப்பட்டதில் கொல்லம் விரைவு வண்டி சிவகாசியில் நின்று செல்வதில்லை. இதனால் பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் விரைவுவண்டி நள்ளிரவு 2 மணிக்கு சிவகாசி ரயில் நிலையத்தைக் கடந்து செல்கிறது. இந்த வண்டி, மதுரையிலும், அதற்கடுத்து விருதுநகரிலும், அதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நின்று செல்கிறது. இந்த ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் 20 நிமிடங்கள் `ஹால்ட்' செய்யப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நள்ளிரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்துக்கு வண்டி வருவதால் ரயிலில் வந்து இறங்குவோரை வரவேற்க போவோரும் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஏனெனில், சென்னை - கொல்லம் விரைவு வண்டியில் வரும் ஒரு நபரை வரவேற்று அழைத்து வருவதற்கு சிவகாசியைச் சேர்ந்த நபர் விருதுநகருக்கு செல்ல வேண்டும் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு போக வேண்டும். ஆனால், இதில் உள்ள முக்கியமான பிரச்னை என்னவென்றால், சிவகாசியில் இருந்து இந்த இரு நகரங்களுக்குமே இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து வசதி கிடையாது.

உத்தண்டராமன்
உத்தண்டராமன்

அப்படியிருக்க, சம்பந்தப்பட்ட நபர் தனது உறவினரையோ அல்லது தெரிந்தவரையோ வரவேற்க சிவகாசியில் இருந்து இரவு 10 மணிக்கு முன்னதாகவே புறப்பட்டு ஏதேனும் ஒரு ஊருக்கு செல்ல வேண்டும். அல்லது, தனியாக ஒரு காரை வாடகைக்கு எடுக்க வேண்டும். இதனால் மக்களுக்கு வீண் அலைச்சலும் பணவிரயமும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காண, ரயில்வே டிவிஷனல் மேனேஜர், தென்னக ரயில்வே, மத்திய ரயில்வே அமைச்சர் எனப் பலருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை" என்றார்.

ட்வீட்டரில் வேண்டுகோள்
ட்வீட்டரில் வேண்டுகோள்

சிவகாசி ரயில் பயணிகள் அமைப்பைச் சேர்ந்த தனசேகரனிடம் பேசினோம்.

``மாவட்டத்தில் விருதுநகரைத் தொடர்ந்து அதிக வருவாய் ஈட்டும் நகரம் சிவகாசி. மாவட்டத்தின் மற்ற நகரங்களைக் காட்டிலும் சிவகாசியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது மாநகராட்சியாக சிவகாசி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளையும் சேர்த்தால் இந்த மக்கள் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கும்‌. தொழில்ரீதியாக தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தி, பிரிண்டிங் தொழிற்சாலைகள், நோட்புக் தயாரித்தல், அச்சகம் எனத் தினம்தோறும் பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இவ்வாறு வணிக கேந்திரமாகத் திகழ்ந்து வரும் சிவகாசியில் ரயில் நிறுத்தம் இல்லாதது வணிகர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

எம்.பி. கடிதம்
எம்.பி. கடிதம்

ரயில் நிறுத்தம் இல்லாததால், நாள்தோறும் டன் கணக்கில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சாலை வழியாக வெளியூருக்கு ஏற்றுமதியாகின்றன. இதனால் இரட்டிப்பு செலவுதான் வணிகர்களுக்கு ஏற்படுகிறது. பார்சல் சேவையில் கொல்லம்-சென்னை-கொல்லம் விரைவு வண்டி சிவகாசியைப் புறக்கணிப்பதால் தோராயமாக மாதத்துக்கு ரூ.2 கோடிக்கு ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் தற்போது சிவகாசியிலிருந்து வெளியூர்களுக்கு சாலை வழியே ஏற்றுமதியாகின்றன.

கொரோனாவுக்குப் பிறகு சென்னை-கொல்லம் விரைவு ரயில் வண்டி சிவகாசியில் நின்று செல்லாததற்கு ரயில்வே நிர்வாகத்திடம் காரணம் கேட்டபோது, மற்ற ஊர்களைக் காட்டிலும் சிவகாசியில் மிகக் குறைந்த அளவிலேயே ரயில் பயணிகள் இந்த ரயிலைப் பயன்படுத்துவதால், சிவகாசிக்கு நிறுத்தம் அறிவிக்கவில்லை எனக் கூறினர். அதிகாரிகள் இந்த பதில் ஏதோ ஒப்புக்காக சொன்னதுபோல் இருந்தது.

சிவகாசி மாநகராட்சி
சிவகாசி மாநகராட்சி

இதை உறுதிப்படுத்துவதற்காகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை-கொல்லம் விரைவு ரயில் வண்டியை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை குறித்து விவரங்களை கேட்டிருந்தோம். ஆர்.டி.ஐ சொன்ன தகவலின்படி, 2019-ம் ஆண்டு மார்ச் முதல் 2020-ம் ஆண்டு மார்ச் வரை இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த ரயிலை 9,343 பேர் பயன்படுத்தி உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தோராயமாக ஒரு நாள் ஒன்றுக்கு 28 பேர் சென்னை-கொல்லம் விரைவு ரயில் பயன்படுத்துவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அப்படியிருக்கையில் அதிகாரிகள் எதற்காக எங்களிடம் இப்படி ஒரு பதிலை சொல்ல வேண்டும். இந்த விஷயம் குறித்து விருதுநகர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூரிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் பேரில் ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் மற்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு அவர் கடிதங்கள் எழுதியுள்ளார். ஆனாலும், இதுவரையில் மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை" என்றார்.

சென்னை - கொல்லம் ரயிலை சிவகாசியில் நிறுத்துவதால், ரயில்வே துறைக்கு லாபம் கிடைக்கும் என்கிற போது, சிவகாசி மக்களின் கோரிக்கையை ஏற்க ரயில்வே துறை ஏன் மறுக்கிறது என்பது விந்தையாக இருக்கிறது. சிவகாசி மக்களின் கோரிக்கையை ரயில்வே துறை ஏற்று, உடனடியாக அங்கு ரயிலை நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு! ரயிவே துறை நடவடிக்கை எடுக்குமா?