Published:Updated:

குத்துச்சண்டை வளாகம்; ஜல்லிக்கட்டுக்கென தனி வளாகம் கவனம்பெறும் விளையாட்டு துறையின் அறிவிப்புகள்!

விளையாட்டு துறை

ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே மாநிலத்தின் நான்கு மண்டலங்களில் ஒவ்வொரு ஒலிம்பிக் பயிற்சி அகெடமிக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை வளாகம்; ஜல்லிக்கட்டுக்கென தனி வளாகம் கவனம்பெறும் விளையாட்டு துறையின் அறிவிப்புகள்!

ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே மாநிலத்தின் நான்கு மண்டலங்களில் ஒவ்வொரு ஒலிம்பிக் பயிற்சி அகெடமிக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
விளையாட்டு துறை

விளையாட்டில் சாதிக்கும் வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது முதல் பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் தமிழக அரசு தற்போது விளையாட்டு துறையின் முன்னேற்றத்திற்கான அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் விளையாட்டு துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாகவும் புதிய வீரர்களை உருவாக்கும் விதமாகவும் மிக முக்கியத் தொடக்கமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இதற்கான புதிய திட்டங்களை நேற்றைய தினத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் இதோ,

SDAT
SDAT

ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு வீரர்களுக்கு ஈடுகொடுத்து வெற்றி வாகை சூடுவதற்கான அடிப்படை தேவை விளையாட்டு உள்கட்டமைப்பு. இதற்காக சென்னைக்கு அருகே மிக பெரிய விளையாட்டு நகரம் ஒன்று புதிதாக அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மிக சிறந்த தரத்தில் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே மாநிலத்தின் நான்கு மண்டலங்களில் ஒவ்வொரு ஒலிம்பிக் பயிற்சி அகெடமிக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயிற்சி பெரும் வீரர்களை வழிகாட்டுவதற்காக ‘ஒலிம்பிக் தங்கம் தேடுதல்’ என்ற புதிய திட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துப்பதற்காக சிறிய அளவிலான விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட இருக்கிறது.

Nehru Stadium, Chennai
Nehru Stadium, Chennai

விளையாட்டை வாழ்வின் அங்கமாய் கொண்டிற்கும் வட சென்னை மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீன குத்துச்சண்டை வளாகம் ஒன்றை அமைப்பது மட்டுமல்லாமல் இதர விளையாட்டுகளான கையுந்துப்பந்து (Volleyball), இறகுப்பந்து , கூடைப்பந்து , கபடி போன்றவைக்கு நவீன உடற்பயிற்சிக் கூடங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது. தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக சிலம்ப வீரர்களுக்காக தனியே 3 விழுக்காடு இட ஒதுக்கீடில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
என்.ஜி.மணிகண்டன்

மேலும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தும் விதமாக பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சென்னை ஓபன் ATP டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது Beach Olympics எனப்படும் கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுவதாக முன்பே அறிவித்திருந்தது தமிழக அரசு. 180 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்குபெரும் இத்தொடர் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடக்க இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism