Published:Updated:

`கடும் பயிற்சியும்... விடாமுயற்சியும்...!’- வறுமையிலும் சாதித்த குடியாத்தம் மாற்றுத்திறனாளி வீரர்

வெங்கடாச்சலம்
News
வெங்கடாச்சலம்

ஒரு நாள் தங்கையை கல்லூரியில் விடுவதற்காக வீட்டிலிருந்து மாதனூர் சாலையில் பைக்கை ஓட்டிச் சென்றேன். மாடு திடீரென குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கினோம். இரண்டு பேருமே பலத்த காயமடைந்தோம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்தவர் மணி. கைத்தறி நெசவுத் தொழிலாளி. இவரின் மகன் வெங்கடாச்சலம் (32). இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி இளைஞரான வெங்கடாச்சலம், சிறந்த தடகள வீரர். தேசிய அளவிலும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். பயிற்சியும் முயற்சியும் இருந்தும் அரசின் ஊக்கத்தொகை கிடைக்காததால், திறமையை வெளிக்காட்ட முடியாமல் வறுமையில் தவிக்கிறார் வெங்கடாச்சலம். அவரைச் சந்தித்துப் பேசினோம். ``நான் பிறப்பிலேயே மாற்றுத்திறனாளி இல்லை. 

மாற்றுத்திறனாளி வீரர் வெங்கடாச்சலம்
மாற்றுத்திறனாளி வீரர் வெங்கடாச்சலம்

மற்றவர்களைப்போல் நார்மலாக ஓடி ஆடி விளையாடியவன். 10-ம் வகுப்புவரை படித்துவிட்டு எலெக்ட்ரீசியன் வேலை செய்துவந்தேன். எனக்கு இரண்டு அக்கா, ஒரு அண்ணன், ஒரு தங்கை இருந்தனர். 2013-ம் ஆண்டு என் தங்கை எம்.சி.ஏ படித்துக்கொண்டிருந்தார். அந்த ஆண்டு ஒரு நாள் தங்கையை கல்லூரியில் விடுவதற்காக வீட்டிலிருந்து மாதனூர் சாலையில் பைக்கை ஓட்டிச் சென்றேன். மாடு திடீரென குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கினோம். இரண்டு பேருமே பலத்த காயமடைந்தோம். சுய நினைவில்லாமல் சாலையில் கிடந்த எங்களை யாரோ மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மறுநாள் சிகிச்சைப் பலனின்றி தங்கை இறந்துவிட்டார். எனக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் உணர்வு இல்லை. கால்கள் முழுவதுமாக செயலிழந்துவிட்டது. மூணு வருஷம் படுத்த படுக்கையாகத்தான் கிடந்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து குடும்பமே மீளாத அந்த நேரத்தில், 2014-ம் ஆண்டு என்னுடைய அண்ணனை யாரோ கொலை செய்திட்டாங்க. குடியாத்தத்தில் இருக்கிற ஒரு நகைக்கடையில் அண்ணன் வேலை செய்திட்டு இருந்தாரு. ஒரு நாள் இரவு கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு கலெக்ஷ்ன் பணத்துடன் வீட்டுக்கு வந்திட்டு இருந்தாரு. 

குடியாத்தம் மாற்றுத்திறனாளி வீரர்
குடியாத்தம் மாற்றுத்திறனாளி வீரர்

இதை தெரிஞ்சிக்கிட்ட கொள்ளைக் கும்பல் அண்ணனை வழி மறிச்சு கொடூரமாத் தாக்குனாங்க. கத்தியால் குத்திட்டுப் பணத்தை பறிச்சிட்டு ஓடிட்டாணுங்க. ரத்த வெள்ளத்தில் அண்ணன் பிணமா கிடந்தார். எனக்குக் கால்கள் செயலிழப்பு, தங்கை விபத்தில் மரணம், அண்ணன் கொலை செய்யப்பட்டார் போன்ற சம்பவங்களால் குடும்பமே சிதைந்துப் போச்சி. அதுக்கு அப்புறம் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இருக்கிற பிசியோ தெரபிஸ்ட் அறிமுகமானார். அவர், வீல் சேரிலிருந்து குண்டு எரிதல், ஈட்டி எரிதல் போன்ற விளையாட்டைக் கத்துக்கொடுத்தார். முதலில், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறுசிறு விளையாட்டுப் போட்டியில் கலந்துகிட்டு வெற்றிபெற்றேன். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016-ல் ஹரியானாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில், முதல் முறையாகத் தமிழகம் சார்பில் கலந்துகிட்டு இரண்டு பதக்கங்களை வென்றேன். சோகத்தில் இடிந்து போயிருந்தாலும் பயிற்சியும் முயற்சியும் என்னைத் தட்டி எழுப்பியது. பாரா அத்லெடிக் விளையாட்டுகளில் முழுமையாகக் கவனம் செலுத்தினேன். வேலூரைச் சேர்ந்த சாந்தமுத்துவேல் என்ற கோச் மூலம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டியிலும் கலந்துக்கிட்டு வெற்றிபெற்றேன். அதையடுத்து, 2017-ல் சீனாவில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியிலும் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்களில் நானும் ஒருவன். ஈட்டி எரிதலில் முயற்சிசெய்து வெற்றியைத் தவறவிட்டேன். 

வெங்கடாச்சலம்
வெங்கடாச்சலம்

ஆனாலும், அனுபவம் கிடைத்தது. அதன்பிறகு எந்த வாய்ப்பும் எனக்கு வரவில்லை. வீட்டில் செல்போன் ரீ-சார்ஜ் கடை வைத்துள்ளேன். ஊக்கத்தொகை கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தேன். இதுவரை கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் கேஷ் அவார்டு தர்றாங்க. ஸ்பான்ஸர் தேடுவதில் சிக்கல் இருப்பதால் ஊக்கத்தொகை கொடுங்கள் என்றேன். மாற்றுத்திறனாளி வீரர்களையும் ஊக்கப்படுத்தினால் மாநிலத்துக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்ப்போம்’’ என்றார் தன்னம்பிக்கையுடன்.