வனங்களில் காலம்காலமாக வசித்துவரும் 11 லட்சம் பழங்குடியினரை வனங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஓர் உத்தரவு வருவதற்கு, மத்திய அரசின் நடவடிக்கைகளே காரணம் என்று பழங்குடி அமைப்புகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகிறார்கள்.

பழங்குடி மக்களின் நலனுக்காகவும், வனம் மீதான அவர்களின் உரிமைகளுக்காகவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், ‘வன உரிமைகள் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. பாரம்பர்யமாக வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டபூர்வமாக விண்ணப்பித்து, அவர்கள் தங்களை உறுதிசெய்து கொள்ளவேண்டும் என்கிறது, இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தை எதிர்க்கும் சிலர், ‘இந்தச் சட்டம், வனப்பகுதிகளுக்குள் நில ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கிறது. இதனால், வனப்பரப்பு குறைகிறது. பழங்குடி மக்களால், வனத்தின் பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது’ என்று குற்றம்சாட்டினர். இத்தகைய வாதங்களுடன் தொடரப்பட்ட வழக்கு, சுமார் பத்தாண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கு 2016-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, ‘பழங்குடியினருக்கு வனம் மீது சட்டப்படி உரிமை உண்டு. அதேசமயம், உரிமை கோரியவர்களின் மனுக்கள் நிராகரிக்கப் பட்டிருந்தால், அவர்கள் வனத்தைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அல்லது, சட்டப்படி அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 41 லட்சம் மனுக்களில், 18 லட்சம் மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. 20 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இந்த உரிமை மறுக்கப்பட்டவர்களைத்தான், வனங்களைவிட்டு வெளியேற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற ஜூலை 27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள், பட்டா இல்லாத பழங்குடி மக்கள் வனங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இது குறித்து பழங்குடி மக்களுக்காகப் போராடி வருபவரும், ஆய்வாளருமான பிஜோய், “உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிய காலஅவகாசம் வழங்காமல், இப்படி வெளியேற்றும் அதிகாரம் அந்தச் சட்டத்தில் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. மத்திய அரசு வலிமையான எதிர்வாதத்தை வைக்கத் தவறிய நிலையில், அனைத்து மாநில அரசுகளும் அந்த வேலையைக் கையிலெடுத்து, இந்த வழக்கில் வாதாட வேண்டும்” என்கிறார்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பி.சண்முகம், “மத்திய அரசு, திட்டமிட்டு இந்த வழக்கில் அமைதி காத்துள்ளது. இந்தச் சட்டப்படி பலன்பெற வேண்டிய யாரையுமே பிரதிவாதிகளாக இணைக்கவில்லை. ஆகவே, பிரதிவாதிகளாக இணைக்கப்பட்ட மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும், மாநில அரசுகளும் அவர்களின் தரப்பில் பேசியிருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. முந்தைய மூன்று வாய்தாக்களிலும், உத்தரவு பிறப்பித்த அன்றும், அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகவே இல்லை. இதனால், அவர்கள் தவிர்த்துப் பயனாளிகள் தரப்பிலிருந்து பேச யாருமே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. மத்திய அரசு, இதை ஒரு நோக்கத்துடனே செய்திருக்கிறது. ஏற்கெனவே, மலைகளில் இருக்கக்கூடிய கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்காக, ஒரு சட்ட வரைவு கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டுமென்றால், பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். பழங்குடிகளை வெளியேற்றிவிட்டால், சட்டபூர்வமாக அதைச் செய்துகொள்ளலாம் என்பது அவர்களின் திட்டம். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வருவதற்குக் காரணமே, மத்திய அரசின் மெத்தனமான அணுகுமுறைதான்” என்று குற்றம்சாட்டுகிறார்.

இந்த விவகாரம் குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான பாலமுருகன் நம்மிடம், “இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, சட்டரீதியாக நடக்கப்போகும் மிகப்பெரிய அழிவே இந்த உத்தரவு. மக்களை இந்த அளவுக்கு வெளியேற்றுவதை எந்த மாநில அரசும் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசும் இதை எதிர்க்க வேண்டும். நில உரிமைக்கான அங்கீகாரத்தையே இந்தச் சட்டம் தருகிறது. அதைச் செய்வதற்கான அமைப்புகளே தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்னும் முழுமையாகக் கட்டமைக்கப்படவில்லை. உரிமைகள் மறுக்கப்பட்டால் உடனே வெளியேற்றலாம் என்றெல்லாம் சட்டம் சொல்லவில்லை. மூன்றுகட்ட மேல்முறையீடுகள் உள்ளன. நாட்டின் காடுகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென்பதே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நோக்கம். ஆனால், காடுகளைப் பழங்குடிக் கிராமங்களின் கட்டுப்பாட்டில் கொடுக்கிறது, வன உரிமைச் சட்டம். அதுதான் சரியானது. அந்த உரிமையைப் பறிக்கக்கூடாது. ஜனநாயக முறைப்படி, இத்தனை லட்சம் மக்களை வெளியேற்றும் உரிமை நீதிமன்றங்களுக்கே கிடையாது. இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது” என்றார்.

காடுகள் மீது பழங்குடி மக்களுக்கு இருக்கும் உரிமைதான், காடுகளைப் பாதுகாத்து வருகிறது. காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால், பழங்குடியினரின் இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

- க.சுபகுணம்