Published:Updated:

காந்தி மகான் தரிசனம்

Mahatma Gandhi
பிரீமியம் ஸ்டோரி
News
Mahatma Gandhi

1937ற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து 1946ல் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தி தரிசனம்...

நாளை அதாவது 21 - ந் தேதி திங்கட்கிழமையன்று நாட்டின் ஒப்பற்ற தலைவரும், உன்னத அவதார புருஷருமான காந்தி மகான் சென்னைக்கு விஜயம் செய்கிறார்! காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கும் பாக்கியம் நாளைய தினம் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கிறது! அந்த அதிர்ஷ்டத்தில் நாமும் பங்கெடுத்துக் கொண்டு, மகாத்மாவுக்குப் பணிவுடன் நல்வரவு கூறுகின்றோம்!

1937 ல் சென்னைக்கு இதே தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபையின் ஆதரவில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை வகிக்க காந்திஜி இங்கு வந்தார். அதன் பிறகு, எட்டு வருஷங்கள் சென்று, இப்போதுதான் அவர் இங்கு விஜயம் செய்கிறார். ஆகவே காந்திஜியை நீண்ட காலத்திற்குப் பின் காணும் போது தமிழ்நாட்டினர் இதயம் அடையக் கூடிய உற்சாகத்திற்கு அளவு இருக்க முடியாது.

மேலும் 26s யன்று சுதந்திர வாரம் வருகிறது. சுதந்திர வாரத்தில், நம்மிடையே காந்திஜியும் இருக்கப் போகிறாரென்பதை நினைக்கும் போது நம்முடைய உற்சாகம் இன்னும் பெருக்கெடுக் தமது எழுபத்தேழாவது வயதில் காந்திஜி இந்த நீண்ட தூரப் பிரயாணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

வங்காளம், அஸ்ஸாம் சுற்றுப்பிரயாணத்திற்குப் பின் தமிழ் நாட்டிற்கு வரு கிஞர். வங்காளத்திலும், அஸ்ஸாமிலும் காந்திஜி ஒவ்வொரு தாளும் நீண்ட நேரம் ஓய்வின்றி அந்த மக்களிடையே அலுவல் களைக் கவனிக்க வேண்டி யிருந்தது. அந்த மாகாண ஜனங்களின் துயர்களை நேரில் அறியவும் பணிவிடை செய்யவும் மகாத்மா சிறிது காலம் அவர்கள் மத்தியிலேயே இருக்க வேண்டியதாயிற்று.

காந்திஜி அங்கு நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்களில் லட்சக் கணக்கான ஜனங்கள் கூடி, பல மணி தேரம் காத்திருந்தார்கள் என்ற செய்திகளைப் படித்தவர்களுக்கு, வங்க, அஸ்ஸாம் மக்கள் காந்திஜியின் வருகைக்காக எவ்வளவு தூரம் துடித்துக் கொண் டிருந்திருக்க வேண்டு மென்பது விளங்கும்.

Mahatma Gandhi
Mahatma Gandhi

உலகத்தில் பட்டினி கிடந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் விடுவதைப் போன்ற கொடுமையான மரணம் வேறு கிடையாது. அந்த நரக வேதனைச் சாவு வங்காளத்தில் தோன்றி ஆறறிவு படைத்த மனித வர்க்கத்திற்கே ஓர் சாபத்தைத் தேடிவைத்து விட்டது. அப்படி வங்கப் புதல்வர்கள் பூச்சி புழுக்களைப் போல்

கேட்பாரற்று மடிந்த செய்தி, அப்போது சிறையிலிருந்த காந்திஜிக்குத் தெரிந்தது. காந்திஜிக்குச் சிறையில் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மூன்று துக்க நிகழ்ச்சிகள் சம்பவித்தன. முதலாவது மகாதேவ தேசாயைப் பிரிந்ததால் ஏற்பட்டது. இரண்டாவது தமது உயிர்த் துணைவியாரைப் பிரிந்ததால் ஏற்பட்டது.

மூன்றாவதுதான் இவை எல்லாவற்றையும் விட துயரமளித்த வங்காளப் பஞ்சக் கொடு மைச் செய்தியை அவர் கேள் விப்பட்டதாகும். எனவே, வங்காள அஸ்ஸாம் வாசிகள் மகாத்மாவைக் காண எவ்வளவு துடித்துக் கொண்டிருந்தார்களோ, அவ்வளவு மகாத்மாவின்

உள்ளமும் அவர்களை நாடிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டு மென்று துடி துடித்திருக்கிறது. இதனாலேயே, சிறையினின்று வெளியே வந்ததும் காந்திஜி தமது வங்காளப் பிரயாணத்திற்குத் திட்டம் வகுத்தார்.

பத்திரர்களை இழந்த சோகத்தினால் மூர்ச்சித்து கிடக்கும் வங் கத் தாய்க்கு காந்திஜி ஆறுதலும் தேறுதலும் கூறினார். மகாத்மா விஜயத்தினாலேயே பஞ்சத்தில் இறந்த வங்கப் புதல்வர்களின் ஆன்மா சாந்தியடையவும் முடியும்.

வங்காளம் அஸ்ஸாம் இவற்றிற்கு அடுத்தபடியாகத் தமது பிர யாணத் திட்டத்தில் காந்திஜி தமிழ் நாட்டைச் சேர்த்துக் கொண்டி ருப்பதில் கூட ஒரு காரணமும் இருக்கிறது. முன் சொன்ன மாகா ணங்களைப் பார்ப்பதால், தம்முடைய மனதிற்கு ஏற்படக் கூடிய வேதனையைத் தணித்துக் கொள்ள காந்தி ஜிக்கு தமிழ் நாடு ஏற்ற இடமாக விளங்குவது தான் அந்தக் காரணம் அவருடைய மன திற்குத் திருப்தியளிக்கக் கூடிய முறையில் தேசீயத் துறையில் முன் னேறியுள்ள மாகாணங்களில் தமிழ் நாடு முன்னணி ஸ்தானம் வகித்து வருவது பிரசித்தமான விஷயம்.

காந்திஜி தம்முடைய வாழ்நாளின் லட்சியமாக நிர்மாணத் திட் டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தை நிறை வேற்றி வைப்பதன் மூலம் சுதந்திர லட்சியத்தையும் பெற முடியு மென் அவர் வழி காட்டவும் தவறவில்லை. அப்படி காந்தி மகான் காட்டிய வழியில் முன்னேறிச் செல்வதில் இன்று தமிழ் நாடு, நாட்டின் இதர பாகங்களுக்குத் தலைமை வகிக்கிற தென்ப தைப் பெருமிதத்துடனே கூற வேண்டும்.

சமீபத்தில் கௌஹத்தியில் நடந்த ஒரு பிரார்த்தனைக் கூட்டத் தில் நிர்மாணத் திட்டங்கள் எப்படித் தமது உடலின் உயிராக இருந்து வருகிறதென்பதை விவரிக்கும் போது காந்திஜி, ' ' இந்தத் திட்டங்களே எனது வாழ்நாளின் லட்சியம். இவையே சுதந்திரத் தின் தாத்பர்யமுமாகும். ஆனால் இந்தத் திட்டங்கள் நிறைவேறா தென்று தோன்றினால், நான் உயிர் வாழ்ந்துதான் என்ன பயன்? என்று உருக்கத்துடன் கூறினார்.

ஆனால், அப்பேர்ப்பட்ட சஞ்சலம் காந்தி மகானுக்கு ஏற்படா மல் தடுப்பதற்குத் தன்னால் முடியும் என்பதை நிர்மாணத் திட் டங்களை நிறைவேற்றி வைப்பதன் மூலம் தமிழ்நாடு, நிதர்சன மாக்கி வருகிறது.

மகாத்மா வகுத்த நிர்மாணத் திட்டங்கள் பதினெட்டில் ஜீவ நாடியாக உள்ள அம்சங்கள் மூன்று. கதர் உற்பத்தி, ஹரிஜன சேவை, வகுப்பு ஒற்றுமை என்பவையே அம் மூன்றும்.

Mahatma Gandhi
Mahatma Gandhi

இவற்றுள் கதர் உற்பத்தியில், இந்தியாவிலுள்ள சகல மாகா ணங்களுக்கும் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்தக் கதராடையில் மூன்றிலொரு பங்கு தமிழ் நாட்டுக் கதர். அளவில் மட்டிலுமில்லாமல், நீடித்து உழைப் பதிலும் தமிழ் நாட்டுக் கதர் ஆடைகள் சிறந்து விளங்குவதாக, சமீ பத்தில் திருப்பூருக்கு விஜயம் செய்த அகில பாரத சர்க்கா சங்கத் தலைவர் ஸ்ரீ ஜத் ஜா ஜுஜி அவர்களே புகழ்ந்து கூறியுள்ளார்.

ஹரிஜன சேவையில் தமிழ்நாடு எப்படி முன்னணியில் இருந்து வந்திருக்கிற தென்பதற்கு. இங்கு ஆரம்பிக்கப்பட்ட ஆலயப் பிர வேச இயக்கங்களே போதிய சான்றாகும். அந்த இயக்கங்களின் பலனாகவே, மதுரை மீனாட்சியம்மன் கோவிலும், பழனி, குற்றாலம் முதலிய நூற்றுக்கணக்கான கோவில்களும் விமரிசையாக ஹரி ஜனங்களுக்குத் திறந்து விடப் பட்டன. இவை தவிர ஹரி ஜனங் களுக்கும் இதர தாழ்த்தப்பட்ட ஜனங்களுக்கும், தமிழ் நாடு ஹரி ஜன சேவா சங்கம் செய்து வரும் தொண்டுகளும் மிகப் பிரசித்தமனவை.

வகுப்பு ஒற்றுமையில் தமிழ்நாடு முன்னணியிலே இருந்து வருகிற தென்பதற்கு, சமீபத்தில் நடந்த மத்திய சட்டசபைத் தேர்த லோடு, வகுப்புவாதக் கட்சிகள் மறைந்து போய் விட்டதைக் கூற வண்டும். தமிழ் நாட்டில் காந்தி மகான் இன்று பார்க்கக் கூடி யது ஒரே கட்சிதான், அது தான் காங்கிரஸ் என்று  சந்தோஷத் துடன் தெரிவித்துக் கொள்ளலாம்.

இந்த ஜீவாதாரமான அம்சங்கள் மூன்றையும் தவிர, மது விலக்கு ; கிராமக் கைத் தொழில் வளர்ச்சி ;சுகாதாரம் ; புதிய அடிப்படைக் கல்வி ; முதியோர் கல்வி ; ஸ்திரீகளுக்குச் சம உரிமை ; சுகாதாரக் கல்வி பரப்புதல் ; தாய் மொழி வளர்ச்சி ; பொருளாதார சமத்துவம் ; குடியானவர்களைப் பரிபாலித்தல் ; பெரு வியாதியஸ்தர்களுக்குப் பணிவிடை ; மாணவர்கள் நலன் ஆகியவைகளிலும் தமிழ் நாடு பெருமைப்படத்தக்க விதத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதில் அது வெற்றி யடைந்தும் வருகிறது. இவையெல்லாம் காந்திஜிக்கு மனமகிழ்ச்சி யளிக்கக் கூடிய விஷ யங்களென்று கூறுவது மிகையாகாது. மகாத்மா இன்னும் பன் னெடுங் காலம் வாழ்ந்திருக்கச் செய்யும் விஷயங்க ளென்றும் கூற வேண்டும் -

இப்படித் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்வதன் மூலம் மகாத்மா தமது நிர்மாணத் திட்டங்கள் நிறைவேறி வரும் ஒரு மாகாணத் திற்கே விஜயம் செய்கிறார். ஆகவே, தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்வதை விட அவருக்கு அதிக மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. அம் மாதிரியே அவரை வர வேற்பதை விட மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் தமிழ் நாட்டினருக் கும் வேறு இருக்க முடியாது.

 (20.01.1946 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)