Published:Updated:

`சிவா பீச், சிவா ஏர்போர்ட்' = `மோடி ஸ்டேடியம்', `ரிலையன்ஸ் END', `அதானி END' - நெட்டிசன்கள் கலாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நரேந்திர மோடி ஸ்டேடியம்
நரேந்திர மோடி ஸ்டேடியம் ( Twitter )

``மைதானம் மற்றும் பெவிலியன் எண்ட்களின் பெயர்களைப் பார்த்தால் `தமிழ்ப் படம்' பார்ட் 1-ல் வரும் `சிவா பீச்', `சிவா எலெக்ட்ரிசிட்டி போர்டு' `சிவா ஏர்போர்ட்' எல்லாம்தான் ஞாபகம் வருது.’’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தை இன்று திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஏற்கெனவே குஜராத்தின் மொட்டேரா பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம் அமைந்திருந்தது. 1983-ம் ஆண்டு முதல் இங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவந்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மைதானத்தைச் சற்று விரிவுபடுத்திச் சீரமைக்கலாம் என்ற முடிவை எடுத்தது பிசிசிஐ. ஆனால், இந்த மைதானத்தை முற்றிலுமாக இடித்துவிட்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இதை மாற்ற வேண்டுமென்று பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். அதன் விளைவாக இன்று உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற அந்தஸ்தை எட்டியிருக்கிறது மொட்டேரா கிரிக்கெட் மைதானம்.

நரேந்திர மோடி ஸ்டேடியம்
நரேந்திர மோடி ஸ்டேடியம்
Twitter
இந்த மைதானத்தின் கதையை விரிவாகப் படித்துத் தெரிந்துகொள்ளக் கீழுள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்!
மோடியின் கனவு, அமித்ஷாவின் திட்டம், ட்ரம்ப் வருகை... - உலகின் #1 மைதானமான மோதிராவின் கதை!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்தபோது நடந்த `நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி, இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. அதன் பிறகு இன்றுதான் இந்த மைதானத்தில் முதன்முதலாக கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தபோது `சர்தார் பட்டேல் மைதானம்' என்று பெயர் பெற்றிருந்த இந்த மைதானம், தற்போது `நரேந்திர மோடி மைதானம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, மைதானத்தில் அமைந்திருக்கும் இரண்டு பெவிலியன் எண்ட்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்களும் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன.

பெவிலியன் எண்ட் பெயர்கள்!
`அதானி எண்ட்', `ரிலையன்ஸ் எண்ட்'
அதானி எண்ட், ரிலையன்ஸ் எண்ட்
அதானி எண்ட், ரிலையன்ஸ் எண்ட்
Twitter

பொதுவாக பெவிலியன் எண்ட்களுக்கு சாதனை படைத்த கிரிக்கெட்டர்களின் பெயரையோ, இந்தியாவின் சாதனையாளர்கள் பெயரையோ வைப்பதுதான் வழக்கம். ஆனால், இந்த மைதானத்தில் இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களைக் குறிக்கும் வகையில் பெயர் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் தொடங்கி விவசாயிகள் வரை, `மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும்தான் துணை நிற்கிறது' என்ற குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகின்றன. இந்தநிலையில், மைதானத்துக்கு, பிரதமர் மோடியின் பெயரையும், பெவிலியன் எண்ட்களுக்கு அதானி, ரிலையன்ஸ் நிறுவனங்களின் பெயரையும் வைத்திருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெட்டிசன்கள் பலரும் பெவிலியன் எண்ட்களின் பெயர்களைப் பகிர்ந்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அதில் சில பதிவுகள் பின்வருமாறு...

``நரேந்திர மோடி மைதானம்... 800 கோடி ரூபாய் பொருள் செலவு... `அதானி பெவிலியன் எண்ட்', `ரிலையன்ஸ் பெவிலியன் எண்ட்' - இதைவிடச் சிறந்த ஒப்புமை இருக்கவே முடியாது.''

``நரேந்திர மோடி மைதானம்... அதானி எண்ட், ரிலையன்ஸ் எண்ட் (அம்பானி)... அப்புறம் ஏன் பிங்க் பால்ல விளையாடுறாங்க... ஆரஞ்சு (காவி) பால்ல விளையாடலாமே?''

``அப்போ அங்கிருக்கும் இருக்கை அரங்குகளுக்கு, அமித் ஷா Stand, ஜெய் ஷா Stand எனப் பெயர் வைப்பார்களோ?''

``மைதானம் மற்றும் பெவிலியன் எண்ட்களின் பெயர்களைப் பார்த்தால் `தமிழ்ப் படம்' பார்ட் 1-ல் வரும் `சிவா பீச்', `சிவா எலெக்ட்ரிசிட்டி போர்டு' `சிவா ஏட்போர்ட்' எல்லாம்தான் ஞாபகம் வருது.''

``முதலில் `அதானி எண்ட்', `ரிலையன்ஸ் எண்ட்' என்பதுபோல யாரோ போட்டோஷாப் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவருகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், உண்மையிலேயே அப்படித்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.''

``சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தை அதானிக்கு கொடுத்தாச்சு... சர்தார் படேல் மைதானத்தை `நரேந்திர மோடி மைதானம்’னு பெயர் மாத்தியாச்சு... அடுத்து குஜராத் பெயரைத்தான் மாத்துவாங்கபோல - கவலையுடன் குஜராத் வாசி.''

``காங்கிரஸ்காரர்களைப்போல பா.ஜ.க நடந்துகொள்ளும் என்று நினைக்கவில்லை. அவர்கள்தான் மைதானங்களுக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைத்துக்கொண்டார்கள். இப்போது நரேந்திர மோடியும் அதையே செய்திருக்கிறார்.''

 `சச்சின் யார்?' எனக் கேட்ட ஷரபோவாவிடம் `மன்னித்துவிடு மரியா' என உருகும் மலையாளிகள் - என்ன காரணம்?

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார். ``உண்மை தன்னை எவ்வளவு அழகாக வெளிபடுத்திக்கொள்கிறது! நரேந்திர மோடி ஸ்டேடியம், அதானி எண்ட், ரிலையன்ஸ் எண்ட்... அதுவும் ஜெய் ஷா தலைமையில்'' என்று பதிவிட்டிருக்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு