Published:Updated:

`உங்கள் பேச்சு மோசமாக இருந்தது என்பதை கிரிக்கெட் உலகம் அறியும்!’ - இம்ரானைத் தாக்கிய கங்குலி

`பாகிஸ்தான் பிரதமர் போன்று பேசவில்லை, அமெரிக்க நகரின் வெல்டர்போலப் பேசுகிறார்’ என்று சேவாக்கை தொடர்ந்து கங்குலியும் விமர்சனம் செய்திருக்கிறார்.

கங்குலி
கங்குலி ( Twitter )

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``வழக்கமான போர் ஆரம்பமானால், எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு நாடு 7 மடங்கு அண்டை நாட்டைவிட சிறியதாக இருக்கும்பட்சத்தில், சுதந்திரத்துக்காக உங்கள் மரணம் வரை நீங்கள் சண்டையிட வேண்டும் அல்லது சரணடைய வேண்டும். என்னைப் பொறுத்தவரை கடவுள் ஒருவர்தான். அணு ஆயுத நாடு ஒன்று தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும்போது, அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பாகிஸ்தானில் போராளி அமைப்புகள் எதுவும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் குரல் கோபத்துடன்தான் இருக்கிறது. தீவிரவாதம் மனிதநேயத்துக்கு எதிரான சவால்.

கங்குலி ட்வீட்
கங்குலி ட்வீட்

ஆகவே, நாம் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். `புல்வாமா தாக்குதலின்போது, இந்தியா எங்கள் மீது குற்றம் சுமத்தியது. பாகிஸ்தானின் தலையீடு இருந்தது குறித்து இந்திய அரசு ஆதாரங்களை சமர்ப்பிக்க நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் விமானங்களை அனுப்பி எங்கள் மீது குண்டுவீசினார்கள். நாங்கள் பதிலடி கொடுத்தோம்; அவர்களின் ஒரு பைலட்டை நாங்கள் விடுவித்தோம். நாங்கள் உடனடியாக அவரை விடுவித்ததற்குக் காரணம், அமைதியை விரும்பும் காரணத்தால்தான். இதை சமாதான நடவடிக்கையாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, மோடி `பாகிஸ்தானுக்கு எதிரான பாடத்தைக் கற்பிப்போம்’ என்று பிரசாரம் செய்துவருகிறார்” என்று பேசினார்.

அமெரிக்காவில் இம்ரான் கான் பேசிய வீடியோவை கிரிக்கெட் வீரர் சேவாக் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ``அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் இருவர், இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமர் போன்று பேசவில்லை, அமெரிக்க நகரின் வெல்டர்போல பேசுகிறார்’ எனக் கிண்டலடித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், சேவாக் பதிவிட்டுள்ள வீடியோவை சுட்டிக்காட்டிய கங்குலி, ``வீரு, நான் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுவரை கேட்காத உரையாடல் அது. இந்த உலகத்துக்கு அமைதி தேவைப்படுகிறது. பாகிஸ்தானுக்கு அது மிகவும் முக்கியம். ஒரு தலைவர் இதுபோல தரமற்று பேசியிருக்கிறார்.

Imran Khan
Imran Khan

அவரது பேச்சு மோசமாக இருந்தது என்பதைக் கிரிக்கெட் உலகம் அறியும்” என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக ஹர்பஜன் சிங், ``அணுசக்தி யுத்தத்தின் சாத்தியமான அறிகுறிகள் அவரது பேச்சில் இருந்தன. இம்ரான் கான் 'ரத்தக் கொதிப்பு' 'இறுதிவரை போராடு' என்ற சொற்களைத் தேர்ந்தெடுப்பது இரு நாடுகளிடையே வெறுப்பை அதிகரிக்கும். சக விளையாட்டு வீரராக அவர் அமைதியை ஊக்குவிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.