Published:Updated:

பாசிச ஆட்சியா... தமிழிசை செய்தது சரியா..? விமர்சகர்கள் கருத்து

பாசிச ஆட்சியா... தமிழிசை செய்தது சரியா..? விமர்சகர்கள் கருத்து

ஒரு பெண் ஊடகவியலாளரைத் தரக் குறைவாக எழுதிய நடிகர் எஸ்.வி.சேகர் இன்றுவரை ஒருநாள்கூட சிறையில் வைக்கப்படவில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுகூரலாம். எனவே, பி.ஜே.பி ஆட்சியிலும், அ.தி.மு.க ஆட்சியிலும் சட்டம் பொதுவானதாக இல்லை.

பாசிச ஆட்சியா... தமிழிசை செய்தது சரியா..? விமர்சகர்கள் கருத்து

ஒரு பெண் ஊடகவியலாளரைத் தரக் குறைவாக எழுதிய நடிகர் எஸ்.வி.சேகர் இன்றுவரை ஒருநாள்கூட சிறையில் வைக்கப்படவில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுகூரலாம். எனவே, பி.ஜே.பி ஆட்சியிலும், அ.தி.மு.க ஆட்சியிலும் சட்டம் பொதுவானதாக இல்லை.

Published:Updated:
பாசிச ஆட்சியா... தமிழிசை செய்தது சரியா..? விமர்சகர்கள் கருத்து

சென்னையிலிருந்து நேற்று விமானத்தில் தூத்துக்குடிக்குச் சென்றார் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் அவருடன் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஷோபியா, `பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக' என்று கைகளை உயர்த்தி முழக்கம் எழுப்பியிருக்கிறார். பிறகு, தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடனும் மீண்டும் கைகளை உயர்த்தி தமிழிசையைப் பார்த்து ஷோபியா முழக்கம் எழுப்பியுள்ளார். அது ஒரு வாக்குவாதமாக அங்கே மாறியது. பின்னர், தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று பிரிவுகளின்கீழ் ஷோபியா கைது செய்யப்பட்டார். 15 நாள்கள் நீதிமன்றக் காவல் என அழைத்துச் சென்றார்கள். இந்த விஷயம் தெரிந்ததுமே, தலைவர்களின் கண்டனம் உட்பட சமூக வலைதளங்களில் ஷோபியாவுக்கு ஆதரவு பெருகியது. '#பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்ற வாக்கியம் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனதற்கு இடையில், தற்போது ஷோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் கிடைத்துள்ளது. இந்தச் சூழலில், விமானத்தில் ஷோபியா முழக்கம் எழுப்பியது குறித்தும் அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யப்பட்டது குறித்தும் இருவரிடம் கருத்துக் கேட்டேன். 

சமூக ஆர்வலர் ராமசுப்பிரமணியன்: 

"என்னைக் கண்டால், தமிழிசைக்குப் பிடிக்காது. எனக்கும் அவரைக் கண்டால் பிடிக்காது. பி.ஜே.பி-யின் செயல்பாடுகள் சிலவற்றை எனக்குப் பிடிக்கவில்லை. அதுகுறித்து விமர்சனம் செய்தேன். என்னைக் கட்சியிலிருந்து வெளியே அனுப்பினார் தமிழிசை. அதன் அடிப்படையில் நான் இதைச் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஷோபியாவை விடுதலை செய்தது நல்லது. அவர் ஆராய்ச்சி மாணவி என்று தெரியவருகிறது. அவருடைய எதிர்காலத்தை நாம் பாழாக்கக் கூடாது. அவருடைய பின்னணியில் குறிப்பிடும்படியான அமைப்புகள் ஏதும் இல்லை என்று தெரியவந்த பின்பு, அவரை சிறையில் வைக்கும் நோக்கம் இருந்தால் அது தவறு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், அதே நேரத்தில் ஷோபியா செய்ததைத் தனிப்பட்ட ஓர் எதிர்ப்பாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில், தேச விரோதக் கும்பல்கள் அதிகரித்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் இருந்துகொண்டு நம் நாட்டுக்கு எதிராகப் பலர் இயங்குகிறார்கள். ஷோபியா கிறிஸ்தவர் என்பதால், அவருக்குப் பின்னால் கிறிஸ்தவ மிஷனரியின் உந்துதல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுவுமில்லாமல், அந்த மாணவி கையை உயர்த்தி கோஷம் போட்ட விதம் சாதாரண மாணவி செய்யக்கூடியதாக இல்லை என்பதும் தமிழிசை மூலமாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது. நம் தேசத்தைத் துண்டாடக்கூடிய சின்னச் சின்ன அமைப்புகள் பெருகிக் கொண்டு வருகின்றன. அந்த அமைப்பிலிருந்து வந்த ஒரு பெண்ணாகக்கூட ஷோபியா இருக்கலாம்தானே. அவரை நிச்சயம் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.'' 

பேராசிரியர். சுப.வீர பாண்டியன்:

``இந்த நிகழ்வைப் பொறுத்தவரையில் தமிழிசை அவர்களின் தோற்றமும், எண்ண வெளிப்பாடும் மட்டும்தான் தெரியவந்திருக்கிறது. மறுதரப்பில் என்ன நடந்தது என்பதை மாணவி ஷோபியா இதுவரை சொல்லவில்லையா.... அல்லது சொன்னது வெளியாகவில்லையா? 

இரண்டு தரப்பைக் கேட்டதற்குப் பிறகுதான் நமக்கு உண்மை தெரிய வரும். இது ஒருபுறமிருக்க, நான் என் கருத்தை இரண்டு கோணங்களில் சொல்ல விழைகிறேன். ஓர் ஆட்சிக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை, வெளியிடுவதற்கு விமான நிலையம், விமானம் ஆகியவை உரிய இடங்கள் இல்லை. அதே நேரத்தில், பாரதிய ஜனதா கட்சி இப்படிப் பலமுறை, பலரையும் பொது இடங்களில் வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. மாணவி ஷோபியா, எந்தவொரு கண்ணியக் குறைவான சொல்லையும் பயன்படுத்தியதாகத் தமிழிசையே கூறவில்லை. பி.ஜே.பி ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டிருக்கிறார் என்பது மட்டுமே தெரியவருகிறது. எனவே, ஒரு ஜனநாயக நாட்டில் இது அப்படியொன்றும் பெரிய குற்றமில்லை. அவரை, உடனே கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்திருந்தது ஒடுக்குமுறையாகவே தெரிகிறது. 

ஒரு பெண் ஊடகவியலாளரைத் தரக் குறைவாக எழுதிய நடிகர் எஸ்.வி.சேகர் இன்றுவரை ஒருநாள்கூட சிறையில் வைக்கப்படவில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுகூரலாம். எனவே, பி.ஜே.பி ஆட்சியிலும், அ.தி.மு.க ஆட்சியிலும் சட்டம் பொதுவானதாக இல்லை. இவையெல்லாம் பி.ஜே.பி ஆட்சி ஒரு பாசிச ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் சமூக வலைப்பதிவும் சரியானதே என்பது என் கருத்து.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism