Published:Updated:

பிரான்ஸில் குங்ஃபூ கற்றுத்தரும் தமிழக அரசியல்வாதி!

ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பிரான்ஸ் நாட்டில் குங்ஃபூ கற்றுக்கொடுத்து வருகிறார்.

பிரான்ஸில் குங்ஃபூ கற்றுத்தரும் தமிழக அரசியல்வாதி!

ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பிரான்ஸ் நாட்டில் குங்ஃபூ கற்றுக்கொடுத்து வருகிறார்.

Published:Updated:

தற்காப்புக் கலையின் தாயகமான தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலிருந்து போதி தர்மன் சீனா சென்று, தற்காப்புக் கலையையும் இயற்கை மருத்துவத்தையும் கற்பித்தார். சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையை சேகர் என்பவர் பல்வேறு நாடுகளில் கற்றுக்கொடுத்து வந்தார். அவரால் உருவாக்கப்பட்ட சிறந்த வீரர்கள் உலகம் முழுவதும் இக்கலையைக் கற்பித்து வருகின்றார்கள். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் மாஸ்டர் மேத்யூ என்பவர் பல்வேறு நகரங்களில் நடத்திவரும் அகாடமியில் பிரான்ஸ் நாட்டு இளைஞர்களுக்கு குங்ஃபூ கலையைக் கற்பித்துவருகிறார்.

mallai sathya
mallai sathya

இந்த அகாடமிக்கு இரண்டுவார பயணமாகச் சென்றுள்ள ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, அங்கு பிரான்ஸ் இளைஞர்களுக்கு குங்ஃபூ கலையைக் கற்றுக்கொடுத்து வருவதுடன், தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். செப்டம்பர் 9 வரை பிரான்சில் பல்வேறு நகரங்களில் குங்ஃபூ தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுக்க இருக்கிறார் சத்யா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''பசுமையான நினைவுகளுடன் பிரான்ஸ் தேசத்தில் நமது வீரக் கலையைப் பயிற்றுவித்து வருகிறோம். போதி தர்மனுக்குப் பிறகு மாஸ்டர் சேகர்தான் உலகநாடுகளில் இந்தக் கலையை பரப்பினார். அவரது மாணவர்தான் பிரான்ஸில் குங்ஃபூ கற்றுக்கொடுத்து வரும் மேத்யூ. பிரான்ஸில் 21 இடங்களில் இந்த அமைப்பை நடத்திவருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி எங்கள் மாஸ்டர் சேகரின் பிறந்தநாள். இதைமுன்னிட்டுதான் இங்கு நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்க வந்துள்ளோம்.

காலை நேரம் மாஸ்டர்களுக்கும், மாலை நேரம் மாணவர்களுக்கும் கலையை கற்றுக்கொடுத்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சிகள் கற்றுக்கொடுத்து வருகிறேன். நமது கலையைக் கற்றுக்கொள்ள பிரான்ஸ் இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் இங்கு கலையைக் கற்றுக்கொள்கிறார்கள். புலோஞ்சி என்ற நகரத்தில் அப்பா, அம்மா, மகள் எனக் குடும்பத்தோடு இந்தக் கலையைக் கற்றுவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த வாரம் எங்கள் கட்சியின் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது. 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஒரு மாநாட்டில் எனது பங்களிப்பு இல்லை என்றால் அது இப்போதுதான். இதை வைகோவிடம் சொன்னபோது `நீ போயிட்டு வா; நான் பார்த்துக்கொள்கிறேன்' எனக் கூறிவிட்டார். மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் வரும் இடம் என்பதால், போதைப்பொருள்கள் அதிகமாக புழங்கும் இடம். ஆனால், அந்தப் பழக்கவழக்கங்களில் சிக்காமல் இருக்கிறேன் என்றால் அதற்கு இந்தக் கலை கொடுத்த அடையாளம்தான் காரணம். என்னைத் தலைவர் வைகோவிடம் நெருக்கமாக மாற்றியதற்கும் இந்தக் கலைதான் காரணம்.

Master Mallai Sathya
Master Mallai Sathya

முன்பு புருஸ்லீ தன்னைவிட அனுபவமும் திறமையும் கொண்ட வீரரிடம் மோதி வென்றார். அப்போது அவர் சொன்ன பதில் `வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது, வாய்ப்புகளை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்’ என்பது.

அதற்கேற்றாற்போல் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே தன்னைவிட அனுபவமும் ஆஜானுபாகுவான உருவமும் கொண்ட சிறந்த வீரர்கள் எங்கள் அணியில் இருந்தாலும் அவர்களிடம் இல்லாத ஒன்று தன்னிடம் உள்ளது என்பார். தன்னம்பிக்கையையும் தளராத உற்சாகத்தையும் கடைசிவரை கைவிடவில்லை. எங்கள் மாஸ்டர் சேகரும் `நோ பெய்ன் நோ கெயின்... வலிகள் இல்லாமல் தற்காப்புக் கலையில் வெற்றி இல்லை' என்றார். அதற்கேற்ப இந்தக் கலையில் எனது ஓட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்றார் மல்லை சத்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism